புதன், 8 செப்டம்பர், 2021

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தின் கீழ் ஒன்பது பெண்களுக்கு ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 25 லட்சம் வரையிலான கடன் வழங்கப்பட்டுள்ளது.


 கொவிட்- 19 பெருந்தொற்றினால் தங்கள் குடும்பத்தாரை இழந்த கோவாவைச் சேர்ந்த ஒன்பது பெண்களின் நிலையான சுய வேலைவாய்ப்புக்கு காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் வழிவகை செய்துள்ளது.

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தின் கீழ் தங்களது சொந்த உற்பத்தி ஆலைகளை நிறுவ அவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தித் தருவதற்காக அரசு முகமை ஆதரவளிப்பது இதுவே முதல் முறையாகும்.

ஒன்பது பெண்களுக்கும் ரூ. 1.48 கோடி மதிப்பிலான காசோலைகளை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணைய தலைவர் திரு விநய் குமார் சக்சேனா திங்கட்கிழமை அன்று வழங்கினார்.

ஆடை தைத்தல், வாகன பழுது நீக்கம், வெதுப்பகம், அழகு நிலையம், மூலிகை மற்றும் ஆயுர்வேத மருந்துகள் உள்ளிட்ட தொழில்களை அவர்கள் விரைவில் தொடங்கவுள்ளனர். பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தின் கீழ் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 25 லட்சம் வரையிலான கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒவ்வொரு தொழிலும் குறைந்தபட்சம் 8 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக