வியாழன், 18 ஜூன், 2020

தமிழக அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். - ஜி.கே.வாசன்


விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி,
 விவசாயத்தை காப்போம். - ஜி.கே.வாசன்

தமிழகத்தின் மூலதாரமாக விளங்கும் விவசாயத்திற்காக காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் அணையில் இருந்து கடந்த ஜீன் 12-ஆம் தேதி அன்று தமிழக முதல்வர் அவர்களால் திறக்கப்பட்டது, விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொராணா வைரசின் பாதிப்பால் மக்களை பாதுக்காக்க அறிவிக்கப்பட்ட மத்திய,
மாநில அரசின் ஊரடங்கு உத்தரவால் நாடு முழுவதும் பல்வேறு தொழில்துறைகள் பாதிக்கப்பட்டு பொருளாதார இழப்பை சந்தித்து வரும் வேலையில் கிராமம் முதல் நகரம் வரை மக்களின் அத்தியாவாயத் தேவையை பூர்த்தி செய்யும் விவசாயத்தையே அனைவரும் நம்பியிருக்கிறார்கள்.

விவசாயிகள் சேற்றில் கால்வைத்தால் தான் நாம் சோற்றில் கைவைக்க முடியும். இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த விவசாயத்தை நாம் வாய்ந்த விவசாயத்தை நாம் பேணிக்காக்க வேண்டும். அதனால் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுப்படி செய்ய வேண்டும் அதோடு அவர்களுக்கு தேவையான அளவிற்கு புதிய பயிற் கடன்களை வழங்க வேண்டும். 

விவசாயத்திற்கு தேவையான தரமான விதை நெல், தரமான விதை நெல், உரம், பூச்சிகொள்ளி மருந்துகள் தங்கு தடையின்றி வழங்க வேண்டும். கடைமடை வரை தண்ணீர் செல்வதை கண்காணிக்க PWD அதிகாரிகள் மற்றம் அந்தந்த பகுதி விவசாயிகளை கொண்ட குழு ஒன்று அமைக்க வேண்டும். நடப்பாண்டில் குறுவை சாகுபடி 5 லட்சம் ஏக்கரிலும், தாளடி சாகுபடி 10 லட்சம் ஏக்கரிலும், சம்பா சாகுபடி 25 லட்சம் ஏக்கரிலும் நடைபெறும். இதனால் 150 லட்சம் டன் நெல் உற்பத்தியாகும். சென்ற ஆண்டில் 120 லட்சம் டன் நெல் உற்பத்தியானது. அதில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் 25 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்துசாதனை படைத்தது. மேலும் 5 லட்சம் டன் வரை கொள்முதல் நடந்து வருகிறது. தற்போழுது நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1958/- மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதார விலையாக நெல் ஒரு குவிண்டாலுக்கு ரூ.4000/- ஆக விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தமிழக அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக