செவ்வாய், 7 செப்டம்பர், 2021

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கடற்படைகளுக்கு இடையே நடைபெறும் ‘ஆஸிஇன்டெக்ஸ்’ (AUSINDEX) 4வது கூட்டுப் பயிற்சி தொடங்கியது.


 இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கடற்படைகளுக்கு இடையே நடைபெறும் ‘ஆஸிஇன்டெக்ஸ்’ 4வது கூட்டுப் பயிற்சி செப்டம்பர் 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடக்கிறது.

இந்திய கடற்படை கப்பல்கள் ஐஎன்எஸ் சிவாலிக், நீர்மூழ்கி கப்பல் கத்மட் ஆகியவை கடற்படை கிழக்கு கட்டுப்பாட்டு மைய தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் தரூண் சாப்தி தலைமையில் பங்கேற்கின்றன.

ஆஸ்திரேலிய கடற்படை சார்பில் எச்எம்ஏஎஸ் வார்ராமுங்கா பங்கேற்கிறது. இது மலபார் பயிற்சியிலும் பங்கேற்றது.  எச்எம்ஏஎஸ் ரன்கின் என்ற நீர்மூழ்கி கப்பல், ஆஸ்திரேலிய விமானப்படையின் பி-8ஏ கண்காணிப்பு விமானம், எப்-18ஏ விமானம் ஆகியவையும் பங்கேற்கின்றன.

இந்த ஆஸிஇன்டெக்ஸ் பயிற்சியில், சிக்கலான பயிற்சிகள், கப்பல்கள், கப்பல்களுக்கு இடையிலான விமான செயல்பாடுகள், நீர்மூழ்கி கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், நீண்டதூதர கண்காணிப்பு விமானங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் ஆகியவையும் அடங்கியுள்ளன. 

இந்த கூட்டு பயிற்சியால் இருதரப்பு கடற்படையின் செயல்பாடுகளும் மேம்படும் மற்றும் கடல்சார் பாதுகாப்பு செயல்பாடுகளில், பொதுவான புரிதலை உருவாக்கும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக