செவ்வாய், 7 செப்டம்பர், 2021

விவசாயிகளின் நலனுக்கான நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்த முதலமைச்சர்களின் மாநாட்டில் மத்திய வேளாண் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் மற்றும் மத்திய வர்த்தக அமைச்சர் திரு பியூஷ் கோயல் உரையாற்றினர்


விவசாயிகளின் நலனுக்காக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சகத்தின் நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்த முதலமைச்சர்களின் மாநாட்டில் காணொலி மூலம் உரையாற்றிய மத்திய வேளாண் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், டிஜிட்டல் தொழில்நுட்பம், அறிவியல் ஆராய்ச்சி மற்றும் அறிவோடு, வேளாண்மை இணைக்கப்பட வேண்டும் என்றும், பொருளாதாரத்திற்கு ஊக்கமளிப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.

டிஜிட்டல் விவசாயம் குறித்து பேசிய அமைச்சர், மாநாட்டில் விளக்கப்பட்ட கர்நாடகா போலவே அனைத்து மாநிலங்களும் ஆய்வு செய்ய வேண்டும் என்றார். இந்திய அரசின் ஒருங்கிணைந்த விவசாயிகள் தரவுதளத்தை பயன்படுத்தி தரவுதளம் ஒன்றை உருவாக்கி மாநில நில ஆவண தரவுதளத்துடன் இணைப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று மாநிலங்களை அவர் கேட்டுக்கொண்டார்.

மாநாட்டில் உரையாற்றிய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள், உணவு, பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் ஜவுளி அமைச்சர் திரு பியூஷ் கோயல், வேளாண் பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளதன் மூலம் நம்பத்தகுந்த ஏற்றுமதி பங்குதாரராக இந்தியா உருவாகி வருவதாகவும், வேளாண்-ஏற்றுமதி களை மேம்படுத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார். சேமிப்பு மற்றும் கிடங்குகள் உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், ஹிமாச்சலப் பிரதேசம், சத்திஸ்கர், மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, பிகார், ஜார்கண்ட், ஒடிஷா, மேற்கு வங்கம் மற்றும் கோவா முதல்வர்கள் இந்த இரண்டு நாள் மாநாட்டின் முதல் நாளில் பங்கேற்றனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக