சனி, 4 செப்டம்பர், 2021

பெருந்தொற்றின் காரணமாக நேரடி தொடர்பு எதுவும் இல்லாமல் முழுக்க கடலிலேயே சிங்கப்பூர் கடற்படையால் தெற்கு சீன கடலின் தென் பகுதியில் இந்த வருட சிம்பெக்ஸ் நடத்தப்பட்டது.


 சிங்கப்பூர்-இந்திய கடல்சார் இருதரப்பு பயிற்சியான ‘சிம்பெக்ஸ்’-ன் 28-வது பதிப்பு 2021 செப்டம்பர் 2 முதல் 4 வரை நடைபெற்றது.

ஹெலிகாப்டருடன் கூடிய ஏவுகணை அழிப்பு கப்பலான ஐஎன்எஸ் ரான்விஜய், ஏஸ்டபுள்யூ கார்வெட் ஐஎன்எஸ் கில்தான், ஏவுகணை அழிப்பு கப்பலான ஐஎன்எஸ் கோரா மற்றும் பி81 நீண்டதூர கடல்சார் ரோந்து விமானம் ஆகியவை இந்தியாவின் சார்பாக பங்கேற்றன. சிங்கப்பூர் சார்பிலும் கப்பல்கள், ஹெலிகாப்டர் மற்றும் விமானம் உள்ளிட்டவை கலந்து கொண்டன. சிங்கப்பூர் விமானப்படையை சேர்ந்த நான்கு விமானங்களும் பயிற்சியில் பங்கேற்றன.

1994-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சிம்பெக்ஸ், வெளிநாட்டு கடற்படை ஒன்றுடன் இந்திய கடற்படை நீண்டகாலமாக தொடர்ந்து மேற்கொண்டு வரும் கடல்சார் கூட்டுப்பயிற்சியாகும். பெருந்தொற்று சவால்களுக்கு இடையிலும் இந்த பயிற்சி இடைவிடாமல் நடைபெறுவது இரு நாடுகளுக்கு இடையே நிலவும் வலுவான ராணுவ உறவுகளை காட்டுகிறது.

இந்த வருட சிம்பெக்ஸ் இந்தியாவின் 75-வது விடுதலை ஆண்டில் நடைபெறுவதால் இன்னும் சிறப்படைகிறது. இருதரப்பு கூட்டை வரும் காலங்களில் இன்னும் வலுப்படுத்துவதற்கான உறுதியை சிம்பெக்ஸ்-2021 வெளிப்படுத்தியது.

பெருந்தொற்றின் காரணமாக நேரடி தொடர்பு எதுவும் இல்லாமல் முழுக்க கடலிலேயே சிங்கப்பூர் கடற்படையால் தெற்கு சீன கடலின் தென் பகுதியில் இந்த வருட சிம்பெக்ஸ் நடத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக