வியாழன், 9 செப்டம்பர், 2021

கால்நடை விவசாயிகளுக்கு விவசாயிகள் கடன் அட்டை மத்திய அரசுடன் இணைந்து துரிதமாக வழங்க வேண்டும்.- திரு பர்ஷோத்தம் ரூபாலா


 குஜராத் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சருடனான ஆய்வு கூட்டம் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா தலைமையில் இன்று நடைபெற்றது.

மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள இணை அமைச்சர்கள் டாக்டர் சஞ்சீவ் குமார் பல்யான், டாக்டர் எல் முருகன், குஜராத் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சர், அமுல் டெய்ரி நிர்வாக இயக்குநர் மற்றும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் தொடர்பான பல்வேறு திட்டங்கள் குஜாராத்தில் செயல்படுத்தப்படுவதை ஆய்வு செய்த மத்திய அமைச்சர், இவை தொடர்பான முன்மொழிதல்களையும் ஆய்வு செய்தார். மாநிலத்தில் செயல்படுத்தப்படவுள்ள எதிர்கால செயல்திட்டங்கள் குறித்தும் அவர் ஆலோசித்தார்.

கால்நடை சுகாதார சேவைகள் விவசாயிகளின் வீடுகளுக்கே சென்றடைவதை உறுதி செய்வதற்காக நடமாடும் கால்நடை சிகிச்சை மையங்களின் சேவைகள் மாநிலத்தில் உடனடியாக தொடங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார். செயற்கை கருவூட்டல் குறித்த பயிற்சிகள் பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்படும் தொழில்முனைதல் திட்டத்தின் அதிகபட்ச பலனை மாநிலம் அடைய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கால்நடை விவசாயிகளுக்கு விவசாயிகள் கடன் அட்டை மத்திய அரசுடன் இணைந்து துரிதமாக வழங்க வேண்டும் என்று மாநில அமைச்சரை மத்திய அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

பால்வள கூட்டுறவு அமைப்புகளுக்கும், விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளுக்கும் உதவும் திட்டங்களை செயல்படுத்தி வருவதற்காக இந்திய அரசுக்கு அமுல் டெய்ரி நிர்வாக இயக்குநர் நன்றி தெரிவித்தார். பால்வள துறைக்கு சிறப்பாக பங்காற்றி வரும் குஜராத் மாநில அரசுக்கு மத்திய அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக