சனி, 14 மார்ச், 2020

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள சேலம் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும் - S.R.பார்த்திபன் MP


ரயில்வே அமைச்சகத்தின் மாநிலங்களுக்கான கோரிக்கை நேரத்தின்போது திமுக பாராளுமன்ற உறுப்பினர் S.R.பார்த்திபன் தமிழ்நாடு மக்களின் வளர்ச்சி மற்றும் நலனுக்காக தெற்கு ரயில்வேக்கு கூடுதல் நிதி ஒதுக்குமாறு மாண்புமிகு நிதியமைச்சரிடம் கேட்டுக்கொண்டது.

2022-2021 ஆம் ஆண்டிற்கான ரயில்வேயின் வருவாய் ரூ.2,25,913 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.இது 2019-20 ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளிருந்து 10% அதிகம்.

2020-21 ஆம் ஆண்டில்,சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து இரண்டிலிருந்தும் வருவாய் 9% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.2019-20 ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளின் படி,சரக்கு போக்குவரத்திலிருந்து வருவாய் பட்ஜெட் மதிப்பீட்டை விட 6% குறைவாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


இந்த வரவு-செலவுத் திட்டத்தில் பால் இறைச்சி மற்றும் மீன் உள்ளிட்ட விரைந்து கெட்டுப் போகக்கூடிய பொருட்களுக்காக தேசியக் குளிர் விநியோக சங்கிலியை உருவாக்க ரயில்வே கிசான் ரயில் திட்டத்தை அமைக்கப்போவதாக மாண்புமிகு நிதியமைச்சர் அறிவித்தார். இது பொது தனியார் கூட்டு (Public Private Partnership) மூலம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். விரைவு மற்றும் சரக்கு ரயில்களில் குளிரூட்டப்பட்ட பெட்டிகள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். எனது சேலம் தொகுதி பழங்கள்,காய்கறிகள் மற்றும் பூக்கள் உற்பத்திக்கு பிரபலமானது. இந்த வசதியை சேலம் ரயில்வே கோட்டத்திற்க்கும் அமைக்குமாறு உங்கள் மூலம் மாண்புமிகு நிதியமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன். இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.

ரயில்வே வருவாய் 2019-2020 ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட மதிப்பீடுகளிருந்து 10% வரை அதிகரிக்கும் என்று தெரிவித்த போதும், தெற்கு ரயில்வே 2020-2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் 33,340 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.இது 2019-2020ல் ஒதுக்கப்பட்ட ரூ.4,118.80 கோடியை விட கிட்டத்தட்ட 19 % குறைவு என்பது மிகவும் வருந்தத்தக்கது.

இவை அனைத்தையும் கருத்தில் கொள்ளும் போது மத்திய அரசு வட இந்திய மாநிலங்களின் வளர்ச்சி மட்டுமே கவனம் செலுத்துகிறது என்பது என் கருத்து. குறிப்பிடத்தக்க புதிய ரயில் பாதைகளும் இல்லை, தெற்கு ரயில்வேக்கு புதிய ரயில்களும் அறிமுகப்படுத்தப்படவில்லை.ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மற்றும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பணிகளுக்கான நிதியினை மட்டுமே மத்திய அரசு அறிவித்துள்ளது. சேலம் ரயில்வே கோட்டம் எனது நாடாளுமன்ற தொகுதியின் கீழ் வருகிறது. பின்வருபவை நீண்ட காலமாக நிலுவையில் உள்ள சேலம் மக்களின் கோரிக்கைகள் ஆகும்.

1. சேலத்தில் இருந்து ஆத்தூர்,விருதாச்சலம் மற்றும் விழுப்புரம் வழியாக சென்னைக்கு ஒரு புதிய அதிகாலை ரயில் சேவையை தொடங்க வேண்டும்.

2. சேலம் ரயில் நிலையம் சேலம் ரயில்வே கோட்டத்தில் தலைமையிடம் நாளொன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். சேலம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான எந்த வசதியும் இல்லை.ரயில் நிலையத்தில் ஓய்வு அறை,லிப்ட்,தானியங்கி படிக்கட்டுகள் மற்றும் பேட்டரி கார் போன்ற வசதிகள் இல்லை. எனவே,சேலம் ரயில் நிலையத்தை அனைத்து வசதிகளுடன் நவீனப்படுத்த வேண்டும்.

3. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் ஓமலூர் மற்றும் மேட்டூர் ரயில் பாதையில் உடனடியாக மேம்பாலம் அமைக்க வேண்டும்.

4.  சேலம் - பெங்களூர் ரயில் பாதையில் 20/300-20/400 க்கு அருகில் பெரும்பள்ளம் கிராமத்தில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும்.

5. சேலம்-கோயமுத்தூர் ரயில் பாதையில் பெரிய சீரகாபாடி கிராமத்தில் உள்ள குறுகிய பாலம் (பாலம் எண்:276) அகலப்படுத்த வேண்டும்.

எனவே,தமிழ்நாடு மக்களின் வளர்ச்சி மற்றும் நலனுக்காக தெற்கு ரயில்வேக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக