மாநில வளர்ச்சி கொள்கைக் குழு துணைத்தலைவராக பொருளாதார வல்லுநர் முனைவர் ஜெ.ஜெயரஞ்சன் நியமனம்! தமிழக அரசு அறிவிப்பு!
தமிழகத்தின் தொல்குடி மக்களான முதலியார் சமூகத்தைச் சார்ந்த பெண்களை பாலியல் வக்கிர உணர்வு படைத்தவர்கள் என்றும், பட்டியலின இளைஞர்களோடு விரும்பி உறவு வைத்துக் கொள்வார்கள் என்றும், ஒரு ஆய்வறிக்கையை தயார் செய்து ஆவணப்படுத்தி உள்ளவர்தான் இந்த ஜெயரஞ்சன்.
இந்த ஆய்வறிக்கை தயார் செய்வதற்காக முதலியார் சமூகத்து மக்கள் அதிகமாக வசிக்கும் கிராமத்திற்கு சென்றதாகவும் அங்கு முதலியார் சமூகத்தில் தெருக்கள் மற்றும் பட்டியலின மக்கள் ஆகியோரிடம் ஆய்வு செய்து இந்த அறிக்கையை சமர்ப்பித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது பல வருடங்களுக்கு முன்பாக நடந்தது என்று சொன்னாலும் சமீப காலமாக மோடி எதிர்ப்பு, இந்திய ஒருமைப்பாட்டு எதிர்ப்பு, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவு என்கிற தொனியில்! ஊடகங்களில் பொருளாதார நிபுணர் எனும் பெயரில் கருத்துக்களை தெரிவித்து வந்தார்.
அதன் காரணமாக மோடி எதிர்ப்பு பிரச்சாரம் செய்யும் தொலைக்காட்சிகளில் பொருளாதார நிபுணர் என்கிற பெயரில் பேசி வந்தார். இவரை கம்யூனிஸ்டுகளும், திமுகவினரும் மாபெரும் பொருளாதார அறிஞர் என தலைமேல் தூக்கி வைத்துள்ளார்கள்.
இந்த சம்பவம் குறித்த செய்தி வந்தவுடன் அதற்காக ஒரு மன்னிப்பு கேட்கவில்லை. அந்த அறிக்கையை திரும்பப் பெறவும் இல்லை! இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இவருக்கு மாநில அரசு வளர்ச்சி கொள்கை வகுப்பு குருவினுடைய துணைத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு இந்து மக்கள் கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கம் முதலியார் சமூகத்துப் பெண்களையும் பட்டியலிட இளைஞர்களையும் இழிவுபடுத்தும் வகையில் ஆய்வறிக்கை சமர்ப்பித்துள்ள ஜெயரஞ்சன் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக அவருக்கு பொறுப்பு வழங்கி கௌரவித்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஒன்று உடனடியாக அவர் முதலியார் சமூகத்து பெண்கள் குறித்து சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையை திரும்பப்பெற வேண்டும்! மன்னிப்பு கோர வேண்டும்! அதன் பின்னர் அவருக்கு பொறுப்பு கொடுங்கள். அவர் ஒன்றும் பெரிய பொருளாதார அறிஞர் அல்ல! பொருளாதாரத் துறையில் எந்த விதமான சாதனையும் படைத்தவர் அல்ல!
திமுகவிற்கு ஆதரவு தெரிவித்து, மோடியை விமர்சித்து தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்றார் என்கின்ற ஒரு தகுதியை தவிர அவருக்கு வேறு எந்த தகுதியும் கிடையாது.
திராவிட முன்னேற்றக் கழகம் முதலியார் சமூகத்தில் பெண்கள் குறித்தும் பட்டியலின இளைஞர்கள் குறித்தும் ஜெயரஞ்சன் சமர்ப்பித்த ஆய்வறிக்கையை ஏற்றுக் கொள்கிறதா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்!
இதுகுறித்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதற்காக கோரிக்கை புகார் மனு பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக