புதன், 8 செப்டம்பர், 2021

ராணுவ படைகளுக்கு வருவாய் கொள்முதல் அதிகாரங்களை வழங்குவதற்கான 2021-க்கான ஆணையை மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.

 


ராணுவ படைகளுக்கு வருவாய் கொள்முதல் அதிகாரங்களை வழங்குவதற்கான 2021-க்கான ஆணையை மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் புதுடில்லியில் அன்று (செப்டம்பர் 7, 2021) வெளியிட்டார். எளிதான வர்த்தகத்தை ஊக்குவிப்பது, படைகளுக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்துவது ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், நாட்டின் பாதுகாப்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் அரசு மேற்கொண்டுவரும் சீர்திருத்தங்களுள் இது மிக முக்கிய நடவடிக்கை என்று குறிப்பிட்டார்.‌ ராணுவப் படைகளின் தேவைக்கேற்ப கொள்கைகளை மாற்றி அமைப்பது அவசியம் என்று வலியுறுத்திய அவர், இந்தப் புதிய திட்டத்தின் மூலம் நடைமுறை தாமதங்கள் நீக்கப்படுவதுடன், அதிக பரவலாக்கம் மற்றும் இயக்க செயல்திறனுக்கு வழிவகுக்கப்படும் என்று கூறினார்.

நாட்டின் பாதுகாப்பு முறையை வலுவானதாகவும் தற்சார்பு நிறைந்ததாகவும் மாற்றும் அரசின் உறுதித்தன்மையை பாதுகாப்பு அமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார். வளங்கள் முறையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று கூறிய அவர், அரசின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதில் அனைத்து பங்குதாரர்களும ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

ராணுவத் தலைவர் ஜெனரல் பிபின் ராவத், கடற்படை தலைவர் அட்மிரல் கரம்பீர் சிங், பாதுகாப்புச் செயலாளர் டாக்டர் அஜய் குமார் மற்றும் உயரதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக