வியாழன், 2 செப்டம்பர், 2021

அடுத்த ஓராண்டில் 75,000 ஹெக்டர் நிலப்பரப்பில் மருத்துவ தாவரங்கள் பயிரிடுவதை ஊக்குவிப்பதற்காக ஓர் தேசிய பிரச்சாரத்தை ஆயுஷ் அமைச்சகத்தின் தேசிய மருத்துவ தாவரங்கள் வாரியம் தொடங்கியுள்ளது.


 விடுதலையின் அம்ருத் மஹோத்ஸவத்தின் ஒரு பகுதியாக இந்தியாவில் மருத்துவ தாவரங்கள் பயிரிடுவதை ஊக்குவிப்பதற்காக ஓர் தேசிய பிரச்சாரத்தை ஆயுஷ் அமைச்சகத்தின் தேசிய மருத்துவ தாவரங்கள் வாரியம் தொடங்கியுள்ளது. இதன்படி நாடு முழுவதும் அடுத்த ஓராண்டில் 75,000 ஹெக்டர் நிலப்பரப்பில் மருத்துவ தாவரங்கள் பயிரிடப்படும். உத்தரப் பிரதேசத்தின் சஹரன்பூர் மற்றும் மகாராஷ்டிராவின் புனேவில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. விடுதலையின் அம்ருத் மஹோத்ஸவ கொண்டாட்டங்களின் கீழ் ஆயுஷ் அமைச்சகத்தால் மேற்கொள்ளப்படும் திட்டங்களுள் இது இரண்டாவதாகும்.

மருத்துவ தாவரங்கள் துறையில் நம் நாட்டிற்கு அபரிமிதமான வாய்ப்பு இருப்பதால் 75,000 ஹெக்டர் நிலப்பரப்பில் மருத்துவ தாவரங்களை பயிரிடுதன் மூலம் மருந்துகளின் இருப்பு உறுதி செய்யப்படுவதுடன், விவசாயிகளின் வருமானத்திற்கான மிகப்பெரிய ஆதாரமாகவும் அது விளங்கும் என்று ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் தெரிவித்துள்ளார்.

ஒய் பிரேக் செயலி, நோய்களைத் தடுக்கும் ஆயுஷ் மருந்துகளின் விநியோகம், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான தொடர் கருத்தரங்கங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் விடுதலையின் அம்ருத் மஹோத்ஸவத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடர் கருத்தரங்கங்கள் மற்றும் ஒய் பிரேக் செயலி குறித்த வலைதள கருத்தரங்கம் செப்டம்பர் 5-ஆம் தேதி நடைபெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக