ஞாயிறு, 31 அக்டோபர், 2021

காவிரி டெல்டாவில் புதிய பெட்ரோகெமிக்கல் நிறுவனங்களை உருவாக்குவதற்கான ஏல அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.- டிடிவி.தினகரன்


 காவிரி டெல்டாவில் புதிய பெட்ரோகெமிக்கல் நிறுவனங்களை உருவாக்குவதற்கான ஏல அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயத்திற்கு ஆதரவானவர்கள் போல காட்டிக்கொண்டு வசனம் பேசுவதையும் , ஆட்சிக்கு வந்ததும் விவசாயத்திற்கு எதிரான (ஹைட்ரோ கார்பன் போன்ற) திட்டத்திற்கு கையெழுத்து போடுவதையும் தி.மு.க வாடிக்கையாக வைத்திருக்கிறது.

கடலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவக்கல்லூரியில் தனியார் கல்லூரிக்கு இணையாக கட்டணம் வசூலிக்கும் முறையை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்.- தி.வேல்முருகன்


 கடலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவக்கல்லூரியில்  தனியார் கல்லூரிக்கு இணையாக கட்டணம் வசூலிக்கும் முறையை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. 

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கோரிக்கை மற்றும் மாணவர்களின் தொடர் போராட்டத்தின் காரணமாக,  இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை, கடலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாகப் பெயர் மாற்றம் செய்து கடந்த 2020-ல் அரசாணை வெளியிடப்பட்டது. மேலும், தற்போது பயின்று வரும் மாணவர்களுக்கும், இனிமேல் பயிலும் மாணவர்களுக்கும்,  மற்ற அரசு மருத்துவக்கல்லூரியில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.   

சர்தார் படேலின் வாழ்க்கை அனைவருக்கும், குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கிறது.- திரு அமித் ஷா


 சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளில், குஜராத் கெவாடியாவில் நடந்த தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா தலைமை விருந்தினராக பங்கேற்றார்.

இரும்பு மனிதர் என அழைக்கப்பட்ட இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் படேலின் ஒற்றுமை சிலை அமைந்துள்ள இடத்தில், திரு.அமித்ஷா மலர் தூவி மரியாதை  செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசிய வீடியோ தகவல் ஒளிபரப்பப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திரு அமித்ஷா பேசியதாவது:

மும்பையில் உள்ள எம்டிஎல் (MDL) நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட போர்க்கப்பல், இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.


 மும்பையில் உள்ள எம்டிஎல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட  போர்க்கப்பல், இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

15 பி திட்டத்தின் கீழ், 4 போர்க்கப்பல்களை, மும்பையில் உள்ள மஸ்கான் டாக்ஸ் லிமிடெட்(எம்டிஎல்)  என்ற கப்பல் கட்டும் நிறுவனம் தயாரிக்க கடந்த 2011ம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கு நாட்டின் முக்கிய நகரங்களான விசாகப்பட்டினம், மர்முகோவா, இம்பால் மற்றும் சூரத் என பெயரிடப்பட்டன.

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்வதை தவிர்க்கும் பாராட்டத்தக்க அரசாணை. - கி.வீரமணி

 அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்வதை தவிர்க்கும் பாராட்டத்தக்க அரசாணை.- கி.வீரமணி

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் அவர்களின் மனிதநேயம் மிக்க அறிவிப்பு.

நமது முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் பொற்கால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் நாளும் வளர்ந்தோங்கி வரலாறு படைக்கின்றன.

முன்பு, சட்டமன்றத்தில் 110ஆவது விதியின்கீழ் அவர் அறிவித்தபடி “அரசுப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளில் ஒன்றான - அரசு ஊழியர் பணி நிறைவடைந்து ஓய்வு பெறும் நாளில், அவர்மீது ஏதாவது ஒரு காரணம் - குற்றச்சாற்று கூறி, கடைசி நேரத்தில் பணியிடை நீக்கம் செய்து, அவரது ஓய்வூதியம் போன்ற ஓய்வு காலப் பலன்களைக் கிட்டாமல் செய்யும் மனிதாபிமானமற்ற, கருணையற்ற செயல்முறை இனி இருக்காது” என்று தற்போது அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது மிக மிகப் பாராட்டி வரவேற்கப்பட வேண்டிய சிறந்த ஓர் அறிவிப்பு ஆகும்!

ஒற்றுமை வாரத்தை கொண்டாடுகிறது தேசிய ரயில் அருங்காட்சியகம்.


 சர்தார் படேல் பற்றிய கண்காட்சியை அமைத்து ஒற்றுமை வாரத்தை, இன்று முதல் நவம்பர் 14ம் தேதி வரை  இந்திய ரயில்வேயின் தேசிய ரயில் அருங்காட்சியகம்  கொண்டாடுகிறது. இந்த கண்காட்சி தில்லியில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

‘ஒரே இந்தியா உன்னத இந்தியா’ என்ற உணர்வால் இந்தியாவின் ஜனநாயக மரபுகளை வலுப்படுத்த வேண்டும்.- பிரதமர் திரு நரேந்திர மோடி


 தேசிய ஒற்றுமை தினத்தையொட்டி உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘ஒரே இந்தியா உன்னத இந்தியா’ சிந்தனைக்கு தமது வாழ்க்கையை அர்ப்பணித்த சர்தார் படேலுக்கு அவர் சிறப்புமிக்க அஞ்சலி செலுத்தினார். சர்தார் படேல் வரலாற்று ஆளுமை மட்டுமல்ல அவர் நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் இதயத்திலும் வாழ்கிறார் என்றும் ஒற்றுமை என்ற செய்தியை முன்னெடுத்துச் செல்லும் மக்கள் சிதைவுபடாத ஒற்றுமை உணர்வின் உன்மையான அடையாளமாக இருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.  நாட்டின் மூலை முடுக்குகளிலும் தேசிய ஒருமைப்பாட்டு விழா நடப்பதும், ஒற்றுமை சிலை அருகே நிகழ்வுகள் நடப்பதும் இதே உணர்வைப் பிரதிபலிக்கின்றன என்று அவர் குறிப்பிட்டார். புவிசார்ந்த நிலையில் மட்டும் இந்தியா ஒன்றாக இல்லை என்றும் சிந்தனைகள், சித்தாந்தங்கள், நாகரீகம், கலாச்சாரம் ஆகியவற்றில் பொதுவான நிலைகளையும் நாடு கொண்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். “130 கோடி இந்தியர்கள் வாழும் இந்த பூமி நமது ஆன்மா, கனவுகள், பெருவிருப்பங்கள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த பகுதியாகவும் இருக்கிறது” என்று அவர் கூறினார்.

ஊதியம் வழங்க பணமில்லை: வேலை உறுதி திட்டத்திற்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும்!.- DR.S.ராமதாஸ்

 ஊதியம் வழங்க பணமில்லை: வேலை உறுதி

 திட்டத்திற்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும்!.- DR.S.ராமதாஸ்

இந்தியாவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி முழுமையும் நடப்பு நிதியாண்டின் முதல் பாதியிலேயே தீர்ந்து விட்டதாகவும், இதுவரை பணியாற்றிய ஏழை மக்களுக்கு இன்னும் ரூ.8,686 கோடி வழங்க வேண்டியிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் கவலையளிக்கின்றன. இத்தகையச் சூழல் நாட்டு மக்களை மிகக்கொடிய வறுமையில் தள்ளிவிடக் கூடும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கூட்டத்தை தமிழக ஆளுநர் திரு ஆர் என் ரவி நடத்தினார்


 அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் உடனான தமது முதல் கூட்டத்தை தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர் என் ரவி சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் அன்று (30.10.2021) நடத்தினார்.

அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் சாதனைகள் குறித்து துணைவேந்தர்கள் வழங்கிய பவர்பாயின்ட் விளக்கக்காட்சிகளை அவற்றின் வேந்தரான ஆளுநர் கண்டார். அரசு பல்கலைக்கழங்களின் நிலை குறித்தும் நிதி உள்ளிட்டவற்றை வழங்கி மாநில அரசு அவற்றுக்கு எவ்வாறு உதவுகிறது என்பது குறித்தும் மாநில அரசின் மூத்த செயலாளர்கள் ஆளுநரிடம் எடுத்துரைத்தனர்.

சனி, 30 அக்டோபர், 2021

முல்லைப் பெரியாறு; தமிழக மக்களின் உரிமை கேரள அரசு கேடு செய்ய முனைகிறது.- வைகோ குற்றச்சாட்டு

 முல்லைப் பெரியாறு; தமிழக மக்களின் உரிமை

கேரள அரசு கேடு செய்ய முனைகிறது.- வைகோ குற்றச்சாட்டு

2014 ஆம் ஆண்டு, மே 7ஆம் தேதி, முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரை நிலைநிறுத்திக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் 138 அடியிலேயே இடுக்கிக்கு தண்ணீரைத் திறந்துவிட்டார். மூன்று ஆண்டுகளாக தமிழ்நாடு படகு பயன்படுத்த கேரள அரசு அனுமதிக்கவில்லை. 20 ஆண்டு காலமாக முல்லைப் பெரியாரில் மின்சாரத்தைத் தடுத்து நிறுத்திவிட்டார்கள்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் பெட்ரோ கெமிக்கல் மண்டலமா? காவிரி டெல்டாவை சிதைத்து விடக் கூடாது!. - DR.S.ராமதாஸ்


 பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் பெட்ரோ கெமிக்கல் மண்டலமா? காவிரி டெல்டாவை சிதைத்து விடக் கூடாது!. - DR.S.ராமதாஸ்

காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில்  பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் கவலையளிக்கின்றன. மிகப்பெரிய போராட்டங்களுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை சிதைக்கும் வகையிலான திட்டங்களை செயல்படுத்த முனைவது நியாயமல்ல.

புதிய கல்விக் கொள்கையினை வகுக்கும் கல்வியாளர் குழுவை நியமனம் செய்வதை விரைவுபடுத்தவேண்டும். - கி.வீரமணி



இல்லம் தேடிக் கல்வித் திட்டம்: முதலமைச்சரின் விளக்க அறிக்கையை வரவேற்கிறோம்! 
ஊடுருவலைத் தடுக்கக் கண்காணிப்புக்குழு சிறப்பானதே!.- கி.வீரமணி

தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையின் சார்பாக ‘இல்லம் தேடிக் கல்வித் திட்டம்‘ தொடங்கப்படுவதுபற்றி 26.10.2021 அன்று ‘விடுதலை’யில் சில முக்கிய அய்யங்களை வெளியிட்டதோடு, ஒன்றிய பா.ஜ.க. அரசின் தேசிய கல்வித் திட்டத்தின் ஓர் அம்சமாக வீடுதோறும் கல்வியைச் சொல்லிக் கொடுக்கிறோம் என்ற பெயரில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினை, ஆர்.எஸ்.எஸ். ‘ஷாகா’ என்பதன் சிலவற்றை லாவகமாக மாணவர்கள் - அவர்கள்மூலம் பெற்றோர் தொடர்பு இவை மூலம் மத நஞ்சினைப் புகுத்திப் பரப்பிடும் ஆபத்து அதில் உள்ளது என்பதால், அதன்மூலம் ஊடுருவல், இளம்பிஞ்சுகளுக்குப் பகுத்தறிவு வளர்ச்சியைத் தடுக்கும் அபாயமும் ஏற்பட வழி அதனால் ஏற்படக் கூடும் என்பதால், நாம் அதுபற்றி தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை - வேண்டுகோள் விடுத்ததோடு, புதிய கல்விக் கொள்கையினை வகுக்கும் கல்வியாளர் குழுவை நியமனம் செய்வதை விரைவுபடுத்தவேண்டும் என்றும் தமிழ்நாடு அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றோம். நம்மைப்போல பலமுற்போக்கு இயக்க கொள்கையாளர்களும், அய்யங்களை எழுப்பினர்.

‘நீலப் பொருளாதாரத்திற்கு‘ ஆய்வு செய்வதற்கான ஆழ்கடல் இயக்கத்திற்கான தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் தனியார் நிறுவனங்கள் ஈடுபடுத்தப்படும்.- டாக்டர் ஜிதேந்திர சிங்


 மத்திய அறிவியல் & தொழில்நுட்பம், புவி அறிவியல் (தனிப் பொறுப்பு) மற்றும் பிரதமர் அலுவலக இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், சென்னை துறைமுகத்தில் மத்திய புவி அறிவியல் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய கடலியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆராய்ச்சிக் கப்பலான “சாகர் நிதி” கப்பலை முன்னோடி விஞ்ஞானிகளுடன் இணைந்து பார்வையிட்டார்.

கடல்சார் வளங்களை ஆய்வு செய்தல் மற்றும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் பங்கேற்பு, குறிப்பாக ஆழ்கடல் இயக்கத்தைச் செயல்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து டாக்டர் ஜிதேந்திர சிங் எடுத்துரைத்தார். புவி – அறிவியல், வானிலை மற்றும் கடலியல் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவல்ல இந்தக் கப்பல், 10,000 கடல் மைல்கள் (19,000 கிலோ மீட்டர்) தொலைவுக்கு 45 நாட்கள் வரை பயணம் செய்யக் கூடிய திறன் பெற்றதாகும்.

மக்களிடையே நிமோனியா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தகவல் மற்றும் விழிப்புணர்வு தொகுப்பை மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டார்.


 விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தின் ஒரு பகுதியாக, அனைவருக்குமான  தடுப்பூசி திட்டத்தின் கீழ் தேசிய அளவிலான நிமோனியா தடுப்பூசி திட்டத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார். மக்களிடையே நிமோனியா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தகவல் மற்றும் விழிப்புணர்வு தொகுப்பை மத்திய அமைச்சர் வெளியிட்டார்.   

இந்திய கடற்படை போர்க்கப்பல் துஷில் ரஷ்யாவில் தொடக்கம்.


 பி 1135.6 வகையை சேர்ந்த ஏழாவது இந்திய கடற்படை போர்க்கப்பல், ரஷ்யாவில் உள்ள கலினின்கிராடில் அமைந்துள்ள யந்தர் கப்பல் தளத்தில் ரஷ்யாவுக்கான (மாஸ்கோ) இந்திய தூதர் திரு டி பால வெங்கடேஷ் வர்மா மற்றும் ரஷ்ய கூட்டமைப்பு மற்றும் இந்திய கடற்படை அதிகாரிகளின் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது.

கப்பலுக்கு துஷில் என்று திருமதி டத்லா வித்யா வர்மா பெயரிட்டார். துஷில் என்றால் சமஸ்கிருதத்தில் பாதுகாப்பு கவசம் என்று பொருள்.

நமது தாய்மொழிகள்தான் நம்மை நமது பாரம்பரியத்துடன் இணைக்கின்றன மற்றும் நமது சமூக-கலாச்சார அடையாளத்தை வரையறுக்கின்றன.- திரு எம். வெங்கையா நாயுடு


 கோவா சென்ற குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு ராஜ்பவனில் பிரபல கொங்கனி குழு, மராத்தி எழுத்தாளர்கள், நாட்டுப்புற கலைஞர்கள் மற்றும் கல்வியாளர்களை சந்தித்து பேசினார். அவர்களிடம் திரு வெங்கையா நாயுடு பேசியதாவது:

நமது தாய்மொழிகள்தான் நம்மை நமது பாரம்பரியத்துடன் இணைக்கின்றன மற்றும் நமது சமூக-கலாச்சார அடையாளத்தை  வரையறுக்கின்றன.  நமது சிந்தனைகளையும், கருத்துக்களையும், படைப்புகளையும் நமது சொந்த மொழிகளில் வெளிப்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும். கோவா வளமான இலக்கிய பாரம்பரியத்தை கொண்டுள்ளது. 

வானிலிருந்து தரை இலக்கை தாக்கும் தொலைதூர வெடிகுண்டு வெற்றிகர பரிசோதனை: டிஆர்டிஓ மற்றும் விமானப்படை இணைந்து மேற்கொண்டது


 ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்(டிஆர்டிஓ) உள்நாட்டில் உருவாக்கிய தொலைதூர வெடிகுண்டை, விமானப்படை வெற்றிகரமாக பரிசோதித்தது.

வெள்ளி, 29 அக்டோபர், 2021

மத்திய தொகுப்புப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய விகிதம் மாற்றம்


 மத்திய அரசின் பல்வேறு துறைகளில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் பணியாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதிய விகிதத்தை மாற்றியமைத்து, மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வுகள் 01.10.2021 முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆழ்கடல் ஆராய்ச்சிக்கான மனிதர்களுடன் கூடிய சமுத்ரயான்-ஐ மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் சென்னையில் தொடங்கி வைத்தார்


 மத்திய அறிவியல் தொழில்நுட்பம் & புவி அறிவியல் துறை (தனிப்பொறுப்பு) மற்றும் பிரதமர் அலுவலக இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், மனிதர்களுடன் கூடிய நீர்மூழ்கி ஆய்வுக் கலத்தை சென்னையில் இன்று தொடங்கி வைத்தார். இந்த ஆய்வுக்கலம் அனுப்பப்படுவதன் மூலம் கடலடி ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கான நீர்மூழ்கி கலத்தைப் பெற்றுள்ள அமெரிக்கா. ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் சீனா போன்ற நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த முக்கிய தொழில்நுட்பம், ஆழ்கடலில் 1000 முதல் 5500 மீட்டர் ஆழம் வரை உள்ள பகுதிகளில், உயிரினம் அல்லாத பாலி மெட்டாலிக் மாங்கனீஸ், கேஸ் ஹைட்ரேட்டுகள், ஹைட்ரோ-தெர்மல் சல்பைடுகள் மற்றும் கோபால்ட் போன்ற தாது வளங்களை கண்டறிவதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதில் மத்திய புவி அறிவியல் துறைக்கு உதவிகரமாக இருக்கும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். மனிதர்களுடன் கூடிய நீர்மூழ்கி கலமான மத்சியா 6000 –ஐ வடிவமைப்பதற்கான ஆரம்பப் பணிகள் நிறைவடைந்து, இஸ்ரோ, சென்னை ஐஐடி மற்றும் டிஆர்டிஓ உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்ட அந்த கலத்தின் செயல்பாடு தொடங்கி உள்ளது என்றும் அவர் கூறினார்.

சரக்குகள் மற்றும் ஆலோசனை அல்லாத இதர சேவைகளுக்காக மாதிரி டெண்டர் ஆவணங்களை (MTD) மத்திய நிதித்துறை செயலாளர் டாக்டர் டி.வி.சோமநாதன் வெளியிட்டார்


 இந்த ஆண்டு சுதந்திரதின உரையின் போது மாண்புமிகு பிரதம மந்திரி தற்போதைய விதிகள் மற்றும் நடைமுறைகளை மீள்பரிசோதனை செய்து தொடர்ச்சியாக சீர்திருத்த வேண்டும் என்று கூறி இருந்தார். அதனையொட்டி சரக்குகள் மற்றும் ஆலோசனை அல்லாத சேவைகளுக்காக மாதிரி டெண்டர் ஆவணங்களை (MTD) இன்று மத்திய நிதித்துறை செயலாளர் டாக்டர் டி.வி.சோமநாதன் வெளியிட்டார்.

இ-கொள்முதல் தொடர்புடைய தேவைகளுக்கு குறிப்பாக எம்டிடீ-க்கள் உதவியாக இருக்கும். இதன் மூலம் இ-கொள்முதல் மேற்கொள்வதற்கான வழிமுறை எளிமையாகும்.  அரசின் எளிமையான மற்றும் திறன்மிக்க மின் ஆளுகை என்ற குறிக்கோள் மேலும் முன்னெடுத்துச் செல்லப்படும்.  அரசுத் துறை சார்ந்த கொள்முதல் நடைமுறைகளை மின்மயமாக்குதலை எளிமைப்படுத்துதல் மற்றும் தரப்படுத்துதல் மூலம் டிஜிட்டல் இந்தியா இலக்கை அடைவதற்கு இத்தகைய முன்னோடி நடவடிக்கைகள் உதவியாக இருக்கும்.

தமிழ்நாடு அரசு கலை - அறிவியல் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றி வரும் பேராசிரியர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை.- DR.அன்புமணி ராமதாஸ்



 அரசு, பல்கலை பேராசிரியர்களின் பதவி

உயர்வை தாமதமின்றி வழங்க வேண்டும்!.- DR.அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாடு அரசு கலை - அறிவியல் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றி வரும் பேராசிரியர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை. அனைத்துத் துறை பணியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் காலம் சார்ந்து பதவி உயர்வு வழங்கப்படும் நிலையில்,  அறிவை வளர்க்கும் பணியைச் செய்யும் ஆசிரியர்களுக்கு மட்டும் அதை மறுப்பது நியாயமற்றதாகும்.

புதிய கல்விக் கொள்கை அடிப்படையிலான கலை மற்றும் கலாச்சாரம் குறித்த பயிற்சியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.- DR.S.ராமதாஸ்

 பயிற்சி என்ற பெயரில் புதிய கல்விக்

கொள்கையைத் திணிக்கக் கூடாது! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு புதிய கல்விக் கொள்கை அடிப்படையிலான கலை மற்றும் கலாச்சாரம் குறித்த பயிற்சி அளிக்கப்படவிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கை செயல்படுத்தப்படாது; மாநிலக்  கல்விக் கொள்கை தான் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் உறுதியளித்த நாளிலேயே புதியக் கல்விக் கொள்கை அடிப்படையில் பயிற்சியளிக்கப்படும் என்ற செய்தி வெளியாகியிருப்பது வருத்தமளிக்கிறது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளை ஒருங்கிணைத்து புதிய சுற்றுலா திட்டத்தை உருவாக்க வேண்டும்.- திரு. எல். முருகன்


 தென் மாநில சுற்றுலாத்துறை அமைச்சர்களின் மாநாடு, பெங்களூருவில் மத்திய சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் வட கிழக்கு பிராந்திய விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. ஜி. கிஷன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில், மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை இணை அமைச்சர் திரு. எல். முருகன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

வியாழன், 28 அக்டோபர், 2021

அதிபர் தேர்தலுக்கான சர்வதேச பார்வையாளராக உஸ்பெகிஸ்தானுக்கு இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் திரு சுஷில் சந்திரா பயணம்


 உஸ்பெகிஸ்தானின் மத்திய தேர்தல் ஆணைய தலைவரின் அழைப்பின் பேரில், 2021 அக்டோபர் 24 அன்று நடைபெற்ற அதிபர் தேர்தலை கண்காணிப்பதற்காக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் திரு சுஷில் சந்திரா தலைமையிலான மூன்று பேர் குழு அந்நாட்டுக்கு சென்றது. புதிய தேர்தல் விதியின் கீழ் நடத்தப்பட்ட இந்த தேர்தலை சர்வதேச சமூகம் உன்னிப்பாகக் கவனித்து வந்தது.

“தரவு சார்ந்த ஆளுகைக்காக செயற்கை நுண்ணறிவு” எனும் தலைப்பில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கலந்துரையாடல்


 “தரவு சார்ந்த ஆளுகைக்காக செயற்கை நுண்ணறிவு” எனும் தலைப்பிலான கலந்துரையாடலை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தேசிய மின் ஆளுகை பிரிவு 2021 அக்டோபர் 28 அன்று நடத்துகிறது. சர்வதேச சிறந்த நடைமுறைகளுடன் தரவு சார்ந்த செயற்கை நுண்ணறிவுடன் கூடிய ஆளுகையின் முக்கியத்துவம் குறித்து இந்த கூட்டம் வலியுறுத்துகிறது.

உளவு பார்ப்பது - குடிமக்களின் தனிப்பட்ட அந்தரங்கப் பிரச்சினைகளில் தலையிடுவது சட்ட விரோதமே! உச்சநீதிமன்றம் உரிய முக்கியத்துவம் கொடுத்து விசாரிப்பது வரவேற்கத்தக்கது!.- கி.வீரமணி

 உளவு பார்ப்பது - குடிமக்களின் தனிப்பட்ட அந்தரங்கப் பிரச்சினைகளில் தலையிடுவது சட்ட விரோதமே!

உச்சநீதிமன்றம் உரிய முக்கியத்துவம் கொடுத்து விசாரிப்பது வரவேற்கத்தக்கது!

நீதிமன்றத்தின்மீது மக்களின் நம்பிக்கையை ஆழப்படுத்தும்; 

ஜனநாயகத்தின் நான்கு தூண்களும் பாதுகாக்கப்படவேண்டும். - கி.வீரமணி

நமது நீதிமன்றங்கள்தான் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க உதவும் முக்கிய தளங்கள் ஆகும்.

பாதிக்கப்படும் மக்களைக் காத்து  - அரண் செய்யும் மகத்தான கடமை

நாட்டில் உரத் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை முறியடிப்பதற்காக மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் இணை அமைச்சர் திரு பக்வந்த் குபா செய்தியாளர் சந்திப்பு.


 நாட்டில் உரத் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை முறியடிப்பதற்காக மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் இணை அமைச்சர் திரு பக்வந்த் குபா செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசினார். பொய்யான மற்றும் ஆதாரமற்ற தகவல்கள் பரப்பப்படுவதாக கூறிய அவர், உரத் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று விவசாயிகளை கேட்டுக் கொண்டார்.

விகாசசுதாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய திரு குபா, “கடந்த இரண்டு ஆண்டுகளாக மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளில் கலப்பு உரப் பயன்பாடு அதிகரித்து வருகிறது. கலப்பு உரங்களால் விவசாயிகள் பயனடைவார்கள். டிஏபியை விட கலப்பு உரம் சிறந்த பலனைத் தருகிறது. இதனால்தான் டிஏபிக்கு பதிலாக கலப்பு உரத்தை வாங்க அரசு பரிந்துரைக்கிறது” என்றார்.

நிலக்கரி அனல்மின் நிலையங்கள் அனைத்திலும் உடனடியாக நச்சுவாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் கருவிகள் பொருத்தப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்.- DR.S.ராமதாஸ்



உயிரைப் பறிக்கும் அனல் மின்நிலையங்கள்:
மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தேவை! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில் அனல் மின்நிலையங்களில் இருந்து நச்சு வாயுக்கள் மிக அதிக அளவில் வெளியேறுவது குறித்தும், அதனால் சுற்றுச்சூழலுக்கும், மனித உயிர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் ஆய்வில் வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. மாசுக்கட்டுப்பாட்டு அமைப்புகளின் பரிந்துரை, எச்சரிக்கை உள்ளிட்ட எதையும் மதிக்காமல் அனல் மின்நிலையங்கள் சுற்றுச்சூழலையும், மனிதர்களின் உடல் நலத்தையும் சீரழித்து வருவது கண்டிக்கத்தக்கது; இத்தகைய கொடுமையை ஒருபோதும் ஏற்க முடியாது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் ஜனநாயகத்துக்கு எதிரான தொடர் செயல்பாடுகளுக்கு, உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு கடிவாளமாக அமைந்துள்ளது.- கே.எஸ்.அழகிரி

 இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் என்ற ஒட்டுக்கேட்கும் மென்பொருளைப் பயன்படுத்தி, இந்தியாவின்  பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள், ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள் என 300-க்கும் மேற்பட்டோரின் செல்பேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக வெளியான செய்திகள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இதுகுறித்து விவாதிக்க வேண்டுமென மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்கட்சிகள் எடுத்த முயற்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பாராளுமன்ற ஜனநாயகத்தின் மூலம் ஆரோக்கியமான விவாதம் நடத்த பா.ஜ.க. தயாராக இல்லை. மடியில் கனம் இருப்பதால் இத்தகைய ஜனநாயக விரோதச் செயலில் பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது. 

தமிழகத்தில் அம்மா உணவகங்களில் பொது மக்களுக்கு 3 நேரமும் உணவு வழக்கம் போல கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்துகொள்ள வேண்டும்.- ஜி.கே.வாசன்


 தமிழக அரசு - அம்மா உணவகங்களின் எண்ணிக்கையை குறைப்பது, பணியாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக வேலை நாட்களில் சுழற்சி முறையை கொண்டுவருவது ஆகியவற்றில் ஈடுபடாமல் தொடர்ந்து அம்மா உணவகங்கள் கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது போல சிறப்பாக செயல்படுத்தப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் அம்மா உணவகங்களில் பொது மக்களுக்கு 3 நேரமும் உணவு வழக்கம் போல கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்துகொள்ள வேண்டும்.

‘இந்தோ-பசிபிக்’ பகுதி பல நாடுகளின் விதிமுறைகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட இயற்கையான பகுதி என பிரதமர் திரு.நரேந்திர மோடி கூறியுள்ளார்.- திரு.ராஜ்நாத் சிங்


இந்தோ-பசிபிக் பிராந்திய பேச்சுவார்த்தை 2021 காணொலிகாட்சி மூலம் அக்டோபர் 27ம் தேதி முதல் 29ம் தேதிவரை நடைபெறுகிறது. இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் முக்கிய உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:

இந்திய தொழில்நுட்ப சூழலியல் வளர்ச்சியை செயற்கை நுண்ணறிவு வேகமாக செயல்படுத்தும்.- மத்திய இணையமைச்சர் திரு.ராஜீவ் சந்திரசேகர்


 மீள் வளர்ச்சிக்கான செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பில் அசோசேம் அமைப்பு காணொலி வாயிலாக ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் பேசிய மத்திய திறன் வளர்ச்சி மற்றும் தொழில் முனைவோர் துறை மற்றும் மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் திரு.ராஜீவ் சந்திரசேகர், “இந்திய தொழில்நுட்ப சூழலியல் வளர்ச்சியை செயற்கை நுண்ணறிவு வேகமாக செயல்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.

காதி ஆடை அலங்கார வடிவமைப்பு போட்டியை, இந்திய ஆடை அலங்கார வடிவமைப்பு கவுன்சில் நடத்தியது.


 காதியின் ஆடை அலங்கார வடிவமைப்பு போட்டி, புதுதில்லியில் உள்ள அசோக் ஓட்டலில் நடத்தப்பட்டது.

இந்த ஆடை அலங்கார வடிவமைப்பு போட்டியை, இந்திய ஆடை அலங்கார வடிவமைப்பு கவுன்சில் நடத்தியது. இதில் 10 வளரும் ஆடை வடிவமைப்பாளர்கள் தங்களின் 60 புதிய டிசைன்களை  வெளிக்காட்டினர். இவர்கள் அகில இந்திய காதி வடிவமைப்பாளர் போட்டி மூலம் தேர்வு செய்யப்பட்டனர். முதல் 3 இடங்களைப் பிடித்த ஆடை வடிவமைப்பாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

ஒளியை உறிஞ்சுவதன் மூலம் கரிவளியை (CO2) மீத்தேன் ஆக மாற்றுவதற்கு செலவு குறைந்த உலோகம் இல்லாத வினையூக்கியை இந்திய விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.


 ஒளியை உறிஞ்சுவதன் மூலம் கரிவளியை (கார்பன் டை ஆக்சைடு) மீத்தேன் ஆக மாற்றுவதற்கு செலவு குறைந்த உலோகம் இல்லாத வினையூக்கியை இந்திய விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.

புதன், 27 அக்டோபர், 2021

ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு அநீதி ஏற்பட்ட காலம் முடிந்துவிட்டது. தற்போது, அவர்களுக்கு யாரும் அநீதி இழைக்க முடியாது.- திரு அமித் ஷா


 ஜம்மு காஷ்மீரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய அமைச்சர் திரு அமித்ஷா தனது 2வது நாள் பயணத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். ஜம்முவில் ரூ.210 கோடி செலவில், ஐஐடி புதிய வளாகம் கட்டப்பட்டுள்ளது. வளர்ச்சித் திட்டங்கள் தொடக்க விழா நிகழ்ச்சியில் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா, மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் மற்றும் பிரதமர் அலுவலக இணையமைச்சர் திரு ஜித்தேந்திர சிங் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் திரு அமித்ஷா கூறியதாவது:

ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு அநீதி ஏற்பட்ட காலம் முடிந்துவிட்டது. தற்போது, அவர்களுக்கு யாரும் அநீதி இழைக்க முடியாது. ஜம்மு காஷ்மீர் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது.        

கல்வித் துறை, தொழில் துறை மற்றும் அரசு எவ்வாறு இணைந்து பணியாற்றி புதுமைகள் மற்றும் தொழில்முனைதலை நாட்டில் முன்னேற்றலாம்.- டாக்டர் ஜிதேந்திர சிங்


 அறிவியல் புதுமைகளில் கல்வி மற்றும் தொழில் துறைகளை அத்தியாவசிய பங்குதாரர்களாக ஆக்குவதற்கான அமைப்பு ரீதியான செயல்முறை உருவாக்கப்படும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி குழு (சிஎஸ்ஐஆர்) சங்கத்தின் கல்வி துணை குழுவிடம் உரையாடிய அவர், கல்வி மற்றும் தொழில் துறைகள் இடையே நிலவும் நம்பிக்கை குறைபாட்டை களைய வேண்டும் என்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கு தேவையான நிதி உதாரணமாக ஒதுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

இந்திய சுதந்திரத்திற்குப் பின் மிக நீண்ட காலத்திற்கு சுகாதார அடிப்படைக் கட்டமைப்பு போதிய கவனம் பெறவில்லை.- திரு நரேந்திர மோடி


 பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார அடிப்படைக் கட்டமைப்பு இயக்கத்தைத் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். வாரணாசிக்கான ரூ. 5,200 கோடி மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் அவர் தொடங்கிவைத்தார். உத்தரப் பிரதேச ஆளுநர், முதலமைச்சர், மத்திய அமைச்சர்கள் டாக்டர். மன்ஷூக் மண்டாவியா, டாக்டர். மஹேந்திர நாத் பாண்டே, இணை அமைச்சர்கள், மக்களின் பிரதிநிதிகள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் 100 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தி நாடு மிகப் பெரிய வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது என்று கூடியிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர் கூறினார். ”பாபா விஸ்வநாத் ஆசியுடன், அன்னை கங்கையின் நிலையான புகழுடன், காசி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் அனைவருக்கும் கட்டணமில்லா தடுப்பூசி இயக்கம் வெற்றிகரமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது” என்று பிரதமர் கூறினார்.

இல்லம் தேடி கல்வித் திட்டம்‘ என்பது ஆர்.எஸ்.எஸின் கல்விக் கொள்கையைப் பரப்புவதே! தமிழ்நாடு இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.- கி.வீரமணி

 இல்லம் தேடி கல்வித் திட்டம்‘ என்பது ஆர்.எஸ்.எஸின் கல்விக் கொள்கையைப் பரப்புவதே! தமிழ்நாடு இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்- எந்த வகையிலும் இதனை அனுமதிக்கவே கூடாது! - கி.வீரமணி

தமிழ்நாடு அரசு - தி.மு.க. அரசு, குலக்கல்வித் திட்டத்தின் மறுபதிப்பாகவும், சமூகநீதியை அறவே ஒழிக்கும் வகையில் அதுபற்றிய முக்கியத்துவத்தையே தராமலும், ஆர்.எஸ்.எஸ். கொள்கைப்படி உருவாக்கப்பட்ட ஒன்றிய அரசின் கல்வித் திட்டத்தை தமிழ்நாடு ஏற்காது என்று கொள்கை முடிவாக முன்பே அறிவித்துள்ளது.

மிகுந்த வேதனையைத் தருவதாக உள்ளது

ஒரு நாளைக்கு 10 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட அதிநவீன கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலையை உத்தரப் பிரதேசத்தில் உள்ள வாரணாசியில் 2021 அக்டோபர் 25 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்தார்.


ஒரு நாளைக்கு 10 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட அதிநவீன கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலையை உத்தரப் பிரதேசத்தில் உள்ள  வாரணாசியில் 2021 அக்டோபர் 25 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்தார். எட்டு புனித குளங்களையும் வாரணாசியில் பிரதமர் திறந்து வைத்தார்.

இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைக்கான அடிக்கல் 2018 நவம்பர் 12 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடியால் நடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதை கட்டி முடிக்க ரூபாய் 72.91 கோடி செலவானது.

கொவிட் பெருந்தொற்று மனித உயிர்கள், பொருளாதாரங்கள் மற்றும் சுகாதார அமைப்புகளை பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளது.- பாரதி பிரவீன் பவார்,


 புதுப்பிக்கப்பட்ட காசநோய் எதிர்வினைக்கான சர்வதேச சுகாதார அமைப்பின் தென் கிழக்கு ஆசியப் பகுதிக்கான உயர்மட்ட கூட்டத்தின் தொடக்க நிகழ்வில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல இணை அமைச்சர் டாக்டர் பாரதி பவார் உரையாற்றினார்.

நிகழ்வில் உரையாற்றிய மத்திய இணை அமைச்சர், அனைத்து ஆறு பிராந்தியங்களிலும் தென்கிழக்கு ஆசியப் பகுதியிலேயே காசநோயின் தாக்கம் அதிகளவில் உள்ளது என்று கூறினார். "பல நூற்றாண்டுகளாக இறப்புகளின் முக்கிய ஆதாரமாக இது இருந்து வருகிறது, எச்.ஐ.வி/எய்ட்ஸ் மற்றும் மலேரியாவை தற்போது இது தாண்டியுள்ளது. இந்த இறப்புகளில் பெரும்பாலானவை 15-45 வயதுக்குட்பட்ட பொருளாதாரத்தை உருவாக்கும் இளைஞர்களிடையே ஏற்படுகின்றன, இதன் விளைவாக அதிக பொருளாதார மற்றும் சமூக விளைவுகள் ஏற்படுகின்றன,” என்று அவர் தெரிவித்தார்.

உத்தரப்பிரதேசம் சித்தார்த் நகரில் 9 மருத்துவக் கல்லூரிகளைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.


 சித்தார்த் நகர், இட்டா, ஹர்தோய், பிரதாப்கட், ஃபதேபூர், தியோரியா,  காசிப்பூர், மீர்சாப்பூர், ஜான்பூர் ஆகியவை புதிய மருத்துவக் கல்லூரி்களைப் பெற்றுள்ளன.

“ உத்தரப்பிரதேசத்தின் இரட்டை எஞ்சின் என்பது ஏராளமான கர்ம யோகிகளின் பல பத்தாண்டுகள் கடின உழைப்பின் விளைவாகும்”

“  மாதவ் பிரசாத் திரிபாதி என்ற பெயர் மருத்துவக் கல்லூரியில் படிப்பை நிறைவு செய்யும் இளம் மருத்துவர்களுக்கு மக்கள் சேவைக்கான ஊக்கம் அளிப்பதை தொடரும்”.

“மூளைக்காய்ச்சலால் பெரும்பாலும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக விளங்கிய பூர்வாஞ்சல், உத்தரப்பிரதேசம் ஆகியவை இந்தியாவின் கிழக்குப் பகுதிக்குப் புதிய ஆரோக்கிய ஒளிக்கீற்றை வழங்கும்”

ஆயுஷ்மான் பாரத் திட்டம் முதல் நிலை, இரண்டாம் நிலை மற்றம் மூன்றாம் நிலை டிஜிட்டல் நலன் கட்டமைப்பை வழங்குகிறது. - மன்சுக் மாண்டவியா


 முழுமையான அணுகுமுறையின் கீழ் சுகாதார நலன் குறித்த விரிவான தொலைநோக்கை பிரதமர் திரு நரேந்திர மோடி அளித்துள்ளார் என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.

பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் கட்டமைப்புத் திட்டம் குறித்து திரு மன்சுக் மாண்டவியா பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது. முழுமையான அணுகுமுறை நோக்கிய விரிவான சுகாதார நலனுக்கான  தொலைநோக்கை நமக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அளித்துள்ளார்

செவ்வாய், 26 அக்டோபர், 2021

உதான் திட்டத்தின் கீழ் ஷில்லாங் – திப்ருகர் வழித்தடத்தில் முதல் நேரடி விமானத்தை மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தொடங்கி வைத்தார்


ஷில்லாங் – திப்ருகர்   இடையே முதல் நேரடி விமானப் போக்குவரத்தை மத்திய விமானப் போக்குவர்த்துத் துறை அமைச்சர் ஜோதிராத்திய சிந்தியா தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் விமானப்போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் ஜெனரல் வி கே சிங், இத்துறை செயலாளர் ராஜீவ் பன்சால், மேகாலயா முதலமைச்சர் கன்ராட் சங்மா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய திரு ஜோதிராத்திய சிந்தியா, ‘உலகிலேயே மிக உயரமான பகுதிகளில் ஷில்லாங்கும் ஒன்று. இது கிழக்குப் பகுதியின் ஸ்காட்லாந்து என அழைக்கப்படுகிறது.  உலகம் முழுவதும் உள்ள சுற்றுலாப் பயணிகளை இது ஈர்க்கிறது’ என்றார். 

மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் டாக்டர் மன்சுக் மாண்டவியா உரையாற்ற உள்ளார்


மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் துறையில் சர்வதேச அளவில் இந்தியாவின் இடத்தை மேலும் வலுப்படுத்தும் லட்சியத்தின் ஒரு பகுதியாக, 2021 அக்டோபர் 27 அன்று காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை முதலீட்டாளர்கள் மாநாடு ஒன்றை இன்வெஸ்ட் இந்தியாவுடன் இணைந்து மருந்துகள் துறை காணொலி  வாயிலாக நடத்த உள்ளது.

"மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் துறையிலுள்ள வாய்ப்புகள் மற்றும் கூட்டுகள்" என்பது இந்த உச்சி மாநாட்டின் மையக்கருவாகும். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இம்மாநாட்டில் உரையாற்ற உள்ளார்

நடிகர் ரஜினிகாந்தின் ஈடுஇணையற்ற ஸ்டைல் மற்றும் நடிப்புத்திறமைகள் இந்திய சினிமாத்துறைக்கு புதிய பரிமாணத்தை அளித்துள்ளது.-திரு எம் வெங்கய்யா நாயுடு


திரைப்படங்களில் வன்முறை, ஆபாசம் போன்றவற்றை சினிமா தயாரிப்பாளர்கள் தவிர்க்க வேண்டும். நல்லொழுக்கம் மற்றும் நெறிமுறைகளைத் தெரிவிப்பதாக திரைப்படம் இருக்க வேண்டும்.  சமூகக் கொடுமைகளுக்கு எதிராக திரைப்படங்கள் குரல் கொடுக்க வேண்டும். நல்ல திரைப்படங்களுக்கு மனதைத் தொடும் சக்தி உள்ளது. உலகிலேயே சினிமா தான் விலை குறைவான பொழுது போக்காகும் இதை, சமூகம், நாட்டின் மேம்பாட்டிற்கு திரைப்பட தயாரிப்பாளர்களும், நடிகர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நேர்மறையான விஷயங்கள் மற்றும் மகிழ்ச்சியை சினிமா ஏற்படுத்த வேண்டும். நல்ல தகவலுடன் கூடிய திரைப்படம் நம் மனதில்  நீடித்து இருக்கும் என்பதை அனுபவம் கூறுகிறது.

திங்கள், 25 அக்டோபர், 2021

மக்களின் துன்பம் கண்டு உள்ளம் துடித்த பிரதமர் திரு.நரேந்திர மோடி, 10 மாதங்களில் 100 கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை - மத்திய அமைச்சர் எல்.முருகன்


 10 மாதங்களில் 100 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டு பாரதம் வரலாற்று சாதனை படைத்துள்ளது என்று மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் திரு.எல்.முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 2020ம் ஆண்டின் தொடக்க காலத்திலிருந்து கொரோனா பெருந்தொற்று உலகை உலுக்கி வருகிறது, இதனால் மக்கள் அனுபவித்த சோதனைகளும் துன்ப துயரங்களும் கொஞ்சமல்ல. அனால் மக்களின் துன்பம் கண்டு உள்ளம் துடித்த பிரதமர் திரு.நரேந்திர மோடி, "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என்ற வள்ளலாரின் வழி நிற்பவராக இந்தியாவைப் பெருந்தொற்றிலிருந்து மீட்கும் பணியைத் தொடங்கினார். தடுப்பூசி கண்டுபிடித்தல் மட்டுமே இந்த நோயைக் கட்டுப்படுத்தும் ஆயுதம் என்று அதற்கான முயற்சிகளில் ஈடுபடுமாறு இந்திய விஞ்ஞானிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின்மீது பிரமாணம் எடுத்துக்கொண்ட - பதவியேற்ற ஆட்சியாளர்களின் - முதலமைச்சர்களின் வரலாற்றிலேயே இது ஓர் அமைதிப் புரட்சி - சமூகநீதி வரலாற்றில்! - கி.வீரமணி

 சமூகநீதி கண்காணிப்புக்குழு: சமூகநீதி வரலாற்றில் ஒரு மைல் கல்!

‘எமது அரசு சொல்வதோடு நிற்காது - செயலில் காட்டும்‘ என்பதை உலகுக்கு நிரூபித்துவிட்டார் ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

75 ஆண்டுகால இந்திய சுதந்திர வரலாற்றில் செய்யப்படாத சாதனை - நெஞ்சம் குளிர்ந்த பாராட்டு! வாழ்த்து!!  நன்றி!!! 

தமிழ்நாட்டின் தி.மு.க. அரசு தனி வரலாறு படைத்துள்ளது சமூகநீதி வரலாற்றில்!

இதுவரை வரலாறு காணாத பெருமிதத்திற்குரிய மகத்தான சாதனை!

சமூகநீதி வரலாற்றில் - ஓர் அமைதிப் புரட்சி!

இந்திய அரசமைப்புச் சட்டத்தின்மீது பிரமாணம் எடுத்துக்கொண்ட - பதவியேற்ற ஆட்சியாளர்களின் - முதலமைச்சர்களின் வரலாற்றிலேயே இது ஓர் அமைதிப் புரட்சி - சமூகநீதி வரலாற்றில்!

இந்தியாவின் இதர மாநிலங்களுக்கும், ஏன் ஒன்றிய அரசு  (Union Government) க்கும் கூட வழிகாட்டும் வரலாற்றில் பொன் னேட்டை உருவாக்கியுள்ளது தி.மு.க. அரசு.

ஞாயிறு, 24 அக்டோபர், 2021

உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட 100 இந்திய ஜவுளி இயந்திரச் சாம்பியன்களை உருவாக்க வேண்டும்.- திரு பியூஷ் கோயல்


 உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட 100 இந்திய ஜவுளி இயந்திரச் சாம்பியன்களை உருவாக்க வேண்டும் என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

‘தொழில்நுட்ப இடைவெளி மற்றும் ஜவுளி இயந்திரத் தயாரிப்பாளர்களுக்கு முன்னோக்கிய வழி’ என்ற தலைப்பில், ஜவுளி இயந்திர உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் காணொலி காட்சி மூலம் பேசியதாவது:

அசாம் மாநிலத்தில் உள்ள திப்ரூகரில் சரக்கு முனையம், சுற்றுலா படகுக்குழாம் மற்றும் ஆற்றங்கரை வளர்ச்சித் திட்டங்களை கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் திரு. சர்பானந்த சேனாவால் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


அசாம் மாநிலத்தில் உள்ள திப்ரூகரில் சரக்கு முனையம், சுற்றுலா படகுக்குழாம் மற்றும் ஆற்றங்கரை வளர்ச்சித் திட்டங்களை  கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர்  திரு. சர்பானந்த சேனாவால் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் திப்ரூகர்  முக்கிய பங்கு வகிக்கிறது.  இங்கு வளர்ச்சித் திட்டங்களை பார்வையிட்டு ஆய்வு செய்த மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் கூறியதாவது:

மத்திய அரசின் அனுமதியுடன் சிமெண்டை இறக்குமதி செய்து குறைந்த விலையில் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.- DR.S.ராமதாஸ்

மீண்டும் உயரும் சிமெண்ட் விலை:

கட்டுப்படுத்த நடவடிக்கைகள் தேவை! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில் சிமெண்ட் விலை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.120 வரை உயர்ந்திருக்கிறது. எந்தவித நியாயமான காரணங்களும் இல்லாமல் சிமெண்ட் விலை உயர்வது கட்டுமானத்துறையையும், அதை சார்ந்துள்ள பணியாளர்களின் வாழ்வாதாரங்களையும் மட்டுமின்றி, பொருளாதார வளர்ச்சியையும் மோசமாக பாதிக்கும். இதை உணராமல் இந்த விஷயத்தில் அரசு அலட்சியம் காட்டுவது கவலை அளிக்கிறது.

இந்திய கடற்படையின் முதல் பயிற்சிப் பிரிவு 4 நாள் பயணமாக இலங்கைச் செல்கிறது.


 இந்திய கடற்படையில் முதல் பயிற்சிப் பிரிவில் உள்ள இந்திய கடற்படைக் கப்பல்களான சுஜாதா, மகர், சர்துல், சுதர்ஷினி, தாரங்கினி மற்றும் கடலோர பாதுகாப்புப் படைக் கப்பல் விக்ரம் ஆகியவை அக்டோபர் 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை இலங்கைக்கு 4 நாள் பயணம் மேற்கொள்கின்றன. வெளிநாட்டில் கடற்படை அதிகாரிகளின் 100 மற்றும் 101-வது ஒருங்கிணைந்த பயிற்சிக்காக இந்த கப்பல்கள் சென்றுள்ளன. 

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள பல்வேறு நாடுகளின் சமூக-அரசியல் மற்றும் கடல்சார் அம்சங்களை தெரியப்படுத்துவதன் மூலம் இளம் அதிகாரிகளின் அனுபவங்களை விரிவுபடுத்துவதை  இந்தப் பயிற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.  இதன் மூலம் வெளிநாடுகளுடன் நட்புறவு மேம்படும்.

வெள்ளி, 22 அக்டோபர், 2021

நிலத்திற்காகவோ, வளத்திற்காகவோ, ஆதாரத்திற்காகவோ நடத்தப்படாத வெகு சிலப் போர்களில் 1971-ம் ஆண்டு போரும் ஒன்று.- திரு.ராஜ்நாத் சிங்


 நிலத்திற்காகவோ, வளத்திற்காகவோ, ஆதாரத்திற்காகவோ நடத்தப்படாத வெகு சிலப் போர்களில் 1971-ம் ஆண்டு போரும் ஒன்று என்று பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறினார்.

2021 அக்டோபர் 22 அன்று பெங்களூரு யெலஹங்கா விமான நிலையத்தில் இந்திய போர் வெற்றி பொன்விழா நினைவாக இந்திய விமானப்படை ஏற்பாடு செய்த மூன்று நாள் மாநாட்டை துவக்கி வைத்துப் பேசிய அவர், "மனிதாபிமானம் மற்றும் ஜனநாயகத்தின் கண்ணியத்தை பாதுகாப்பதே அதன் முக்கிய நோக்கமாக இருந்தது" என்று கூறினார்.

இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகம் முழுவதும் உள்ள பிரபலக் கல்வி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.- திரு பியூஷ் கோயல்


 விதிமுறைகள் அடிப்படையிலான பலதரப்பு வர்த்தக முறைக்குள் தடையற்ற வர்த்தக முறை தேவையென  மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் வலியுறுத்தியுள்ளார்.

புதிதில்லியில் உள்ள  வெளிநாட்டு  வர்த்தக இந்திய கழகத்தின் (IIFT) 54வது பட்டமளிப்பு விழாவில் திரு பியூஷ் கோயல் கலந்து கொண்டு பேசியதாவது:

விதிமுறைகள் அடிப்படையிலான பலதரப்பு வர்த்தக முறைக்குள் தடையற்ற வர்த்தக முறை, நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும். எங்கெல்லாம் இந்தியா நியாயமற்ற நடவடிக்கைகளை சந்திக்கிறதோ அதற்கு பதில் நடவடிக்கையில் இந்தியா ஈடுபடும். சர்வதேச வர்த்தகத்தில் கட்டணமில்லாத் தடைகளால் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படப் வேண்டும். 130 கோடி இந்தியர்களின் ஒட்டுமொத்த முயற்சியால் 100 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டச் சாதனையை இந்தியா சமீபத்தில் படைத்துள்ளது.