செவ்வாய், 30 நவம்பர், 2021

இந்திய-பிரான்ஸ் கூட்டு ராணுவப் பயிற்சியின் ஆறாவது பதிப்பான “எக்ஸ் சக்தி 2021".

 இந்திய-பிரான்ஸ் கூட்டு ராணுவப் பயிற்சியின் ஆறாவது பதிப்பான “எக்ஸ் சக்தி 2021”, 12 நாட்கள் தீவிர பயிற்சிக்கு பின்னர் 25 நவம்பர் 2021 அன்று பிரான்சில் நிறைவுற்றது.

கூட்டுத் திட்டமிடல்செயல்பாடுகளின் பரஸ்பர புரிதல் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் கீழ் பயங்கரவாத எதிர்ப்புச் சூழலில் கூட்டாகச் செயல்படுவதற்குத் தேவையான ஒருங்கிணைப்பு அம்சங்களை அடையாளம் காண்பது ஆகியவற்றில் பயிற்சியின் போது கவனம் செலுத்துப்பட்டது.

கடற்படையின் 25-வது தளபதியாக அட்மிரல் ஆர்.ஹரி குமார் பொறுப்பேற்றார்.


 இந்திய கடற்படையின் 25-வது தளபதியாக அட்மிரல் ஆர்.ஹரி குமார் நவம்பர் 30-ந் தேதி பொறுப்பேற்று கொண்டார். அட்மிரல் கரம்பீர் சிங் 41 ஆண்டுகளுக்கு மேல் இந்திய கடற்படையில் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்றதை தொடர்ந்து அந்த பொறுப்பை ஏற்று கொண்டார்.

தமிழ்நாட்டில் காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு கொள்முதல் விலை நிர்ணயித்து, அரசே கொள்முதல் செய்யும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.- DR.S.ராமதாஸ்



காய்கறிகளுக்கு விலை நிர்ணயித்து,
அரசே கொள்முதல் செய்ய வேண்டும்!. - DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் மழையால் காய்கறிகளுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாடும், விலை உயர்வும் இரு வேதனையான உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளன. காய்கறிகளின் விலை உயர்வு மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியிருக்கிறது; அதே நேரத்தில்  உழவர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்பது தான் வேதனையளிக்கும் அந்த உண்மைகள்.

அண்டைநாடான இலங்கையில் நடைபெறும் அத்துமீறல்களையும், மனித உரிமை மீறல்களையும் இந்தியா வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.- DR.அன்புமணி ராமதாஸ்

 இலங்கையில் மாவீரர் நாள் நிகழ்வுகளை

சிங்களப்படை சிதைத்ததற்கு கண்டனம்!. - DR.அன்புமணி ராமதாஸ்

இலங்கையில் தமிழீழ விடுதலைப்போரில் வீரச்சாவடைந்த விடுதலைப்புலிகளின் தியாகத்தையும், தீரத்தையும் போற்றும் வகையில் கடந்த நவம்பர் 27-ஆம் தேதி தமிழீழப் பகுதிகளில் நடத்தப்பட்ட  மாவீரர் நாள் நிகழ்வுகளை சிங்களப்படைகள் சிதைத்துள்ளன. மாவீரர் நாள் நிகழ்வுகள் குறித்து செய்தி சேகரித்த ஊடகவியலாளர்கள் மீது கொடும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவை கண்டிக்கத்தக்கவை.

வெள்ளி, 26 நவம்பர், 2021

தங்களின் ஜனநாயகத் தன்மையை இழந்துவிட்ட கட்சிகள் ஜனநாயகத்தை எவ்வாறு பாதுகாக்க முடியும்? - திரு. நரேந்திர மோடி


 நாடாளுமன்றத்தில் இன்று அரசியல்சட்ட தினக் கொண்டாட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த நிகழ்வில் மாண்புமிகு குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், மக்களவைத் தலைவர் ஆகியோர் உரையாற்றினர். மாண்புமிகு குடியரசுத் தலைவரின் உரைக்குப் பின் அரசியல் சட்டத்தின் முகப்புரையை வாசிப்பதில் நேரலையில் அவருடன் நாட்டுமக்கள் இணைந்தனர். அரசியல் நிர்ணய சபை விவாதங்களின் டிஜிட்டல் வடிவத்தையும், இந்திய அரசியல் சட்டத்தின் கையெழுத்துப் பிரதியின் டிஜிட்டல் வடிவத்தையும், இந்நாள்வரை செய்யப்பட்ட அனைத்துத் திருத்தங்களையும் உள்ளடக்கிய இந்திய அரசியல் சட்டத்தின் தற்காலபடுத்தப்பட்ட வடிவத்தையும் மாண்புமிகு குடியரசுத் தலைவர் வெளியிட்டார். 'அரசியல் சட்டப்படியான ஜனநாயகம் குறித்த இணையதள வினாடி வினாவை' அவர் தொடங்கிவைத்தார்.

நாட்டின் நாடாளுமன்றங்கள் ’உரையாடல் மற்றும் விவாதம்' மூலம் வழிநடத்தப்பட வேண்டும், தொடர்ச்சியான இடையூறுகள் மூலம் செயலிழக்க செய்யக் கூடாது.- திரு எம். வெங்கையா நாயுடு


 குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான திரு எம். வெங்கையா நாயுடு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நாடு ஜனநாயகக் குடியரசாக இருக்க வேண்டும் என்ற நிலையில், நாட்டின் நாடாளுமன்றங்கள் ’உரையாடல் மற்றும் விவாதம்' மூலம் வழிநடத்தப்பட வேண்டும், தொடர்ச்சியான இடையூறுகள் மூலம் செயலிழக்க செய்யக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களவையின் உற்பத்தித்திறனில் நிலையான சரிவு குறித்து அவர் கவலை தெரிவித்தார். திரு நாயுடு இன்று நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் 'அரசியலமைப்பு தின' நிகழ்ச்சியில் பேசும் போது, அரசியலமைப்பின் ஆன்மா, விதிகள் மற்றும் உண்மையான நடைமுறை ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடு குறித்து விரிவாக விளக்கினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, நாடாளுமன்றத்தின் கண்ணியத்தைப் பாதுகாக்க வேண்டும்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்


நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, நாடாளுமன்றத்தின் கண்ணியத்தைப் பாதுகாப்பவர்கள் என்று குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.   நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இந்திய நாடாளுமன்றக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட அரசியலமைப்பு தினக் கொண்டாட்டத்தில் அன்று (நவம்பர் 26, 2021) அவர் உரையாற்றினார்.

தமிழ்நாட்டில் பருத்தி சாகுபடியை அதிகரிக்கும் வகையில் ஊக்குவிப்பு சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.- DR.S.ராமதாஸ்



பின்னலாடை, விசைத்தறி உற்பத்தி பாதிப்பு:
நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும்! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களும், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் விசைத்தறிகளின்  உரிமையாளர்களும் வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். நூல் விலை உயர்வும், அதனால் ஏற்படும் விளைவுகளும் மாநிலத்தின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்து விடும் என்பதால் இந்த சிக்கலுக்கு தமிழக அரசு விரைந்து தீர்வு காண வேண்டும்.

கொவிட் காலத்தில் செயல்படுத்தப்பட்ட உலகின் மிகப்பெரிய உணவுத் திட்டமாக பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டம் விளங்குகிறது.- திரு. பியூஷ் கோயல்


 சமுதாய சமையலறை திட்டத்திற்கான செயல்முறையை ஆலோசித்து உருவாக்குதற்காக மாநிலங்களுடன் இணைந்து உணவு செயலாளர்கள் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

இது குறித்த அறிவிப்பை வெளியிட்ட மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம், ஜவுளி, வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், எளிமையான, வெளிப்படையான மற்றும் மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் சமுதாய சமையலறைகள் திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்றார்

சில அரசியல் கட்சிகளின் சுயநல கொள்கைகள், நமது தேசப்பற்று மற்றும் தேசிய சேவைக்கு முன்பாக நிற்க முடியாது.- திரு நரேந்திர மோடி


 உத்தரப்பிரதேசத்தின் நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்கள் திரு ஜோதிராதித்ய சிந்தியா, ஜெனரல் வி.கே. சிங், திரு சஞ்சீவ் பால்யான், திரு எஸ். பி. சிங் பாஹேல் மற்றும் திரு பி.எல். வர்மா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், 21-ம் நூற்றாண்டின் புதிய இந்தியா, தற்போது மிகச்சிறந்த அதிநவீன கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி வருகிறது என்றார். “மேம்பட்ட சாலைகள், மேம்பட்ட ரயில் போக்குவரத்து, மேம்பட்ட விமான நிலையங்கள், சாதாரண கட்டமைப்பு திட்டங்களாக மட்டுமின்றி அந்தப் பகுதி முழுவதையும் மாற்றியமைப்பதுடன், மக்களின் வாழ்க்கையையும் முற்றிலும் மாற்றியமைக்கிறது” என்றும் அவர் தெரிவித்தார்.

வியாழன், 25 நவம்பர், 2021

பெண் குழந்தைகள் சுமையல்ல வரம்: பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை மேம்படுத்த சிறப்பு திட்டங்கள் தேவை! - DR.S.ராமதாஸ்

பெண் குழந்தைகள் சுமையல்ல வரம்: பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை மேம்படுத்த சிறப்பு திட்டங்கள் தேவை! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில் 1000 ஆண் குழந்தைகளுக்கு இணையான பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம்  878 ஆக குறைந்திருப்பதாக தேசிய குடும்ப நல கணக்கெடுப்பில் தெரியவந்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. பெண் குழந்தைகளை போற்றி வணங்கும் வழக்கம் கொண்ட தமிழ்நாட்டில் அவர்களின் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவது ஆரோக்கியமான அறிகுறியல்ல. இது மாற்றப்பட வேண்டும்.

‘இந்தியாவில் உற்பத்தி செய்வோம் - பொம்மைகளுடன் பாதுகாப்பாக விளையாடுவோம்’ என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கு.


 சுதந்திரத்தின் 75-வது ஆண்டை முன்னிட்டு நடைபெறும் ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ விழாவைக் கொண்டாடும் வகையில் ‘இந்தியாவில் உற்பத்தி செய்வோம் - பொம்மைகளுடன் பாதுகாப்பாக விளையாடுவோம்’ என்ற தலைப்பில் வெபினாருக்கு (இணையவழி கருத்தரங்கிற்கு) இந்தியத் தரநிலைகள் குழு (BIS) ஏற்பாடு செய்திருந்தது.

மழை மற்றும் இயற்கை பேரழிவு நிவாரண பணிகளுக்காக தமிழ்நாடு அரசு கோரியுள்ள தொகையை ஒன்றிய அரசு தாமதமின்றி முழுமையாக வழங்க வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தீர்மானம்


 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் 2021 நவம்பர் 25 அன்று சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியகுழு உறுப்பினர்கள் அ.சவுந்தராசன், உ.வாசுகி, பி.சம்பத்  உள்ளிட்ட மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

தீர்மானம்-1 :

கல்வி நிறுவனங்கள் தங்களின் மாணவர்களிடம் புதிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில் முனைவோர் உணர்வை ஏற்படுத்த வேண்டும்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்


எச்பிடியு போன்ற கல்வி நிறுவனங்கள் தங்களின் மாணவர்களிடம் புதிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில் முனைவோர் உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரு ராம்நாத்  கோவிந்த் தெரிவித்துள்ளார். கான்பூரில் உள்ள ஹர்கோர்ட் பட்லர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (எச்பிடியு) நூற்றாண்டு விழாவில் அன்று (நவம்பர் 25, 2021) அவர் உரையாற்றினார்.

புதன், 24 நவம்பர், 2021

பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தை (PMGKAY) மேலும் நான்கு மாதங்களுக்கு நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல்.


 2021 ஜூன் 7 அன்று நாட்டு மக்களுக்கு பிரதமர் ஆற்றிய உரையின் தொடர்ச்சியாகவும், கொவிட்-19-க்கான பொருளாதார எதிர்வினையின் ஒரு பகுதியாகவும், பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தை (PMGKAY- பகுதி V) மேலும் நான்கு மாதங்களுக்கு, அதாவது 2021 டிசம்பர் முதல் 2022 மார்ச் வரை, நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த முடிவின் படி, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (அந்த்யோதயா உணவு திட்டம் மற்றும் முன்னுரிமை குடும்பங்கள்) கீழ் வரும் அனைத்துப் பயனாளிகளுக்கும், நேரடிப் பலன் பரிமாற்றத்தின் கீழ் உள்ளவர்கள் உட்பட, ஒரு நபருக்கு மாதத்திற்கு 5 கிலோ உணவு தானியங்கல் இலவசமாக வழங்கப்படும்.

சமூகநீதி, ஜாதி ஒழிப்பைக் கொள்கையாகக் கொண்ட இந்த திராவிடர் ஆட்சி அதைச் செய்யாவிட்டால், வேறு எந்த ஆட்சியில் செய்ய முடியும்?. - கி.வீரமணி


 ஜாதி பேதம் காட்டாது முறையாக அடக்கம் செய்யும் கிராமங்களுக்குப் பரிசுத் தொகை அளிக்கும் தமிழ்நாடு அரசின் செயல் பாராட்டுக்குரியது!

இதற்கென  ஒரு தனிச்சட்டமே இயற்றப்பட்டு எல்லா ஊர்களிலும் சமத்துவ நிலையை உருவாக்க வழி செய்யவேண்டும்! - கி.வீரமணி

நம் நாடு ‘‘சுதந்திரம்‘’ பெற்று 75 ஆம் ஆண்டைக் கொண்டாடும் நிலையில், இன்னமும் நம் மக்களிடையே சுடுகாடு, இடுகாட்டில்கூட ஜாதிவெறி தலைதூக்கி ஆடுவதோடு, மனிதர்கள் இறந்த பிறகு, ஜாதியும், வெறியும் சாகாமல் இருப்பது மட்டுமல்ல; மனிதத்தன்மை  சிறிதுமற்ற முறையில், மயானங்களில் பேதம்; சுடுகாட்டிற்குச் செல்வதற்கு ஒழுங்கான பாதை வசதிகள் கிடையாது; கிராமப்புறங்களில் ஜாதிவெறி தெருக்களில் படமெடுத்தாடி, சவ ஊர்வலத்திலும்கூட ஜாதிச் சண்டைகள் நடைபெறும் அவலம் ஒரு தேசிய அவமானம் அல்லவா?

மானிய விலையில் அரசே தக்காளி மற்றும் காய்கறிகளை விற்பதன் மூலம் மக்களின் சுமையை குறைப்பது தான் இன்றைய தேவை ஆகும்.- DR.S.ராமதாஸ்

 தக்காளி, காய்கறி விலைகளை குறைக்க

அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!. - DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலைகள் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் கைகளுக்கு எட்டாத அளவுக்கு உயர்ந்துள்ளன. தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்த  அரசு சில நடவடிக்கைகளை எடுத்துள்ள போதிலும், நிலைமையை சமாளிக்க அவை போதுமானவையல்ல.

ரத்து செய்யப்பட்ட வேளாண் சட்டங்கள் வேறு உருவத்தில் வருமாம்! ‘அனுகூல சத்ருவா’ தமிழ்நாடு பாஜக தலைவர்? - கி.வீரமணி



ரத்து செய்யப்பட்ட வேளாண் சட்டங்கள் வேறு உருவத்தில் வருமாம்!

‘அனுகூல சத்ருவா’ தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர்? - கி.வீரமணி

தி.மு.க.வுக்கு அடுத்து பா.ஜ.க.தானாம் - ஆசைப்படலாம் அண்ணாமலை!
ஆனால், யதார்த்தம் கைகொடுக்காது!

தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை வளர்க்க அதன் புதிய தலைவர் அண்ணாமலை (அய்.பி.எஸ். - ஓய்வு) திசை தெரியாமல் திக்குமுக்காடுகிறார்; தெளிவற்ற அவரது பேச்சுகளுக்கு சில ஏடுகள் விளம்பரம் கொடுத்தாலும், அவை விழலுக்கிறைத்த நீராகவே ஆவது உறுதி!

தமிழ்நாட்டிலும் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 நிதியுதவி வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.- DR.S.ராமதாஸ்


நோய் பரவலில் இருந்து கடலூர் மாவட்ட மக்களைக் காப்பாற்றுங்கள்: அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.5000 வழங்குங்கள்! - DR.S.ராமதாஸ்

கடந்த ஆண்டுகளைப் போலவே இப்போதும் மழை மற்றும் வெள்ளத்தால் கடுமையான பாதிப்புகளை சந்தித்த கடலூர் மாவட்டத்தில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. மற்றொருபுறம் உதவி கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், மழை - வெள்ள நீர் இன்னும் வடியாத பகுதிகளில் ஏற்பட்டுள்ள சுகாதாரக் கேடுகளின் விளைவாக நோய் பரவுவதற்கான ஆபத்தும் அதிகரித்திருக்கிறது.

திடகாத்திரமான காவல்துறை அதிகாரியை 10 வயது சிறுவர்கள் கொலை செய்திருக்கிறார்கள் என்பது நம்பத் தகுந்ததாக இல்லை!- டாக்டர் K. கிருஷ்ணசாமி



பூமிநாதன் கொலைவழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!!

ஆடு திருட்டுக் கும்பலை துரத்திப் பிடிக்கச் சென்ற சிறப்பு உதவிக் காவல் ஆய்வாளர் பூமிநாதன் அவர்கள் நேற்று முன்தினம் இரவில் நவல்பட்டு காவல்நிலைய எல்லையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த துயர்மிகு சம்பவத்திற்குக் காரணமான குற்றவாளிகளை விரைந்து கைது செய்து, அவர்களுக்குரிய தண்டனையைப் பெற்றுத் தர வேண்டுமென்று நாம் தமிழக அரசை வலியுறுத்தியிருந்தோம். பூமிநாதன் கொலைக்குக் காரணமானவர்களை தேடிக் கண்டுபிடிக்க நான்கு சிறப்புப் படை அமைக்கப்பட்டிருந்தது. அதில் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அதில் ஒருவனுக்கு 19 வயது என்றும், மற்றவர்களுக்கு 10 வயது என்றும் காவல்துறை மூலமாகவே அறிவிப்பு வந்திருக்கிறது.  

திங்கள், 22 நவம்பர், 2021

மக்கள் பிரதிநிதிகளின் அவையான சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க தாமதிக்கலாமா? - கி.வீரமணி


சட்டப்பேரவை குறித்து தந்தை பெரியார் கூறியது என்ன?

மக்கள் பிரதிநிதிகளின் அவையான சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட  மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க தாமதிக்கலாமா?

மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க காலவரையறை தேவை!

சட்டப்பேரவைத் தலைவர்களின் மாநாட்டில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவரின் அரிய கருத்துரை

இமாச்சலப் பிரதேசம் சிம்லாவில் கடந்த 17 ஆம் தேதி அனைத்திந்திய சட்டப் பேரவைத் தலைவர்கள் மாநாடு நடைபெற்றது.

அந்த மாநாட்டில் கலந்துகொண்டு தமது கருத் துரையை முன்வைத்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மாண்பமை அப்பாவு அவர்கள் மிக அருமையான, அரசியல் சட்ட ரீதியான கருத்துகளை எடுத்துக் கூறியுள்ளார்.

அய்.அய்.டி. கல்வி நிறுவனப் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் புறக்கணிப்பு கண்டனத்திற்குரியது!- கி.வீரமணி



அய்.அய்.டி. கல்வி நிறுவனப் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் புறக்கணிப்பு கண்டனத்திற்குரியது!- கி.வீரமணி

சென்னை அய்.அய்.டி. கல்வி நிறுவனத்தில் நேற்று (20.11.2021) நடைபெற்ற பட்டமளிப்பு நிகழ்ச்சியில் திட்டமிட்டே தமிழ்த்தாய் வாழ்த்து - ‘‘நீராரும் கடலுடுத்த’’ என்ற மொழி வாழ்த்துப் பாடாமல் புறக்கணித்துள்ளனர்.
வேறு ஏதோ ஒன்று நுழைக்கப்பட்டுள்ளது. 

52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சியில், மத்திய தகவல் – ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு & பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் ஆற்றிய உரை


 கோவாவில் நடைபெறும் 52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சியில், மத்திய தகவல் – ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு & பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் ஆற்றிய உரை 

கோவாவில் நடைபெறும் 52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் உங்களுடன் பங்கேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

முதலில், சத்தியஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் திரு.இஸ்த்வான் ஸ்சாபோ (Istvan Szabo) மற்றும் திரு. மார்ட்டின் ஸ்கோர்ஸ்செஸ் (Martin Scorsese) ஆகியோருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரையுலகிற்கு நீங்கள் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பை நாங்கள் அங்கீகரிக்கிறோம்.

ஞாயிறு, 21 நவம்பர், 2021

பழங்குடியினரின் கைவினைப் பொருட்கள், சமையற்கலை மற்றும் கலாச்சார பாராம்பரியத்தை எடுத்துக் காட்டுகிறது பழங்குடியினர் கவுரவ தின கொண்டாட்டம்


 பழங்குடியினர் கவுரவ தின கொண்டாட்ட நிகழ்ச்சிகள கடந்த 15ம் தேதி தொடங்கின. இது நாடு முழுவதும் பழங்குடியினரின் கலாச்சாரங்களை எடுத்துக் காட்டுகிறது. 

விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தின் ஒருபகுதியாக, பழங்குடியினர் கவுரவ தின கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் நடந்து வருகின்றன. பழங்குடியின சுதந்திர போராட்ட வீரர் பகவான் பிர்ஸா முண்டாவின் பிறந்த தினமான நவம்பர் 15ம் தேதி, பழங்குடியினர் கவுரவ தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படவுள்ளது. 

7 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் உள்ள 26 மாவட்டங்களில் புதிய ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகள் திறக்கப்படும்.- திரு.நரேந்திர மோடி


 விடுதலைப் பெருவிழாவின் ஒரு பகுதியாக, “ஜன் ஜாத்தியா கவுரவ் திவாஸ்”-ஐ முன்னிட்டு பிரதமர் திரு.நரேந்திர மோடி, 15 நவம்பர் 2021 அன்று போபாலிலிருந்து காணொலி வாயிலாக 50 பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டியதைத் தொடர்ந்து, ஏகலைவா பள்ளிகள் கட்டுமானப் பணி பெரும் ஊக்கம் பெற்றுள்ளது. இந்தப் பள்ளிகள் 7 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் உள்ள 26 மாவட்டங்களில் திறக்கப்பட உள்ளது.

பழங்குடியின மாணவர்களுக்கு தரமான கல்வியை போதிப்பதுடன், ஒட்டு மொத்த வளர்ச்சியையும் ஏற்படுத்தும் விதமாக, ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகள் அமைக்கப்படுகின்றன.

இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் காதி அரங்கை மத்திய அமைச்சர் திருமதி மீனாட்சி லேகி பார்வையிட்டார்


 புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சி 2021-ல் காதி இந்தியா அரங்கை மத்திய வெளியுறவு மற்றும் கலாச்சார இணை அமைச்சர் திருமதி மீனாட்சி லேகி சனிக்கிழமையன்று பார்வையிட்டார்.

காதி இந்தியா அரங்கை பார்வையிட்ட இணை அமைச்சர், அங்கிருந்த ராட்டையில் நூல் நூற்றார். மின்சார சக்கரத்தில் களிமண் பானைகள் செய்தல், கையால் காகிதம் செய்தல், கையால் செய்யப்பட்ட காலணிகள், எண்ணெய் உற்பத்தி உள்ளிட்டவற்றை அவர் பார்வையிட்டார்.

இந்தியாவை உலக சினிமாவின் மையமாகவும், திரைப்படங்கள் மற்றும் விழாக்களுக்கான இடமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.- திரு அனுராக் தாகூர்


 இந்தியாவை உலக சினிமாவின் மையமாகவும்,  திரைப்படங்கள் மற்றும் விழாக்களுக்கான இடமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம் என கோவாவில் இன்று தொடங்கிய 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அனுராக் தாகூர்  கூறினார்.

52வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, கோவாவில் இன்று தொடங்கியது. இதன் துவக்க நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு அனுராக் தாகூர் கலந்து கொண்டு பேசியவதாவது:

சனி, 20 நவம்பர், 2021

ஆயுஷ் மருத்துவ முறையை வடகிழக்கில் பிரபலப்படுத்துவதற்கான முக்கியத் திட்டங்களை மத்திய அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் அறிவித்தார்

 


ஆயுஷ் மருத்துவத் துறையை வடகிழக்கில் மேம்படுத்துவதற்கான முக்கியத் திட்டங்களை மத்திய ஆயுஷ்துறைமுகங்கள் மற்றும் நீர்வழிகள் அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் அருணாச்சலப் பிரதேசத்தில் அறிவித்தார்.

பாசிகாட்டில் 30 இடங்களுடன் கொண்ட ஒரு புதிய ஆயுர்வேதக் கல்லூரி, 60 படுக்கைகளுடன் கூடிய புதிய ஆயுர்வேத மருத்துவமனைஆயுர்வேத மற்றும் நாட்டு மருத்துவ ஆராய்ச்சிக்கான வடகிழக்கு நிறுவனத்தில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான ரூ 53.72 கோடி முதலீடு, 86 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு உள்ளிட்டவை இதில் அடங்கும்.

தூய்மை சுதந்திரப் பெருவிழாவில் பங்கேற்ற குடியரசுத் தலைவர், 2021-க்கான தூய்மை கணக்கெடுப்பு விருதுகளை வழங்கினார்.


மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை சார்பில், புதுதில்லியில் அன்று (20.11.2021) நடைபெற்ற தூய்மை சுதந்திரப் பெருவிழாவில் பங்கேற்று உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரு.ராம் நாத் கோவிந்த், 2021-க்கான தூய்மை கணக்கெடுப்பு விருதுகளையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், நாட்டின் சுதந்திரப் பெருவிழாவை கொண்டாடும் வேளையில், தூய்மை கணக்கெடுப்பு விருதுகளை வழங்குவது இந்தாண்டு முக்கியத்துவம் பெறுவதாக கூறினார். “கடவுளுக்கு அடுத்தபடியாக தூய்மை” என்று தேசப்பிதா மகாத்மா காந்தி கூறி வந்ததை சுட்டிக்காட்டிய அவர், தூய்மை இந்தியா இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றியதன் மூலம், காந்தியின் இந்த முன்னுரிமைப் பணிகளை மத்திய அரசு முன்னெடுத்துச் செல்வதாக கூறினார். நாட்டை முற்றிலும் தூய்மையான மற்றும் சுத்தமானதாக மாற்ற முயற்சி மேற்கொள்வதே நமது சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை என்றும் அவர் குறிப்பிட்டார்.

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தி ஜவுளித் தொழிலை பாதுகாக்க வேண்டும். மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களின் அறிவிப்பு நம்பிக்கை தரவில்லை.- E.R.ஈஸ்வரன்



நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தி ஜவுளித் தொழிலை பாதுகாக்க வேண்டும்.

 மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களின் அறிவிப்பு நம்பிக்கை தரவில்லை.- E.R.ஈஸ்வரன்

 வரலாறு காணாத அளவிற்கு சற்றும் எதிர்பாராத சூழ்நிலையில் நூல் விலை கட்டுக்கடங்காமல் ஏறி இருக்கிறது. துணி தயாரிப்பு தொழிலிலும், ஆயத்த ஆடை தயாரிப்பு தொழிலிலும் ஈடுபட்டு இருக்கின்ற சிறு, குறு தொழிற்சாலைகள் ஒப்புக்கொண்ட ஆர்டர்களை நிறைவேற்றுவதில் மிகப்பெரிய சிரமத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். 25% முதல் 40% வரை நூல் விலை ஏறி இருக்கிறது. துணி மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டு இருக்கின்றவர்கள் புதிய விலையில் நூலை வாங்கி தங்கள் ஏற்றுமதி கடமைகளை நிறைவேற்ற முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். 

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை: தமிழக அரசின் அரசாணை ஏமாற்றம் அளிக்கின்றது. - எம் எச் ஜவாஹிருல்லா



 பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை: தமிழக அரசின் அரசாணை ஏமாற்றம் அளிக்கின்றது

கருணையுள்ளதுடன் முதலமைச்சர் மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை குறித்துக் கடந்த நவம்பர் 15 அன்று தமிழக அரசின் உள்துறை வெளியிட்டுள்ள அரசாணை எண் 488 பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளது.

20 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்நாள் சிறைவாசம் அனுபவித்து வரும் சிறைவாசிகள் குறிப்பாக முஸ்லிம் சிறைவாசிகள் இந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் விடுதலை பெறுவதற்கான வாய்ப்பே இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு - வன்முறைக் கலக்காத அறப்போராட்டமே வெற்றி தரும்! ‘நீட்’, சிறுபான்மை நலன் போன்றவை வெற்றி பெற இதனைப் பின்பற்றுவோம்! - கி.வீரமணி



 டில்லி விவசாயிகளின் அறவழிப் போராட்டம் வெற்றி

ஓராண்டுக்குமேல் போராடிய விவசாயிகளை ஒருமுறையாவது பிரதமர் சந்தித்தாரா?
விழிப்புணர்வு - வன்முறைக் கலக்காத அறப்போராட்டமே வெற்றி தரும்!
‘நீட்’, சிறுபான்மை நலன் போன்றவை வெற்றி பெற இதனைப் பின்பற்றுவோம்! - கி.வீரமணி
1. பிரதமர் மோடி, பிடிவாதமாகக் கொண்டு வந்து, முதலில் அவசரச் சட்டங்களாக உருவெடுத்து, பிறகு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் போதிய விவாதமே நடத்தவிடாமல் அவசர அவசரமாக முதலைப் பிடிவாதத்துடன், விவசாயிகளின் கடும் எதிர்ப்பு - மாநிலங்களில் உள்ள பல எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு உள்பட பலவற்றையும் அலட்சியப்படுத்தியே குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு சட்டங்களாக அறிவிக்கப்பட்டன.
இச்சட்டங்களை எதிர்க்கட்சிகள் மட்டும் எதிர்க்கவில்லை. ஆளுங்கட்சியான தேசிய ஜனநாயக முன்னணியில் (என்.டி.ஏ.) அங்கம் வகித்த பஞ்சாபின் அகாலிதளமும் கடுமையாக எதிர்த்தது; பிரதமரோ, பா.ஜ.க. ஆட்சியோ பணியவில்லை. ஒன்றிய அகாலி தள பெண் அமைச்சரும் பதவியை ராஜினாமா செய்தார் - எதிர்ப்புக் குரலை முழங்கினார்.
அறவழியில் நடத்தப்பட்ட போராட்டம்

பா.ஜ.க. ஆட்சி மத்தியில் அமைந்து கடந்த 7 ஆண்டுகளாக தவறான பொருளாதார கொள்கை காரணமாக மக்கள் அனைத்து நிலைகளிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்


பா.ஜ.க. ஆட்சி மத்தியில் அமைந்து கடந்த 7 ஆண்டுகளாக தவறான பொருளாதார கொள்கை காரணமாக மக்கள் அனைத்து நிலைகளிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கடும் விலைவாசி உயர்வால் தவியாய் தவிக்கும் மக்களின் நிலை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை அதற்கு இணையாகக் குறைக்காமல் கலால் வரியை உயர்த்தி இதுவரை கடந்த 7 ஆண்டுகளில் ரூ. 23 லட்சம் கோடி வரை வசூலித்து மத்திய பா.ஜ.க. அரசு கஜானாவை நிரப்பிக் கொண்டிருக்கிறது. இதைவிடக் கடுமையான மக்கள் விரோத நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் பலமடங்கு உயர்ந்துள்ளது.

வெள்ளி, 19 நவம்பர், 2021

விவசாயிகளை எப்போதும் பிரச்சினைகளுக்குள் வைத்திருப்பதே சில அரசியல் கட்சிகளின் அடிப்படை. அவர்கள் பிரச்சினையில் அரசியலை செய்கின்றனர்

பிரதமர் திரு நரேந்திர மோடி, உத்தரப்பிரதேசத்தின் மகோபாவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்தத் திட்டங்கள், இந்தப் பிராந்தியத்தின் தண்ணீர்ப் பற்றாக்குறை பிரச்சினையை அகற்றுவதுடன், விவசாயிகளுக்குத் தேவையான நிம்மதியைக் கொண்டு வரும். அர்ஜூன் சகாயக் திட்டம், ரட்டவுலி அணை, பாவனி அணை திட்டங்கள், மஜ்கான்-சில்லி தெளிப்பான் திட்டம் ஆகியவை இத்திட்டங்களில் அடங்கும். இந்த திட்டங்களின் மொத்த செலவு ரூ.3250 கோடிக்கும் அதிகமாகும். இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால், மகோபா, ஹமீர்பூர், பண்டா, லலித்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த 65000 ஹெக்டேர் நிலப்பரப்பு பாசன வசதி பெறும். இதனால், இந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் பலனடைவர். இந்தத் திட்டங்கள் பிராந்தியத்துக்கு குடிநீரையும் வழங்கும். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் திருமதி ஆனந்தி பென் பட்டேல், முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத், மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

காந்திநகர் கிஃப்ட் சிட்டியில் மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நாளை மத்திய அரசின் செயலர்கள் குழுவுக்கு தலைமையேற்று விவாதிக்கிறார்

 


மத்திய நிதி மற்றும் பெருவணிக நிறுவனங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், 2021 நவம்பர் 20-ம் தேதி காந்திநகரின் கிஃப்ட் சிட்டியில், மத்திய நிதி மற்றும் பெருவணிக நிறுவனங்கள் துறை அமைச்சகத்தின் ஏழு செயலர்களைக் கொண்ட குழுவுக்கு தலைமையேற்று, இந்தியாவின் முதலாவது சர்வதேச நிதிச் சேவைகள் மையத்தின்( ஐஎப்எஸ்சி ) வளர்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பான விஷயங்கள் பற்றி விவாதிக்கிறார். மத்திய நிதித்துறை இணையமைச்சர்கள் திரு பங்கஜ் சவுத்ரி, டாக்டர் பகவத் கிருஷ்ணாராவ் கரத் ஆகியோரும் விவாதத்தில் பங்கேற்பார்கள்

சுவர் இடிந்து 9 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது: ரூ.10 லட்சம் இழப்பீடு தருக! - Dr.s.ராமதாஸ்



 சுவர் இடிந்து 9 பேர் உயிரிழந்தது வேதனை

அளிக்கிறது: ரூ.10 லட்சம் இழப்பீடு தருக! - Dr.s.ராமதாஸ்
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு மசூதி தெருவில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த சுவர் விழுந்ததில் 4 குழந்தைகள், 5 பெண்கள் என மொத்தம் 9 பேர் உயிரிழந்ததை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வியாழன், 18 நவம்பர், 2021

சஞ்சீப் பானர்ஜி அவர்கள் ’feudal culture’ என்று சொல்லியிருப்பது நீதித்துறையின் மீதானதா? அரசியல் தலைமையின் மீதானதா? சமூகத்தின் மீதானதா? - டாக்டர் K. கிருஷ்ணசாமி



 சஞ்சீப் பானர்ஜி சாடுவது நீதித் துறையையா?

அரசியல் தலைமையையா?. - டாக்டர் K. கிருஷ்ணசாமி

நீதிபதிகள் உயர் பதவிகளை அடைவதும் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு மாற்றப்படுவதும் நீதித்துறைக்குள் நிர்வாக ரீதியான நடைமுறையாகும். பதவி உயர்வுகள், இடமாற்றங்களின் போது ஒரு சிலருக்கு தாங்கள் எதிர்பார்த்த படி நடைபெறாமல் போயிருக்கலாம். ஜனநாயக நாட்டில் நீதித்துறை சுதந்திரமான அமைப்பாகச் செயல்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே அதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

இந்தியாவின் கூட்டாட்சி முறையை வலுப்படுத்தவும் மாநிலங்களின் உரிமைகளை பேணவும் பா.ஜ.க அரசு புரிதலுடன் செயல்பட வேண்டும்.- வைகோ



 ஓரே நாடு! ஓரே மக்கள் பிரதிநிதிகள் சபை!

பிரதமரின் கருத்து; நாட்டின் பன்முகத்தன்மையை அழிக்கும் முயற்சி!

- வைகோ அறிக்கை

இமாச்சலப்பிரதேச மாநில சிம்லாவில் நேற்று (17.11.2021)  சட்டப்பேரவைத் தலைவர்களின் 82 ஆவது மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் காணொலி மூலம் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

பிரதமர் தனது உரையில்,சட்டமன்றங்களின் மாண்புகளை காப்பாற்றும் கடமை மக்கள் பிரதிநிதிகளுக்கு இருக்கிறது என்பதையும்,

நமது நாடு முற்றிலும் பன்முகத்தன்மை கொண்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் காட்டும் நல்வழி: மிதிவண்டி பயணத்தை மாநிலம் முழுவதும் கட்டாயமாக்க வேண்டும்!.- DR.S.ராமதாஸ்

 மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் காட்டும் நல்வழி: மிதிவண்டி பயணத்தை மாநிலம் முழுவதும் கட்டாயமாக்க வேண்டும்!.- DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்துவதற்கான சிறிய, ஆனால், மிகவும் பயனளிக்கக்கூடிய திட்டத்தை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தொடங்கியுள்ளது. சென்னையில் உள்ள வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களும் வாரந்தோறும் புதன்கிழமைகளில் இரு சக்கர ஊர்திகளிலோ, மகிழுந்து உள்ளிட்ட வாகனங்களிலோ அலுவலகம் வரக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. இது நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இது வரவேற்கத்தக்கது.

புதன், 17 நவம்பர், 2021

விண்வெளித் துறையில் இந்தியா தனது கால்தடத்தை உலகளவில் விரிவுபடுத்துவதற்கான பெரும் ஆற்றலைக் கொண்டிருகிறது.- திரு எம் வெங்கையா நாயுடு


 உலகளாவிய பயன்பாட்டிற்காக உள்நாட்டு பிராந்திய வழிசெலுத்தல் செயற்கைக்கோள் அமைப்பான நாவிக்கிற்கு உத்வேகம் கொடுக்குமாறு இந்திய விண்வெளி அமைப்பான இஸ்ரோவிற்கு குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு ஆலோசனை தெரிவித்தார்.

யு ஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்தின் விஞ்ஞானிகள் மற்றும் ஊழியர்களிடம் உரையாற்றிய அவர், நாவிக்கை நிறுவி செயல்படுத்தியதற்காக இஸ்ரோவைப் பாராட்டியதோடு, இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்று கூறினார்.

உழவர்களின் துயரைத் துடைக்கும் வகையில், சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 வீதம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.- DR.S.ராமதாஸ்

 மழையால் சேதமடைந்த நெல் பயிருக்கு

ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க வேண்டும்! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில் அண்மையில் பெய்த மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.8,000 இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. உழவர்களுக்கான உதவி வரவேற்கத்தக்கது என்றாலும் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளுடன் ஒப்பிடும் போது தமிழக அரசு அறிவித்துள்ள நிதி உதவி உழவர்களுக்கு ஏற்பட்ட இழப்பின் ஒரு பகுதியைக் கூட ஈடு செய்யாது.

செவ்வாய், 16 நவம்பர், 2021

எல்லைப்புற சாலைகள் அமைப்புக்கு கின்னஸ் உலக சாதனையின் அங்கீகாரம்


 லடாக்கின் உம்லிங்கா கணவாயில் 19,024 அடி  உயரத்தில் உலகின் மிக உயரமான மோட்டார் வாகன சாலையை அமைத்து எல்லைப்புற சாலைகள் அமைப்பு சாதனை புரிந்ததற்காக கின்னஸ் உலக சாதனை சான்றிதழை 2021 நவம்பர் 14 ஆம் தேதி எல்லைப்புற சாலைகள் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜென்ரல் ராஜீவ் சவுத்திரி பெற்றுக் கொண்டார்.  காணொலி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரிட்டனை சேர்ந்த  கின்னஸ் உலக சாதனை அமைப்பின் அதிகாரப்பூர்வ நடுவர் திரு ரிஷிநாத் இந்த அங்கீகாரத்தை வழங்கினார்.  உலகின் மிக உயரமான இந்த சாலையை நான்கு மாத காலம் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கப்பட்டது.

முந்தைய அரசுகள் பற்றிய உண்மையை நாட்டின் முன்னால் முழுமையான நேர்மையோடு நாங்கள் வைத்துள்ளோம்.- பிரதமர் திரு.நரேந்திர மோடி


 முதலாவது கணக்குத் தணிக்கை தின விழாவைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியின் போது சர்தார் வல்லபபாய் பட்டேலின் உருவச் சிலையையும் அவர் திறந்து வைத்தார். இந்தியத் தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி திரு.கிரிஷ் சந்திர முர்மு உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

கூடியிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர், சிஏஜி வெறுமனே நாட்டின் கணக்கு விவரங்களை மட்டுமே கொண்டிருப்பதல்ல. உற்பத்தித்திறன் மற்றும் திறமைக்கு மதிப்புக் கூடுதலையும் செய்வதாகும். எனவே கணக்குத் தணிக்கை தினத்தின் உரைகளும் தொடர்புடைய நிகழ்ச்சிகளும் வளர்ச்சி மற்றும் மேம்படுத்தலின் பகுதியாக இருக்கின்றன. சிஏஜி என்பது ஒரு நிறுவனம். இது முக்கியத்துவதோடு வளர்ந்து வருகிறது. காலத்தைக் கடந்து ஒரு மரபை உருவாக்கியுள்ளது.

உள்துறை அமைச்சகத்தில் இருந்து இந்தியில் கடிதங்கள் வந்தால், தமிழக அரசு திருப்பி அனுப்ப வேண்டும். - வைகோ

 இந்தித் திணிப்பு: அமித் ஷா பேச்சு !- வைகோ கண்டனம்

உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் நடைபெற்ற ஆட்சி மொழி மாநாட்டில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘இந்திதான் இந்தியாவின் ஆட்சி மொழி; என் தாய்மொழியை விட நான் இந்தியை அதிகமாக நேசிக்கிறேன் என்று பேசி இருக்கின்றார். அத்துடன் நில்லாமல், ‘உள்துறை அமைச்சகத்தின் ஒரு கோப்பு கூட இப்போது ஆங்கிலத்தில் எழுதப்படுவது இல்லை’ என்று அவர் கூறி இருப்பது, அரசு அமைப்புச் சட்டத்திற்கு எதிரான அடக்குமுறைப் போக்கு ஆகும். எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மாநில மொழிகளையும், ஒட்டுமொத்தமாக ஒழித்துக் கட்டும் முயற்சியே ஆகும்.

பழங்குடி கைவினைஞர்கள் மற்றும் கலைஞர்களின் பொருட்களை வாங்கி அவர்களுக்கு ஆதரவளிக்குமாறு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் அழைப்பு


 பழங்குடி கைவினைஞர்கள் மற்றும் கலைஞர்களின் பொருட்களை வாங்கி அவர்களுக்கு ஆதரவளிக்குமாறு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார். சுற்றுச்சூழலுக்கு உகந்த, நீடித்து நிற்கக்கூடிய மற்றும் புதுமையான கைவினைப் பொருட்களைக் பழங்குடி சமூகங்கள் உருவாக்குகின்றன என்று அவர் கூறினார்.

பழங்குடியின மக்களின் இயற்கையான திறன்கள் மற்றும் அவர்களது தயாரிப்புகளை ஊக்குவிக்கவும் பிரபலப்படுத்தவும் மற்றும் அவர்களின் வருமான ஆதாரங்களை மேம்படுத்தவும் வழிவகை செய்ய வேண்டியதன் அவசியத்தை திரு நாயுடு வலியுறுத்தினார். "பழங்குடி கைவினைஞர்கள் மற்றும் பெண்களின் தயாரிப்புகளுக்கு போதுமான சந்தைப்படுத்தல் வழிகளை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது," என்று அவர் மேலும் கூறினார்.

திங்கள், 15 நவம்பர், 2021

கடும்மழை பாதிப்பை - கடும் உழைப்பால் இரண்டே நாளில் இயல்பு வாழ்க்கைக்குக் கொண்டு வந்த தமிழ்நாடு அரசின் சாதனை!.- கி.வீரமணி

 கடும்மழை பாதிப்பை - கடும் உழைப்பால் இரண்டே நாளில் இயல்பு வாழ்க்கைக்குக் கொண்டு வந்த தமிழ்நாடு அரசின் சாதனை!

ஸ்மார்ட் சிட்டிக்கான ரூ.6 ஆயிரம் கோடி எங்கே ஒளிந்தது?

டிரிபியூனல் அமைத்து விசாரணை நடத்தப்படவேண்டும்

வருங்காலத்தில் ஊழல்வாதிகளுக்குப் பாடமாக அமையட்டும்!.- கி.வீரமணி

சென்னை மற்றும் வட மாவட்டங்களிலும் சென்ற ஆறு ஆண்டுகாலத்தில் பெய்யாத அளவு கனமழை தொடர் மழையாகப் பொழிந்தது; அது வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடியது; தண்ணீர் ஆங்காங்கு பல பகுதிகளில் குறிப்பாக புறநகர் பகுதிகளில் தேங்கி மக்களை படகுகள்மூலம் வெளியேற்றிக் கொண்டு வரும் நிலைக்குத் தள்ளியது.

என்றாலும், அதுபற்றிச் சிறிதும் கலங்காமல் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 5, 6 நாள்களாக ஓய்வு ஒழிச்சலின்றி பம்பரம்போல் சுற்றிச் சுற்றி அமைச்சர்களுடன் சென்று,  பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தை அளித்ததோடு, அவர்களுக்கு ஆறுதலும், தேறுதலும் கூறி, நம்பிக்கையூட்டி, துயர் துடைப்புப் பணிகளில் தனது அரசு இயந்திரத்தையும் போர்க்கால அடிப்படையில், ராக்கெட் வேகத்தில் இயங்கும்படி முடுக்கிவிட்டு, இரண்டே நாள்களில் இயல்பு நிலைக்கு அவர்கள் வாழ்க்கை வருவதற்கான அத்துணைப் பணிகளையும் அயர்வின்றிச் செய்ததைக் கண்டு அவனியே மூக்கில் விரலை வைத்து வியந்து பாராட்டுகிறது!

பள்ளி, கல்லூரிகளில் பாலியல் தொந்தரவு: தடுத்து நிறுத்த தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்க!.- கே.பாலகிருஷ்ணன்

 பள்ளி, கல்லூரிகளில் பாலியல் தொந்தரவு: 

தடுத்து நிறுத்த தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்க!

தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!

கோவை, பொன் தாரணி என்ற மாணவி சின்மயா வித்யாலாயா பள்ளியில் கடந்த ஆறுமாதம் முன்பு வரை படித்து வந்துள்ளார். அங்கிருந்த ஆசிரியர் ஒருவரின் பாலியல் தொல்லை குறித்து பள்ளி முதல்வரிடம் சொன்ன பிறகும் மாணவியை சமாதானப்படுத்தியதைத் தவிர சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நிர்வாக ரீதியான நடவடிக்கையோ, குற்றவியல் நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் தான் வேறு பள்ளிக்கு மாற்றலாகி சென்ற பிறகும் தொடர்ந்த பாலியல் தொல்லையால் 11.11.2021 அன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

ஞாயிறு, 14 நவம்பர், 2021

பாலியல் துன்புறுத்தல்கள் காரணமாக, கோவையில் பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட செய்தி, அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கின்றது. - வைகோ

 பள்ளி மாணவி தற்கொலை!.- வைகோ வேதனை 

பாலியல் துன்புறுத்தல்கள் காரணமாக, கோவையில் பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட செய்தி, அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கின்றது. அவர் தம் கைப்பட எழுதி இருந்தபடி, தற்கொலைக்குக் காரணமான ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்தப் பிரச்சினை, பள்ளி முதல்வரின் கவனத்திற்கு வந்தபோது, அவர் முறையான நடவடிக்கை எடுக்காததன் விளைவாகவே, இந்தத் தற்கொலை நிகழ்ந்து இருக்கின்றது. அதற்காக, அவரும் கைது செய்யப்பட்டு இருக்கின்றார். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.- DR.S.ராமதாஸ்


பேரிடரில் கன்னியாகுமரி : நிவாரணம்,
சீரமைப்பு பணிகளை விரைவுபடுத்துக!.- DR.S.ராமதாஸ்

இந்தியாவின் தென்கோடி மாவட்டமான கன்னியாகுமரி கடுமையான மழை மற்றும் மழை பாதிப்புகளை சந்தித்து வருகிறது. மழையால் ஏற்படும் வழக்கமான பாதிப்புகளையும், உடனடி பாதிப்புகளையும் கடந்து, நீண்ட கால பாதிப்புகளையும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இப்போது பெய்து வரும் மழை ஏற்படுத்தி உள்ளது. இந்த மழை கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்திற்கு புதிய பாடங்களைக் கற்றுக் கொடுத்துள்ளது.

இந்துக் கோயில்கள் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார்களின் கட்சி அலுவலகங்களாக மாறி விட்டன என்பது அப்பட்டமாகவே தெரிகிறது. - கி.வீரமணி



சிறீரங்கம், மதுரைக் கோயில்களில் எல்.இ.டி. திரையமைத்து பிரதமரின் உரையை பா.ஜ.க.வினர் பார்ப்பது - கேட்பது சட்டப்படி சரிதானா?

கோயில் பி.ஜே.பி.  ஆர்.எஸ்.எஸ். கூடாரமா? 

தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்கட்டும்!.- கி.வீரமணி

இந்துக் கோயில்கள் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார்களின் கட்சி அலுவலகங்களாக மாறி விட்டன என்பது அப்பட்டமாகவே தெரிகிறது. 

இதோ ஒரு செய்தி.

சனி, 13 நவம்பர், 2021

தோல்விகளைக் கண்டு துவள்பவன் அல்ல நான்; என் உயிருள்ளவரை போராடுவேன்!.- DR.S.ராமதாஸ்

 தோல்விகளைக் கண்டு துவள்பவன் அல்ல

 நான்; என் உயிருள்ளவரை போராடுவேன்!.- DR.S.ராமதாஸ்

1955 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் முதல் நாள். அக்காலத்தில், அமெரிக்காவில் உள்ள மாண்ட்கோமரி மாநிலத்தில் ஒரு சட்டம் இருந்தது. நகரப் பேருந்துகளின் முதல் பத்து வரிசைகளில் வெள்ளைக்காரர்கள் மட்டுமே உட்கார முடியும். கருப்பினத்தவர் பின்னிருக்கைகளில் மட்டுமே உட்காரலாம். வெள்ளைக்காரர்கள் அமரும் இருக்கையில் கருப்பினப் பெண்மணியான ரோசா பார்க் உட்கார்ந்து விட்டார். வெள்ளைக்காரர்கள் பேருந்தில் ஏறிய போது தன் இருக்கையிலிருந்து எழுந்து அவர்களுக்கு இடம் தரும் படி பேருந்தின் ஓட்டுனர், ரோசா பார்க் அம்மையாருக்கு உத்தரவிட்டார். இருக்கையிலிருந்து எழுவதற்கு ரோசா பார்க் மறுத்துவிட்டார். அந்நகரத்தின் சட்டப்படி அவர் கைது செய்யப்பட்டார். விடுதலை செய்யப்பட்டபிறகு மீண்டும் பேருந்துகளில் வெள்ளைக்காரர்கள் அமரும் இருக்கைகளிலேயே அமரத் தொடங்கினார். அந்தப் போராட்டம் மாண்ட்கோமரி பேருந்து மறுப்புப் போராட்டம் என்ற பேரியக்கமாக மாறி அமெரிக்காவில் நடைபெற்ற நிறவெறிக்கெதிரான போராட்டத்தின் இன்றியமையாத மைல் கல்லாக ஆனது.

மக்களுக்கான (Tele-Law Mobile App) டெலி-லா கைபேசிச் செயலியை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு அறிமுகப்படுத்தினார்.


 மக்களுக்கான டெலி-லா கைபேசிச் செயலியை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு அறிமுகப்படுத்தினார். டெலி-லா முன்கள செயல்பாட்டாளர்களையும் அவர் பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் பேராசிரியர் எஸ் பி சிங் பாகேல் கலந்து கொண்டார். இந்த நிகழ்வு 2021 நவம்பர் 8 முதல் 14 வரை நீதித்துறையால் கொண்டாடப்பட்ட விடுதலையின் அம்ரித் மஹோத்சவ கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகும்.