சனி, 1 பிப்ரவரி, 2020

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்று இருக்கிறது - டாக்டர் K. கிருஷ்ணசாமி,



கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்று இருக்கிறது. குறிப்பாக இராமநாதபுரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் பெரும்பாலானோர் 100 இடங்களுக்குள் தேர்வு பெற்று இருக்கிறார்கள் அந்த சம்பவம் வெளியாகி  சிலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். கடந்த இரண்டு நாட்களாக வரக்கூடிய செய்திகளை பார்க்கும்போது பெரிய அளவில் ஊழல் நடைபெற்றிருப்பதாக தெரிகிறது. 

தமிழ்நாடு தேர்வாணையத்தில் நடைபெறும் அனைத்து தேர்வுகளிலும் ஏதோ ஒரு விதத்தில் முறைகேடு நடப்பதாக செய்திகள் வருகின்றன. இது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த நிர்வாகத்திற்கு உகந்தல்ல!

டி.என்.பி.எஸ்.சி முறைகேடுகள் இருக்கிற போது, மற்ற துறைகளிலும் முறைகேடுகள் இல்லை என்று சொல்ல முடியாது. எனவே, தமிழ்நாட்டில் அனைத்து துறைகளிலும் நடக்கக்கூடிய தேர்வை கண்காணிக்க கடுமையான விதிகளை வகுக்கக்கூடிய வகையில் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக முதல்வர் கூட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

குரூப் 1-ல் தேர்வில் முறைகேடுகள் நடக்கும் போது,  நேர்மையான அதிகாரிகள் எவரும் வர இயலாது. முக்கிய பதவிகள் வகுக்கக்கூடியவர்கள்  முறைகேட்டில்  பதவிக்கு வரும் போது, எப்படி நிர்வாகம் சரியாக நடக்க வாய்ப்பிருக்கிறது? எனவே,தமிழ்நாட்டில் உள்ள பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்த வேண்டும். 

சென்னையில் ஒரே பயிற்சி மையத்தில் படித்தவர்கள் 160 பேர் குரூப் 1 தேர்வில்  தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள், அது எப்படி நேர்மையாக இருக்க முடியும்.

தமிழ்நாடு தேர்வாணையம் மீது நம்பிக்கை இழக்கக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.  அதை மாநில அரசு தடுத்து நிறுத்தவேண்டும்.  தமிழகத்தில் முதல் நிலை ஊழியர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை நடைபெறும் தேர்வுகளில் நல்ல அறிவாளிகள், உழைப்பாளிகள், நேர்மையானர்கள் மட்டுமே எவ்வித தவறும் இழைக்காமல் உழைத்தால்; படித்தால்; திறமையிருந்தால் அந்த இடத்திற்கு வரலாம் என்ற நம்பிக்கையை இளைஞர்கள் மனதில் உருவாக்க வேண்டும்.

ஒன்றுமில்லாத பிரச்சனைக்கெல்லாம் லட்சக்கணக்கான இளைஞர்கள்  போராடுகிறார்கள். ஆனால் டி.என்.பி.எஸ்.சி முறைக்கேடுக்காக யாரும் போராட வருவதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக