சனி, 1 பிப்ரவரி, 2020

தூக்குத் தண்டனையை காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். - ஜி.கே.வாசன்


நிர்பயா வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட தூக்குத் தண்டனை கைதிகளின் தண்டனையை நீதிமன்றத்தின் மறு உத்தரவின் மூலமாவது காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். - ஜி.கே.வாசன்


நாடு முழுவதும் பேரதிர்வை ஏற்படுத்திய நிர்பயா கொலை தொடர்பான வழக்கில் குற்றவாளிகளுக்கு மீண்டும் தூக்குத் தண்டனையை இன்று நிறுத்தி வைத்து டெல்லி கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனையை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பது தான் பொது மக்களின் எதிர்பார்ப்பாகும்.

காரணம் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு, மிருகத்தனமாக கொலை செய்தவர்களுக்கு தூக்குத் தண்டனையை உடனடியாக நிறைவேற்றாமல் இடைக்கால தடை ஏற்பட்டால் குற்றம் செய்பவர்களுக்கு பயம் இருக்காது. அச்சப்பட மாட்டார்கள்.

குற்றவாளிகளுக்கு ஏற்கனவே நிறைவேற்றப்பட இருந்த தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படாமல் தொடர்ந்து காலதாமதம் ஆவது வேதனையை அளிக்கிறது.

குறிப்பாக நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் தூக்குத் தண்டனையிலிருந்து தப்பிக்க அவர்களுக்கான பரிதாபமோ, சிபாரிசோ, கருணையோ, இடைக்கால தடையை ஏற்படுத்துவதற்கான மனுவோ ஏற்றுக்கொள்ளக்கூடாது.

எனவே இனிமேலும் காலம் தாழ்த்தாமல் நீதிமன்றத்தின் மறு உத்தரவின் மூலம் நிர்பயா வழக்கின் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட வேண்டும்.

அப்போது தான் இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் இந்த தீர்ப்பின் மூலம் பாலியல் வன் கொடுமைகள், கொலைகள் போன்ற குற்றங்களில் ஈடுபட எவருக்கும் எண்ணமே வராது.

எனவே நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனையை நீதிமன்றத்தின் மறு உத்தரவின் மூலம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று த.மா.கா சார்பில் கோரிக்கை வைக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக