செவ்வாய், 31 மார்ச், 2020

கொரோனா: மத்திய அரசின் நிதியுதவியை விரைந்து வழங்க நடவடிக்கை வேண்டும்! - DR.S.ராமதாஸ்


கொரோனா வைரஸ் பரவல் அச்சம் மற்றும் அதைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட ஊரடங்கு ஆணையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட நிதியுதவி, பயனாளிகளைச் சென்றடைய நீண்ட தாமதம் ஆகும் என்று வெளியாகியுள்ள செய்திகள் கவலையை ஏற்படுத்துகின்றன.  வாழ்வாதாரம் இழந்த ஏழைகளுக்கு உதவும் விஷயத்தில் தாமதம் செய்வது, உதவியின் நோக்கத்தையே சிதைத்து விடும்.

கொரோனா வைரஸ் அச்சத்தால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாக நிவாரண உதவிகளை அறிவித்துள்ளன. தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் நிதியுதவிகள் நாளை மறுநாள் முதல் பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளன. ஆனால், மத்திய அரசின் சார்பில், கொரோனா வைரசால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு அறிவிக்கப்பட்ட உணவு தானியங்களும், நிதியுதவியும் எப்போது வழங்கப்படும் என்பதற்கான அறிகுறிகள் கூட தென்படவில்லை.

தமிழக அரசின் உதவித் திட்டங்கள் ஒரே கட்டமாக வழங்கப்படவுள்ள நிலையில், மத்திய அரசின் நிவாரணத் திட்டம் அடுத்த மூன்று மாதங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படவுள்ளது. மொத்தம் 80 கோடி ஏழைகளுக்கு அடுத்த 3 மாதங்களில் ரூ. 1.70 லட்சம் கோடி மதிப்புள்ள உதவிகளை மத்திய அரசு வழங்கியாக வேண்டும். இந்த உதவிகளில் பெரும்பாலானவை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளின் நேரடி பயன் மாற்ற முறையில் செலுத்தப்பட வேண்டும். ஆனால், பயனாளிகளுக்கான நிதியுதவியை அவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

முதல்கட்டமாக, நிதியுதவியை செலுத்துவதற்கான வங்கிக் கணக்குகளில் 75% கணக்குகள் மட்டுமே ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன. ஆதாருடன் இணைக்கப்படாத வங்கிக் கணக்குகளில் பணத்தை  செலுத்த முடியாது என்று இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும்,  பயனாளிகளில் கணிசமானவர்களுக்கு இதுவரை வங்கிக் கணக்கே இல்லை என்று தெரியவந்துள்ளது.  

தொலைதூர கிராமங்களில் உள்ள மக்கள் மின்னணு பணப்பரிமாற்ற முறையை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால் அவர்களுக்கு வங்கி ஏ.டி.எம்கள் மூலமாகவோ, வங்கி முகவர்கள் மூலமாகவோ பணமாகத் தான் கொடுக்க வேண்டியிருக்கும். அவ்வாறு வினியோகிக்க வேண்டியுள்ள தொகையில் பெரும்பகுதி கிராமங்களில் தான் வினியோகிக்கப்பட வேண்டியுள்ளது. ஆனால், இந்தியாவில் மொத்தமுள்ள 2.30 லட்சம் ஏ.டி.எம் எந்திரங்களில் வெறும் 43 ஆயிரம் எந்திரங்கள் மட்டுமே ஊரகப்பகுதிகளில் உள்ளன. அதுமட்டுமின்றி, ஊரடங்கு ஆணை நடைமுறையில் இருக்கும் நிலையில் கிராமப்புறங்களில் உள்ள ஏ.டி.எம். மையங்களுக்கு  பணத்தை கொண்டு செல்வதோ, வங்கி முகவர்கள் மூலம் பணத்தை வழங்குவதோ உடனடியாக சாத்தியம் இல்லை என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், மத்திய அரசின் நிதியுதவி ஏழைகளை எப்போது சென்றடையும் என்பதை எவராலும் துல்லியமாக கூற முடியாது என்ற நிலை தான் நிலவுகிறது.

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கும் திட்டத்தின் பயனாளிகள் பட்டியல் மட்டும் தான் அவர்களின் வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்டு துல்லியமாக பராமரிக்கப்படுவதாகவும், அதனால் அவர்களுக்கு மட்டும் முதல் தவணையாக ரூ.2000 சில நாட்களில் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. மத்திய அரசு அறிவித்துள்ள நிதியுதவிகள் விழாக்காலங்களில் வழங்கப்படும் சலுகைகள் அல்ல. அவ்வாறு இருந்தால் அது காலதாமதமாக வழங்கப்பட்டால் கூட, அதை ஏழை மக்களால் தாங்கிக் கொள்ள முடியும்.

ஆனால், ஊரடங்கு காரணமாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அடித்தட்டு மக்களால் எந்த வேலைக்கும் செல்ல முடியவில்லை. கையிலிருந்த சேமிப்புகள் அனைத்தும் கடந்த 10 நாட்களில் கரைந்து விட்ட நிலையில், அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாமல் தான் அவர்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.  இந்த நேரத்தில் அவர்களுக்கான உதவி என்பது, உடுக்கை இழந்தவன் கைகள் எவ்வளவு விரைவாக செயல்படுமோ, அவ்வளவு விரைவாக வழங்கப்பட வேண்டும். மணிக்கணக்கில் தாமதம் செய்தால் கூட அது வாழ்வாதாரம் இழந்த ஏழைகளின் வாழ்க்கையில் பெரும் துன்பதையும், துயரத்தையும் ஏற்படுத்தி விடும்.

எனவே, என்னென்ன மாற்று ஏற்பாடுகளை செய்ய முடியுமோ, அவை அனைத்தையும் செய்து அடுத்த ஒரு வாரத்திற்குள் முதல் தவணை உணவு மற்றும் நிதியுதவி ஏழை மக்களுக்கு வழங்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். வங்கிக் கணக்குகள் இல்லாதவர்களுக்கும், ஆதாருடன் வங்கிக் கணக்கை இணைக்காதவர்களுக்கும், இந்த ஒரு முறை மட்டும் விலக்களித்து, நிதியுதவியை வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு பதிலாக ரொக்கமாக வழங்க வேண்டும். தேவைப்பட்டால் மாநில அரசின் உதவியையும், கட்டமைப்பையும் கேட்டுப் பெறுவதற்கும் மத்திய அரசு தயங்கக்கூடாது என வலியுறுத்துகிறேன்

திங்கள், 30 மார்ச், 2020

விவசாயிகளை காப்பாற்ற இந்தியா முழுவதும் விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.-ER.ஈஸ்வரன்


விவசாயிகளை காப்பாற்ற இந்தியா முழுவதும் விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.

அத்தியாவசிய பொருட்களை எடுத்து செல்ல மாநில எல்லைகள் திறக்கப்பட வேண்டும்.

அறுவடைக்கு தயாராக இருக்கின்ற பல காய்கறிகள், பழங்கள், பூக்கள் அறுவடை செய்து என்ன செய்வதென்று தெரியாமல் விவசாயிகள் முடங்கிப்போய் இருக்கிறார்கள்.  கறந்த பாலையும் விற்க முடியாமல் பால் உற்பத்தியாளர்கள் விழி பிதுங்கி நிற்கிறார்கள். அத்தியாவசிய பொருட்கள் எப்போதும் போல் கிடைக்குமென்று அரசு அறிவித்திருந்தாலும் அத்தியாவசிய பொருட்களை தேவையான இடங்களுக்கு அனுப்ப முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தினசரி உற்பத்தியாகின்ற கோடிக்கணக்கான முட்டைகளும் நாமக்கல்லில் தேங்கி கிடக்கிறது. சரியான வழிமுறைகளை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். காவல்துறைக்கு தேவையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். தினசரி கோடிக்கணக்கில் வியாபாரமாகின்ற மல்லிகை, செவ்வந்தி, ரோஜா போன்ற  மலர்கள் செடிகளிலேயே வாடி கொண்டிருக்கின்றன. ஊரடங்கு உத்தரவுக்கு முன் பறிக்கப்பட்ட மலர்கள் ஆங்காங்கே மண்டிகளில் அழுகிப்போய் கிடக்கிறது. தோட்டத்தில் ஒரு கிலோ தக்காளியை 10 ரூபாய்க்குதான் வாங்குகிறார்கள். கோயம்பேடு போன்ற சந்தைகளில் வரத்து குறைவாக இருக்கிறது என்று காரணம் காட்டி ஒரு கிலோ 60 முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மாட்டினுடைய மடிகளிலே பாலை விட முடியாது. கன்றுக்குட்டிகளுக்கும் ஒரு அளவுக்கு மேல் தர முடியாது என்ற நிலையில் பாலை கறந்து தரையிலே ஊற்றுகின்ற அவலம் அரங்கேறுகிறது. அரசும், தனியார் நிறுவனங்களும்  உற்பத்தியாகின்ற பாலை கொள்முதல் செய்ய முடியும். குளிரூட்டும் நிலையங்களில் வைக்க முடியும். பால் பவுடர், வெண்ணெய் கட்டிகள் போன்ற பொருட்களை உற்பத்தி செய்து இருப்பில் வைத்துக்கொள்ள முடியும்.  அரசினுடைய வழிகாட்டுதல் நடைமுறைகள் காவல்துறை அதிகாரிகளுக்கு சேராத காரணத்தினால் ஆங்காங்கே காய்கறி வண்டிகள் தடுக்கப்படுகின்றன. இதற்கான தீர்வை அரசு உடனடியாக காணவில்லை என்று சொன்னால் வறட்சியிலே தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளை விட இப்போது தற்கொலை செய்து கொள்பவர்கள் அதிகமாவார்கள். தமிழகத்திலே உற்பத்தியாகின்ற காய்கறிகள், மலர்கள், முட்டை போன்ற பொருட்கள் அதிகமாக பக்கத்தில் இருக்கின்ற கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு விற்பனைக்கு செல்வது வழக்கம். மற்ற மாநிலங்களுக்கு இவற்றை அனுமதிக்கவில்லை என்று சொன்னால் நாம் எதிர்பார்க்கும் அனைத்து விபரீதங்களும் நடக்கும். அதேபோல பக்கத்து மாநிலங்களில் அத்தியாவசிய பொருட்களுக்கான பற்றாக்குறையும் நிலவும். அதனால் அத்தியாவசிய பொருட்களுக்காக மாநில எல்லைகள் பாதுகாப்பாக திறக்கப்பட வேண்டும். அதன் மூலம் கொரோனா தொற்று எல்லை வழியாக பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள முடியும். நடவடிக்கைகள் தாமதப்படுத்தப்பட்டால் விவசாயிகள் கடன் வாங்கி விவசாயம் செய்த அத்தனை பணமும் வீணாகப்போகும். கடனை திருப்பி கட்ட முடியாது. இந்தியா முழுவதும் விவசாயிகள் வாங்கி இருக்கின்ற கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு திரு. ராகுல் காந்தி, எம்.பி. அவர்கள் 29-03-2020 அன்று எழுதிய கடிதம்.

கோவிட் - 19 வைரஸ் நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு திரு. ராகுல் காந்தி, எம்.பி. அவர்கள் 29-03-2020 அன்று எழுதிய கடிதம்.

மாண்புமிகு திரு. நரேந்திர மோடி
இந்திய பிரதமர்

அன்புள்ள பிரதமருக்கு,

மனித சமுதாயத்துக்கு ஏற்பட்டுள்ள மாபெரும் நெருக்கடியை எதிர்கொள்ளும் அரசின் நடவடிக்கைக்கு நானும் லட்சக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களும் பக்கபலமாக இருப்போம் என்பதை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவை உலுக்கிக் கொண்டிருக்கும் கோவிட் - 19 எனும் கொரோனா வைரஸை எதிர்த்து அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாங்கள் ஒத்துழைப்பு தருவோம்.

கோவிட் - 19 எனப்படும் இந்த வைரஸை பரவ விடாமல் தடுப்பதற்கு உலகமே கடும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. இந்தியா தற்போது 3 வார ஊரடங்கின் மத்தியில் உள்ளது. தேசிய அளவிலான இந்த ஊரடங்கு, நமது மக்கள், நமது சமுதாயம் மற்றும் நமது பொருளாதாரத்துக்கு பேரழிவை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளதா என்பதை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என தங்களை கேட்டுக் கொள்கிறேன்.

இந்தியாவின் தனித்துவத்தின் நிலைமை குறித்து புரிந்து கொள்வது கடினமாக உள்ளது. மற்ற பெரிய நாடுகளில் ஊரடங்கு அமலில் இருந்த போது வகுக்கப்பட்ட வியூகத்தை அடிப்படையாகக் கொண்டு, நாமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகியுள்ளது. ஊரடங்கால் இந்தியாவில் உள்ள ஏராளமான ஏழை தினக் கூலித் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதையும் நாம் பொருளாதார நடவடிக்கைக்குள்  பொருத்திப் பார்ப்பது ஒரு தலைப்பட்சமானதாகும்.  முழுமையான பொருளாதார முடக்கத்தால் எற்படும் விளைவு,  கோவிட் - 19 வைரஸால் ஏற்படும் உயிரிழப்புகளை விட பேரிழப்பை ஏற்படுத்தும்.

இந்த விவகாரத்தில் அரசு நேர்த்தியுடன் செயல்பட வேண்டியது அவசியமாகிறது.  மேலும், உண்மை தெரியாமல் மக்கள் மத்தியில் நிலவும் குழப்பத்தை போக்கும் வகையிலும் அரசின் அணுகுமுறை அமையவேண்டும். கோவிட் - 19 வைரஸ் பாதிப்பிலிருந்து முதியவர்களை பாதுகாப்பதும், தனிமைப் படுத்துவதும் நமது முதன்மை நடவடிக்கையாக இருக்க வேண்டும். இந்த வைரஸ் குறித்து அவர்களுக்கு நாசூக்காக விளக்க வேண்டும். மேலும், முதியவர்களுக்கு எத்தகைய பாதிப்பை கோவிட் - 19 வைரஸ் ஏற்படுத்தும் என்பதை இளைஞர்களுக்கு தெளிவாகவும், வலுவாகவும் புரியவைக்க வேண்டும்.

இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான முதியவர்கள் கிராமங்களில் தான் வசிக்கின்றனர். முழுமையான ஊரடங்கு உத்தரவால் ஏற்பட்டுள்ள பொருளாதார முடக்கம், வேலை இழந்த லட்சக்கணக்கான இளைஞர்களை தங்கள் கிராமங்களுக்கு திரும்ப செல்ல வைத்துள்ளது. கிராமத்துக்கு சென்றுள்ள இவர்களால், அங்குள்ள பெற்றோர், தாத்தா, பாட்டிகள் மற்றும் முதியவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இது அவர்களுக்கு பேராபத்தை விளைவித்துவிடும்.

தற்போது நாம் வலுவான சமுதாய பாதுகாப்பு வலையை உருவாக்க வேண்டும். அனைத்து வழிகளிலும் நாம் ஏழை கூலித் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அரசு அறிவித்துள்ள நிதித் தொகுப்பு முதற்கட்ட நல்ல நடவடிக்கை தான். ஆனால், இந்த தொகுப்பை விரைந்து வழங்குவதுதான் முக்கியம். எப்போதிலிருந்து இந்த நிதி தொகுப்பு வழங்கப்படும் என்பதை தயவுசெய்து தெளிவாக அறிவிக்கவேண்டும்.

 பெரிய அளவிலான மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில், ஆயிரக்கணக்கான படுக்கை வசதிகள் மற்றும் வெண்டிலேட்டர் வசதிகளுடன் கூடிய மருத்துவனைகள் கூடுதலாகத் தேவைப்படுகிறது. இத்தகைய கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதிலும், தேவையான மருத்துவ உபகரணங்களை விரைந்து தயாரிப்பதிலும் நமக்கு சிக்கல்கள் உள்ளன. அதேசமயம், வைரஸ் பரவுவதை துல்லியமாகக் கண்டறிய, பரிசோதனை மையங்களை அதிகப்படுத்த வேண்டியதும் நமக்கு அவசியமாகிறது.

அரசு திடீரென பிறப்பித்த ஊரடங்கு உத்தரவால், பெரும் பீதியும், குழப்பமும் ஏற்பட்டுவிட்டது. வாடகை தர முடியாததால், நகரங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வீட்டிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அரசு தலையிட்டு அவர்களுக்கான வாடகையை உடனே வழங்க வேண்டியது முக்கியமானதாகும். 

பெரும் தொழிற்சாலைகள், சிறு தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமானத் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் வேலை இழந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் கிராமங்களுக்கு பல மாநில எல்லைகளைக் கடந்து நடந்தே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. வருவாய் ஈட்ட முடியாமலும், ஊட்டமான உணவு பெற முடியாமலும், அடிப்படை வசதி இல்லாமலும் அவர்கள் பாதிக்கப்பட்டதையே இது வெளிப்படுத்துகிறது. தங்கள் சொந்த ஊருக்குச் சென்று அடைக்கலம் ஆவதற்கு அவர்கள் போராடிக் கொண்டிருப்பதையே இந்த நடைபயணம் காட்டுகிறது. அவர்களுக்கு அடைக்கலம் தரவும், அவர்கள் வங்கிக் கணக்குகளில் நேரடியாக பணத்தை செலுத்தவும் நாம் உதவ வேண்டியது அவசியமாகிறது. அவர்கள் நிம்மதியுடன் வாழ அடுத்த சில மாதங்களுக்கு இந்த உதவியை செய்ய வேண்டும்.

கோவிட் - 19 வைரஸ் மற்றும் பொருளாதார முடக்கத்தின் காரணமாக அதிர்ச்சி அலையில் சிக்கியுள்ள அவர்களை, நமது முக்கிய நிதி ஆதாரம் மற்றும் வியூகங்கள் மூலம் பாதுகாப்பு அரண் அமைத்து காப்பது கடினம் என்றே தெரிகிறது.  தற்போதிலிருந்து சில மாதங்களுக்கு இந்த நிலை நீடிக்கும் வாய்ப்பு உள்ளது. நமது பொருளாதாரத்தையும், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், விவசாயிகளை மீட்டெடுக்க வேண்டியது அவசியம். அதற்காக நாம் அவர்களுடன் உரையாட வேண்டும். அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அவர்களது நலனை பாதுகாக்க சரியாகவும், விரைந்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த பெரும் சவாலில் இருந்து மீண்டு வர, நாம் அரசுடன் இணைந்து செயல்படுவோம்.

ஞாயிறு, 29 மார்ச், 2020

நாட்டின் விளிம்பில் இருக்கும் சாமானியனின் ஹீனக்குரல் எனது வீட்டில் தினம் ஒலிக்க தொடங்கி உள்ளது.-சு.வெங்கடேசன் கடிதம்


மாண்புமிகு இந்தியப்பிரதமர் அவர்களுக்கு,

நாடாளுமன்ற உறுப்பினரின் கடிதம்.

சவால்களும் துயரமும் ஒன்றினை ஒன்று விஞ்சிக்கொண்டிருக்கும் இந்த நாள்களில் உடனடியாக உங்களின் கவனத்துக்குச் சிலவற்றைக் கொண்டுவரவே இக்கடிதத்தை எழுதுகிறேன்.

நாடு தத்தளித்துக்கொண்டிருக்கும் சூழலில் உங்களைச் சுற்றியிருக்கும் முக்கிய ஆலோசகர்கள் பல்வேறு காப்புப்பணிகளை உங்களுக்கு விளக்கிக்கொண்டிருக்கக் கூடும். நாட்டின் விளிம்பில் இருக்கும் சாமானியனின் ஹீனக்குரல் எனது வீட்டில் தினம் ஒலிக்க தொடங்கி உள்ளது. தென்தமிழகத்து அறிவார்ந்த சமூகத்தின் அக்கறையுடன் கூடிய குரலில் எனது தொலைபேசியில் நித்தமும் பல விசாரிப்புகள். நாடெங்கிலும் இருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்வுசெய்யப்பட்ட அத்தனை பேரினை நோக்கியும் இப்படியான கூக்குரல் இடைவிடாது எதிரொலித்துக்கொண்டுதான் இருக்கும். இந்தக் குரலில் தற்போதைய சூழலில் பயமும் அக்கறையும் பதட்டமும் மட்டும் நிறைந்து இருக்கின்றன. அக்குரல் நெஞ்சில் அடித்து அழுங்குரலாக ஆகும் முன்னர், உங்களின் கவனத்துக்கு சிலவற்றைக் கொண்டுவர விரும்புகிறேன்.

விமரிசிக்கவோ, வேதனைப்படுத்தவோ எண்ணி அல்ல. உண்மையை உங்களின் கவனத்துக்குக் கொண்டுவருவதன் மூலம் தீர்வினை நோக்கி விரைவதற்கான முயற்சியே. முகம்தெரியாத அந்தக் கிருமியை முன்னேறவிடாமல் தடுக்க முடியும் என்ற மிச்சமிருக்கும் நம்பிக்கையின் அடிப்படையிலே இதனை எழுதுகிறேன்.

1. "உண்மையைச் சொல்லுவதும் பிற தேசத்தில் நிகழ்ந்த மருத்துவ நெருக்கடி அனுபவங்களை பகிர்தலும்" மட்டுமே நம்மைக் காக்கும் என்பது இங்கிலாந்து, அமெரிக்க முன்னோடி மருத்துவ ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்து. இங்கே, இப்போது சொல்லப்படுபவை உண்மையான புள்ளிவிவரங்களா?

2. இந்தியா ஏன் இன்னமும் தீவிர சோதனைத் திட்டத்துக்குள் இறங்க மறுக்கிறது? "Test, test, test" இதுதான் தீர்வு என பல நாடுகள் சொன்ன பின்னரும் இங்கு ஏன் பலருக்கும் சோதனை அவசியமில்லாதது போன்ற நிலை? தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் நோயை முடக்கியது சோதனையால்தான் என்கிற சேதி உங்களை எட்டவில்லையா?

3. நமக்கு அருகிலுள்ள நாடு 10,00,000 பேருக்கு 6800 பேரினை சோதனை செய்யும்போது நாம் வெறும் 18பேரைத்தான் சோதிக்கின்றோம். ஆரம்பத்தில் ICMR அனைவருக்கும் 'சோதனை தேவையில்லை' என்ற நிலைப்பாட்டில் இருந்தது. இப்பொழுது அது 'அதிகம் பேருக்கு சோதிக்கலாம்' என்ற நிலைப்பாட்டிற்கு வந்த பின்னரும் போதிய அளவு டெஸ்டிக் கிட் வந்த பின்னரும் ஏன் இன்னும் தாமதம் பிரதமர் அவர்களே?

4. ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் இந்தியாவில் "25 கோடிமக்கள் தொற்றுப் பெறுவர். 25 இலட்சம் பேர்வரை நோயுறலாம்; மருத்துவம் தேவைப்படலாம்" என்கின்றனர். நம்மிடம் இருக்கும் மருத்துவர்கள், மருத்துவமனைகள், உபகரணங்கள் ஆகிய எந்த ஒன்றிலும் இதை மீட்டெடுக்கும் எண்ணிக்கை இல்லையே. இந்நிலையில் என்ன செய்யப்போகிறோம்? இந்த ஆய்வுக்கும் புள்ளிவிபரங்களுக்கும் அர்த்தமேதுமில்லை என்று விட்டுவிடப்போகிறோமா அல்லது அதற்கு முகங்கொடுக்கப் போகிறோமா? இதனைப்பற்றி அரசு எதுவும்  சொல்லவில்லையென்றால் எப்படித்தான் புரிந்துகொள்வது?

5. பிற நோய்களில் கவனம் குறைவதும், அந்த நோய்களுக்கான புற நோயாளி சிகிச்சை நிலையங்கள் மூடப்படுவதும் எவ்வளவு ஆபத்து? நமது நாட்டில் காய்ச்சலில் ஏற்படும் மரணத்தைவிட வாழ்வியல் நோயில் ஏற்படும் மரணங்கள்தானே நான்கு மடங்கு அதிகம்?

6. தனியார் மருத்துவமனைகள் இன்னமுமே முன்வர தயங்கித் தடுமாறுவதை உணர முடிகிறது. நீங்கள்தானே அதற்கான திட்டத்தை உருவாக்க வேண்டும். தமிழகத்தைப் பொருத்த மட்டில் 1750 வெண்டிலேட்டர்கள் அரசிடம் என்றால், 465 தனியாரிடம் உள்ளன. கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பலமும் கட்டமைப்பும்கொண்ட தனியார் மருத்துவமனைகளை கரோனாவுக்கு எதிரான அரசின் செயல்திட்டத்துக்குள் கொண்டுவர வேண்டாமா?

7. நேற்றைய தினம் ஆயுஷ் துறையினரிடம் பேசியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி. அவர்கள் பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துங்கள். சீனம் வுகானுக்கு மட்டும் 2000 சீனமுறை மரபு மருத்துவர்களை அனுப்பியதும் அவர்களது QPD கசாயம் முதலுதவி செய்ததும் பதிவாகி உள்ளதே, நிலவேம்போ, கபசுரகுடினீரோ அவர்கள் சொல்வதை அறிஞர் கூட்டத்தைக்கொண்டு ஆலோசித்து நாடெங்கும் ஊற்றி நம்பிக்கையைக் கொடுங்களேன். வலியுடன் காத்திருக்கும் கூட்டத்துக்கு அக்கசாயம், நோய் எதிர்ப்பாற்றலை மட்டுமன்று பெரிய உளவியல் உறுதியையும் சேர்த்தல்லவா தரும்?

8. "வராது; வந்தால் பார்த்துக் கொள்ளலாம்" என்ற வரிகள் அழும் குழந்தைக்கு நிலவைக் காட்டி உறங்க வைக்கும் போக்கு. சில நேரங்களில் ஊடகம் மூலம் நாங்கள் பெறும் செய்தி அப்படித்தானே உள்ளது. வெகுசனத்தின் வலி அவர்கள் மூளைக்கு எட்டும் முன்னரே அவர்கள் மனத்தை எட்டி முரணான நடவடிக்கைகளுக்கு முன்னேற வைத்துவிடும் என்பதை அறிவீர்கள்தானே! முன்வரிசைக் காவலர்களாய் உள்ள 7இலட்சம் மருத்துவர்களின் எண்ணிக்கை பத்தாது என்றால் 2.25 இலட்சம் ஆயுஷ் மருத்துவர்களையும் சேர்த்து முதல் நிலை பாதுகாப்பிற்கு நிறுத்தலாமே!

9. அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனா அதிபர் ஜீ ஜின்பிங் உடன் நீண்ட உரையாடலை நடத்தியதாகவும், இந்த வைரஸ் பற்றிய வலுவான புரிதலை சீனா வைத்திருப்பதாகவும் அந்த நாட்டோடு இணைந்து பணியாற்றுவோம் என நேற்று முன் தினம் தெரிவித்துள்ளார். சீனாவின் அனுபவங்களை நாமும் ஏன் பரிமாறிக் கொண்டு இந்தியாவில் பயன்படுத்தக் கூடாது என்பதையும் தாங்கள் உடனடியாக பரிசீலிக்க வேண்டும். 
"சீன வைரஸ்" என முதலில் சாடிய டிரம்ப் இன்று இறங்கி வந்து அமெரிக்க மக்களை காப்பதற்கு சீன அனுபவம் தேவை என்ற நிலை எடுக்கும் போது மாமல்லபுரத்தில் இந்திய- சீன நல்லுறவுக்கான பெரும் நம்பிக்கை விதைக்கப்பட்டுள்ள சூழலில் நீங்கள்  அத்தகைய முன் முயற்சியை மேற்கொள்ளலாமே.

10. நான்கு மணிநேர அவகாசத்தில் ஊரடங்கை அறிவித்துவிட்டீர்கள். எந்த முன்னேற்பாட்டினையும் அரசின் எந்த துறையும் செய்திராத பொழுது, தனிமனிதன் என்ன செய்திருக்கமுடியும்? உங்கள் அமைச்சகத்தில் உள்ள வாகன ஓட்டுநர்களின் குடும்ப உறுப்பினர்கள் எங்கெங்கு சிக்கினார்கள் என்பதைக் கேட்டாலே போதுமே? நிலமையின் விபரீதம் முழுமையும் புரியும்.
தில்லியின் ஆனந்த விகாரிலும் காசர்கோட்டின் தொழிற்கூடத்திலும் ஶ்ரீபெரும்புதூரின் ஊர் விளிம்புகளிலும் சொந்த ஊர்க்கு எப்படித் திரும்புவது என விழிபிதுங்கி ஒட்டிய வயிறுடன் இலட்சக்கணக்கானோர் நிற்கின்றனரே. ஒட்டிய வயிற்றில் ஒருவேளை அந்த பாதகக் கிருமியும் ஒட்டியிருந்தால் இந்த பரவல் தடுப்பு உத்தியே பாதாளத்துக்குப் போய்விடுமே! உங்கள் ஆலோசனைக்குழு என்ன செய்யப்போகின்றது?

11. நாற்பத்தி ஐந்து கோடி இந்தியர்கள் அன்றாடம் கூலிவேலை செய்து பிழைப்பவர்கள். அவர்களின் கால்களை வயிற்றோடு இறுக கட்டும் முடிவை நீங்கள் அறிவித்தபோது, அது ஏற்படுத்தும் விளைவுகளைப் பற்றி எத்தனை நூறு கேள்விகளுக்கு உங்களின் அமைச்சகம் விடைகண்டறிந்திருக்க வேண்டும். ஆனால் எந்த விடையையும் நீங்கள் இன்றுவரை சொல்லவில்லையே. காட்டுத்தீ எரியத்தொடங்கும் போது மெளனம் எனும் காற்று நெருப்பை அணைக்காது; அதிகப்படுத்தவே செய்யும்.

12. தினம் முன்நின்று விஷயங்களைப் பகிரவேண்டிய அரசின் முதன்மை நலவாழ்வுச் செயலரும் மருத்துவ அமைச்சரும் ஓரிரு மணித்துளிகளேனும் வெற்றுச்சொற்களைக் கோர்த்து பேசி நகராமல் விவரங்களையும் வியூகங்களையும் திடமாய்ப் பேசி மக்களை நித்தம் பாதுகாப்பாய் அரவணைக்க வேண்டாமா?

இவையெல்லாம் எதிர்கட்சி உறுப்பினராகிய எனது கேள்விகளல்ல, கண்ணுக்குத்தெரியாத அந்த வைரஸ் சமூகத்தில் உருவாக்கிக்கொண்டிருக்கும் கேள்வி.
லட்சுமண ரேகையை மதிக்க அண்ணனும் தம்பியும் மதினியும் மிச்சமிருக்க வேண்டுமே என்ற ஆதங்கத்தில் எழும் கேள்வி.

வெளிமாநிலங்களில் வாடும் தமிழர்க்கு வாழ்வாதார உதவிகளை உறுதி செய்க! - Dr.S.ராமதாஸ்



இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் அதன் நோக்கத்தை எட்டுவதற்கு பயனுள்ளவையாக உள்ளன. அதேநேரத்தில்  வாழ்வாதாரம் தேடி வெளிமாநிலங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாததால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களின் நிலைமை மிகவும் வேதனை அளிக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டப்பேரவைத் தொகுதியைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மக்கள் கோவா மாநிலத்தில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் மீன்பிடி தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஒரு கட்டமாக  இந்தியா முழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் மீன்பிடி துறைமுகங்கள் மூடப்பட்டு விட்ட நிலையில், அங்கு பணியாற்றி வந்த தமிழ்நாட்டு மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.

சனி, 28 மார்ச், 2020

நாட்டு மக்களை பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீட்டெடுக்க, பிரதமர் மோடி சிறப்பு நிவாரண திட்டங்களை அறிவிக்க வேண்டும். - K S.அழகிரி


கொரோனா ஊரடங்கு பாதிப்புக்கு நிவாரணம் அளிக்க 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதன்மூலம் 80 கோடி மக்களுக்கு அரிசி, கோதுமை வழங்குவது, விவசாயிகளுக்கு முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் , 20 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.500, விதவைகள், மூத்த குடிமக்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவது என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் திட்டம்தான். இது தற்போது விரிவுபடுத்தப்பட்டு, முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

சுய உதவிக் குழுவுக்கு வழங்கப்படுகிற கடனை ரூ. 10 லட்சத்திலிருந்து ரூ. 20 லட்சமாக உயர்த்துவதால், தற்போதைய சூழலில் எந்த பயனும் இல்லை. ஏற்கனவே இருப்பில் உள்ள கட்டிடத் தொழிலாளர் பாதுகாப்பு நிதி ரூ.30 ஆயிரம் கோடியை மாநில அரசு விருப்பம்போல் பயன்படுத்தலாம் என்று கூறிவிட்டதால், மத்திய அரசுக்கு எந்த நிதிச் சுமையும் இல்லை.

நாடு முழுவதும் உணவகங்களை மூடியதால் 20 லட்சம் பேரும், ஆட்டோமொபைல் தொழில்கள் முடக்கத்தால் 3.5 லட்சம் பேரும் வேலை இழந்துள்ளனர். ஏறத்தாழ 7.5 லட்சம் வாகன உற்பத்தி முடக்கப்பட்டுள்ளது. இதனால் ரூ. 7 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. தேசிய பங்குச் சந்தையின் வீழ்ச்சியால்,முதலீட்டாளர்கள் 52 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பை சந்தித்துள்ளனர். மேலும், நமது பொருளாதாரத்தில் 90 லட்சம் கோடி ரூபாய் இழப்பு என்று கூறப்படுகிறது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பாண்டில் 4.5 சதவீதத்திலிருந்து 2.5 சதவீதமாகவும், அடுத்த ஆண்டில் எதிர்பார்க்கப்பட்ட 5.2 சதவீத வளர்ச்சி, 3.5 சதவீதமாக வீழ்ச்சியடையும் என்றும் பொருளாதார வல்லுநனர்களால் மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பின்னணியில் நம் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 130 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 64 சதவீதமாகும். இத்தகைய பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என தர மதிப்பீட்டு நிறுவனங்கள் அபாய சங்கு ஊதியுள்ளன.

நாட்டு மக்களை பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீட்டெடுக்க, பிரதமர் மோடி சிறப்பு நிவாரண திட்டங்களை அறிவிக்க வேண்டும். காங்கிரஸ் தலைவர் திரு ராகுல் காந்தி ஏற்கனவே வலியுறுத்திவரும் "நியாய் (NYAY) திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூ 6000 வீதம் குறைந்தபட்ச வருமானத்தை உறுதி செய்கிற வகையில் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு முன்வரவேண்டும். இதை தவிர கொரோனா ஊரடங்கால் வேலை இழந்த ஏழை, எளிய மக்களுக்கு உடனடியாக தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கிற வகையில் நேரடி பணமாற்றத்தின் மூலம் மாதத்துக்கு ரூ.3 ஆயிரம் வீதம் 6 மாதங்களுக்கு 12 கோடி குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கவேண்டும். இதற்காக ரூ.2.2 லட்சம் கோடி ஒதுக்கினால் மொத்தம் 60 கோடி பயனாளிகளுக்கு பயன் தரும். நாடு தழுவிய முடக்கத்தால் குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்குப் பெறப்பட்ட கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். 

மத்திய அரசு அறிவித்துள்ள நிவாரண உதவிகள் தமிழக மக்களுக்கு முழு பயனையும் அளிக்காதது மிகுந்த வேதனையை தருகிறது. தமிழகத்தில் மொத்த குடும்ப அட்டைகள் 2 கோடியே 1 லட்சம். ஆனால் மத்திய அரசின் அறிவிப்பின்படி பயன்பெறுவோர் 1 கோடியே 11 லட்சம் . இதில் 90 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் விடுபடுகிற நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல தமிழக அரசு நடைமுறைப்படுத்துகிற 9 சமூக பாதுகாப்பு திட்டங்களில் பயன்பெறுவோர் 32 லட்சம் பேர். ஆனால் மத்திய பா.ஜ.க. அரசு நிறைவேற்றுகிற 3 சமூக நல திட்டங்களால் பயன்பெறுவோர் 20 லட்சம் பேர் மட்டுமே. இந்த பயனை பெறமுடியாத நிலையில் 12 லட்சம் பேர் உள்ளனர். மத்திய அரசின் இத்தகைய பாரபட்சமிக்க அணுகுமுறையினால் எவரும் பாதிக்கப்படாமல் இருக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரிய நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தவேண்டும்.

இன்றைய இக்கட்டான சூழலில் மத்திய பாஜக அரசுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாக அமைந்திருப்பது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வகையில் 30 டாலராக வீழ்ச்சியடைந்துள்ளது தான். இதைப் பயன்படுத்தி நிதி ஆதாரத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும். எனவே,மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல் திட்டங்களை வகுத்து விரைந்து செயல்பட்டு, எதிர்கொண்டு வருகிற பேராபத்திலிருந்து காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்துவது மிக, மிக அவசியமாகும்.

உலகத்தின் வல்லரசாக இருக்கிற 35 கோடி மக்கள் தொகை கொண்ட அமெரிக்கா, கொரோனா தாக்குதலில் இருந்து தொழில் முனைவோரை பாதுகாக்க 1.5 டிரில்லியன் டாலர் ( நமது ரூபாய் மதிப்பில் 1 கோடியே 7 லட்சத்து 14 ஆயிரத்து 500 கோடி) நிதி ஒதுக்கியுள்ளது. பிரிட்டன் 900 பில்லியன் டாலரை ஒதுக்கியுள்ளது. ஆனால், நமது பிரதமர் மோடியோ 136 கோடி மக்கள் கொண்ட நம் நாட்டிற்கு, வெறும் ரூ.15 ஆயிரம் கோடியை ஒதுக்கியிருப்பது, யானைப் பசிக்கு சோளப் பொறியாகத்தான் இருக்கும் என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்.

காவல்துறை மற்றும் ஊடகத்துறையில் பணியாற்றுபவர்களுக்கும் 50 லட்சம் ரூபாய் காப்பீட்டை மத்திய நிதியமைச்சர் அறிவிக்க வேண்டும்.

காவல்துறை மற்றும் ஊடகத்துறையில் பணியாற்றுபவர்களுக்கும் 50 லட்சம் ரூபாய் காப்பீட்டை மத்திய நிதியமைச்சர் அறிவிக்க வேண்டும். 

கொரோனா தடுப்பு பணியில் தங்களது உயிர்களை பற்றி கவலைப்படாமல் மக்களுக்காக உழைக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும்  தூய்மை பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் 50 லட்சம் ரூபாய் காப்பீடு செய்யப்பட்டுள்ளது  என்ற மத்திய நிதியமைச்சர் அவர்களின் அறிவிப்பு வரவேற்புக்குரியது. கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகமாகி வருகிறது. மத்திய, மாநில அரசுகளும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகின்றன. ஆனால் இன்னும் ஒருசிலர் கொரோனா வைரஸ் தாக்கத்தை பற்றி புரிந்து கொள்ளாமல் அரசின் உத்தரவுகளை மீறி வருவதை நாம் பார்க்க முடிகிறது. இந்த சூழ்நிலையில்  காவல்துறையினர் மற்றும் ஊடகத்துறையினரின் பங்களிப்பு மக்களுக்கு மிக அவசியமானதாக இருக்கிறது. அரசின் 144 தடை உத்தரவு உட்பட பல உத்தரவுகளை சரிவர மக்கள் அனைவரும் பின்பற்ற காவல்துறையினர் இரவுப்பகலாக உழைத்து வருகின்றனர். காவல்துறையினரின் நடவடிக்கைகள் மூலமாக தான் பெரும்பான்மையான மக்கள் வீட்டை விட்டு பொது இடங்களில் ஒன்று கூடுவதையும், கடைகளில் கூட்டமாக நிற்பதையும் தவிர்த்து வருகிறார்கள். இப்படி  அரசின் உத்தரவுகளை மக்கள் கடைபிடிக்க வைப்பதில் காவல்துறையினரின் பங்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.  காவல்துறையினர் இப்பணியில் ஈடுபட்டிருக்கும் போது அவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படும் சூழல் இருக்கிறது. அதேபோல மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளையும், கொரோனா விழிப்புணர்வு  செய்திகளையும் மக்களுக்கு ஊடகத்துறையினர் வழங்கி  வருகின்றனர். கொரோனாவினால் ஏற்பட்டுள்ள பாதிப்பை மக்களுக்கு சொல்வதில் தொலைக்காட்சிகளும், செய்திதாள்களும் மிக மிக முக்கியமானவை.  கொரோனா வைரஸ் தாக்கம் உலக நாடுகளிலிருந்து உள்ளூர் வரை உள்ள அனைத்தையும் ஊடகவியலாளர்கள் மக்களுக்கு தெரியப்படுத்தி மிகுந்த எச்சரிக்கையும், விழிப்புணர்வை ஏற்படுத்தி  வருகின்றனர்.  ஊடகத்துறையில் வேலை செய்பவர்கள் தினந்தோறும் செய்திகளை சேகரிக்க  செல்லும் போது எதிர்பாராத விதமாக கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும்  தூய்மை பணியாளர்களுக்கு மத்திய நிதியமைச்சர் அவர்கள் காப்பீட்டுத் தொகை அறிவித்தது போல  கொரோனா தடுப்பு பணியில் பங்காற்றும் காவல்துறை மற்றும் ஊடகத்துறையில் பணியாற்றுபவர்களுக்கும் அறிவிக்க முன்வர வேண்டும்.

கரோனாவை எதிர்த்து ஒட்டுமொத்த இந்தியாவே அரசுக்குச் சார்பாகக் குரல் கொடுக்கும் ஒரு காலகட்டத்தில் அரசு தொலைக்காட்சியில் இராமாயண ஒளிபரப்பா? - கி.வீரமணி

கரோனாவை எதிர்த்து ஒட்டுமொத்த இந்தியாவே அரசுக்குச் சார்பாகக் குரல் கொடுக்கும் ஒரு காலகட்டத்தில் அரசு தொலைக்காட்சியில் இராமாயண ஒளிபரப்பா?

மத்திய அரசின் இந்த மதவாதப் போக்கைக் கைவிடவேண்டும்! 
- கி.வீரமணி


நாடு முழுவதும் முழு அடைப்பு உள்ள நிலையில், பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று இன்றுமுதல் அரசு தொலைக்காட்சியில் (தூர்தர்ஷன்) இராமாயண தொடர் மீண்டும் ஒளிபரப்பப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

அரசுக்கு மக்கள் அளிக்கும் ஆதரவைக் குலைக்கலாமா?

கரோனாவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும், முற்றிலுமாக ஒழித்துக் கட்டவும் மத்திய - மாநில அரசுகள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு கட்சிகளுக்கும், மதங்களுக்கும் அப்பாற்பட்ட முறையில் பொதுமக்கள், தலைவர்கள் ஆதரவுக் கரம் நீட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில், மத்திய அரசு - அரசுத் தொலைக்காட்சியில் இராமாயணத்தை மீண்டும் ஒளிபரப்புவது தேவையற்ற ஒன்று. மத்திய அரசின் இந்து மதக் கண்ணோட்ட இத்தகைய நடவடிக்கைகள்மீது கடும் விமர்சனங்கள் வெடித்து எழும் ஒரு நிலையை ஏற்படுத்துவது நல்லதல்ல - உகந்ததல்ல!

இராமாயணம் என்பது ஆரியர் - திராவிடர் போராட்டமே!

இராமாயணம் என்பது ஆரியர் - திராவிடர் போராட்டத்தை மய்யப்படுத்துவது என்று வரலாற்று ஆசிரியர்கள் - இந்து மதத்தை அமெரிக்கா வரை சென்று பரப்புரை செய்த விவேகானந்தர் போன்றவர்கள் சொல்லியிருப்பது உலகம் அறிந்த ஒன்றே!

அரசு என்பது மதச்சார்பற்ற கொள்கையைக் கொண்டது. இந்த நிலையில், குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த ஒரு இதிகாசத்தை அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்புவது சட்டப்படியும் குற்றமேயாகும்.

பார்ப்பனீயத் தந்திரம்!

அதுவும் நாட்டு மக்கள் ஒருமித்த நிலையில் கரோனா அச்சத்தின் பிடியில் சிக்குண்டு வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் ஒரு சூழ்நிலையில், இதுதான் தக்க சந்தர்ப்பம் என்று கருதி அவர்களிடத்தில் ஓர் இந்து மத இதிகாசத்தைத் திணிப்பது என்பது - ஒரு வகைப் பார்ப்பனீயத் தந்திரமே!

சம்பூகவதையின் தத்துவம் என்ன?

இராமன் அவதாரம் என்பது வருண தருமத்தைக் காப்பாற்றுவதற்குத்தானே - தவம் செய்த சம்பூகன் சூத்திரன் என்ற ஒரே காரணத்துக்காக, இராமன் சூத்திர சம்பூகனை வாளால் வெட்டிக் கொன்றது எதைக் காட்டுகிறது?

சூத்திரன் தவம் செய்ய அருகதையுள்ளவன் அல்லன் என்று இராமன் கூறியதன் தாத்பரியம் என்ன?
இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், கிடந்தது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை என்பதுபோல, இராமாயணத்தை அவசர அவசரமாக ஒளிபரப்புவது - இந்துத்துவாவின் கொள்கைப் பரப்புதல் என்பதல்லாமல் வேறு என்ன?

சந்தேகப்பட்ட மனைவி சீதையை, இராமன் நெருப்பில் இறங்கச் சொன்னதும், கருவூற்ற சீதையை கர்ப்பிணியான நிலையில், காட்டுக்கு அனுப்பியதும், பெண்ணினம் ஏற்கக்கூடிய பாலின நீதியா?

இவற்றை அரசு தொலைக்காட்சிகளிலே நியாயப்படுத்தி வெளியிடலாமா?
ஆர்.எஸ்.எஸ். - பி.ஜே.பி. அஜெண்டா!

ஒரு பக்கத்தில் இராமன் கோவில் கட்டும் பணி தீவிரம் - இன்னொரு பக்கத்தில் அரசு தொலைக்காட்சியில் இராமாயண ஒளிரப்பு என்றால்,  இது ஆர்.எஸ்.எஸ். - பி.ஜே.பி. அஜெண்டாதானே!

இதனை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யவேண்டுமா? களம் காண வேண்டுமா? மதச்சார்பற்ற சக்திகள் ஒன்று திரண்டு உரத்தக் குரல் கொடுக்க வேண்டுமா?

எல்லோரும் ஒன்றிணைந்து கரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நிலையில், அதனைச் சிதற அடிக்கும் வகையில், மக்கள் வேறு பக்கம் நின்று அரசை எதிர்க்கும் நிலையை உருவாக்குவது  மத்திய அரசுக்கு நல்லதல்ல! இதற்கான முழு பொறுப்பை மத்திய பா.ஜ.க. அரசே ஏற்கவேண்டி வரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தூர்தர்ஷனில் இராமாயண ஒளிபரப்புதல் என்ற முடிவை உடனே மத்திய பி.ஜே.பி. அரசு கைவிடவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
இராமாயண ஒளிபரப்பைக் கைவிடவேண்டும்!
ஒன்றுபட்ட மக்களின் ஒற்றுமைச் சிந்தனையை வேறுபக்கம் திருப்பும் ஒரு விஷமத்தைச் செய்யவேண்டாம் என்பது எங்களின் பொறுப்பான வேண்டுகோளாகும்!

அச்சமூட்டும் கொரோனா வைரஸ் பரவல்: அலட்சியம் வேண்டாம், அவசரம் தேவை! -DR. அன்புமணி ராமதாஸ்

அச்சமூட்டும் கொரோனா வைரஸ் பரவல்: 
அலட்சியம் வேண்டாம், அவசரம் தேவை! -DR. அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும், அவற்றைத் தாண்டி, கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகளில் பல ஓட்டைகள் இருப்பதாக மத்திய அரசே எச்சரித்திருப்பதும்,  அதை உறுதி செய்யும் வகையில், வெளிநாடுகளுக்கோ, வெளி மாநிலங்களுக்கோ சுற்றுப்பயணம் மேற்கொள்ளாதவர்களுக்கும் கொரோனா வைரஸ் நோய் பரவியிருப்பதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 9 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் எவருமே வெளிநாடுகளுக்கோ, வெளி மாநிலங்களுக்கோ சென்று திரும்பியவர்கள் அல்ல.  அவர்களில் இருவர் மதுரையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தவரின் குடும்பத்தினர் ஆவர். மேலும் இருவர் ஈரோட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆவர். சென்னையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த ஒருவர், சேலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இந்தோனேஷியாவைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பில் இருந்த ஒருவர் என 6 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்றியதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன.

ஆனால், சென்னையிலிருந்து அரியலூர் சென்ற 25 வயது பெண்மணி, சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த 39 வயது இளைஞர், 73 வயது முதியவர் ஆகிய 3 பேருக்கு கொரோனா தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பது இதுவரை தெரியவில்லை. இவர்கள் எங்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை.  ஏற்கனவே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுடன் இவர்களுக்கு தொடர்பு இல்லை. கொரோனா பரவலின் முதல் நிலை, இரண்டாம் நிலை ஆகியவற்றுக்கான எந்த வரையரைக்குள்ளும் வராத மூவருக்கு ஒரே நாளில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருப்பதை எளிதில் கடந்து செல்ல முடியவில்லை.  கொரோனா பரவலின் மூன்றாம் நிலைக்கு தமிழகம் சென்று விட்டதோ என்ற ஐயத்தை இது ஏற்படுத்துகிறது.

இந்த ஐயத்தை, தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய அமைச்சரவைச் செயலாளர் ராஜிவ் கௌபா எழுதியுள்ள கடிதம் உறுதி செய்கிறது. ‘‘இந்தியாவில் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக விமான நிலையங்களில் பயணிகளுக்கு சோதனை தொடங்கப்பட்ட ஜனவரி 18-ஆம் தேதியிலிருந்து விமான சேவைகள் நிறுத்தப்பட்ட மார்ச் 23-ஆம் தேதி வரை இந்தியாவுக்கு வந்த 15 லட்சம் பேரில் பெரும்பான்மையினருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்படவில்லை; இது இந்தியாவின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிடும்’’ என்று கூறியிருக்கிறார். இதுவரை சோதனைக்கு உட்படுத்தப்படாதவர்களின் மூலம் மற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவக்கூடும் என்பதால் அவர்களை அடையாளம் கண்டு கண்காணிக்கும்படியும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இத்தகைய சூழலில் இந்தியாவில் சமூகப் பரவல் நிகழ்வதற்கு அனைத்து வாய்ப்புகளும் உள்ளன.  அதைத் தடுக்க இந்தியாவில் அறிவிக்கப்பட்டுள்ள 21 நாள் ஊரடங்கு ஆணையை முழுமையாக கடைபிடிப்பது தான் ஒரே தீர்வு ஆகும்.  பெரும்பான்மையான மக்கள் நாட்டையும் காக்க வேண்டும், நம்மையும்  காக்க வேண்டும் என்ற உணர்வுடன் ஊரடங்கு ஆணையை செம்மையாக கடைபிடித்து வருகின்றனர். ஆனால், போதிய விழிப்புணர்வு இல்லாததாலோ, அலட்சியம் காரணமாகவோ பலர் ஊரடங்கு ஆணையை மீறி, சாலைகளில் நடமாடுவதும், சமூக இடைவெளியை கடைபிடிக்க மறுப்பதும் மிகுந்த கவலையளிக்கிறது. இதன் மூலம் அவர்கள் தங்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றனர். இந்தப் போக்கை சம்பந்தப்பட்டவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்.

சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரசால் பாதிக்கப்படும் நாடாக தென்கொரியா தான் இருக்கும் என்று ஒட்டுமொத்த உலகமும் கணித்தது. ஆனால், மிகச் சிறப்பாக கட்டமைக்கப்பட்ட சமூக இடைவெளி நடைமுறை காரணமாக கொரோனா வைரஸ் பாதிப்பை 9332 பேருடனும், 132 உயிரிழப்புகளுடனும் கட்டுப்படுத்திய தென்கொரியா,  இயல்பு நிலையை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கிறது. அதேநேரத்தில் கொரோனா ஆபத்தை மிக எளிதாக முறியடித்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்காவும், இத்தாலியும் முறையே உலகிலேயே அதிக பாதிப்பு, அதிக உயிரிழப்பு என்ற ஆபத்தான நிலையில் உள்ளன. இதற்கு காரணம் சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்காதது தான். இந்தியா தென்கொரியாவாக மாற வேண்டுமா அல்லது அமெரிக்கா, இத்தாலியாக மாற வேண்டுமா? என்பது மக்களின் கைகளில் தான் உள்ளது. ஆகவே, மக்கள் ஊரடங்கை முழுமையாக மதித்து நம்மையும், நாட்டையும் காக்க வேண்டும்.

அதேநேரத்தில் நாள் முழுவதும் திறக்க அனுமதிக்கப்பட்டிருந்த மளிகை மற்றும் காய்கறிக் கடைகள் பிற்பகல் 2.30 மணி வரை தான் திறக்கப்பட வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பது நல்ல நடவடிக்கை ஆகும். தமிழகத்தின் பல நகரங்களில் மளிகை மற்றும் காய்கறிகளை தொலைபேசி மூலம் அவர்களுக்கு பிடித்த கடைகளில் ஆர்டர் செய்தால், அவற்றை தொண்டு நிறுவனங்கள் மூலம் வீடுகளுக்கே கொண்டு வந்து வழங்க வகை செய்யப்பட்டிருக்கிறது. அந்த முறையை தமிழகம் முழுவதும் நீட்டிக்க வேண்டும். அதேபோல், அரசு அறிவித்துள்ள நிவாரண உதவிகளை மக்களின் வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்க வேண்டும். இதன் மூலம் தமிழகத்தில் ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப் படுவதையும், மக்கள் ஒருவர் கூட வீடுகளுக்கு வெளியில் வராமல் இருப்பதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

வெள்ளி, 27 மார்ச், 2020

கடந்த 10 ஆண்டுகளாக செலுத்தப்பட்ட வருமானவரியில் 25 சதவீதத்தை வரி செலுத்தியவர்களுக்கு திருப்பி தர வேண்டும். - E.r.ஈஸ்வரன்

கடந்த 10 ஆண்டுகளாக செலுத்தப்பட்ட வருமானவரியில் 25 சதவீதத்தை வரி செலுத்தியவர்களுக்கு திருப்பி தர வேண்டும். - E.r.ஈஸ்வரன்

இன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது.  ஆனால் இந்த அறிவிப்பு மட்டுமே போதாது. இந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்து இருக்கிறது. பிரதமர் அவர்கள் கூட 21 ஆண்டுகள் இந்தியா பின்தங்கி போய்விடும்  என்று எச்சரித்திருந்தார். இன்றைய சூழலில் 21 ஆண்டுகள் இல்லையென்றாலும்  குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாவது இந்தியா பின்தங்கி போகும் நிலை தான் இருக்கிறது.  கொரோனா வைரஸ்க்கு முன்பாகவே இந்தியா பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து கொண்டிருந்ததை நாம் அறிவோம். இந்தியா  முழுவதும் பல தொழில்கள் ஏற்கனவே போதிய வருமானம் இல்லாமல் முடங்கி போய்விட்டது. இப்போது கொரோனா நோய் தாக்கத்தினால் மூடப்பட்ட பல தொழிற்சாலைகள் நிலைமை சரியான பிறகு மீண்டும் திறக்கப்படுமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. ஏனென்றால் பல நெருக்கடிகளை தாண்டி சிறிய இலாபத்துடன் தொழில் செய்து வந்தவர்களுக்கு தொழிலை தொடர முடியாத சூழலிலே நிலவுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக செலுத்திய வருமானவரியில் 25 சதவீத வரியை கார்பரேட் நிறுவனங்களை விடுத்து மற்ற வருமானவரி செலுத்தியவர்களுக்கு திருப்பி தரும் போது பண புழக்கம் அதிகரிக்கும். திருப்பி தரப்படும் வரி பணத்தின் மூலம் தற்போது மூடப்பட்ட தொழிற்சாலைகள் அனைத்தும் பிறகு தொடர்ந்து நடக்கும். தனிநபர்கள் கட்டிய வருமானவரியை திருப்பி தரப்படும் போது எல்லோர் கையிலும் பணம் இருக்கும். இதன் மூலமாக தான் முடங்கிய பொருளாதாரத்தை முடுக்கிவிட முடியும். இந்த வாய்ப்பை மத்திய, மாநில அரசுகள் உருவாக்கி தர முன்வர வேண்டும்.

கரூர் நாடாளுமன்ற தொகுதி சகோதர ,சகோதரிகளுக்கு ஒரு அன்பு வேண்டுகோள். - செ.ஜோதிமணி

பேரன்பிற்கும்,பெருமதிப்பிற்கும் உரிய  கரூர் நாடாளுமன்ற தொகுதி சகோதர ,சகோதரிகளுக்கு ஒரு  அன்பு வேண்டுகோள்.

இந்தியா  இன்னும் கொரொனா தொற்று பிரச்சனையில் ஆபத்தான கட்டத்தை தாண்டவில்லை. இந்த நெருக்கடியான சூழலில்  வீட்டிற்குள் இருப்பதே நமக்கும்,நாட்டிற்கும் நல்லது. 

மருத்துவ,சுகாதாரத் துறையினர் உயிரைப் பணயம்வைத்து உழைக்கிறார்கள். மற்ற பணிகளோடு மக்களுக்கு வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என்று புரிய வைப்பதே பெரும் வேலையாக உள்ளது. நோய் தொற்று ஏற்பட்டு மக்கள் சிரமப்படுவார்களே என்று தாயுள்ளத்தோடு கவலைப்படுகிறார்கள். நான் அவர்களோடு பேசும் போது மக்களை  வீட்டிற்குள் இருக்கச் சொல்லி வலியுறுத்துங்கள் என்று தினமும்  வேண்டுகோள் வைக்கிறார்கள். 

அவர்கள் கவலை நியாயமானது. நீங்கள் அனைவரும் எனது குடும்பத்தினர். நீங்கள் பத்திரமாக இருக்கவேண்டும் என்று மனது கவலை கொள்கிறது.  தயவுசெய்து வீட்டிற்குள் இருங்கள். அரசுக்கு ஒத்துழையுங்கள். 

ஏழை,எளிய மக்களின் வாழ்வாதாரப்  பிரச்சினைகளை நாங்கள் தொடர்ந்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம். தொகுதியில் இருந்து வருகிற பிரச்சினைகளை தொடர்ந்து அரசின்,அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்கிறோம். 

வீட்டிலிருப்பதன் முக்கியதுவத்தை  வலியுறுத்தவே நான் வீட்டிலிருக்கும் புகைப்படத்தை இரு தினங்களுக்கு முன்பு  வெளியிட்டேன். 

ஆகவே அவசியம் வீட்டிற்குள்ளேயே இருங்கள் என்று உங்கள் மீதுள்ள அளவற்ற அன்பு காரணமாக, உங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக அல்ல உங்கள் மகளாக,சகோதரியாக வலியுறுத்திக்  கேட்டுக்கொள்கிறேன். 

நாம் அரசுக்கு ஒத்துழைத்தால் இந்த கடினமான காலகட்டத்தை நாம் எவ்வித  ஆபத்துமில்லாமல் கடந்துவிட  முடியும் 

அதுவரை.

வீட்டிற்குள் இருப்போம். நம்மையும் காப்போம் நாட்டையும் காப்போம். 

மாதக் கடன் தவணை ஒத்திவைப்புக்கு வரவேற்பு: நிதி நெருக்கடி குறையும்! - Dr.அன்புமணி ராமதாஸ்

மாதக் கடன் தவணை ஒத்திவைப்புக்கு 
வரவேற்பு: நிதி நெருக்கடி குறையும்! - Dr. அன்புமணி ராமதாஸ்

கொரோனா வைரஸ் நோய்ப் பரவல் அச்சம் காரணமாக அனைத்து வகை கடன்களுக்கான மாதாந்திர  தவணையை 3 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுனர் சக்திகாந்த தாஸ் அறிவித்திருக்கிறார். ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது ஆகும்.

‘‘கொரோனா பரவலைத் தடுக்க போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாலும், பொதுமக்கள் அச்சத்தின் காரணமாக பயணத்தை தவிர்த்து விட்டதாலும் தானி, மகிழுந்து உள்ளிட்ட வாடகை ஊர்திகளின் இயக்கம் முழுமையாக முடங்கி விட்டன. மற்ற தொழில்களும் பாதிக்கப்பட்டிருப்பதால், அவற்றை வாழ்வாதாரமாகக் கொண்ட பலர் அன்றாட செலவுகளுக்கே பணமின்றி தவித்து வருகின்றனர். ஆகவே அனைத்து வகை கடன்களுக்கான மாதாந்திர கடன் தவணைகளையும் 6 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்’’ என்று கடந்த 10 நாட்களாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். பா.ம.க.வின் கோரிக்கையை ஏற்றும், சூழலை புரிந்து கொண்டும் அனைத்து வங்கிக் கடன்களையும் அடுத்த மூன்று மாதங்களுக்கு ரிசர்வ் வங்கி ஒத்திவைத்துள்ளது. இது பா.ம.க.வுக்கு கிடைத்த வெற்றியாகும்.

கடன் தவணை ஒத்திவைப்பு குறித்த ரிசர்வ் வங்கி ஆளுனரின் அறிவிப்பு மிகவும் தெளிவாக உள்ளது. பொதுத்துறை, தனியார் துறை சார்ந்த அனைத்து வணிக வங்கிகள், மண்டல மற்றும் ஊரக வங்கிகள்,  வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள், சிறு நிதி வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வகையான வங்கிகளில் பெறப்பட்ட, அனைத்து வகையான கடன் தவணைகளும் அடுத்த 3 மாதங்களுக்கு ஒத்திவைக்கப் படுகின்றன. 3 மாத காலம் முடிவடைந்தவுடன் கடன் தவணை மீண்டும் தொடங்கும். அப்போது அந்த மாதத்திற்குரிய தவணையை மட்டும் செலுத்தினால் போதுமானது. ஒத்திவைக்கப்பட்ட 3 மாதங்களுக்கான தவணையை செலுத்தத் தேவையில்லை. இதற்கு வசதியாக கடன் தவணைக் காலம் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி ஆளுனர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி ஒத்திவைக்கப்பட்ட 3 மாத கடன் தவணைக்காக வட்டி வசூலிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, 3 மாதங்களுக்குப் பிறகு, 3 தவணைகளையும் மொத்தமாக கட்ட வேண்டியிருக்குமோ? இதற்காக வட்டி வசூலிக்கப்படுமோ? என்று பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. அதுமட்டுமின்றி,   3 மாதங்களுக்கு கடன் தவணை செலுத்தாததற்காக, அவர்களின் கடன் பெறும் மதிப்பு (Credit Score) குறைக்கப்படாது என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்திருப்பது கூடுதலாக வரவேற்கப்பட வேண்டியதாகும். அதேநேரத்தில் கடன் அட்டைக்கான நிலுவைத் தொகையை காலம் சார்ந்த கடனாக கருத முடியாது என்பதால், அவற்றுக்கு இந்த சலுகை பொருந்தாது என்றும் சக்திகாந்த தாஸ் தெரிவித்திருக்கிறார்.  கடன் அட்டை மூலம் குடும்பத்துக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை ஏராளாமானோர் வாங்கி வருகின்றனர் என்பதாலும், அவர்களிடம் நிலுவைத்தொகையை உடனடியாக செலுத்த பணம் இல்லை என்பதாலும் அந்தக் கடனையும் 3 மாதங்களுக்கு ஒத்திவைப்பது தான் பொருத்தமாக இருக்கும்.

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடனுக்கான வட்டியும், ரிசர்வ் வங்கியில் வங்கிகள் வைத்துள்ள பணத்திற்கான வட்டியும் 0.75 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது. இதனால், வாகனக்கடன், வீட்டுக் கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறையும். ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைகளால் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் எதிர்கொண்டு வரும் நிதி நெருக்கடி கணிசமாக குறையும். அதேநேரத்தில் வங்கிகளில் வாடிக்கையாளர்கள் செய்துள்ள வைப்பீடுகளுக்கு வட்டியை குறைக்க  கூடாது.

தமிழ்நாட்டில் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படவிருக்கும் நிலையில், பல பள்ளிகள் அடுத்த மாதம் முதல் கல்விக்கட்டணங்களை செலுத்த வேண்டும் என்று பெற்றோருக்கு தகவல் அனுப்பியுள்ளன.  கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ள பெற்றோரால் உடனடியாக கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாது. எனவே, கல்விக்கட்டணம் செலுத்த 3 மாத அவகாசம் வழங்கும்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பாடத்திட்ட பள்ளிகளின் நிர்வாகங்களுக்கும் தமிழக அரசு ஆணையிட வேண்டும்.

"அதிமுக அரசு அறிவித்துள்ள ரூ.3,280 கோடி மதிப்புள்ள நிவாரண அறிவிப்பில் உள்ள சில குளறுபடிகளை நீக்க வேண்டும்" - மு.க.ஸ்டாலின்

"மாநிலங்கள் கோரும் நிதியை வழங்குவதில் மத்திய அரசு தாராள மனப்பான்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்"

"அதிமுக அரசு அறிவித்துள்ள ரூ.3,280 கோடி மதிப்புள்ள நிவாரண அறிவிப்பில் உள்ள சில குளறுபடிகளை நீக்க வேண்டும்" - மு.க.ஸ்டாலின்.

கொரோனா தொற்று நோய் பரவிடாமல் தடுத்திடும் நோக்கில்  பிறப்பிக்கப்பட்டிருக்கும் 21 நாள் ஊரடங்குப் பிரகடனத்தைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள 1.70 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான; நிவாரண உதவி திட்டத்தையும், ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள வங்கிக் கடன் வசூலைத் தள்ளி வைக்கும் திட்டத்தையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்கிறேன்.

வருமானம் மற்றும் பொருளாதார பேரிழப்புகளைச் சமாளிக்க இந்த நடவடிக்கைகள் ஓரளவிற்கு உதவும் என்றாலும், மாநிலங்களுக்கு 'கொரோனா நிதி' வழங்கி - கூட்டாட்சித் தத்துவத்தின் உண்மையான நோக்கத்தை வெற்றி பெற வைப்பார் மத்திய நிதியமைச்சர் என்று எதிர்பார்த்தேன்.

கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் நிவாரண உதவிகளுக்காகத் தமிழக அரசு கோரியிருக்கும் 4000 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கும் என்ற நம்பிக்கையுடன், அந்தக் கோரிக்கையை பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான்  வலியுறுத்துகிறேன். கொரோனாவைத் தடுப்பது அனைத்து மாநிலங்களும் - மத்திய அரசுடன் கைகோர்த்து நின்று ஒன்றுபட்டு எடுக்க வேண்டிய மிக முக்கியமான நடவடிக்கை என்பது ஒருபுறமிருக்க - ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற வித்தியாசம் பாராமல் அனைவரும் ஓரணியில் நின்று இந்தப் 'பேரிடரை' எதிர்த்துப் போராட வேண்டிய நெருக்கடியில் இருக்கிறோம். ஆகவே மாநிலங்கள் கோரும் நிதியை வழங்குவதில் மத்திய அரசு தாராள மனப்பான்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தமிழகத்தைப் பொறுத்தமட்டில் பிரதான எதிர்க்கட்சி என்ற நிலையில், திராவிட முன்னேற்றக் கழகம் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டு வருகிறது. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்குவதற்காக எம்.பி., - எம்.எல்.ஏ.க்களின் ஒரு மாதச் சம்பளத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு முதலில்  அறிவித்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு, தொகுதி மேம்பாட்டு நிதியை வழங்கிட வேண்டும் என்று  தி.மு.க. எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுக்கு முதலில் உத்தரவிட்டது. தொகுதி மக்களிடம் சென்று முதலில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அந்த வகையில் அ.தி.மு.க. அரசு அறிவித்துள்ள 3,280 கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரண உதவிகளுக்கும் வரவேற்பு தெரிவிக்கின்ற நிலையில், அந்த அறிவிப்பில் உள்ள சில குளறுபடிகளை நீக்க வேண்டும்.

குறிப்பாக 110-வது விதியின் கீழ் மார்ச் 24-ம் தேதி சட்டமன்றத்தில் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில், “அனைத்து அரிசி குடும்ப அட்டைகளுக்கும் 1000 ரூபாய்” என்று கூறப்பட்டது. ஆனால் மார்ச் 25-ம் தேதி தொலைக்காட்சி உரையில் “அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் 1000 ரூபாய் நிதியுதவி” என்று முதலமைச்சர் கூறியிருக்கிறார். ஆகவே அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய்க்குப் பதில் 5000 ரூபாய் நிதியுதவி வழங்கிட வேண்டும் என்ற எனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

தனியார் வங்கிகள், சிறு நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவை மூன்று மாத காலத்திற்கு கடன் தவணைகள், அசல்களை வசூலிக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதைத் தமிழக அரசின் சார்பில் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கும் - கூட்டுறவுக் கடன்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.  மின் கட்டணம், குடிநீர்க் கட்டணம், சொத்து வரி, டிரைலர் லாரிக்கு கட்டப்படும் சாலை வரி உள்ளிட்டவற்றையும் மூன்று மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும்.

காவிரி டெல்டா பகுதியில் 30 - 40 நாட்களைக் கடந்த நெற்பயிர்கள்  பெரும் பாதிப்பு அடைந்திருக்கின்றன. அறுவடைக்குத் தயாரான கடலை பாதிக்கப்பட்டுள்ளது. உளுந்து தெளிக்க முடியாமல் தடைப்பட்டுள்ளது. விவசாயிகளின் பாதிப்பைப் போக்கிடும் வகையில் - தொகுப்பு நிவாரண அறிவிப்பு ஒன்றை முதலமைச்சர் திரு. பழனிசாமி உடனடியாக வெளியிட வேண்டும்.

கொரோனா நோய்த் தடுப்பிற்கான ஊரடங்கை 99 சதவீதத்திற்கு மேலான மக்கள் அனைவரும் மனமுவந்து ஏற்றுக்கொண்டு செயல்படுத்தி வருகிறார்கள். தமிழக மக்களின் உறுதிப்பாட்டையும் ஒற்றுமை உணர்வையும் எண்ணி உள்ளபடியே நான் பெருமிதம் கொள்கிறேன். அதே நேரத்தில் ஒரு சிலர் வெளியே வருவதையும் தவிர்க்க வேண்டும். அதையும் மீறி  அவசர - அவசியத் தேவைகளுக்காக வருவோரை அறிவுரை கூறி அனுப்பி வைப்பதுதான் சாலச் சிறந்ததாக இருக்க முடியும். கொரோனா தடுப்பின் ஆர்வத்தின் காரணமாக ஒரு சில இடங்களில் காவல்துறையில் உள்ள சிலர் வெளியே வருவோரின் வாகனங்களை அடித்து நொறுக்குவதும், கண்ணை மூடிக் கொண்டு தடியடித் தாக்குதல் நடத்துவதும், வாகனங்களின் காற்றைப் பிடுங்கிவிட்டு   நெருக்கடி ஏற்படுத்துவதும் நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும். அப்படி வெளியே வரும் ஒரு சிலரும் அவசியத் தேவைகளுக்காக வெளியே வருகிறார்களே தவிர, ஊரடங்கை மீற வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் அல்ல என்பதை காவல்துறையில் உள்ள அந்த 'ஒரு சில' நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கொரோனா என்பது கொடிய நோய் என்பதால், சமூகத் தொற்றை அறவே தடுக்கும் பொருட்டு, மத்திய - மாநில அரசுகள் வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகளை மக்கள் தவறாமல் கடைப்பிடித்து - ஒரு சிலர் வெளியில் செல்வதையும் தவிர்த்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

கரோனா வைரஸ் சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனைகளை தமிழக அரசு உடனடியாக அமைப்பது மிக அவசியம்! - கி.வீரமணி

கரோனா வைரசைத் தடுக்க முற்றிலும் தேவை அறிவியல் அணுகுமுறையே!
கரோனா வைரஸ் சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனைகளை தமிழக அரசு உடனடியாக அமைப்பது மிக அவசியம்! - கி.வீரமணி

கரோனா வைரஸ் (Covid-19) என்ற தொற்று நோய் உலகமெங்கும் உள்ள நாடுகளில் கொள்ளை நோயாக மாறி உயிர்ப் பலிகள் வாங்கும் நிலையில், நம் நாட்டிலும் அதனைத் தடுப்பதில் ஒவ்வொரு தனி மனிதனின் ஒத்துழைப்பும், சுயக் கட்டுப்பாடும் மிகவும் அவசியம் என்பதை நம் மக்கள் உணர்ந்து போதிய ஒத்துழைப்பை அரசுகளுக்கும், காவல்துறைக்கும் தர வேண்டியது இன்றியமையாத ஒன்று.

மூடநம்பிக்கைகளை பரப்பும் சுரண்டல்
கூட்டத்தை அரசு தடுக்க வேண்டும்

இந்த நேரத்தில் பலவித மூடநம்பிக்கைகளையும், மவுடீகங்களையும் மதத்தின் பெயராலும், சடங்குகள், யாகங்கள் என்ற பெயராலும், மக்களின் அறியாமைக்கு ஊட்டச்சத்து கொடுத்து தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்ளும் சுரண்டல் கூட்டத்தை அரசுகளேகூட தடுக்க வேண்டும். படித்தவர்கள் அறிவியலைத் துணைக் கொண்டால் தான் இதனைத் தடுக்க சரியான கோணத்தில் அணுக முடியும்.

சமூக இடைவெளி தேவை

அமெரிக்காவில்  அரிசோனா மாநில பல்கலைக் கழகத்தில் பி.எச்டி பட்டம் பெற்ற  ஆராய்ச்சியாளர்  பவித்திரா வெங்கட்ட கோபாலன் என்பவர், தனது ஆய்வு பற்றி அதிகம் சமூக ஊடகங்களில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்தவர், “தற்போது பரப்பப்படும் தவறான செய்திகளைக் கேட்டு அவற்றின் அபத்தம் குறித்துப் பேசியாக வேண்டும் என்ற கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளேன். எடுத்துக்காட்டாக, கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீள்வதற்கு பசு மாட்டு மூத்திரத்தைத் குடித்தால் போதும் என்பது போன்றவை ஏற்கக் கூடியதல்ல” என்று தெளிவுபடுத்தி “அந்த வைரசை அறிவியல் ரீதியாகத் தடுக்க மனித உடலின் சில செல்களில் உள்ள ACE2 என்ற Receptor முக்கியமானதாகும்.  அந்த வைரஸ்  தொடர்பு வளர்வதைத் தடுப்பதற்கு வகையாக வெகுவாக சமூகத்தள்ளி நின்று பழகுதல் (Social Distance), தனிப்பட்ட உடல் சுகாதாரம் கவனமுடன் பேணுதல், அத்துடன் நமது சுவாசக் கருவிகளைத் தூய்மையுடன் பராமரித்தல் என்பதை அரசுகள் வலியுறுத்திக் கூறுவது முக்கியமானதாகும்.”

“கரோனா வைரசிற்கு எதிரான தடுப்பு மருந்து (Antiviral Medicine) கண்டுபிடிக்கும் ஆய்வுகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த இடைக்காலத்தில் கவனம் மிகவம் தேவை” என்று சிறப்பாகக் கூறியுள்ளார்.

13 லட்சம் பேர் பாதிக்கப்பட வாய்ப்பு

“நமது மத்திய - மாநில அரசுகள், மே மாதத்துக்குள் இந்தியாவில் 13 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக சர்வதேச விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருப்பதை அலட்சியப்படுத்தக் கூடாது.”

“தற்போதைய நிலையில் இந்தியாவில் வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் குறைவு. பரவலான பரிசோதனைக் குறைவு காரணமாக சமூகப் பரவலை கவனிக்க முடியவில்லை. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் இந்தியாவில் மருத்துவமனைகள், சுகாதார மய்யங்களுக்கு வெளியே எத்தனைப் பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது என்று மதிப்பிட முடியவில்லை” என்று அவ்விஞ்ஞானிகள் தங்களது எச்சரிக்கையில் குறிப்பிட்டிருப்பதை உரிய முறையில்கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

எதிர்ப்பால் பதிவை நீக்கிய அமிதாப்பச்சன்
அத்துடன் மிகவும் பிரபலமான நடிகரான அமிதாப்பச்சன் அவரது சுட்டுரைப் (டுவிட்டர்)  பதிவில் “அமாவாசையில் கை தட்டினால் - அந்த சத்தத்தினால் கரோனா ஓடி விடும்” என்று பதிவிட்டு பலத்த கண்டனம் ஏற்பட்டவுடன் நீக்கியுள்ளார்.
அதுபோலவே பிரபல மலையாள நடிகர் மோகன்லால் தனது வலைத்தளப் பக்கத்தில் இதே கருத்தினை  - “அமாவாசையில் கை தட்டுவது ஒரு செயல்முறை. அந்த ஒலியானது மந்திரம் போல் மாறி பாக்டீரியாக்கள் - வைரஸ்களையும் அழிக்கும்” என்று தெரிவித்துள்ளது எவ்வளவு அபத்தம்? “அறியாமைதான் உலகின் மிகப் பெரிய நோய்” என்றார் இங்கர்சால். இவரைப் போன்றவர்கள் இதைப் பரப்பலாமா? அவர்மீது வழக்குப் பதிவு செய்துள்ளது மிகவும் சரியான நடவடிக்கையாகும்.

தனி சிறப்பு மருத்துவமனைகள் அமைப்பது அவசியம்

தமிழக அரசு - குறிப்பாக முதல்வரும், நல்வாழ்வுத் துறை அமைச்சரும் ஒடிசா மாநிலத்தில் அவசரமாக எழுப்பப்படும் 1000 படுக்கைகள் கொண்ட கரோனா வைரஸ் சிகிச்சைக்கான ஸ்பெஷாலிட்டி மருத் துவமனையினைப் போன்று உடனடியாக அமைப்பது மிக அவசியம். இப்போதுள்ள நிலைமை மே மாதம் வரை கூட நீடிக்கும் பேரபாயம் உள்ளதால், இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகளோடு இதுபோன்ற பல நிவாரண சிகிச்சைக்கான நடவடிக்கைகளை எடுப் பது, மருத்துவ மற்றும் தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் இவர்களின் பாதுகாப்பு  - கரோனா  தற்காப்புக்கான அத்துணை வழி முறைகளையும் தக்காரின் ஆலோசனைகளைப் பயன்படுத்திச் செய்ய வேண்டியது அவசர அவசியமானதாகும்.
அறிவியல் அணுகுமுறையே இப்போது முற்றிலும் தேவை!

கயிறுகளை அகற்றுங்கள்

கையில் கட்டியுள்ள கயிறுகள் மூலம் வைரஸ் கிருமிகள் தங்க ஏராளமான வாயப்புக்கள் உள்ளன என்று Microbiology ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். எனவே அதனை அகற்றுவதும் அவரவர் பாதுகாப்புக்கு நிச்சயம் உதவக் கூடும்.

இப்படிப் பலவும் செய்து - உரிய சிகிச்சைகளையும் நாம் முறையாக மேற்கொண்டால் கரோனா பாதிப்பிலிருந்து நம் மக்களைப் பாதுகாக்க முடியும்.

செயல்! செயல்!! செயல்!!! தேவை இந்த கால கட்டத்தில்!

கொரோனா கொடூரம்:மத்திய அரசின் நிவாரண அறிவிப்பு ஏமாற்றமளிக்கிறது! - தொல்.திருமாவளவன்

கொரோனா கொடூரம்:
மத்திய அரசின் நிவாரண அறிவிப்பு ஏமாற்றமளிக்கிறது!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
கொரோனா கொடூரத்தையொட்டி மைய அரசு அறிவித்துள்ள  தேசம் தழுவிய முழு அடைப்பின் காரணமாக பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்கு உதவும் பொருட்டு மத்திய நிதியமைச்சரால் வெளியிடப்பட்டுள்ள நிவாரண அறிவிப்புகள் ஏமாற்poறமளிக்கின்றன என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம். 
மேம்படுத்தப்பட்ட நிவாரணத் திட்டத்தை மத்திய அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

21 நாள் ஊரடங்கு உத்தரவால் பாதிப்புக்கு ஆளாகி இருக்கும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நிலமற்ற விவசாயக் கூலிகள் சிறுகுறு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் நிவாரணத் திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று எல்லோரும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், மத்திய அரசின் சார்பில் நிதியமைச்சர் நிவாரணத் திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கின்றார். 

குறிப்பாக, 'ஜன்தன்' கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மாதம் 500 ரூபாய் என மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும் என் று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த தொகை போதுமானது அல்ல. குறைந்தது மாதம் 2000 ரூபாயாவது அறிவிக்கவேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொள்கிறோம். 

100 நாள் வேலைத்திட்டத்தின் ஊதியம் நாள் ஒன்றுக்கு 20 ரூபாய் உயர்த்தப்படுவதாக அறிவிக்கபட்டிருக்கிறது.  இதனால் நிலமற்ற கிராமப்புற விவசாயத் தொழிலாளர்களுக்கு எந்தவொரு பயனும் இல்லை. அவர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை முன்பணமாக வழங்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறோம். 

விவசாயிகளுக்கு 2000 ரூபாய் என்பது புதிய அறிவிப்பு அல்ல. ஏற்கனவே 'பி எம் கிசான்'  திட்டத்தின் கீழ் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தொகை தான். மருத்துவர்களும் சுகாதாரத்துறை ஊழியர்களும் உயிர்காக்கும் கருவிகள் இல்லாமல் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான கருவிகளை உடனடியாக வழங்குவதில் இந்த அரசு தொடர்ந்து மெத்தனம் காட்டி வருவது வேதனை அளிக்கிறது. உயிரைக் காப்பாற்றுவதற்கு எதுவும் செய்ய மாட்டோம், இறந்துபோனால் இன்சூரன்ஸ் பணம் தருகிறோம் என்பதைப்போல மத்திய அரசின் இன்சூரன்ஸ் திட்ட அறிவிப்பு உள்ளது.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் திட்டம் என்பதும் கண்துடைப்பு தான். ஏற்கனவே பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகளுக்கு கடன் வழங்குவது இல்லை, கல்விக்கடன் பெறுவதும் அவ்வளவு எளிதாக இல்லை. இந்நிலையில், மகளிர் சுய உதவிக் குழுக்கள் கடன் வாங்கிக் கொள்ளலாம் என்பதும், வைப்பு நிதியை எடுத்துக்கொள்ளலாம் என்பதும் மக்களை முட்டாளாக்கும் நோக்கம் கொண்ட அறிவிப்புகளாகவே உள்ளன. 

ஒட்டுமொத்தத்தில் இந்த அறிவிப்பு பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவிதத்திலும் நிவாரணமாக அமையவில்லை. எனவே மேம்படுத்தப்பட்ட நிவாரணத் திட்டத்தை அரசு அறிவிக்கவேண்டும் என வலியுறுத்துகிறோம்.

இவண்:
தொல். திருமாவளவன்,
நிறுவனர்- தலைவர்,
விசிக.

மாதக்கடன் தவணை ஒத்திவைப்பை தாமதமின்றி அறிவிக்க வேண்டும்! - Dr.S.ராமதாஸ்


மாதக்கடன் தவணை ஒத்திவைப்பை 
தாமதமின்றி அறிவிக்க வேண்டும்! - Dr.S.ராமதாஸ்

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மருத்துவம் மற்றும் தூய்மை சார்ந்த பணிகளை மேற்கொண்டு வரும் மத்திய, மாநில அரசுகள், கொரோனா அச்சத்தால் அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏற்பட்ட பொருளாதாரம் மற்றும் வாழ்வாதார இழப்புகளை ஈடு செய்யவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மத்திய, மாநில அரசுகளின் இந்த நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை.

பேரழிவுகள் ஏற்படும் போது அதனால் ஏற்படும் வாழ்வியல் பாதிப்புகளை சரி செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு பொருளாதார இழப்பை ஈடு செய்வதற்கான நடவடிக்கைகளும் மிகவும் முக்கியம் ஆகும். இது தான் பேரிடர் மேலாண்மையின் அடிப்படையாகும். அந்த அடிப்படையில் தான் கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வாழ்வாதார உதவிகள், வரிச்சலுகைகள், வங்கிக் கடன் தவணை 6 மாதங்களுக்கு ஒத்திவைப்பு, அதற்கான வட்டித் தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்று கடந்த 19-ஆம் தேதி முதல் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். அதையேற்று மத்திய, மாநில அரசுகள் முதற்கட்டமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச அரிசி, பருப்பு, பல்வேறு வகைகளில் நிதியுதவி என ஏராளமான வாழ்வாதார உதவிகளை அறிவித்திருக்கின்றன. அவை அனைத்தும் பயனளிக்கக்கூடியவை.

தமிழக அரசு அடுத்தக்கட்டத்துக்கு சென்று, பொதுமக்கள் எவரும் கடந்த சில நாட்களாக எந்த வேலைக்கும் செல்லாததால் தனியார் வங்கிகள், நுண்நிதி நிறுவனங்கள், சுயஉதவிக் குழுக்கள் ஆகியவை வழங்கிய மாதாந்திர, வாராந்திர, தினசரி கடனுக்கான வட்டி மற்றும் அசல் வசூலை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. அதை மீறுவோர் மீது குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எச்சரித்துள்ளார்.

அதேபோல், பொதுத்துறை மற்றும் தனியார்துறை வங்கிகளில் பல்வேறு தரப்பினரும் பெற்ற பல்வேறு வகையான கடன்களுக்கான மாதத் தவணையை அடுத்த 6 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும். ஆனால்,  இந்த கோரிக்கை குறித்து மத்திய அரசு இதுவரை எதுவும் தெரிவிக்காதது அமைப்புசாராத் தொழிலாளர்கள் முதல் அமைப்பு சார்ந்த பணியாளர்கள் வரை அனைத்துத் தரப்பினரையும் கவலைக்கு ஆளாக்கியுள்ளது. தில்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களிடம் இது குறித்து கேட்ட போது, அத்தகைய கோரிக்கைகள் குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும், விரைவில் முடிவெடுக்கும் என்றும் தெரிவித்தார். அவரது பதில் நம்பிக்கையளிக்கிறது.

ஆனால், காலம் கரைந்து கொண்டிருக்கிறது. வாகனக் கடன், வீட்டுக்கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான மார்ச் மாதத் தவணையை ஏப்ரல் மாதம் 5&ஆம் தேதி முதல் வங்கிகள்  வசூலிக்கத் தொடங்கும். பெரும்பாலான வங்கிகள் மாதந்திர கடன் தவணையை, கடன்தாரர்களின் வங்கியிலிருந்து மின்னணு பணப்பரிமாற்றம் மூலமாகவே பெறுகின்றன என்பதால் அதற்கான ஏற்பாடுகள் ஏப்ரல் ஒன்றாம் தேதியே தொடங்கி விடும். அதற்கு இன்னும் 4 நாட்களே இருப்பதாலும், அவற்றிலும்  இரு நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதாலும் மாதாந்திர கடன் தவணை ஒத்திவைப்பு தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்; அது தான் முழுமையாக பயனளிக்கும்.

கொரோனா பரவலைத் தடுக்க போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாலும், பொதுமக்கள் அச்சத்தின் காரணமாக பயணத்தை தவிர்த்து விட்டதாலும் தானி, மகிழுந்து உள்ளிட்ட வாடகை ஊர்திகளின் இயக்கம் முழுமையாக முடங்கி விட்டன. மற்ற தொழில்களும் பாதிக்கப்பட்டிருப்பதால், அவற்றை வாழ்வாதாரமாகக் கொண்ட பலர் அன்றாட செலவுகளுக்கே பணமின்றி தவித்து வருகின்றனர். அதனால் அவர்களின் வங்கிக் கணக்கில் பணம் இல்லை. இத்தகைய சூழலில் மாதாந்திர கடன் தவணை வசூலுக்கான ஆணை, கடன் கொடுத்த வங்கியிடமிருந்து வாடிக்கையாளரின் வங்கிக்கு சென்று பணமில்லாமல் திரும்பி விட்டால் அதற்காக தனியாக அபராதம் விதிக்கப்படும். அதுமட்டுமின்றி கடன் தவணை செலுத்தத் தவறியதாகக் கூறி அவரது கடன் பெறும் மதிப்பு (Credit Score) குறைக்கப்படும். அவ்வாறு குறைந்தால் அது எதிர்காலத்தில் அவர் கடன் பெறுவதற்கான வாய்ப்புகளை பறித்து விடும்.

எந்த ஒரு உதவியும் காலத்தில் செய்யப்படுவது தான் முழுமையான பயனளிக்கும். எனவே, பல்வேறு வகை கடன்களுக்கான மாதத்தவணைகளை 6 மாதங்களுக்கு ஒத்தி வைப்பதுடன் அக்காலத்திற்கான வட்டியையும் ரத்து செய்வதற்கான அறிவிப்பை மத்திய அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் உடனடியாக வெளியிட வேண்டும். அதேபோல், காப்பீட்டு பிரிமியம், கடன் அட்டை தவணைகள் ஆகியவற்றையும் 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கும்படி வங்கிகள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அரசு ஆணையிட வேண்டும். 

வியாழன், 26 மார்ச், 2020

விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்யவும், நிலுவைத் தொகை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜி.கே.வாசன்


விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்யவும், மக்காச்சோளத்தை நியாயமான விலைக்கு கொள்முதல் செய்யவும், கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜி.கே.வாசன்

மத்திய மாநில அரசுகள் – தமிழகத்தில் கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் சிறு குறு தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் வங்கியில் வாங்கிய கடனுக்கான மாத தவணையை 6 மாத காலத்திற்கு தள்ளி வைக்கவும், விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்யவும், மக்காச்சோளத்தை நியாயமான விலைக்கு கொள்முதல் செய்யவும், கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

நம் தேசத்திலும் கொரோனா என்ற எதிர்பாராத கொடிய நோயால் அனைவருமே பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். குறிப்பாக சிறு குறு மற்றும் குடிசைத் தொழில், கட்டுமானத் தொழில், வேளாண்மைத் தொழில் போன்றவற்றில் ஈடுப்பட்டுள்ளவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவிலிருந்து மட்டுமல்ல பசியிலிருந்தும் பிணியிலிருந்தும் மக்களைக் காக்க வேண்டும் - எம்.எச்.ஜவாஹிருல்லா


கொரோனாவிலிருந்து மட்டுமல்ல பசியிலிருந்தும் பிணியிலிருந்தும் மக்களைக் காக்கத் தமிழக அரசு புதுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - எம்.எச்.ஜவாஹிருல்லா

கொரோனா நோய்க் கிருமி பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்கள் முழுமையான முடக்கத்தை மத்திய அரசு அறிவித்து அது நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. கொடிய நோயிலிருந்து மக்களைக் காப்பாற்ற இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மிகவும் தேவையானதே. எனவே தான் வழிப்பாட்டுத் தலங்கள் உட்பட அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கட்சி மற்றும் கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் இந்த முடக்கத்தை ஏற்றுக் கொண்டு இல்லங்களில் முடங்கியுள்ளனர். மருத்துவர்கள், காவல்துறையினர் மற்றும் அரசின் பல்வேறு துறையைச் சேர்ந்த ஊழியர்கள் முன்னெப்போதும் சந்தித்திராத இந்த நெருக்கடியான சூழலில் முழு அர்ப்பணிப்பதுடன் செயல்பட்டு வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நெஞ்சார்ந்த நன்றிகள், பாராட்டுகள், பிரார்த்தனைகள்.

மருத்துவ நெருக்கடி நிலையாக உள்ள இச்சூழலில் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு மக்களைக் கொரோனாவிலிருந்து மட்டுமல்ல முடக்கத்தின் காரணமாகப் பசியிலிருந்தும். பிணியிலிருந்தும் மக்களைக் காக்கப் புதுமையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

சிதம்பரம் தொகுதிக்கு ரூ1.27 கோடி ஒதுக்கீடு! மக்களவை உறுப்பினர் தொல். திருமாவளவன் அறிவிப்பு!


சிதம்பரம் தொகுதிக்கு ரூ1.27 கோடி ஒதுக்கீடு!
மக்களவை உறுப்பினர் தொல். திருமாவளவன் அறிவிப்பு! 

கொரோனா வைரஸின் கொடூரத்திலிருந்து நாட்டைக்காப்பாற்றும் முயற்சியில் நம் ஒவ்வொருக்கும் பொறுப்பு உள்ளது.

வீட்டிலேயே இருந்தால் அன்றாட செலவுகளுக்கான  பொருளாதாரத்துக்கு என்ன செய்வது? ஒரு மாதத்துக்குரிய அனைத்துத் தேவைகளையும் எப்படி ஒரேநேரத்தில் வாங்கி சேமித்து வைக்கமுடியும்?  உறவினர்களோடும் நண்பர்களோடும்  பழகாமல் எப்படி விலகி இருக்கமுடியும்? நம்மையெல்லாம்  அது அண்டாது? நாமென்ன வெளிநாட்டுக்கா போய்விட்டு வந்தோம்? நம் ஊரில் வெளிநாட்டுக்குப் போய்விட்டு வந்தவர் யாருமில்லை; எனவே நாம் ஏன் பயப்படவேண்டும்? என்றெல்லாம் எண்ணி அலட்சியமாக இருக்கக்கூடாது. இது எப்படி பரவுகிறது என்பதை ஊடகங்களில் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம் . எனவே அனைவரும் பாதுகாப்பாக இருப்போம். நமக்கும் பரவக்கூடாது; நம்மால் யாருக்கும்  பரவக்கூடாது என்கிற பொறுப்புணர்வு டன் இருப்போம். நோய்த் தொற்றிக்கொண்டதற்கான அறிகுறிகள் இருந்தால் உடனே அருகில் உள்ள மருத்துவமனைகளுக்குச் சென்று பரிசோதித்துக் கொள்ளவேண்டும். 

நாடே கரோனா பீதியில் உள்ளபோது இப்படி பார்ப்பனீயம் அதன் வேலையை செய்ய முனைந்துள்ளது. - கி.வீரமணி


உயர் ஜாதியினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு - கூடுதல் நிதி ஒதுக்கீடு! சமூகநீதிப் போராளிகள் ஓரணியில் நின்று வென்று தீர வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்! - கி.வீரமணி

'பிரதமர் மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ். -பா.ஜ.க. அரசின் உள்ளார்ந்த எண்ணம் இடஒதுக்கீட்டை அறவே ஒழித்து -& சமூகரீதியாகவும், கல்வி ரீதியிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி உரிமைகளைப் பறிப்பதுதானே! இதனை சமூகநீதிப் போராளிகள் ஓரணியாக நின்று முறியடித்து வென்று தீர வேண்டியது காலத்தின் கட்டாய மாகும்' என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள சமூகநீதி  அறிக்கை வருமாறு:

பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய ஜாதியினருக்கும் - குறிப்பாக பார்ப்பனர் போன்ற உயர் ஜாதியினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு என்பதற்கான இந்திய அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை சென்ற பொதுத் தேர்தல் - 2019க்கு முன்பே - இறுதிக் கட்டத்தில் "அவசரக் கோலம் - அள்ளித் தெளித்த கதையாக" விரிவான விவாதங்களுக்கு இடம் தராமல் நாடாளுமன்றத்தில் 103ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தமாக கொண்டு வந்து நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் உடனடியாகப் பெற்று, அதை அமல்படுத்தி, பல்கலைக் கழகங்களுக்கும், மற்றவைகளுக்கும் 10 சதவிகித இடஒதுக்கீடுபற்றிய தனிச் சுற்றறிக்கை, தனி கூடுதல் நிதி ஒதுக்கீடு என எல்லாவற்றினையும் 'ராக்கெட்' வேகத்தில் பிரதமர் மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. அரசு செய்தது!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 500 தாண்டிக் கொண்டிருக்கிறது. - கே.எஸ்.அழகிரி


கொரோனா கிருமி பரவல் சங்கிலியை உடைப்பதன் மூலம், இந்த நோயை எதிர்கொண்டு நம்மால் வெற்றிபெற முடியும். இதற்கு மக்கள் ஒத்துழைப்பு அவசியம். - திரு. கே.எஸ்.அழகிரி  அறிக்கை.

உலகத்தின்  பல நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதைத் தடுத்து நிறுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பிரதமர் மோடி அவர்கள் அறிவித்துள்ளார். ஆனால், தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஐநூறைத் தாண்டிக் கொண்டிருக்கிறது. 

பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை  திடீரென அதிகரித்தால், இதனை எதிர்கொள்ளும் அளவுக்கு மருத்துவமனைகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இருக்கிறதா என்பது பெரிய கேள்விக்குறியாகியுள்ளது. 

2019-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய சுகாதார சுற்றறிக்கையின்படி, இந்தியாவில் உள்ள மொத்த மருத்துவமனைகளில்  படுக்கைகளின் எண்ணிக்கை 7 லட்சத்து 13 ஆயிரத்து 986 தான். இதன் தேசிய சராசரி ஆயிரம் மக்களுக்கு 0.55 படுக்கைகளாகும். 12 மாநிலங்களில் தேசிய சராசரியை விட குறைவான படுக்கை வசதிகள்தான் உள்ளன. அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் வெண்டிலேட்டர் வசதியுடன் 55 ஆயிரம் படுக்கை வசதிகள்தான் உள்ளன. இதைக் கொண்டு தற்போதைய அசாதாரண சூழலை எதிர்கொள்ள முடியாது.  தமிழகத்தில் ஆயிரம் பேருக்கு ஒரு படுக்கை வசதிதான் உள்ளது.  

இதுவரை வந்த அரசாங்கத்தினுடைய எந்த அறிவிப்பும் சிறு, குறு நிறுவனங்களை காப்பாற்றுவதாக இல்லை - E.R.ஈஸ்வரன்


சிறு, குறு தொழில் நிறுவனங்களை சார்ந்திருப்பவர்களுக்கு மீண்டும் தொழிலை துவக்க முடியுமென்ற நம்பிக்கையை உதவி அறிவிப்புகள் மூலம் மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும். - E.R.ஈஸ்வரன்

தொடர்ந்த ஊரடங்கு உத்தரவின் மூலமாக அதிகப்படியாக பாதிக்கப்பட்டிருப்பது சிறு, குறு தொழிலை நடத்துபவர்களும், அதை சார்ந்திருக்கின்ற தொழிலாளர்களும் தான். பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்கின்ற சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ஊரடங்கு காலம் முடிந்த பின்னால் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்கின்ற சூழல் உருவாகி இருக்கின்றது. சிறு, குறு உற்பத்தி தொழில் நிறுவனங்களை பொறுத்தவரை அன்றாடம் காய்ச்சிகளை போல தான். அந்தந்த மாதம் வருகின்ற வருமானத்தை வைத்து தான் தொழிலை நடத்தி கொண்டிருக்கிறார்கள். மாதத்தில் முதல் மூன்று வாரங்களில் வருகின்ற வருமானத்தை வைத்து உற்பத்திக்கான கச்சா பொருள் விலையை கொடுப்பதும், கடைசி வாரத்தில் வருகின்ற வருமானத்தை வைத்து தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதும் தொடர் நடவடிக்கையாக இருக்கும்.  ஊரடங்கு உத்தரவு முடிந்து தொழில் நிறுவனங்களை தொடங்க வேண்டுமென்று சொன்னால் அரசாங்கத்தின் நிதியுதவி இல்லாமல் தொடங்க முடியாது. 

அரசாங்கம் தனது கடமையைச் செய்வதற்குத் தடங்கலாக, பொதுமக்கள் தெருக்களுக்கு வரக்கூடாது. - வைகோ


அரசாங்கம் தனது கடமையைச் செய்வதற்குத் தடங்கலாக, பொதுமக்கள் தெருக்களுக்கு வரக்கூடாது. - வைகோ வேண்டுகோள்

நான்கு இலட்சம் மக்களைப் பாதித்து, 20000 உயிர்களைக் கொள்ளை கொண்டு, ஒட்டுமொத்த உலகத்தையும் அச்சத்தில் உறைய வைத்து இருக்கின்ற, கொவிட் 19 கொரோனா நுண்கிருமித் தொற்று, அறிவியலில் சாதனைகள் படைத்த நாடுகளையே, எப்படி இந்த நோயை எதிர்கொள்வது எனத் தடுமாறித் திணற வைத்து விட்டது. 130 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவில், ஏப்ரல் - மே மாதங்களில் 13 கோடி முதல் 25 கோடிப் பேரைத் தாக்கும் என மருத்துவர்கள் எச்சரித்து உள்ளனர்.

தமிழ்நாட்டில், குறைந்தது 60000 பேர் முதல் ஆகக்கூடுதலாக 1 இலட்சம் பேர் தீவிர நோயாளிகள் ஆகும் ஆபத்து இருக்கின்றது என்பதையும் தெரிவித்து உள்ளனர்.

அறுவடை செய்ய முடியாமல் வீணாகும் பயிர்கள்: இழப்பீடு வழங்க வேண்டும்! - DR.S.ராமதாஸ்


அறுவடை செய்ய முடியாமல் வீணாகும்
பயிர்கள்: இழப்பீடு வழங்க வேண்டும்! - DR.S.ராமதாஸ்

உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் நோய், தமிழ்நாட்டை மருத்துவ அடிப்படையில் மட்டுமின்றி, பொருளாதார அடிப்படையிலும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. பொருளாதார அடிப்படையிலான பாதிப்பு தொழில் மற்றும் வணிகத்துறையினருக்கு தான் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உழவர்களும் மிகக்கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

கடலூர், ஒருங்கிணைந்த வேலூர், ஒருங்கிணைந்த விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம், நாமக்கல், ஈரோடு, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், அரியலூர், மதுரை, விருதுநகர், இராமநாதபுரம் , சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் மானாவாரி நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளது. 8 லட்சத்திற்கும் கூடுதலான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலை பயிர் மிகக்குறைந்த அளவிலேயே அறுவடை செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தாலும் கூட, கொரோனா அச்சம் காரணமாக கடந்த சில நாட்களாக அறுவடை செய்யப்படவில்லை. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான கடுமையான நடவடிக்கைகளில் ஒரு கட்டமாக 21 நாட்கள் ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நிலக்கடலையை அறுவடை செய்வது சாத்தியமில்லை. ஊரடங்கு ஆணை நிறைவடைவதற்குள் நிலைமை கைமீறி போய்விடக்கூடும்.

ஊரடங்கு நடைமுறை நிறைவளிக்கிறது மக்களிடம் கூடுதல் ஒத்துழைப்பு தேவை! - DR.அன்புமணி ராமதாஸ்


ஊரடங்கு நடைமுறை நிறைவளிக்கிறது:
மக்களிடம் கூடுதல் ஒத்துழைப்பு தேவை! - DR. அன்புமணி ராமதாஸ்

கொரோனா வைரஸ் நோய்ப் பரவலைத் தடுக்க பிரதமர் அறிவித்த 21 நாள் ஊரடங்கில் ஒரு நாள் கழிந்திருக்கிறது. ஊரடங்கின் முதல் நாளில் அரசுத் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மனநிறைவு அளித்தாலும், பொதுமக்களில் ஒரு தரப்பினர் இதை விளையாட்டாகவும், விடுமுறையாகவும் நினைத்துக் கொண்டு சாலைகளில் வாகனங்களில் சுதந்திரமாக வலம் வந்தது மிகுந்த கவலையளிக்கிறது.

தமிழ்நாட்டில் கொரோனாவை தடுக்க 144 தடை ஆணை நடைமுறைக்கு வந்த இரு மணி நேரத்தில், இந்தியா முழுவதும் முழுமையான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அடுத்த 4 மணி நேரத்தில் தமிழக அரசும், காவல்துறையும் பிரதமரின் ஆணையை முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டு வந்தன. சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் சுற்றுக்காவல் மேற்கொண்டு, தேவையின்றி திறக்கப்பட்டிருந்த கடைகளை மூட வைத்தனர். சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி போக்குவரத்தை கட்டுப்படுத்தினார்கள். வணிகர்கள் தங்களின் கடைகளை மூடி ஒத்துழைப்பு அளித்தனர். பெரு நிறுவனங்கள் மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் பெரும்பாலும் தங்களின் பணியாளர்களை வீடுகளில் இருந்தபடி பணி செய்ய அனுமதி வழங்கின. அதற்கு வாய்ப்பில்லாத நிறுவனங்கள் ஊரடங்கு காலம் முழுவதும் விடுமுறை அறிவித்தன. ஊரடங்கை செயல்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகளும், அதற்கு வணிக நிறுவனங்கள் தரப்பில் கிடைத்த ஒத்துழைப்பும் சிறப்பானவை. பொதுநலன் கருதிய அவர்களின் செயல்கள் பாராட்டத்தக்கவை.

கொரோனா சிகிச்சை அளிப்பதை தனியார் மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். - கே.எஸ்.அழகிரி


உலகத்தின்  பல நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதைத் தடுத்து நிறுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பிரதமர் மோடி அவர்கள் அறிவித்துள்ளார். 

ஆனால், தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஐநூறைத் தாண்டிக் கொண்டிருக்கிறது. 

பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை  திடீரென அதிகரித்தால், இதனை எதிர்கொள்ளும் அளவுக்கு மருத்துவமனைகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இருக்கிறதா என்பது பெரிய கேள்விக்குறியாகியுள்ளது. 

2019-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய சுகாதார சுற்றறிக்கையின்படி, இந்தியாவில் உள்ள மொத்த மருத்துவமனைகளில்  படுக்கைகளின் எண்ணிக்கை 7 லட்சத்து 13 ஆயிரத்து 986 தான். இதன் தேசிய சராசரி ஆயிரம் மக்களுக்கு 0.55 படுக்கைகளாகும். 12 மாநிலங்களில் தேசிய சராசரியை விட குறைவான படுக்கை வசதிகள்தான் உள்ளன. அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் வெண்டிலேட்டர் வசதியுடன் 55 ஆயிரம் படுக்கை வசதிகள்தான் உள்ளன. இதைக் கொண்டு தற்போதைய அசாதாரண சூழலை எதிர்கொள்ள முடியாது.  தமிழகத்தில் ஆயிரம் பேருக்கு ஒரு படுக்கை வசதிதான் உள்ளது.  

புதன், 25 மார்ச், 2020

நூறு நாள் வேலைத் திட்டத்தில் பதிவு செய்து கொண்டோருக்கு 30 நாள் ஊதியத்தை முன்பணமாகத் தரவேண்டும் - தொல்.திருமாவளவன்


நூறு நாள் வேலைத் திட்டத்தில் பதிவு செய்து கொண்டோருக்கு 30 நாள் ஊதியத்தை முன்பணமாகத் தரவேண்டும்
மத்திய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் -தொல்.திருமாவளவன்

இந்திய பிரதமர் கேட்டுக்கொண்டதற்கிணங்க இருபத்தொரு நாட்களுக்கான ஊரடங்கு நாடுமுழுவதும் நடைமுறைக்கு வந்திருக்கிறது. கொரொனா தொற்றின் சமூகப் பரவலைத் தடுப்பதற்கு இது இன்றியமையாதது என்பதை உணர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பிலும் இதை ஆதரித்து அறிக்கை விடுத்தோம். 

நாடு முழுவதும் ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி மத்திய அரசு எடுக்க வேண்டிய பொருளாதார நடவடிக்கைகள் குறித்து இந்தமுறையும் எந்த ஒரு வார்த்தையும் பேசாதது ஏமாற்றமளிக்கிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் பதிவுசெய்துகொண்டுள்ள அனைவருக்கும் 30 நாள் ஊதியத்தை முன்பணமாக வழங்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். 

கொரோனா நோயை விரட்ட கசப்பு மருந்து ஊரடங்கு: அனைவரும் கடைப்பிடிப்போம்! - DR. அன்புமணி ராமதாஸ்


கொரோனா நோயை விரட்ட கசப்பு மருந்து
ஊரடங்கு: அனைவரும் கடைப்பிடிப்போம்! - DR. அன்புமணி ராமதாஸ்

இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய் பரவும் வேகம் அதிகரித்துள்ள நிலையில், அதை கட்டுப்படுத்தும் நோக்குடன் இந்தியாவில் இன்று முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு ஆணையை பிரதமர் நரேந்திர மோடி பிறப்பித்திருக்கிறார். கொரோனாவை கட்டுப்படுத்த 3 வார ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட வேண்டும் என்று ஒரு வாரத்திற்கும் மேலாக நான் வலியுறுத்தி வந்த நிலையில், அதை பிரதமர் அறிவித்திருப்பது நிம்மதியளிக்கிறது. கொரோனா வைரஸ் நோயை தடுப்பதற்கு மிகச்சிறந்த நடவடிக்கை இது ஆகும்.

கொரோனா நோயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் தெரிவித்த கருத்துகள் எதார்த்தமானவை; தீர்க்கமானவை. ‘‘21 நாள் ஊரடங்கு உத்தரவு கொரோனா பெருந்தொற்று நோய்க்கு எதிரான உறுதியான போரில் அவசியமான நடவடிக்கை ஆகும். இது மக்கள் ஊரடங்கை விட சில படிகள் மேலானது; கடுமையானது. இதை நீங்கள் பின்பற்றியே தீர வேண்டும். இந்த விஷயத்தில் சிலரின் அலட்சியம், சிலரின் தவறான யோசனைகள் உங்களையும், குழந்தைகளையும், பெற்றோரையும், குடும்பத்தையும், நண்பர்களையும், ஒட்டுமொத்த நாட்டையும் மிகப்பெரிய ஆபத்தில் ஆழ்த்தி விடும். ஆகவே, ஊரடங்கு ஆணை காலத்தில் உங்கள் வீட்டுக்கு வெளியில் நீங்கள் எடுத்து வைக்கும் ஓர் அடி கூட உங்கள் வீட்டுக்கு கொரோனா பெருந்தொற்று நோயை அழைத்து வந்து விடும்’’ என்று பிரதமர் கூறியிருப்பது 100% உண்மையாகும். இதைத் தான் கடந்த 10 நாட்களாக பா.ம.க ஆலோசனையாகவும், எச்சரிக்கையாகவும் கூறி வந்தது.

10, 12-ஆம் வகுப்புகள் தவிர பிற வகுப்புகளுக்கான கட்டாயத் தேர்ச்சி அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் - DR.S.ராமதாஸ்


+2 தேர்வு எழுதாதவர்களுக்கு மீண்டும்
ஒரு வாய்ப்பு: மற்றவர்களுக்கு தேர்ச்சி! - DR.S.ராமதாஸ் 

தமிழ்நாட்டில் கடந்த இரு நாட்களில் நடைபெற்ற 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை 70,000 மாணவர்கள் எழுதவில்லை என்று வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. முக்கியமான இத்தேர்வுகளை எழுத முடியாதது மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த 23-ஆம் தேதி 11-ஆம் வகுப்புக்கு உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக்கணிதம் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. அதேபோல், 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு கடந்த 24-ஆம் தேதி வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த இரு தேர்வுகளையும் மொத்தம் 16.67 லட்சம் பேர் எழுதியிருக்க வேண்டும். ஆனால், இந்த இரு தேர்வுகளையும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதவில்லை என்று அரசுத் தேர்வுத்துறையை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த இரு தேர்வுகளையும் எழுத முடியாததால் தங்களின் எதிர்காலம் வீணாகி விடுமோ, உயர்கல்வி வாய்ப்பு பறிபோகுமோ? என்ற மன உளைச்சல் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

கொரோனாவால் மக்கள் படும் இன்னல்கள் - வாழ்வாதாரப் பிரச்னைகளை அதிமுக அரசு சரியாக அணுகவில்லை - மு.க.ஸ்டாலின்


"கொரோனாவால் மக்கள் படும் இன்னல்கள் - வாழ்வாதாரப் பிரச்னைகளை அதிமுக அரசு சரியாக அணுகவில்லை; மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்ய தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து திமுக MP & MLA க்கள் போதிய நிதி ஒதுக்கீடு செய்திடுக"
 - மு.க.ஸ்டாலின் அறிக்கை.

கொடிய கொரோனா நோயைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்- நோய்த்தடுப்புப் பணிக்கு உதவிடும் வகையில் திராவிட முன்னேற்றக் கழக எம்.பி.,க்களும், எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் முகக்கவசங்கள், மருத்துவப் பணியாளர்களுக்குப் பாதுகாப்புக் கவசங்கள், வெண்டிலேட்டர்கள், தெர்மல் ஸ்கேனர்கள் உள்ளிட்ட தேவைப்படும் பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றைக் கொள்முதல் செய்வதற்கு - அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் உடனே கலந்தாலோசித்து, தங்களது நாடாளுமன்ற / சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தேவையான நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

அ.தி.மு.க. அரசைப் பொறுத்தவரை, 'குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கு மட்டும் 1000 ரூபாய்', 'கட்டடத் தொழிலாளர்கள் மற்றும் ஒட்டுநர் நல வாரியத்தில் உள்ள ஆட்டோ தொழிலாளர்கள் ஆகியோரின் குடும்பங்களுக்கு மட்டும் 1000 ரூபாய்' என்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு ஏமாற்றமளிக்கிறது.