சனி, 31 ஜூலை, 2021

கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை எல்லை சாலைகள் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.


 கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை எல்லை சாலைகள் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.  லாஹூல் & ஸ்பிடி பள்ளத்தாக்கில் உள்ள மணாலி-சர்ச்சு சாலையில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. சிம்லாவில் உள்ள எல்லை சாலைகள் நிறுவனத்தின் தீபக் பிரிவு, மீட்பு மற்றும் சாலைகளை சீரமைக்கும் பணிக்கு பயிற்சி பெற்ற பொறியாளர் பணிக்குழுவை உடனடியாக அனுப்பி வைத்தது.

ஜி20 நாடுகளின் கலாச்சார அமைச்சர்கள் கூட்டம்: மத்திய கலாச்சாரத்துறை இணையமைச்சர் திருமதி மீனாட்சி லெகி உரை


 ஜி20 நாடுகளின் கலாச்சாரத்துறை அமைச்சர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு இத்தாலி தலைமை வகித்தது. கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பது; கலாச்சாரம் மூலம் பருவநிலை நெருக்கடிகளை தீர்ப்பது; பயிற்சி மற்றும் கல்வி மூலம் திறன் மேம்பாடு; டிஜிட்டல் மாற்றம் மற்றும் கலாச்சாரத்துக்கான புதிய தொழில்நுட்பங்கள்; வளர்ச்சியின் தூண்டுதலாக கலாச்சாரம் மற்றும் படைப்பாற்றல் துறைகள் போன்றவை குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.

சட்டமன்ற நூற்றாண்டு விழாவின் உண்மைத் தன்மை குறித்து தமிழக அரசும் இந்திய மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.- டாக்டர் K. கிருஷ்ணசாமி

 ‘சட்டமன்ற நூற்றாண்டு விழா’ எனும் பெயரில் ஆகஸ்ட்  2-ல், இந்திய ஜனாதிபதி திரு. ராம்நாத் கோவிந்த் அவர்கள் தமிழகம் வருகை!

நீதிக்கட்சி ஆட்சியின் நூற்றாண்டு விழாவிற்கா?

முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் உருவப்பட திறப்பு விழாவிற்கா?

மோடி-ஸ்டாலின் பிணக்கை போக்கி இணக்கமாக்கவா?

புதிய கூட்டணிக்கான அச்சாரமா? - டாக்டர் K. கிருஷ்ணசாமி

Legislative Assembly என்பதை ’சட்டமன்ற பேரவை’ என்றும், Legislative Council என்பதை ’சட்டமன்ற மேலவை’ என்றும் தமிழகத்தில் அழைக்கிறோம்.  மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களை - Member Of Legislative Assembly(MLA) கொண்ட அவை சட்டமன்ற பேரவை (Legislative Assembly) எனவும்;  சட்டமன்ற உறுப்பினர்களாலும், உள்ளாட்சி பிரதிநிதிகள், பட்டதாரி தொகுதிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களாலும், ஆளுநர் நியமனங்கள் மூலமாகவும் நியமிக்கப்படும் உறுப்பினர்களை-Member Of Legislative Council (MLC) கொண்ட அவையை மேலவை (Legislative Council) எனவும் அழைக்கப்படுகிறது. இரு அவைகளையும் கொண்டு ஒரு மாநில அரசு செயல்பட்டால் அதை bicameral system என்றும், ஒரு அவை மட்டும் செயல்பட்டால் unicameral system என்றும் பெயர். தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் 234 சட்டமன்ற உறுப்பினர்களுடன் unicameral system கொண்ட  தமிழக சட்டமன்ற பேரவையே கடந்த 35 ஆண்டுகளாக அமலில் உள்ளது. எல்லா மாநிலங்களிலும் சட்டப்பேரவை (Assembly) இருக்க வேண்டும் என்பதி விதி. ஆனால் மேலவை (Council) இருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல.

‘ஒரே பாரதம் - உன்னத பாரதம்’ என்ற கொள்கையை முன்னெடுத்து செல்பவர்கள் நீங்கள், ‘தேசம் முதலில், எப்போதும் முதலில்’ என்ற மந்திரத்தை எப்போதும் முன் வைத்திருங்கள்.- பிரதமர் திரு நரேந்திர மோடி


 சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியின் ஐபிஎஸ் பயிற்சி அதிகாரிகளுடன், பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியின் போது, பயிற்சி அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடினார். மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா மற்றும் உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த ராய் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பயிற்சி அதிகாரிகளுடன் கலந்துரையாடல்

இந்திய காவல் பணி பயிற்சி அதிகாரிகளுடன், பிரதமர் நேரடியாக கலந்துரையாடினார்.  பயிற்சி அதிகாரிகளுடனான கலந்துரையாடல், மிக இயல்பாக இருந்தது மற்றும் புதிய தலைமுறை போலீஸ் அதிகாரிகளுடன் எண்ணங்கள் மற்றும் கனவுகள் குறித்து ஆலோசிக்க, அரசுத்துறை அம்சங்களுக்கு அப்பால் பிரதமர் சென்றார். 

மொழியின் பாரம்பரியத்தை நமது எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்வதில் மக்கள் ஒன்றாக இணைந்து குரல் கொடுக்க வேண்டும்.- திரு எம் வெங்கையா நாயுடு


 இந்திய மொழிகளைப் பாதுகாக்கவும், அவற்றிற்கு புத்துணர்ச்சியூட்டவும், புதுமையான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளுக்கு குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு இன்று அழைப்புவிடுத்துள்ளார்.

மக்கள் இயக்கத்தால் மட்டுமே மொழிகளைப் பாதுகாக்க முடிவதோடு, அவற்றின் தொடர்ச்சியான நிலையை உறுதி செய்ய முடியும் என்று வலியுறுத்திய அவர், மொழியின் பாரம்பரியத்தை நமது எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்வதில் மக்கள் ஒன்றாக இணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

1000 ரூபாய், 1500 ரூபாய் அளவு மின் கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 5000 முதல் 6000 ரூபாய் வரை மின் கட்டணம் வந்திருக்கிறது.- வானதி சீனிவாசன்


 கொரானா பரவல் கால கட்டத்தில் வீடு மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின் பயன்பாட்டுக்கட்டணம் எந்த வித முன்னறிவிப்புமின்றி மூன்று முதல் ஐந்து மடங்கு அதிகமாக வந்திருக்கிறது. பூட்டியிருக்கும் வீட்டிற்கு 5 மடங்கு அதிகமாக மின் கட்டணம் வந்திருக்கிறது. தொழிற்சாலைகள், திருமண மண்டபங்களுக்கு மூன்று மடங்கு அதிகமாக வந்திருக்கிறது என்று மாவட்டம் முழுவதும் பரவலாக புகார் எழுந்திருக்கிறது.  

1930-ஆம் ஆண்டு முதல் ,1950களின் வரை, ஆரம்பகால தெலுங்கு சினிமாவின் 450-க்கும் மேற்பட்ட கண்ணாடி ஸ்லைடுகளின் அரிய பொக்கிஷத்தை தேசிய திரைப்பட காப்பகம் பெற்றுள்ளது.


 1930-ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியிலிருந்து, 1950 களின் நடுப்பகுதி வரை, ஆரம்பகால தெலுங்கு சினிமாவின் 450-க்கும் மேற்பட்ட கண்ணாடி ஸ்லைடுகளின் அரிய பொக்கிஷத்தை தேசிய திரைப்பட காப்பகம் பெற்றுள்ளது.

இதன் மூலம் தனது சேகரிப்பில், 450க்கும் மேற்பட்ட திரைப்பட கண்ணாடி ஸ்லைடுகளை இந்திய தேசிய திரைப்பட காப்பகம் பெற்றுள்ளது.

இந்த கண்ணாடி ஸ்லைடுகள் ஆரம்பகால சினிமா பார்க்கும் அனுபவத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். திரைப்படத்தின் பாசிட்டிவ் பிலிம் இரு கண்ணாடிகளுக்கு  இடையே அழுத்தப்பட்டு தயாரிக்கப்படுவதுதான் இந்த சிலைடுகள். இவை திரையரங்குகளில் திரைப்படம் தொடங்குவதற்கு முன்பும், இடைவெளியின் போதும் புதிய படத்தின் விளம்பரமாக காட்டப்படும்.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இந்தியா மேற்கொண்ட முயற்சிகள் என்ன? - வைகோ கேள்விகளுக்கு உள்துறை இணை அமைச்சர் முரளிதரன் விளக்கம்


 கீழ்காணும் கேள்விகளுக்கு, அயல் உறவுத்துறை அமைச்சர் விளக்கம் தருவாரா?

1. இலங்கையின் உள்நாட்டுப் போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து, இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள், பன்னாட்டு நீதி விசாரணை கோரி இருக்கின்றார்களா?

2. அவ்வாறு இருப்பின், அதுகுறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?

3. இலங்கை அரசு இதுவரை எந்தவிதமான உள்ளக விசாரணையும் மேற்கொள்ளாத நிலையில், இனியும் அதற்கான வாய்ப்புகள் இல்லாத சூழலில், பன்னாட்டு நீதி விசாரணை நடைபெறுவதற்கான முயற்சிகளை, இந்திய அரசு மேற்கொள்ளுமா?

ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோரி சட்டப்பேரவையில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.- DR.S.ராமதாஸ்

 இலங்கை அகதிகள் தஞ்சம் புகுந்தவர்கள், 

அவர்களுக்கு குடியுரிமை வழங்குவதே நீதி! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகள் அனைவரும் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் குடியேறியவர்கள் என்றும் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க முடியாது என்றும் மத்திய அரசு   தெரிவித்திருக்கிறது. மத்திய அரசின் இந்த நிலைப்பாடு மனிதநேயமற்றது; ஏற்றுக்கொள்ள முடியாதது.

பொறுப்புடன் நடந்து கொள்வது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். மூன்றாவது அலையை நாம் வரவேற்கக் கூடாது.- குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு


 குழந்தைகளுக்கான கொவிட் தடுப்பு மருந்து உருவாக்கத்தை துரிதப்படுத்துவதில் கவனம் செலுத்துமாறு அறிவியல் சமூகத்தினரை குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு இன்று வலியுறுத்தினார். வைரசிடம் இருந்து குழந்தைகளை காப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கை நாடு தழுவிய மக்கள் இயக்கமாக இருக்க வேண்டும் என்று கூறிய திரு நாயுடு, தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு தங்களை பாதுகாத்து கொள்ளுமாறு மக்களை கேட்டுக்கொண்டார்.

கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், மற்ற நாடுகளை விட இந்தியா சிறப்பாக செயல்பட்டது.- மத்திய சுகாதாரம் அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா



 நோய் கட்டுப்பாடு தேசிய மையத்தின்  112வது ஆண்டு விழா கொண்டாட்டத்துக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, இணையமைச்சர் டாக்டர் பாரதி பவாருடன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் நுண்ணுயிர் எதிர்ப்புக்கான(AMR) முழு மரபணு வரிசைமுறை தேசிய குறிப்பு ஆய்வகம் மற்றும் புதிய உயிர்பாதுகாப்பு நிலை (BSL) 3 ஆய்வகம், முதுநிலை மாணவர்கள் விடுதி மற்றும் விருந்தினர் இல்லத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த ஆய்வக வளாகத்தில், 5 தளங்கள் மற்றும் 22 பிஎஸ்எல்-2 ஆய்வகங்கள் உள்ளன.

வெள்ளி, 30 ஜூலை, 2021

தரமான மருத்துவக் கல்வி, வெளிப்படைத்தன்மை மிக்க தேர்வு உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ சேவைகளை உருவாக்க இந்திய அரசு உறுதி பூண்டுள்ளது.- திரு மன்சுக் மாண்டவியா


 தேசிய மருத்துவ ஆணையத்துடனான ஆய்வு கூட்டத்திற்கு மத்திய சுகாதார அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா இன்று தலைமை வகித்தார். மருத்துவக் கல்வி குறித்த முக்கிய விஷயங்கள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

தேசிய மருத்துவ ஆணைய அதிகாரிகள் கூட்டத்தில் தெரிவித்தவாறு, தேசிய எக்சிட் தேர்வை (NExT) திட்டமிட்டவாறு 2023-ம் ஆண்டின் முதல் பாதியில் நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாட்டின் நிலநடுக்க மண்டல வரைபடத்தின்படி, மொத்த பகுதியும் நான்கு நிலநடுக்க மண்டலங்களாக வகைப்படுத்தப்படுகிறது.


 நில அதிர்வு விவரங்கள், புயல் எச்சரிக்கை மையங்கள் ஆகியவை குறித்து மக்களவையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. ஜித்தேந்திர சிங் கூறியதாவது:

நிலஅதிர்வு விவர தொகுப்பு:

நாட்டில் நிகழ்ந்த நிலநடுக்கங்களின் வரலாற்று பதிவுகளை கருத்தில் கொள்ளும்போது, இந்தியாவின் 59 சதவீத நிலப்பரப்பு நிலநடுக்கத்துக்கு வெவ்வேறு அளவிலான தீவிரத்துடன் ஆளாகும் வாய்ப்புகள் உள்ளன. நாட்டின் நிலநடுக்க மண்டல வரைபடத்தின்படி, மொத்த பகுதியும் நான்கு நிலநடுக்க மண்டலங்களாக வகைப்படுத்தப்படுகிறது. 5வது மண்டலத்தில் உள்ள பகுதி மிகவும் பாதிப்புக்கு ஆளாகும் பகுதி. 2வது மண்டலத்தில் உள்ள பகுதியில், நிலநடுக்க பாதிப்பு குறைவாக இருக்கும். தோராயமாக நாட்டின் 11 சதவீத பகுதி 5வது மண்டலத்துக்குள் வருகிறது. 18 சதவீத பகுதி 4வது மண்டலத்துக்குள்ளும், 30 சதவீத பகுதி, 3வது மண்டலத்துக்குள்ளும், மீத பகுதிகள் 2வது மண்டலத்துக்குள்ளும் வரும்.

இந்தியா, ரஷ்யா கடற்படை இடையே இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடைப்பெறும் ‘இந்திரா கடற்படை’ 12வது கூட்டு பயிற்சி பால்டிக் கடலில் நடந்தது.


 இந்தியா, ரஷ்யா கடற்படை இடையே இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடைப்பெறும் ‘இந்திரா கடற்படை’ 12வது கூட்டு பயிற்சி பால்டிக் கடலில் கடந்த 28ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடந்தது.  இந்த கூட்டு பயிற்சி முதன் முதலில் கடந்த 2003ம் ஆண்டு தொடங்கியது. இந்த கூட்டு பயிற்சி இரு நாட்டு கடற்படைகள் இடையேயான நீண்ட கால யுக்தி கூட்டுறவை எடுத்துக் காட்டுகிறது. ரஷ்ய கடற்படையின் 325 ஆண்டு விழாவில் பங்கேற்க ஐஎன்எஸ் தபார் போர்க்கப்பல் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சென்றது. அதன் ஒரு பகுதியாக இந்திரா கடற்படை-21 பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

69% சட்டப்படி - தீர்ப்புப்படி இட ஒதுக்கீடு கிடைப்பதற்குப் போராடுவோம் - ஒன்றிணைந்து செயல்பட்ட முதலமைச்சர் மற்றும் அனைவருக்கும் நன்றி! - கி.வீரமணி

 மருத்துவக் கல்வி: அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27% முதற்கட்ட வெற்றியே!

69% சட்டப்படி - தீர்ப்புப்படி இட ஒதுக்கீடு கிடைப்பதற்குப் போராடுவோம் - ஒன்றிணைந்து செயல்பட்ட முதலமைச்சர் மற்றும் அனைவருக்கும் நன்றி!

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 142 ஆவது பிரிவைப் பயன்படுத்தி, மருத்துவக் கல்வி வசதிகள் வளர்ச்சி பெறாத வடகிழக்கு மற்றும் வட மாநிலங்களில் உள்ளவர்கள் மருத்துவர்களாவதற்கு உதவும் வகையில், உச்சநீதிமன்றம், மருத்துவக் கல்வியில் வளர்ச்சி அடைந்த மாநிலங்கள் ‘மத்திய தொகுப்பு’ என்ற ஒன்றை உருவாக்கி, தங்களுக்குள்ள மொத்த மருத்துவப் படிப்புக்கான இடங்களில் - எம்.பி.பி.எஸ். போன்ற பட்டப் படிப்பிற்கான 15 சதவிகிதமும், மேல் பட்டப் படிப்பிற்கான (எம்.டி., எம்.எஸ். போன்றவை) 50 சதவிகிதமும் (முதலில் 25 சதவிகிதம், பிறகு 50 சதவிகிதம்) ஆண்டுதோறும் தரவேண்டும் என்ற ஒரு ஆணையைப் பிறப்பித்து, அது அமலில் இருந்து வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் தச்சூரில் தொடங்கி ஆந்திர மாநிலம் சித்தூர் வரை ஆறுவழிச்சாலை அமைக்கும் திட்டத்தால் வேளாண் விளைநிலங்கள் பாதிக்கப்படும்.- DR.S.ராமதாஸ்

விளைநிலங்கள் பாதிப்பு: சித்தூர் 6 வழிச்

சாலையை மாற்றுப் பாதையில் அமைப்பீர்! - DR.S.ராமதாஸ்

திருவள்ளூர் மாவட்டம் தச்சூரில் தொடங்கி ஆந்திர மாநிலம் சித்தூர் வரை ஆறுவழிச்சாலை அமைக்கும் திட்டத்தால் வேளாண் விளைநிலங்கள் பாதிக்கப்படும்; அதனால் அத்திட்டத்தை தரிசு நிலங்கள் வழியாக மாற்றி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உழவர்கள் போராடி வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கை குறித்து பேச அழைப்பு விடுத்த அதிகாரிகள் அவர்களை அவமதித்திருப்பது கண்டிக்கத்தக்கது.

சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தரை எதிர்த்து இன்று நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் நிறுத்தப்படுகிறது! - கி.வீரமணி


 சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தரை எதிர்த்து இன்று நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் நிறுத்தப்படுகிறது! - கி.வீரமணி

சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆடி வெள்ளிக்கிழமை  பூஜை என்ற பெயரால், அரசின் மதச் சார்பற்ற கொள்கைக்கு விரோதமாக நடைபெற்ற நிகழ்வினைக் கண்டித்து கண்டனங்கள் எழுந்தன. 

திராவிட மாணவர் கழகம் சார்பில் இன்று (30.7.2021) காலை 11 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில், கழகத் தலைவருக்கு சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர், நடைபெற்ற கடந்த நிகழ்ச்சிக்கு வருத்தம் தெரிவித்தும், இனி வரும் காலங்களில் இதுபோல எதுவும் நிகழாவண்ணம் மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளேன் என்றும், இத்தகைய பூஜை, சடங்குகள் நடக்காதெனவும் உறுதி கூறியுள்ளதை ஏற்று, திராவிட மாணவர் கழக கண்டன ஆர்ப்பாட்டம் நிறுத்தப்படுகிறது.

பழங்குடி மக்களின் தேசப்பற்றை அங்கீகரிக்கும் வகையில் 10 பழங்குடியின சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஒப்புதல்


 மத்திய பழங்குடியின மக்கள் விவகாரத்துறை சார்பாக,  “பழங்குடியினர் உதவி ஆராய்ச்சி மையம்” மற்றும் “பழங்குடியின பண்டிகைகள், ஆராய்ச்சி, தகவல் மற்றும் வெகுஜன கல்வி” ஆகிய திட்டங்கள் மூலம்: 

ஒலிம்பிக் மற்றும் ஆசிய போட்டிகள் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டு நிகழ்ச்சிகளில் இந்தியாவின் செயல்திறனை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. - திரு அனுராக் தாகூர்


 நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் தாகூர் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

ஒலிம்பிக் மற்றும் ஆசிய போட்டிகள் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டு நிகழ்ச்சிகளில் இந்தியாவின் செயல்திறனை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

கென்யாவில் கட்லஸ் எக்ஸ்பிரஸ்-21 கடல்சார் பயிற்சி: ஐஎன்எஸ் தல்வார் பங்கேற்பு


கென்யாவில் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 6-ஆம் தேதி வரை பல்வேறு நாடுகள் பங்கேற்கும் கட்லஸ் எக்ஸ்பிரஸ் 2021 என்ற கடல்சார் பயிற்சியில் இந்திய கடற்படையின் தல்வார் கப்பல் கலந்து கொள்கிறது. ஜூலை 26 முதல் 28 வரை மாம்பாசாவில் நடைபெற்ற துறைமுக அளவிலான பயிற்சியில் கென்யா, ஜிபௌடி, மொசாம்பிக் கேமரூன் மற்றும் ஜார்ஜியா கடலோரக் காவல் படையைச் சேர்ந்த வீரர்களுக்கு இந்திய கடற்படையின் கடல்சார் வீரர்கள் குழு பயிற்சி அளித்தது. மாம்பாசாவின் பண்டாரி கடல்சார் அகாடமியில் நடைபெற்ற இந்தப் பயிற்சியில், பல்வேறு தேடுதல், கைப்பற்றுதல், பாதுகாப்பு நடவடிக்கைகளின் சிறந்த செயல்முறைகளை இந்திய வீரர்கள் வெளிநாட்டு வீரர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

வியாழன், 29 ஜூலை, 2021

கேரளாவில் கொவிட்-19 பாதிப்புகள் அதிகரிப்பு: உயர் நிலைக் குழுவை விரைந்து அனுப்புகிறது மத்திய அரசு


 கேரளாவில் அன்றாட கொவிட் பாதிப்புகள் கணிசமாக அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, கொவிட்-19 மேலாண்மைக்கான பொது சுகாதார நடவடிக்கைகளை மாநில சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து வலுப்படுத்துவதற்காக உயர்நிலை பல்துறைக் குழுவை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கேரளாவிற்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.

நோய் கட்டுப்பாட்டு தேசிய மையத்தின் இயக்குநர் டாக்டர் எஸ் கே சிங் தலைமையில் இந்த 6 உறுப்பினர்கள் அடங்கிய மத்திய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு, ஜூலை 30-ஆம் தேதி கேரளா சென்றடைந்து சில மாவட்டங்களைப் பார்வையிடும்.

300 ஏக்கருக்கும் அதிகமான வன நிலத்தை தனது பெயரில் குழுமம் மோசடியாக பதிவு செய்துகொண்டதற்கான ஆதாரம் சேகரிக்கப்பட்டுள்ளது.


 ஜார்கண்டில் கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டுள்ள முன்னணி குழுமம் ஒன்றில் 2021 ஜூலை 28 அன்று வருமான வரித்துறை சோதனை நடத்தியது. 2021 ஜூலை 28 அன்று காலை தொடங்கிய சோதனை ராஞ்சி மற்றும் கொல்கத்தாவில் உள்ள 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்டது.

நிதி ஆவணங்களை அக்குழுமம் முறையாக பராமரிக்கவில்லை என்பது சோதனையின் போது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து வருமான வரித்துறையிடம் சமர்பிக்கப்பட்ட தணிக்கை சான்றிதழ்கள் மற்றும் அறிக்கைகள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.

தனியாரின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பதற்காக விண்வெளித்துறையின் வசதிகளை தனியார் துறையினர் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.- டாக்டர் ஜிதேந்திர சிங்


 விண்வெளித் துறையில் தனியார் துறையினரின் பங்களிப்பை ஊக்குவிப்பதுடன், அனைத்து ஒழுங்குமுறை அம்சங்களை உள்ளடக்கிய விண்வெளி நடவடிக்கை மசோதா குறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறைகளின் இணை அமைச்சரும் (தனிப் பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளி ஆகிய துறைகளின் இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

இயற்கை மருத்துவம் பற்றிய இணைப்பான நைஸ் (NICE), சில உண்மைக்குப் புறம்பான கூற்றுகளை வெளியிட்டிருப்பதுடன், ஒரு சில ஊடகங்கள் அதனை உறுதிப்படுத்தாமல் வெளியிட்டுள்ளன.


 இயற்கை மருத்துவம் பற்றிய இணைப்பான நைஸ் (நெட்வொர்க் ஆஃப் இன்புளூயென்சா கேர் எக்ஸ்பர்ட்ஸ்), சில உண்மைக்குப் புறம்பான கூற்றுகளை வெளியிட்டிருப்பதுடன், ஒரு சில ஊடகங்கள் அதனை உறுதிப்படுத்தாமல் வெளியிட்டுள்ளன. கொவிட்-19 சிகிச்சைக்கான நெறிமுறையை வடிவமைப்பதற்கு ஆயுஷ் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதானமாக தெரிவிக்கப்படுகிறது. ஆயுஷ் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாகத் தவறாகவும், நியாயமற்ற வகையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. நைசின் இதுபோன்ற அனைத்து கருத்துக்களையும் ஆயுஷ் அமைச்சகம் கடுமையாக மறுத்துள்ளது. மேலும் இது சம்பந்தமான தகவல்கள் வெளியிடப்பட்டது, முழுவதும் அடிப்படை ஆதாரமற்றது மற்றும் உண்மைக்குப் புறம்பானது.

தாய்மொழி வழியிலான கல்வி ஏழை, ஊரக மற்றும் பழங்குடியின பின்னணி கொண்ட மாணவர்கள் இடையே நம்பிக்கையை ஏற்படுத்தும்.- பிரதமர் நரேந்திர மோடி


 தேசிய கல்விக் கொள்கையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் ஒராண்டு நிறைவு செய்ததை குறிக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு கொள்கைகளை உருவாக்கியவர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.  கல்வித்துறையில் பல நடவடிக்கைகளையும் அவர் தொடங்கி வைத்தார். 

அகில இந்திய தொகுப்பு மருத்துவ இடங்களில் பிற பிற்படுத்தப்பட்டோருக்கு 27% ஒதுக்கீடு: ஒட்டுமொத்த தமிழகத்திற்கு கிடைத்த வெற்றி! - DR.அன்புமணி ராமதாஸ்

 அகில இந்திய தொகுப்பு மருத்துவ இடங்களில் பிற பிற்படுத்தப்பட்டோருக்கு 27% ஒதுக்கீடு: ஒட்டுமொத்த தமிழகத்திற்கு கிடைத்த வெற்றி! - DR.அன்புமணி ராமதாஸ்

மருத்துவக் கல்விக்கான அகில இந்தியத் தொகுப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலனுக்கான பா.ம.க.வின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒருவரை அரவணைப்பதன் மூலம் பதவியில் தொடரும் தார்மீக உரிமையைப் பிரதமர் மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இழந்து விட்டார்கள். - கே.எஸ்.அழகிரி



 2019 ம் ஆண்டின் தொடக்கத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தனா மீது, அப்போதைய சி.பி.ஐ. இயக்குநராக இருந்த  அலோக் குமார் வர்மா நடவடிக்கை எடுத்துவிடாமல் தடுக்க பல வழிகளை மோடி அரசு கையாண்டதை நாடு அறியும். மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய பரிந்துரையின் அடிப்படையில் அலோக் வர்மாவையும் ராகேஷ் அஸ்தானாவையும் கட்டாய விடுப்பில் அனுப்பிய நாடகம்  அரங்கேறியது.

ரபேல் ஒப்பந்தம் ஊழல் தொடர்பான ஆவணங்களை சேகரித்ததால் தான் அலோக் வர்மா மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, மோடி அரசு மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். அலோக் வர்மாவுக்கு எதிரான மோடி அரசின் நடவடிக்கைகளும் இந்த குற்றச்சாட்டை உறுதி செய்வதாகவே அமைந்தன. 

அரசமைப்புச் சட்டம் 8 ஆவது அட்டவணையில் 22 மொழிகள் இடம்பெற்றிருக்க - ஹிந்திக்கு மட்டும் தனிச் சலுகையும் - கோடி கோடியாகப் பணத்தை வாரி இறைப்பதும் ஏன்? - கி.வீரமணி

 அரசமைப்புச் சட்டம் 8 ஆவது அட்டவணையில் 22 மொழிகள் இடம்பெற்றிருக்க - ஹிந்திக்கு மட்டும் தனிச் சலுகையும் - கோடி கோடியாகப் பணத்தை வாரி இறைப்பதும் ஏன்?

ஹிந்தி எதிர்ப்பு 1938 இல் தமிழ்நாட்டில் தந்தை பெரியார் தலைமையில் தொடங்கப்பட்டதை நினைவூட்டுகிறோம்!

ஹிந்தி எந்த ரூபத்தில் வந்தாலும் எதிர்த்தே தீருவோம்! - கி.வீரமணி

இந்திய அரசமைப்புச் சட்டப்படி எட்டாவது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள மொழிகள் 22 ஆகும். முதலில் 14 மொழிகள் - பிறகு கூடுதலாகி 22 ஆக பட்டியல் நீண்டது. எந்த ஒரு தனி மொழிக்கும் ‘தேசிய மொழி’ என்று அதன் தலைப்பில் குறிப்பிடாமல், ‘‘Languages’’‘‘மொழிகள்’’ - என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்!

ஒன்றிய அரசின் உறுதிமொழி என்னாயிற்று?

‘தேவ பாஷை’ எழுத்துக்களைக் கொண்ட  ‘ஹிந்தி’ ஆட்சி மொழியாக அர சமைப்புச் சட்டத்தில் அறிவிக்கப்பட்டாலும், ஜனநாயகத்தில் மக்கள் விரும்பும்வரை ஆங்கிலம் இணை ஆட்சி அலுவல் மொழியாக நீடிக்கும் என்பது இந்திய பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர் களால் நாடாளுமன்றத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி!

அது ஒன்றிய அரசின் வாக்குறுதியே தவிர, ஒரு தனி நபர் தந்த வாக்குறுதி அல்ல! ஒன்றிய அரசை எந்நாளும் கட்டுப்படுத்தும்.

இந்தப் பின்னணியை அறவே - ‘வசதி யாக’ மறந்துவிட்டு, ஆர்.எஸ்.எஸின் அரசியல் பிரிவான பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததுமுதல், ஹிந்தியையும், அதன் தாயான சமஸ்கிருதத்தையும் வேக வேகமாகத் திணிப்பதிலேயே முனைப்பு காட்டி வருகின்றது!

எங்கும் ‘ஹிந்தி, எதிலும் ‘ஹிந்தி’ கூடுதல் நிதியை செம்மொழி தகுதி பெற்றி ருந்த தமிழுக்குக் கிள்ளிக் கொடுப்பதும், சமஸ்கிருதத்திற்கு அள்ளி - வாரிக் கொடுப்பதும் வாடிக்கையாகி வருகிறது இந்த பா.ஜ.க. ஒன்றிய ஆட்சியில்! 

(2017 ஏப்ரல் முதல் 2020 மார்ச் வரை செத்த மொழியான சமஸ்கிருதத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.643.84 கோடி. அதேநேரத்தில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒடிசா மொழிகள் அனைத்திற்கும் சேர்த்து ஒதுக்கப்பட்ட தொகையோ ரூ.29 கோடி மட்டுமே!)

கேள்வி கேட்பது ஒரு மொழியில் என்றால், பதில் அளிப்பது ஹிந்தியிலா?

ஹிந்தி தெரியாதவர்கள் கேள்வி கேட்டால், தகவல் சேகரிக்க விரும்பினால், அவர்கள் எந்த மொழியில் கடிதம் எழுதிக் கேட்கிறார்களோ, அம்மொழியில் பதிலளிப்பதுதான் குறைந்தபட்ச நாகரிகம், சட்டப்படியான கடமையும்கூட!

அப்படியில்லாமல், ‘சர்வமும் ஹிந்தி’ என்ற முறையில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பும் ஹிந்தி பேசாத - தெரியாத - பகுதி எம்.பி.,களுக்கும்கூட ஹிந்தி மொழியிலேயே பதில் எழுதுவது அரசியல் அடாவடித்தனம் அல்லாமல் வேறு என்ன?

மாநிலங்களவை தி.மு.க. கட்சியின் தலைவரான மூத்த உறுப்பினர் மானமிகு திருச்சி சிவா அவர்கள் இதுபற்றி இரண்டு நாள்களுக்குமுன், ஒரு பேட்டியை புது டில்லியில் ஊடகங்களுக்குத் தந்துள்ளார் - வேதனையுடன்!

தகவல் பரிமாற்றம் என்பது முக்கியமா? மொழித் திணிப்பு முக்கியமா?

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் வேதனை!

சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று (28.7.2021) விசாரணைக்கு எடுத்துக்கொள் ளப்பட்ட வழக்கொன்றில், புதுச்சேரியில் நியமன எம்.எல்.ஏ.,க்கள் தொடர்பான தகவல்களை ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்திடம் கேட்டு விண்ணப்பித்திருந்தார் சென்னையைச் சேர்ந்த வழக்கு ரைஞர் எம்.ஞானசேகரன் என்பவர்.

அந்த மனுவை அவருக்குத் திருப்பி அனுப்பிய ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம், ஹிந்தியிலேயே பதிலளித்திருக்கிறது.

‘‘எனக்கு ஹிந்தி தெரியாது. தமிழ், ஆங்கில மொழிகள் மட்டுமே தெரியும்.எனவே, ஹிந்தியில் வழங்கிய உத்தரவை ரத்து செய்யவேண்டும். எனக்குத் தெரிந்த மொழிகளில் மட்டுமே பதில் அளிக்க உத்தரவிட வேண்டும்‘’ என்று கோரி இருந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி திரு.எஸ்.வைத்தியநாதன் அவர்கள் முன் நேற்று (28.7.2021) விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கு ஆவணங்களைப் பார்த்த உயர்நீதிமன்ற நீதிபதி, மனுதாரரைப் பார்த்து, ‘‘உங்களுக்கு மட்டுமல்ல; எனக்கும் ஹிந்தி தெரியாது’’ என்று விளக்கம் அளித்தார்!

பின்னர் ஒன்றிய அரசு 16 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டார்!

என்னே விசித்திரம்! திணிப்பின் காரணமாக எவ்வளவு நேரம்,  உழைப்பு வீணாகி, நீதிமன்றமே இப்படி வேதனைப்படும் அளவுக்கு வெளிச்சம் போட்டு காட்டப் படுகிறது!

தனக்கே ஹிந்தி தெரியாது என்று உண்மையைக் கூறிய மாண்பமை நீதிபதி, ஹிந்தி எதிர்ப்புப் பின்னணியிலிருந்து அப்பதவிக்கு வந்தவர் அல்ல! அவருக்கே இந்தத் திணிப்பு இவ்வளவு வேதனையைத் தந்துள்ளது என்கிறபோது, மற்றவர்களுக்கு எப்படிப்பட்ட உணர்வுகள் ஏற்படும் என்பதை ஒன்றிய அரசு எண்ணிப் பார்க்கவேண்டாமா?

‘ஹிந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்!’ - முத்தமிழ் அறிஞர் கலைஞரின் தொலைநோக்கு முழக்கம்!

முத்தமிழ் அறிஞர் கலைஞர் தந்த அய்ம்பெரும் முழக்கங்களில் ஒன்று, ‘ஹிந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்!’ என்பது - எப்படி சரியான வழிகாட்டல் பார்த்தீர்களா?

1938-லேயே கட்டாய ஹிந்தியை எதிர்த் துப் போர்க்குரலை தந்தை பெரியாரும், தமிழ் அறிஞர்களும், தமிழ்ப் பெருமக்களும் எதிர்த்துத் தொடங்கிய அறப்போர் இன்னும் முடியவில்லை. முற்றுப்புள்ளி வைக்காது, அரைப் புள்ளியாகவே தொடரவேண்டிய அவசியத்தை வடக்கின் ஹிந்தி வெறியர்கள் உருவாக்கினால், ஒருபோதும் தமிழ் மண் - சகித்துக் கொண்டிருக்காது!

எதிர்த்தே தீருவோம்!

திணிப்பு எந்த ரூபத்தில் வந்தாலும் எதிர்த்தே தீருவோம் - உயர்நீதிமன்ற நட வடிக்கை சாட்சியங்களாக அமைந்துள்ளது. நாம் நீதியின் பக்கம் நின்று நியாயம் கேட்பதை உலகுக்கு உணர்த்துவதாக உள்ளது அல்லவா!

அகில இந்திய ஒதுக்கீடு மருத்துவ இடங்களில் OBC பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. - வானதி சீனிவாசன்


அகில இந்திய ஒதுக்கீடு மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (OBC) நடப்பாண்டு முதல் 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மத்திய பாஜக அரசு செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குறிப்பாக தமிழகத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகள் அவதூறு பிரச்சாரம் செய்து வந்தன. 

மேகேதாட்டு அணையை கட்டுவதற்காக அறத்துக்கு மாறாக எதையும் செய்ய அவர்கள் தயாராக இருக்கிறார்கள். இதை தமிழக அரசு புரிந்து கொண்டு விழிப்புடன் செயல்பட வேண்டும்.- DR.S.ராமதாஸ்

 மேகேதாட்டு அணை: கர்நாடகச் சதியை

முறியடிக்க தனிக்குழு அமைக்க வேண்டும்! - DR.S.ராமதாஸ்

கர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட பிறகு ஊடகங்களுக்கு அளித்த முதல் நேர்காணலிலேயே, காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணையை கர்நாடக அரசு கட்டியே தீரும்; அதற்கு அனுமதி பெறுவதற்காக மத்திய நீர்வளத்துறை அமைச்சரை ஓரிரு நாட்களில் சந்திக்கவிருக்கிறேன் என்று பசவராஜ் பொம்மை கூறியிருக்கிறார். புதிய முதலமைச்சராக பொறுப்பேற்ற ஒருவர், தமிழகத்துடனான உறவை வலுப்படுத்த முயல்வதற்கு மாறாக சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.

புதன், 28 ஜூலை, 2021

மின்சாரக் கட்டணங்களை எளிதில் கணக்கிட்டு டிஜிட்டல் முறையில் செலுத்துவதற்காக 7 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களுக்கு மத்திய மின்சாரம் அமைச்சர் திரு ஆர் கே சிங் ஒப்புதல்


 நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் திரு ஆர் கே சிங் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

மின்சாரக் கட்டணங்களை எளிதில் கணக்கிட்டு டிஜிட்டல் முறையில் செலுத்துவதற்காகவும், தங்களது மின்சாரப் பயன்பாடு குறித்து நுகர்வோர் உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும், மின்சாரச் சிக்கனத்தைக் கடைபிடிக்கும் விதமாகவும், முன்கூட்டியே கட்டணம் செலுத்தும் வாய்ப்பை வழங்குவதற்காகவும், மின்சார விநியோக நிறுவனங்களுக்கு உதவுவதற்காகவும் ஸ்மார்ட் மீட்டர்களை (திறன்மிகு கணக்கீட்டுக் கருவிகள்) பொருத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 27 ஜூலை, 2021

சட்டவிரோதக் குடியேற்றத்தை இந்தியா ஆதரிக்கவில்லை என மக்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந் ராய் தெரிவித்தார்.

 

சட்டவிரோதக் குடியேற்றத்தை இந்தியா ஆதரிக்கவில்லை என மக்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந் ராய் தெரிவித்தார்.

மக்களவையில் அவர் இன்று எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியிருப்பதாவது:

செல்லுபடியாகக் கூடியப் பயண ஆவணங்கள் இன்றி, நாட்டில் நுழையும் வெளிநாட்டினர் சட்டவிரோதக் குடியேறிகளாகக் கருதப்படுகின்றனர். எந்தவித சட்டவிரோதக் குடியேற்றத்தையும் இந்தியா ஆதரிக்கவில்லை.

கோமாரி நோய் மற்றும் Pesté des Petits Ruminants (PPR) ஆகிய இரண்டு நோய்களை முற்றிலும் ஒழிப்பத்ற்காக கால்நடை சுகாதாரம் மற்றும் நோய் கட்டுப்பாட்டு திட்டம்.-- பால்வளம் அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா

 

நாடாளுமன்ற மக்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

கோமாரி நோய் மற்றும் பெஸ்டே டெஸ் பெடிட்ஸ் ருமினண்ட்ஸ் (பிபிஆர்) ஆகிய இரண்டு நோய்களை முற்றிலும் ஒழிப்பத்ற்காக கால்நடை சுகாதாரம் மற்றும் நோய் கட்டுப்பாட்டு திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.

தஜிகிஸ்தானில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம்: மத்திய அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பங்கேற்பு


 ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பினர் நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களின் ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், ஜூலை 27-29 வரை தஜிகிஸ்தானின் துஷான்பேவிற்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த வருடாந்திர கூட்டத்தில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு சார்ந்த விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்றும், கூட்டம் நிறைவடைந்த பிறகு அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 28-ஆம் தேதி திரு ராஜ்நாத் சிங் உரையாற்றுவார்.

 

மருந்துகளுக்கான உற்பத்திச் சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின் மூலம் ஆறு வருடங்களில் ரூ 1,96,000 கோடி மதிப்புள்ள ஏற்றுமதிகளுக்கு வாய்ப்புள்ளது.- திரு மன்சுக் மாண்டவியா


 நாடாளுமன்ற மக்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் படி, 2020 மே 29 அன்று மொத்தம் 8532 மருந்து நிறுவனங்கள் நாடு முழுவது இயங்கி வந்தன. இவற்றில் தமிழ்நாட்டில் 514 நிறுவனங்கள் அமைந்துள்ளன.

இந்திய உர நிறுவனத்தின் டால்ச்சர் ஆலைக்கு புத்தாக்கம் தர இந்திய அரசு முடிவெடுத்துள்ளது.

இந்தியாவின் ஆயுஷ் படிப்புகளைப் படிக்கும் வெளிநாட்டவருக்குக் கல்வி ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை ஆயுஷ் அமைச்சகம் எடுத்து வருகிறது.- திரு மகேந்திரபாய் முஞ்சப்பாரா


 நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய ஆயுஷ் இணை அமைச்சர் திரு மகேந்திரபாய் முஞ்சப்பாரா கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

ஆயுஷ் துறையில் சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்காக, சர்வதேச  பிரச்சாரம், பல்வேறு நாடுகளுடன் இருதரப்பு மற்றும் பலதரப்பு பேச்சுவார்த்தைகள், வர்த்தக வசதியளித்தல், பிரத்யேக ஆயுஷ் ஏற்றுமதி ஊக்குவிப்புக் குழுவை நிறுவுதல், சர்வதேச கண்காட்சிகளில் பங்கேற்க தொழில்துறை மற்றும் மருத்துவமனைகளுக்கு ஆதரவு, உலக சுகாதர அமைப்பு மற்றும் ஐஎஸ்ஓ ஆகியவற்றுடன் இணைந்து தர நிலைகளை உருவாக்குவதற்கக நிபுணர்களை பல்வேறு நாடுகளுக்கு அனுப்புதல், முதலீடுகளுக்கு ஊக்கம், சர்வதேச அயுஷ் நிறுவனங்களை அமைத்தல், இந்தியாவின் ஆயுஷ் படிப்புகளைப் படிக்கும் வெளிநாட்டவருக்குக் கல்வி ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை ஆயுஷ் அமைச்சகம் எடுத்து வருகிறது.

காஷ்மீர் இளம் தலைமுறையினர் தங்களின் வளமான மரபிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். காஷ்மீர் இந்தியாவின் இதர பகுதிகளுக்கு நம்பிக்கை ஒளியாக இருக்கிறது.- திரு ராம்நாத் கோவிந்த்


 காஷ்மீர் இளம் தலைமுறையினர் தங்களின்  வளமான மரபிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் வலியறுத்தினார்.

காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் 19வது பட்டமளிப்பு விழாவில்,  இன்று நேரடியாக பங்கேற்ற குடியரத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:  

காஷ்மீர் இளம் தலைமுறையினர் தங்களின்  வளமான மரபிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.  காஷ்மீர் இந்தியாவின் இதர பகுதிகளுக்கு நம்பிக்கை ஒளியாக இருக்கிறது என்பதை நீங்கள் அறிய வேண்டும். காஷ்மீரின் ஆன்மீக மற்றும் கலாச்சார செல்வாக்கு,  நாடு முழுவதும் தடம் பதித்துள்ளது. 

அந்தமான் & நிக்கோபார் பிரிவால் கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டது


 1999-ல் நடைபெற்ற கார்கில் போரில் இந்தியாவின் வெற்றியை குறிக்கும் விதமாக பிர்ச்குன்ஜ் ராணுவ மையத்தில் 2021 ஜூலை 26 அன்று கார்கில் வெற்றி தினம் அந்தமான் & நிக்கோபார் பிரிவால் கொண்டாடப்பட்டது.

ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புதின் ஆய்வு செய்த ரஷ்ய கடற்படையின் 325-வது ஆண்டு விழாவில் ஐஎன்எஸ் தபார் (INS TABAR) பங்கேற்றது.


 ரஷ்ய கடற்படையின் 325-வது கடற்படை நாள் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக இந்திய கடற்படை கப்பலான ஐஎன்எஸ் தபார் ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்கை 2021 ஜூலை 22 அன்று சென்றடைந்தது.

கொரோனா தொற்றை முன்னிட்டு, மன நலத்தை பொது சுகாதார பிரச்சினையாக கருதி முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.- திரு எம்.வெங்கையா நாயுடு


 கொரோனா  தொற்றை முன்னிட்டு, மன நலத்தை பொது சுகாதார பிரச்சினையாக கருதி முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் திரு எம்.வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்.

கம்போடியா மற்றும் வியட்நாமில் உள்ள பழங்கால இந்து கோயில்கள் பற்றி ஆந்திரப் பிரதேச முன்னாள் எம்எல்ஏ திரு என்.பி. வெங்கடேஸ்வர சவுத்திரி ‘கம்போடியா - இந்து தேவாலயலா புன்னிய பூமி மற்றும் நேதி வியட்நாம் - நாதி ஹைன்தவா சம்ஸ்கிருதி’ என்ற தலைப்பில் எழுதிய இரண்டு தெலுங்கு புத்தகங்களை காணொலி காட்சி மூலம் குடியரசு துணைத் தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு வெளியிட்டார்.

பிற்படுத்தப்பட்டோருக்கான ஜாதி கணக்கெடுப்பு: பிற்படுத்தப்பட்டவர் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் பிரதமர் மோடி, பிற்படுத்தப்பட்டோர் கணக்கெடுப்பு எடுக்க மறுப்பது ஏன்? - கி.வீரமணி



பிற்படுத்தப்பட்டோருக்கான ஜாதி கணக்கெடுப்பு: பிற்படுத்தப்பட்டவர் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் பிரதமர் மோடி - பிற்படுத்தப்பட்டோர் கணக்கெடுப்பு எடுக்க மறுப்பது ஏன்? - கி.வீரமணி

நீதிமன்றங்களில் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்குக்கு இது அவசியம் தேவை
தி.மு.க. அரசு தனியே ஜாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ளட்டும்!

நம் நாட்டில் மட்டும்தான் பிறப்பின்  அடிப்படையில் மனிதர்களைப் பேதப்படுத்தி பிரித்து வைக்கும் ஜாதி முறை, சனாதனத்தின் பாதுகாப்பு அரணான ஹிந்து மதம் என்ற வேத மதத்தின் மூலக் கல்லாக - வருணாசிரம தர்ம முறை என்ற பெயரில் வேதங்கள், சாஸ்திரங்கள், சட்டங்கள்மூலம் பாதுகாக்கப்பட்டு, இன்றும் அதன் தாக்கத்தினால் படிப்பு, உத்தியோகம் உயர்ஜாதியினரின் ஏகபோகமாக சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பெரும்பான்மையோருக்கு பாதிப்பாக உள்ளது.

மனுமுதல் முதல் ஜாதியின் பெயரால் ஜாதி சங்கம் நடத்தும் தலைவர்கள் வரை.

ஜாதியை தாங்களே உருவாக்கியதாகக் கூறும் கடவுள்களும் மனுதர்மமும், பகவத் கீதையும் ஆதாரபூர்வமாக இந்தக் கொடுமையை நியாயப்படுத்துவது மறுக்க முடியாத உண்மை.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ‘ஜாதி’ (Caste) என்ற சொல் 18 தடவை கையாளப்படுகிறது!

நாட்டில் இன்னும் ஜாதி அடிப்படையில்தான் பல திருமணங்கள் நிச்சயிக்கப்பட தனித்தனி ஜாதிக்கென திருமண நிலையங்களே - சற்றும் கூச்சநாச்சமின்றி வெளிப்படையாக விளம்பரப்படுத்திடும் வியாபாரமாக நடைபெறுகின்றன.
ஜாதிச் சங்கங்களும் அவற்றையே படிக்கட்டாக, ஏணியாக ஆக்கி, அரசியல் நடத்தும் தலைவர்களும் அரசியல் அரங்கில் ஏராளம் உள்ளனர் என்பதும் யதார்த்தமாகும்!

ஒரே நாடு, ஒரே மதம் என்போர் ஒரே ஜாதி என்று கூறத் தயாரா?

இந்நிலையில், ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே ரேஷன் கார்டு என்றெல்லாம் கூறி, அவசர அவசரமாக பல சட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பிரதமர் மோடி தலைமையிலான - ஆர்.எஸ்.எஸினால் வழி நடத்தப்படும் பா.ஜ.க. ஒன்றிய அரசு ‘ஒரே ஜாதி’ என்று பிரகடனப்படுத்தி, ஜாதியை ஒழித்து, ஏன் மக்களிடையே ஒருமைப்பாட்டை உருவாக்கக்கூடாது என்று நாம் தொடர்ந்து எழுப்பும் கேள்விக்கு இதுவரை பதிலே தரப்படவில்லை!

இந்நிலையில், கரோனா காலத்தால் நிறுத்தி வைக்கப்பட்டு - மீண்டும் தொடங்கவிருக்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் (சென்சஸ் 2021 இல்) ஆதிதிராவிடர் (எஸ்.சி.,), பழங்குடியினர் (எஸ்.டி.) தவிர இதர பிற்படுத்தப்பட்டவர்களிடம் ஜாதி ரீதியான கணக்கெடுப்பு செய்வதில்லை என்பது ஒன்றிய அரசின் கொள்கை முடிவு என்று ஒன்றிய இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமான பதில் அளித்திருக்கிறார்!
இது எவ்வகையில் நியாயம்?

இட ஒதுக்கீட்டை நிர்ணயிக்க ஜாதிவாரி கணக்கெடுப்புத் தேவையே!

ஜாதிக் கொடுமையால் - பல்லாயிரம் ஆண்டுகளாக பல கோடி மக்கள் ஒடுக்கப்பட்டு, உடல் உழைப்புக்காரர்களாக மட்டுமே ஆக்கப்பட்டு, கல்வி, உத்தியோக வாய்ப்புகள் கதவடைக்கப்பட்டதையும் மாற்றுவதே சமூகநீதி - இட ஒதுக்கீடுமூலம் கடந்தகால சமூக அநீதியின் விளைவைப் போக்கி, சம வாய்ப்பு, சமத்துவ சமுதாயத்தை உருவாக்கிடத்தான் இட ஒதுக்கீடு.

அதனை அரசமைப்புச் சட்டப்படி பெரும்பான்மையான பாதிப்புக்குள்ளாகியுள்ள இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், தாழ்த்தப்பட்ட, பழங்குடி ஜாதியினரைப் போல ஜாதி ரீதியாக மக்கள் தொகை கணக்கெடுத்து, அவர்களுக்கு தற்போது அளிக்கும் இட ஒதுக்கீடு மிகை அல்ல;போதுமானதும் அல்ல என்று  உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம்,  சில உயர்ஜாதி ஊடகத்தவர்களுக்குப் புரிய வைக்க ஒரே வழி, மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி உள்ள புள்ளிவிவரங்கள்தானே!

அதை அப்படி செய்யக்கூடாது என்று ஒன்றிய பா.ஜ.க. அரசு கூறுவது, அந்த ஓ.பி.சி. (இதர பிற்படுத்தப்பட்ட) மக்களுக்கு திட்டமிட்டு இழைக்கப்படும் ஒரு அநீதி அல்லவா?

அதுவும் தானும் பிற்படுத்தப்பட்ட ஜாதிதான் என்று காட்டிக்கொண்ட ஒருவர்,  பிரதமராக இரண்டாவது முறையும் இருக்கும் நிலையில் - அவர்களுக்கு மட்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பு மறுப்பது எவ்வகையில் நியாயம் - இது மிகப்பெரிய அநீதி அல்லவா?

‘தலைக்கு ஒரு சீயக்காய்; தாடிக்கொரு சீயக்காயா?’ என்று தந்தை பெரியார் கூறும் உவமைதான் நினைவிற்கு வருகிறது!

தமிழ்நாடு அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ளவேண்டும்!

பீகார், ஒரிசா, மராத்தியம், தமிழ்நாடு போன்ற பல மாநிலங்களும், அரசுகளும் ஜாதிவாரி கணக்கெடுப்பை வற்புறுத்துகையில், ஒன்றிய அரசு அதனை மறுக்கலாமா?

ஒன்றிய அரசு தனது கொள்கை முடிவினை மறுபரிசீலனை செய்ய முன்வரவேண்டும். அதன் நெருப்புக்கோழி மனப்பான்மையால் பல கோடி பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் வெகுவாகப் பாதிக்கப்படுவார்கள் என்பது உறுதி.

இதற்கிடையில், தமிழ்நாட்டில் ஜாதிவாரியாக கணக்கெடுக்க - மாநில அரசு சார்பில் - முந்தைய அ.தி.மு.க. அரசு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டீஸ் குலசேகரன் அவர்கள் தலைமையில், பல அய்.ஏ.எஸ். அதிகாரிகளின் துணையோடு - ஜாதிவாரி கணக்கெடுப்புக் குழுவை நியமித்த நிலையில் பொதுத் தேர்தல் குறுக்கிட்டது.

நீதிபதி ஜஸ்டீஸ் குலசேகரன் ஆணையத்தை தொடர வைத்து..

அந்தக் குழுவின் பதவிக்காலம் (21.12.2020 அன்று நியமிக்கப்பட்ட அதன் பதவிக் காலம் 20.6.2021 தேதியோடு முடிவடைந்து இருப்பதால்) அதைத் தொடர வைத்து, அறிக்கை  வழங்க - தமிழ்நாட்டில் உள்ள ஜாதிவாரி கணக்கெடுப்பை முடிக்க புதிய தி.மு.க. அரசு அதற்கான மேலும் ஒரு ஆறு மாதம் (ஆறுமுகசாமி ஆணையத்திற்கு பதவி நீட்டிப்பு 11 ஆவது முறையாகத் தந்ததுபோல) ஜஸ்டீஸ் குலசேகரன் ஆணையத்தை இயங்க வைத்து, கணக்கெடுப்பு பெறுவதன்மூலம் நீதிமன்றங்களில் வழக்குகள் வரும்போது, இந்த கணக்கெடுப்பைப் பயன்படுத்த உதவியாக அமையும்; மற்றும் பல விஷயங்களுக்கு ஜாதிவாரியாக தமிழ்நாட்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பயன்படக்கூடும்.

அக்குழுவினர் போலித்தனமான ஜாதி எண்ணிக்கையினை பெருக்கிக் காட்டுவோரிடம் எச்சரிக்கையுடன் பணி செய்து, உண்மைகள் கள பலியாகாமல் காப்பதுவும் முக்கியமாகும்; தமிழ்நாடு அரசு, முதலமைச்சர் அவர்கள் இணக்கமாக சிந்திப்பாராக!

சமூகநீதிக் கண்ணோட்டத்தில் இது அவசர, அவசியம்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சமுதாய மக்களுக்கும் அவர்களின் மக்கள் தொகைக்கு இணையான இட ஒதுக்கீட்டை பெற்றுத் தருவது தான் எனது இலக்கு.- DR.S.ராமதாஸ்



நடைமுறைக்கு வந்தது வன்னியர் 10.50% இட ஒதுக்கீடு: வாடிய மக்கள்
இனி வாழ்க்கையில் முன்னேறட்டும்! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை, அச்சட்டம் நிறைவேற்றப்பட்ட 26.02.2021 முதல் செயல்படுத்த தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருக்கிறது. இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது கோரிக்கையை ஏற்று இதற்கான சட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்த முந்தைய ஆட்சியின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை தயாரித்தது முதல் பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுனரின் ஒப்புதல் பெற்று அரசாணை பிறப்பிக்கப்படும் வரை அனைத்து ஏற்பாடுகளையும் செய்த முந்தைய அரசின் சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் ஆகியோருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்தும், தமிழகத்தின் உரிமையை மீட்கவும், தமிழக மக்களின் நலன் காக்கவும், சுயேச்சையாகவும், தோழமைக் கட்சிகளோடு இணைந்தும் தொடர்ந்து போராடுவோம்.- கே.பாலகிருஷ்ணன்




ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்தும்; 
தமிழகத்தின் உரிமையை மீட்கவும், தமிழக மக்களின் நலன் காக்கவும்: 
சுயேச்சையாகவும், தோழமைக் கட்சிகளோடு இணைந்தும் தொடர்ந்து போராடுவதென சிபிஐ(எம்) மாநிலக்குழு அறைகூவல்

நூற்றாண்டு விழா கொண்டாடும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தன்னுடைய புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

அமெரிக்க தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம்

கியூப புரட்சியை சீர்குலைக்கும் வகையில் அமெரிக்க வல்லரசு தொடர்ந்து சீரழிவு வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. ஐ.நா. பொதுமன்றம் கியூபா மீதான தடையை நீக்க வேண்டுமென பலமுறை தீர்மானம் நிறைவேற்றியும் தடையை நீக்க மறுக்கும் அமெரிக்கா குழப்பத்தை ஏற்படுத்தி கியூப அரசை கவிழ்க்க முயல்கிறது. இதை எதிர்த்து ஒன்றுபட்டு போராடி வரும் கியூப மக்களுக்கு ஆதரவாகவும், அமெரிக்க ஏகாதிபத்திய அரசினை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிபிஐ (எம்-எல்) லிபரேசன் ஆகிய கட்சிகளின் சார்பில் 29.7.2021 அன்று சென்னையில், அமெரிக்க தூதரகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஞாயிறு, 25 ஜூலை, 2021

விடுதலையின் அம்ரித் மகோத்சவம்: மின் பயன்பாடுகளின் முக்கிய ஒழுங்குமுறை அளவுருக்கள் அறிக்கையை வெளியிட்டனர் மத்திய மின்துறை அமைச்சர்கள்


 ஊரக மின்மயமாக்க கார்ப்பரேஷன் நிறுவனத்தின்  (REC) 52வது நிறுவன தினத்தை முன்னிட்டு, ஹரியானா மாநிலம் குருகிராமில் அமைக்கப்பட்டுள்ள ஆர்இசி நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகத்தை மத்திய மின்துறை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் திரு ஆர்.கே. சிங் தொடங்கி வைத்தார். அப்போது இத்துறை இணையமைச்சர் திரு கிரிஷன் பால் குர்ஜார், மின்துறை செயலாளர் திரு. அலோக் குமார், ஆர்இசி நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் திரு சஞ்சய் மல்கோத்ரா மற்றும் மின்துறை அமைச்சக அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பிரதமரின் தொடர் ஆதரவால் காதியின் விற்பனை அதிகரித்திருப்பதாகவும், இளைஞர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதாகவும் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவர் கூறினார்


 காதி பொருட்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடர்ந்து ஊக்குவித்து வருவதன் காரணமாக கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் காதி பொருட்களின் விற்பனை பெருவாரியாக அதிகரித்துள்ளது. அக்டோபர் 2016 முதல் புதுதில்லியின் கெனாட் பிளேசில் உள்ள காதி விற்பனை வளாகத்தில் 11 வெவ்வேறு தருணங்களில் ஒரு நாளின் விற்பனை ரூ. 1 கோடியைக் கடந்திருக்கிறது. இன்று (ஜூலை 25, 2021) வானொலியில் ஒலிபரப்பான பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியில் காதியின் இந்த செயல் திறன் பற்றி குறிப்பிடப்பட்டது.

சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய 66 சதவீத பள்ளிகள் மற்றும் 60 சதவீத அங்கன்வாடி மையங்களில் குடிநீர் குழாய் இணைப்பு


 கொவிட்-19 தொற்றை முன்னிட்டு, பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், உண்டு உறைவிட பள்ளிகளில் உள்ள குழந்தைகளுக்கு, சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய, இங்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பிரச்சாரத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி, கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி தொடங்கினார்.

இந்த பிரச்சாரம் தொடங்கப்பட்டு 10 மாதங்களுக்கு குறைவான காலத்தில், நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் 6.85 லட்சம்(66 சதவீதம்) பள்ளிகள், 6.80 லட்சம்(60%) அங்கன்வாடி மையங்கள் மற்றும் 2.36 லட்சம் (69%) கிராம பஞ்சாயத்துக்கள் மற்றும் சமுதாய சுகாதார மையங்களில் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

‘‘என்றும் பசுமைமாறா வடகிழக்கு’’ மரங்கள் நடுவதற்காக, ஒட்டுமொத்த சிரபுஞ்சியையும் அசாம் ரைபிள்ஸ் (Assam Rifles) படைப்பிரிவு தத்தெடுக்கவுள்ளது.- திரு.அமித்ஷா


 மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா, மேகாலயா பயணத்தின் 2வது நாளில், சோஹ்ரா(சிரபுஞ்சி) என்ற இடத்தில் பசுமை சோஹ்ரா காடு வளர்ப்பு பிரச்சாரத்தை இன்று தொடங்கிவைத்தார். பெருநகர  சோஹ்ரா குடிநீர் விநியோக திட்டத்தையும், திரு அமித்ஷா தொடங்கிவைத்தார்.  

இந்நிகழ்ச்சியில், வடகிழக்கு பகுதி மேம்பாட்டு அமைச்சர் திரு ஜி.கிஷன் ரெட்டி, இணையமைச்சர் பி.எல்.வர்மா, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங், மேகாலயா முதல்வர் திரு கான்ரட் சங்மா உள்பட மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.

மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் கோவாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை இந்திய முப்படையினர் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.


 மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் கோவாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை இந்திய முப்படையினர் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். மகாராஷ்டிராவின் ரத்னகிரி, கோலாப்பூர் மற்றும் சங்கிலி மாவட்டங்களில் இந்திய ராணுவத்தின் காலாட்படைகள், பொறியாளர்கள், தொலைத்தொடர்பு, மீட்பு மற்றும் மருத்துவ குழுக்கள் அடங்கிய பணிக் குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். சிப்லன், ஷிரால், ஹட்காங்லே, பாலஸ் மிராஜ் பகுதிகளில் இந்தக் குழுவினர் பல்வேறு உயிர்களைக் காப்பாற்றியுள்ளனர்.

சனி, 24 ஜூலை, 2021

மத்திய அரசின் குறிப்பிடத்தக்க முடிவின்படி, 5 மருத்துவ உபகரணங்களுக்கான வர்த்தக விலையை தேசிய மருந்து விலை ஆணையகம் (NPPA) நிர்ணயித்துள்ளது.


 மத்திய அரசின் குறிப்பிடத்தக்க முடிவின்படி, 5 மருத்துவ உபகரணங்களுக்கான வர்த்தக எல்லையை ஜூலை 13 தேதியிட்ட அறிவிக்கையில்  தேசிய மருந்து விலை ஆணையகம் (என்பிபிஏ) நிர்ணயித்துள்ளது. இந்த ஐந்து உபகரணங்கள் பின்வருமாறு:

1.       பல்ஸ் ஆக்ஸிமீட்டர்

2.       ரத்த அழுத்தத்தைக் கண்காணிக்கும் இயந்திரம்

3.       நெபுலைசர்

4.       மின்னணு வெப்பமானி

5.       க்ளூகோமீட்டர்

சர்வதேச பிரச்சினைகளில் புத்தமத மாண்புகள் மற்றும் கொள்கைகளைக் கடைப்பிடிப்பது, மேம்பட்ட இடமாக உலகை மாற்றுவதற்கு உதவிகரமாக இருக்கும்.- குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த்


 சர்வதேச பிரச்சினைகளில் புத்தமத மாண்புகள் மற்றும் கொள்கைகளைக் கடைப்பிடிப்பது, மேம்பட்ட இடமாக உலகை மாற்றுவதற்கு உதவிகரமாக இருக்கும் என்று குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் கூறியுள்ளார்.

சர்வதேச புத்தமத கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த வருடாந்திர ஆஷாத பூர்ணிமா- தர்மசக்கர தின நிகழ்ச்சியில் இன்று (ஜூலை 24, 2021) காணொலி வாயிலாக வெளியிட்ட செய்தியில் அவர் இதனைத் தெரிவித்தார். புத்தர் அருளிய போதனைகளின் சாராம்சத்தில் நிலைத்திருப்பது மிகவும் அவசியம் என்றும், அதன் வேறுபட்ட விளக்கங்களால் பாதை மாறக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். இது சம்பந்தமாக சர்வதேச புத்தமத கூட்டமைப்பின் நோக்கங்கள் பாராட்டத்தக்கவை என்று அவர் குறிப்பிட்டார். மனித சமூகத்திற்கு சேவையாற்றுவதற்காக அனைத்து புத்த பாரம்பரியங்கள் மற்றும் அமைப்புகளுக்கான பொதுவான தளத்தை உருவாக்கிய இந்தக் கூட்டமைப்பின் முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.

அரசு ஊழியர்களின் ஓய்வு வயது மீண்டும் 58 ஆகக் குறைக்கப்பட வேண்டும் வேலை வாய்ப்பு பெருகட்டும், நம் இளைஞர்களின் துயரம் நீங்கட்டும்! - கி.வீரமணி

 தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பின் அபாய நிலை ஓய்வு வயதை அ.தி.மு.க. அரசு உயர்த்தியதன் பின்னணி என்ன?

இந்த நெருக்கடியிலிருந்து மீள தி.மு.க. அரசு செய்யவேண்டியது என்ன?

அரசு ஊழியர்களின் ஓய்வு வயது மீண்டும் 58 ஆகக் குறைக்கப்பட வேண்டும்

வேலை வாய்ப்பு பெருகட்டும் - நம் இளைஞர்களின் துயரம் நீங்கட்டும்!

 - கி.வீரமணி

தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்து வேலைக்காகக் காத்திருக்கும் இளைஞர்கள் - நடுத்தர வயதினர்களின் எண்ணிக்கை 67 லட்சத்து  76 ஆயிரமாக உள்ளது என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இதில் பட்டதாரி மற்றும் வயது குறைந்த இளைஞர்களின் எண்ணிக்கை  சுமார் 12 லட்சம் ஆகும். மற்றும் சுமார் ஒன்றரை லட்சம் பேர் வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகள்!