சனி, 29 பிப்ரவரி, 2020

டெல்லி துணைநிலை ஆளுநருக்கு அறிவுறுத்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற குழுத்தலைவர்கள் குடியரசுத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதம்

amnews

டெல்லியில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக போராடும் மக்கள் மீதான தாக்குதலில் மனிதாபிமானத்தோடு தீர்வு கண்டிட எதிர்க்கட்சிகள் அமைதி ஊர்வலம் நடத்திட அமைதிக்குழுக்கள் அமைத்திட அனுமதிகோரி சீத்தாராம் யெச்சூரி, பிரஃபுல் படேல், டி.ராஜா, டி.ஆர்.பாலு, மனோஜ்குமார் ஜா, சரத் யாதவ், சஞ்சய் சிங், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற குழுத்தலைவர்கள்  மேதகு குடியரசுத் தலைவருக்கு எழுதியுள்ள கடித விவரம்:

மரியாதைக்குரிய குடியரசுத் தலைவர் அவர்களே,

இக்கடிதத்தில் கையொப்பமிட்டுள்ள கட்சிகளின் தலைவர்கள் தங்களைச் சந்தித்து டெல்லியில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டு, ஏறத்தாழ 37 பேர் மரணமடையவும் - 200 பேருக்கு மேல் படுகாயமடையவும் உள்ள நிலையில், இதுகுறித்து எங்கள் கவலையையும் - அக்கறையையும் தங்களுக்குத் தெரிவிக்க நேரம் கேட்டிருந்தோம்.

ஈரானில் சிக்கிய இந்திய மீனவர்களை மீட்க உடனே விமானம் அனுப்புங்கள் - வைகோ


ஈரானில் சிக்கிய இந்திய மீனவர்களை மீட்க, வான்ஊர்தி அனுப்புங்கள் அயல்உறவுத்துறை அமைச்சருக்கு வைகோ கோரிக்கை

900 இந்திய மீனவர்கள் ஈரான் நாட்டில் ஒதுங்கி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அவர்களுள், 700 பேர் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

ஈரான் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு நேரடி வான் ஊர்திகள் இல்லை என்பதால், அவர்களை மீட்கும் பணி தாமதம் அடைந்துள்ளது. வளைகுடா நாடுகளின் வான் ஊர்திகள் தொடர்பும் இல்லை.

வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்குகளை விற்பதை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக கைவிட வேண்டும்.- கே.எஸ்.அழகிரி


மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன் எத்தகைய பொருளாதாரப் பாதையில் பயணம் மேற்கொள்வது என்பது குறித்து தெளிவான பார்வையும், புரிதலும் இல்லாத காரணத்தால் பல தடுமாற்றங்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன. சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் மத்திய பா.ஜ.க. அரசின் அவலநிலை குறித்து படம் பிடித்து காட்டியிருப்பதை நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடாதது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பொருளாதார ஆய்வறிக்கையை எந்த மத்திய அரசும் இதுவரை புறக்கணித்ததில்லை. ஆனால், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதில் கூறப்பட்டுள்ள பல தகவல்களை கண்டும், காணாமல் இருந்தது பொருளாதார நிபுணர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

வெறுப்புப் பேச்சுகளை கட்டுப்படுத்த புதிய தண்டனை சட்டம் வேண்டும்! - DR.S.ராமதாஸ்


வெறுப்புப் பேச்சுகளை கட்டுப்படுத்த
புதிய தண்டனை சட்டம் வேண்டும்! - DR.S.ராமதாஸ்

இந்தியாவில் அரசியல் மற்றும் சமூகத் தளங்களில் அண்மைக்காலங்களில் நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்தால், இனி வரும் காலங்களில் மக்கள் நட்புடனும், நல்லிணக்கத்துடனும் வாழ முடியுமா? என்பதே ஐயமாகியிருக்கிறது. அடுத்தவர்கள் மீது வெறுப்பை உமிழக்கூடிய பேச்சுகளும், தீய பிரச்சாரங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது தான் இதற்கு காரணமாகும். இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் சட்ட அமைப்புகள் வலியுறுத்தியும் அது செவி மடுக்கப்படாதது வருத்தமளிக்கிறது.

தில்லி கலவரம் ஆக்கப்பூா்வமான தீா்வு காண வேண்டும் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்


தில்லி கலவரம் ஆக்கப்பூா்வமான தீா்வு காண வேண்டும் 
ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

தமிழக நிதிநிலை அறிக்கையில் கல்வித் துறைக்கு ரூ.34 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டதற்கும், மாவட்டங்கள் தோறும் மாதிரி பள்ளிகள், பொலிவுறு வகுப்பறைகள் ஏற்படுத்தி தனியாா் பள்ளிகளுக்கு ஈடாக அரசுப் பள்ளி கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுவதற்கும் முதல்வா், கல்வி அமைச்சா் ஆகியோருக்கு பெற்றோா்கள் சாா்பில் பாராட்டுகள்.

பொறியியல் கல்வியில், வேதியியல், கட்டாயப் பாடமாகத் தொடர்ந்து நீடிக்க வேண்டும் - வைகோ கோரிக்கை


பொறியியல் கல்வியில், வேதியியல், கட்டாயப் பாடமாகத் தொடர்ந்து நீடிக்க வேண்டும் - வைகோ கோரிக்கை

பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான தகுதிப் பாடங்களுள் ஒன்றாக, வேதியியல் இடம் பெற்று இருக்கின்றது.

அண்மையில், இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE), கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பி உள்ள சுற்று அறிக்கையில், பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு, மேனிலை வகுப்பில் வேதியியல் படித்து இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை; வேதியியல் மதிப்பு எண்களைக் கணக்கிட வேண்டியது இல்லை எனத் தெரிவித்து இருக்கின்றது. கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் பெற்ற மதிப்பு எண்களை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டால் போதும் என்றும் கூறி இருக்கின்றது. அதேபோல, பொறியியல் கல்விக்கான பாடங்களை மாணவர்களின் விருப்பத் தேர்வுக்கு விட்டுவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தில்லி வன்முறைகளை பா.ஜ.க.வினர் தமிழ்நாட்டிலும் கட்டவிழ்த்துவிடும் அபாயமுள்ளது! - பெ. மணியரசன்


தில்லி வன்முறைகளை பா.ஜ.க.வினர்
தமிழ்நாட்டிலும் கட்டவிழ்த்துவிடும் அபாயமுள்ளது!
தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

- பெ. மணியரசன் அறிக்கை!


(தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் )

தில்லியில் கடந்த 23.02.2020 முதல் நடந்து கொண்டிருக்கும் மதப்படுகொலைகளும், மதக் கலவரங்களும், வீடுகள் – கடைகள் கொளுத்தப்படுவதும், தமிழ்நாட்டிலும் தொடங்கி விடுமோ என்ற அச்சம் பெருமளவுக்கு ஏற்பட்டுள்ளது.

தில்லி மதவெறியாட்டம் - இசுலாமியர்கள் படுகொலை: பிப்ரவரி 29, சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்


தில்லி மதவெறியாட்டம் - இசுலாமியர்கள் படுகொலை: 
பிப்ரவரி 29, சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் 
விடுதலைச் சிறுத்தைகள் அறிவிப்பு  

கடந்த சில நாட்களாக புதுதில்லியில் இசுலாமியர்களுக்கு எதிராக நடந்து வரும் வன்முறை வெறியாட்டம் பெரும் கவலை அளிப்பதாக உள்ளது. இந்த வன்முறையில் ஒரு காவலர் உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட இசுலாமியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இன்னும் கண்டெடுக்கப்படாத சடலங்கள் உள்ளன என்றும் தெரியவருகிறது.

வியாழன், 27 பிப்ரவரி, 2020

காற்றை விதைத்துப் ‘புயலை' அறுவடை செய்கிறது! பாஜக - கி.வீரமணி அறிக்கை


தேசிய குடிமக்கள் பதிவேட்டினை எதிர்த்து பீகார் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்; ஆனால், தமிழ்நாட்டில்? வரலாற்றுப் பிழைகளை அடுக்கடுக்காகச் செய்து - துடைக்க முடியாத வரலாற்றுக் கறைகளை ஏற்றிக் கொள்ளா தீர்கள்! வரலாறு ஒருபோதும் மன்னிக்காது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர்  தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள  அறிக்கை வருமாறு:

போர்க்குற்ற விசாரணையிலிருந்து இலங்கை விலகல்: இந்திய அரசு தலையிட வேண்டும்! - DR.S.ராமதாஸ்


போர்க்குற்ற விசாரணையிலிருந்து இலங்கை 
விலகல்: இந்திய அரசு தலையிட வேண்டும்! - DR.S.ராமதாஸ்
இலங்கைப் போரின் போது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்த பன்னாட்டு விசாரணையிலிருந்து விலகிக் கொள்வதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தில் அந்நாடு அறிவித்திருக்கிறது. போர்க்குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கான இலங்கை அரசின் இந்த முயற்சி கண்டிக்கத்தக்கதாகும்.

இந்திய மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி, மோதலை உருவாக்கி, குளிர்காய நினைக்கும் பா.ஜ.க - கே.எஸ்.அழகிரி


இந்திய மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி, மோதலை உருவாக்கி, குளிர்காய நினைத்த பா.ஜ.க.வின் பதுங்கு திட்டங்கள் தலைநகர் தில்லியில் அம்பலமாகியுள்ளன. வடகிழக்கு தில்லியில் குடியுரிமை திருத்த சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் கடந்த நான்கு நாட்களாக நீடித்த வன்முறையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்திருக்கிறது.

வன்முறை வெடித்த தொகுதியில் போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லாததே கலவரம் நீடிக்கக் காரணம் - தி.வேல்முருகன்


சமூகத்திற்கு எந்த வகையிலும் உதவாத மேல்சாதி-மேல்தட்டு மக்களின் ஆர்எஸ்எஸ்-பாஜக, சிஏஏ சட்டத்தால் தனிமைப்பட்டதன் விளைவே, மூளைச்சலவை செய்யப்பட்ட அப்பாவி அடித்தட்டு மக்களைத் தூண்டிவிட்டு டெல்லியில் கலவரம்; 18 பேர் பலி!

இதற்குக் காரணமான ஒன்றிய உள்துறையை, அதன் கீழ் உள்ள டெல்லி காவல்துறையை வன்மையாகக் கண்டிப்பதோடு, இத்தனை நடந்தும் கண்டுக்கொள்ளாமல் இருக்கின்ற டெல்லி முதல்வரை கண்டிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

சாவதற்காகவே வீதிக்கு வந்து போராடினால், பின்பு அவர்கள் எப்படி உயிருடன் இருக்க முடியும்?

உள்துறை அமைச்சர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்க மனமில்லையா? - மு.க.ஸ்டாலின்


"நாட்டின் தலைநகர் வன்முறை மயமான நிலையில், 
உள்துறை அமைச்சர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?

 சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்க மனமில்லையா?

#CAA போர் என்பது  இந்தியர்களைக் காப்பதற்கான போர்" -  மு.க.ஸ்டாலின் உரை.

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமைப் பாதுகாப்பு மாநாட்டு மேடையில் உரையாற்றுவதற்காக வந்திருக்கிறோம். எங்களுடைய உணர்வுகளைத் தெளிவுபடுத்த வந்திருக்கிறோம். ஒரு உறுதி எடுப்பதற்காகவும் நாங்கள் இங்கு வந்திருக்கிறோம்.

வன்முறைகள் தீர்வல்ல. தில்லியில் அமைதி திரும்ப நடவடிக்கை தேவை! - DR.S.ராமதாஸ்


வன்முறைகள் தீர்வல்ல. தில்லியில் 
அமைதி திரும்ப நடவடிக்கை தேவை! - DR.S.ராமதாஸ்

தலைநகர் தில்லியில் குரியுரிமை சட்டத் திருத்தத்தை ஆதரிப்போருக்கும், எதிர்ப்போருக்கும் இடையே  கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மோதலும், அதனால் உருவான கலவரமும் நான்காவது நாளாக இன்றும் நீடிப்பது அதிர்ச்சியும், கவலையும் அளிக்கிறது. இந்த வன்முறையில் எந்த தவறும் செய்யாத அப்பாவிகள் படுகொலை செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது; இது நிறுத்தப்பட வேண்டும்.

புதன், 26 பிப்ரவரி, 2020

"இலங்கைத் தமிழருக்கு இரட்டைக் குடியுரிமை: அதிமுக அரசின் பொய்யுரை மட்டுமல்ல - பச்சை துரோகம்" - திரு. தங்கம் தென்னரசு


"இலங்கைத் தமிழருக்கு இரட்டைக் குடியுரிமை: அதிமுக அரசின் பொய்யுரை மட்டுமல்ல - பச்சை துரோகம்" -  திரு. தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ., 

‘தி இந்து” ஆங்கில நாளிதழில் (25.02.2020) அன்று இரட்டைக் குடியுரிமை குறித்துத் தீட்டப்பட்டுள்ள தலையங்கம், இந்தியக் குடியுரிமை சட்டத்தின் கீழும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படியும் எவருக்கும் இரட்டைக் குடியுரிமை வழங்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கின்றது. இந்தியக் குடியுரிமைச் சட்டத்தைக் கடந்த  2003ம் ஆண்டு திருத்தியபோது கூட, இந்திய வம்சாவளியினராக வெளிநா.ட்டில் வகிக்கும் இந்தியர்களுக்கு குறிப்பிட்ட சில உரிமைகளை மட்டும் இந்தியாவில் வழங்க வகை செய்யப்பட்டுள்ளதையும், தாங்கள் இந்தியாவில் வாக்களிக்கும் உரிமையையோ அல்லது நிலம் போன்ற சொத்துக்களை வாங்குவதற்கோ அனுமதி இல்லை எனவும்  அத் தலையங்கம் தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளது.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் உள்பட மூன்றும் ‘‘பாசிச'' சட்டங்களே! - கி.வீரமணி


குடியுரிமைத் திருத்தச் சட்டம் உள்ளிட்ட மூன்று வகை சட்டங்களும் இந்திய அரசமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றும் அணிக்கும் - அதன் கட்டுமானத்தைத் தகர்க்கும் அணிக்கும் இடையிலான போராட்டமே என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர்  தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள  அறிக்கை வருமாறு:

செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

அண்ணா பல்கலைக்கழகம்: ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி கூடாது! - DR.S.ராமதாஸ்



அண்ணா பல்கலைக்கழகம் : ஓய்வு பெற்ற
ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி கூடாது! - DR.S.ராமதாஸ்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள காலியிடங்களை தகுதியானவர்களைக் கொண்டு நிரப்பாமல், ஒய்வுபெற்ற ஆசிரியர்களை பணியமர்த்த பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது. திறமையான இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும்.

டெல்லி கலவரம் - 7 பேர் சாவு ! அமித்ஷா பதவி விலகவேண்டும்! - தொல்.திருமாவளவன்


டெல்லி கலவரம் - 7 பேர் சாவு !
அமித்ஷா பதவி விலகவேண்டும்!
காவல்துறை அதிகாரத்தை டெல்லி அரசிடம் ஒப்படைக்க வேண்டும்!
விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அமைதியான முறையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கவளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவைச் சேர்ந்த கபில் மிஸ்ரா நடத்திய ஊர்வலத்தைத் தொடர்ந்து கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. இதில் ஒரு போலீஸ்காரர் உட்பட ஏழு பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் இந்த கலவரத்துக்கும் சாவுக்கும் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். காவல்துறை அதிகாரத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்

ஒரு ஊழல்வாதி - தன்னை விவசாயி என சொல்லிக்கொள்வதை தமிழக விவசாயிகள் விரும்பவில்லை -K.N.நேரு


“ஒரு ஊழல்வாதி - தன்னை விவசாயி என சொல்லிக்கொள்வதை தமிழக விவசாயிகள் விரும்பவில்லை - கபட வேடங்களை விட்டுவிடுங்கள்!” - கே.என்.நேரு எம்.எல்.ஏ

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது ஊழல்களை, லஞ்ச லாவண்யத்தை, கையாலாகாத்தனத்தை மறைப்பதற்காக 'நானும் ஒரு விவசாயி' என்று தினமும் புலம்பி வருகிறார். பச்சைத் துண்டு போட்டுக் கொண்டு நடிக்கிறார். தமிழ்நாட்டு விவசாயத்தைச் சிதைக்கும் ஏராளமான திட்டங்களுக்கு பச்சைக் கொடி காட்டி வரவேற்பு கொடுத்து வந்த பழனிச்சாமி, பச்சைத் துண்டு போட்டுக் கொண்டு தன்னை விவசாயியாக காட்டிக் கொள்வது பச்சைத் துரோகம் என்று மதுரையில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவரும் - எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் கண்டனம் தெரிவித்தார்கள்.

பா.ஜ.க. கூட்டணியில் இருப்பதால் அதிமுக தமிழ் மக்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்து கொண்டிருக்கிறார்கள்.


தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்தியா முழுவதும் 8 கோடி பேரின் குடியுரிமை பறிக்கப்படும் நாடற்றவர்களாக்கப்படுவார்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எச்சரித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தின் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறை வேற்றப்பட்டபோது பா.ஜ.க. அரசுக்கு ஆதரவு தெரிவித்த அய்க்கிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தற்போது தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு உள்ளன. கேரளா, மேற்கு வங்காளம், புதுச்சேரி மாநிலங்களை பின்பற்றி தமிழக அரசும் சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

தமிழக விவசாயிகளுக்கான அரசின் நற்பணிகள் தொடர, வளர, சிறக்க த.மா.கா சார்பில் வாழ்த்துகிறேன்.


தமிழக அரசு – பெட்ரோலிய ரசாயண முதலீட்டு மண்டலம் அமைக்கும் அரசாணையை ரத்து செய்தது வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியது

தமிழக அரசு நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களில் பெட்ரோலியம், ரசாயணம் மற்றும் பெட்ரோலிய ரசாயன முதலீட்டு மண்டலம் அமைக்க வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்தது வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியது.

திங்கள், 24 பிப்ரவரி, 2020

பொது இடங்களில் புகைத்தால் கூடுதல் தண்டம் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது! - DR.S.ராமதாஸ்


பொது இடங்களில் புகைத்தால் கூடுதல் தண்டம்
 அரசின் முடிவு வரவேற்கத்தக்கது! - DR.S.ராமதாஸ்
                
பொது இடங்களில் புகைப்பிடிப்போருக்கு விதிக்கப்படும் அபராதத்தை பலமடங்கு உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. பொது இடங்களில் புகை பிடிப்பதை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், மத்திய அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கதாகும்.

புதிய மருத்துவக் கல்லூரியை, கடலூரில்தான் தொடங்க வேண்டும்! - வைகோ அறிக்கை


சிதம்பரம் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியின் பெயரை மாற்றக் கூடாது; புதிய மருத்துவக் கல்லூரியை, கடலூரில்தான் தொடங்க வேண்டும்! - வைகோ அறிக்கை

தமிழகத்தின் பின்தங்கிய பகுதிகளுள் ஒன்றான, கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், செட்டிநாட்டு அரசர் இராஜா சர் அண்ணாமலை செட்டியார் அவர்களால் நிறுவப்பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகம், இலட்சக்கணக்கான மாணவர்களைப் பயிற்றுவித்து, பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து, உலக அளவில் தமிழகத்திற்கு மதிப்பைத் தேடித்தந்த கல்விக்குழுமம் ஆகும்.

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தொடர் நடவடிக்கை எடுத்திட வேண்டும். - ஜி.கே.வாசன்


காவிரி நீர் பங்கீட்டில் உரிய மாநிலங்களுக்கு உரிய தண்ணீர் காலமுறைப்படி கிடைத்திட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தொடர் நடவடிக்கை எடுத்திட வேண்டும். - ஜி.கே.வாசன்

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2020

தந்தை பெரியாரின் பக்கங்களை புரட்டிப் புரட்டிப் படியுங்கள்! - கி.வீரமணி


திராவிடர் கழகப் பொதுக் குழுவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் உண்மையான பெரியார் தொண்டன் என்பதற்கான இலக்கணத்தை வகுத்துக் கொடுத்தார். 

தோழர்களே,

"நான் ஒரு உண்மையான பெரியார் தொண்டன்" என்று கூறுவீர்களானால்,

நீங்கள் எப்படிப்பட்ட தகுதி உடையவர்களாக இருக்கவேண்டும்; அல்லது இருக்க முயற்சிக்க வேண்டும்? எண்ணிப் பாருங்கள்.

தங்கம் விலை உயர்வை சமாளிக்க இறக்குமதி வரியை நீக்க வேண்டும்! - DR.S.ராமதாஸ்


தங்கம் விலை உயர்வை சமாளிக்க
இறக்குமதி வரியை நீக்க வேண்டும்! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டிருக்கிறது. தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.32,576 என்ற அளவுக்கு உயர்ந்திருப்பதால் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களை நடத்தவுள்ள ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

பெட்ரோலிய இரசாயன முதலீட்டு மண்டலம் ரத்து: மறுமலர்ச்சி தி.மு.க. போராட்டத்திற்கு வெற்றி! - வைகோ


பெட்ரோலிய இரசாயன முதலீட்டு மண்டலம் ரத்து:
மறுமலர்ச்சி தி.மு.க. போராட்டத்திற்கு வெற்றி! - வைகோ அறிக்கை

கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெட்ரோலிய இரசாயனம் மற்றும் ரசாயனப் பொருட்கள் முதலீட்டு மண்டலம் (Petroleum, Chemicals and Petro Chemicals Investment Region - PCPIR) அமைப்பதற்கு 2017 ஜூலை 19 ஆம் தேதி தமிழக அரசு குறிப்பாணை (எண்.29) வெளியிட்டது. அதில் கடலூர், நாகை மாவட்டங்களில் 45 கிராமங்களில் உள்ள 57 ஆயிரத்து 500 ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

சனி, 22 பிப்ரவரி, 2020

பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அரசாணை ரத்து: பா.ம.க.வுக்கு கிடைத்த பெரும் வெற்றி! - DR.S.ராமதாஸ்


பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அரசாணை ரத்து: 
பா.ம.க.வுக்கு கிடைத்த பெரும் வெற்றி! - DR.S.ராமதாஸ்

கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 57,345 ஏக்கர் பரப்பளவில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கான திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்திருக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களின் வேளாண் வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக இருந்த இத்திட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இது பாட்டாளி மக்கள் கட்சியின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

திரைத்துறை ஊழியர்களின் நலனை பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் -CPIM


திரைத்துறை ஊழியர்களின் நலனை பாதுகாக்க
தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சென்னைக்கு அருகில் உள்ள நசரத்பேட்டையில் நடைபெற்றுக் கொண்டிருந்த இந்தியன் 2, சினிமா தயாரிப்பு நடவடிக்கையின் போது மூன்று ஊழியர்கள் விபத்தில் சிக்கி பலியாகி இருக்கிறார்கள். சிலர் காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தோர் குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பாக இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

கிரீமிலேயர் : ஓ.பி.சி.களின் ஊதியத்தையும் வருவாய் கணக்கில் சேர்ப்பது சமூக அநீதி! - DR.S.ராமதாஸ்


கிரீமிலேயர் : ஓ.பி.சி.களின் ஊதியத்தையும்
வருவாய் கணக்கில் சேர்ப்பது சமூக அநீதி! - DR.S.ராமதாஸ் 

மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை பெறுவதற்கு கிரீமிலேயர் வரம்பை கணக்கிடுவதில் ஊதியத்தையும் சேர்த்துக் கொள்ள மத்திய அரசு திட்டமிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கிரீமிலேயரை காட்டி பிற பிற்படுத்தப்பட்டோருக்கு ஏற்கனவே இட ஒதுக்கீடு மறுக்கப்படும் நிலையில், இந்த திட்டம் கூடுதல் சமூக அநீதியை இழைக்கும்.

தமிழக அரசு திட்டவட்டமாக, தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்காதது ஏன்? - வைகோ கேள்வி


வேளாண் பாதுகாப்பு மண்டலம்
விசுவரூபம் எடுக்கும் கேள்விகள் - வைகோ அறிக்கை

காவிரிப் படுகை மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்ட முன் வடிவு தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.

இதில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களும், கடலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் சில வட்டாரங்கள் மட்டுமே வேளாண் மண்டலம் என்ற வரையறையின் கீழ் கொண்டுவரப்பட்டு இருக்கிறது.

வியாழன், 20 பிப்ரவரி, 2020

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடுபவர்களை பிரதமரும், உள்துறை அமைச்சரும் அழைத்து பேச வேண்டும். - E.R.ஈஸ்வரன்


குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடுபவர்களை பிரதமரும், உள்துறை அமைச்சரும் அழைத்து பேச வேண்டும்.

புதிதாக கொண்டு வந்திருக்கின்ற குடியுரிமை சட்டத்தினால் மத்திய அரசுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையில் ஏற்பட்டிருக்கின்ற எதிர்ப்பு எண்ணங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. அதிக பாதிப்புக்கு உள்ளாகின்ற இஸ்லாமியர்கள் தொடர்ந்து போராட்டங்களை இந்தியா முழுவதும் நடத்தி கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டுபவர்கள் நீட்டிக்கொண்டே இருக்கிறார்கள். 

தமிழக மீனவர்கள் மீது சிங்களப் படை துப்பாக்கிச் சூட்டுக்குக் கண்டனம் - அன்புமணி ராமதாஸ்


தமிழக மீனவர்கள் மீது சிங்களப் படை
துப்பாக்கிச் சூட்டுக்குக் கண்டனம் - அன்புமணி ராமதாஸ்

வங்கக் கடலில் கச்சத் தீவு அருகே இந்திய கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது சிங்களப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், ஒரு மீனவர் காயமடைந்துள்ளார். சிங்கள கடற்படையினரின் இந்த அத்துமீறல் கண்டிக்கத்தக்கதாகும்.

ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று வங்கக் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத் தீவு அருகே இந்திய கடல் எல்லையில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த சிங்கள கடற்படையினர் அப்பகுதியில் மீன்பிடிக்கக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ரப்பர் கழக தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். - ஜி.கே.வாசன்


ரப்பர் கழக தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் பகுதியில் கீரிப்பாறை, காளிகேசம், மணலோடை, குற்றியார், சிற்றார் உள்பட 9 இடங்களில் அரசு ரப்பர் தோட்டங்கள் உள்ளன. மேலும் 2 இடங்களில் அரசு ரப்பர் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது.

குடியரசுத் தலைவர் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள படிவங்களில் உள்ளது வெறும் கையெழுத்துக்கள் அல்ல - மு.க.ஸ்டாலின் கடிதம்


மு.க.ஸ்டாலின் அவர்கள், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் #CAA_NPR_NRC ஆகியவற்றுக்கு எதிராக நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் பெறப்பட்ட கையெழுத்து படிவங்களுடன், மேதகு குடியரசுத் தலைவர் அவர்களுக்கு எழுதிய கடித விவரம்:


மேதகு குடியரசுத் தலைவர் அவர்களுக்கு,

வணக்கம்,

ஆயிரம் வருடங்களுக்கு முன்பே சங்ககால தமிழ் புலவர் கணியன் பூங்குன்றனார், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற “எல்லா ஊரும் எம் ஊர். எல்லா மக்களும் எம் உறவினரே” என்ற உயரிய தத்துவத்தை உலகிற்கு தந்தார்.

செம்மொழியாம் தமிழ் மொழியைவிட ! செத்தொழிந்த சமஸ்கிருதத்துக்கு 22 மடங்கு மக்கள் பணத்தை வாரி இறைப்பதா? - கி.வீரமணி


செம்மொழியாம் தமிழ் மொழியைவிட :
 செத்தொழிந்த சமஸ்கிருதத்துக்கு 22 மடங்கு 
மக்கள் பணத்தை வாரி இறைப்பதா? - கி.வீரமணி

பன்மொழி, பல கலாச்சாரம், பல மதங்கள் என்றுள்ள இந்திய நாட்டில், ஒரே மொழி -  சமஸ்கிருதம், ஒரே கலாச்சாரம் - இந்துத்துவா ஆரிய சனாதனக் கலாச்சாரம், ஒரே மதம் - இந்து மதம் என்று அந்நியர் தந்த பெயரால் இயங்கும் ஆரிய சனாதன வருணாசிரம மதமே இந்து மதம்!

புதன், 19 பிப்ரவரி, 2020

சிஏஏ சட்ட எதிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து கொச்சைப்படுத்துவதா? - SDPI


சிஏஏ சட்ட எதிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து கொச்சைப்படுத்துவதா? தமிழக முதல்வர் இறுக்கமான சூழலிலிருந்து வெளிவந்து மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள வேண்டும் - எஸ்.டி.பி.ஐ. கட்சி

இதுகுறித்து எ.ஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே. எஸ். அழகிரி அவர்கள் விடுக்கும் அறிக்கை.


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே. எஸ். அழகிரி அவர்கள் விடுக்கும் அறிக்கை.

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றது முதல் உள்நாட்டு சுற்றுப் பயணங்களில் அக்கறை காட்டுவதை விட, அயல்நாடுகளில் சுற்றுப் பயணம் செய்வதில் மிகுந்த முனைப்பு காட்டி வருவதை அனைவரும் அறிவார்கள். சில நாளேடுகளில் இவரை வெளிநாட்டில் வாழ்கிற இந்திய பிரதமர் என்று கூட விமர்சனம் செய்ததுண்டு. நாடாளுமன்றம் நடைபெறுகிற காலத்தில் கூட வெளிநாட்டுச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்ட வித்தியாசமான பிரதமராக நரேந்திர மோடியை காண முடிந்தது. ஆனால், உலக நாடுகளோடு சுமூகமான சூழ்நிலை நிலவுகிறதா என்று ஆய்வு செய்தால் பல்வேறு விதமான மாறுபட்ட கருத்துக்கள் வருவதை தவிர்க்க முடியவில்லை.

செல்வி. ஜெயாலலிதா அவர்கள் நினைவை சிறப்பிக்கும் வகையில் ஆதரவற்ற பெண் குழந்தைகள் நல்வாழ்விற்கு 5 புதிய திட்டங்கள்


பெண் குழந்தைகளுக்காக மாண்புமிகு புரட்சித்தலைவி செல்வி. ஜெயாலலிதா அவர்கள் ஆற்றிய உயர்ந்த சேவையினை நினைவு கூறும் வகையில்,

"மாண்புமிகு செல்வி. ஜெயாலலிதா அவர்களது பிறந்தநாளை "மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் - பிப்ரவரி 24" ஆக அனுசரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

பாஸ்டேக் முறையில் கட்டணம் வசூல் செய்யும் போது குளறுபடிகள் ஏற்படக்கூடாது. - ஜி.கே.வாசன்


மத்திய அரசு – காலாவதியான சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் வசூல் செய்யாமல் இருக்கவும், பாஸ்டேக் முறையில் உள்ள குளறுபடிகளை நீக்கவும், சுங்கக்கட்டணமாக வசூல் செய்யும் பணத்தை சாலையின் தரத்தை மேம்படுத்த பயன்படுத்தவும், வாகன ஓட்டிகளிடம் கெடுபிடி நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருக்கவும் தொடர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் வராத வகையிலான சட்டமுன்வடிவை ஏன் கொண்டுவரவில்லை? - மு.க.ஸ்டாலின்.


”காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தால் திமுக ஆதரவளிக்கும் : ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் வராத வகையிலான சட்டமுன்வடிவை ஏன் கொண்டுவரவில்லை?” - மு.க.ஸ்டாலின்.

காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கடந்த 9ம் தேதி அறிவித்திருக்கிறார்கள். அப்போது, புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி வழங்க மாட்டோம் என்று கூறினாரே தவிர, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதை இந்த அவையின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

ஒருங்கிணைந்த உழவர் சந்தை வளாகம் சிறப்பான திட்டம்: விரிவுபடுத்த வேண்டும்! - DR.S. ராமதாஸ்


ஒருங்கிணைந்த உழவர் சந்தை வளாகம் 
சிறப்பான திட்டம்: விரிவுபடுத்த வேண்டும்! - DR.S. ராமதாஸ்
வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்வதற்கான சந்தை உள்ளிட்ட விவசாயிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஒரே இடத்தில் வழங்கக்கூடிய ஒருங்கிணைந்த உழவர் சந்தை வளாகங்களை 5 மாவட்டங்களில் அமைக்க தமிழக அரசு முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. பா.ம.க.வின் யோசனைகளில் ஒன்றான இத்திட்டம் செயல்வடிவம் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

பிப்.19ல் மாபெரும் சட்டமன்ற முற்றுகை போராட்டம்! லட்சக்கணக்கில் அணி திரள்வோம்! - SDPI கட்சி அழைப்பு


சி.ஏ.ஏ., என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி பிப்.19ல் மாபெரும் சட்டமன்ற முற்றுகை போராட்டம்! லட்சக்கணக்கில் அணி திரள்வோம்! - SDPI கட்சி
 M.நிஜாம் முகைதீன்  அழைப்பு

அரசமைப்பு சட்ட விரோத சி.ஏ.ஏ., என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சிக்கு எதிராகவும், அந்த கருப்புச் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும் கடந்த 2 மாதங்களாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் பெரும் மக்கள் திரள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாடு அரசு இந்த மதவாதத் திணிப்பிற்கு இடம் கொடுக்கக்கூடாது. - கி.வீரமணி


அமெரிக்காவின் இஸ்கான் என்னும் ‘ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா' என்ற அமைப்பின் துணை நிறுவனமான ‘அட்சய பாத்ரா' என்ற அமைப்பு காலை உணவு என்னும் பெயரில், உணவில் மதவாதத்தைத் திணிப்பதைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பா.ஜ.க.வின் எடுபிடி அரசாக, தமிழக மக்களை வஞ்சிக்கிற அரசாக எடப்பாடி அரசு விளங்கி வருகிறது.- கே.எஸ்.அழகிரி


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ்.அழகிரி அவர்கள் விடுக்கும் அறிக்கை.

தமிழகத்தை வளம் கொழிக்கும் மாநிலமாக மாற்றி, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக ஆக்குவோம் என்று வாக்குறுதி கொடுத்து, 2016 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க. ஆட்சியில் அமர்ந்தது. முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்குப் பின்பு ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்தார். சசிகலாவின் விருப்பு, வெறுப்பின் காரணமாக பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு, எடப்பாடி பழனிச்சாமி 16 பிப்ரவரி 2017 இல் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

கப்பலில் உள்ள கூண்டில் பூனை ஒன்று கண்டெடுக்கப்பட்டதை அடுத்து அதனை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும். - ஜி.கே.வாசன்


சென்னை துறைமுகத்துக்கு சீனாவில் இருந்து வந்த கப்பலில் உள்ள கூண்டில் பூனை ஒன்று கண்டெடுக்கப்பட்டதை அடுத்து அதனை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும். - ஜி.கே.வாசன்

தமிழகத்தில் சென்னை துறைமுகத்துக்கு சீனாவில் இருந்து வந்த கப்பலில் உள்ள கூண்டில் பூனை ஒன்று கண்டெடுக்கப்பட்டதால் அதனை உடனடியாக திருப்பி அனுப்பக் கூடிய நடவடிக்கையை சென்னைத் துறைமுகம் மேற்கொள்ள வேண்டும்.

ஒலி மாசில் முதலிடம்: சென்னையில் இரைச்சலை கட்டுப்படுத்த வேண்டும்! - DR.S.ராமதாஸ்


ஒலி மாசில் முதலிடம்: சென்னையில் இரைச்சலை 
கட்டுப்படுத்த வேண்டும்! - DR.S.ராமதாஸ் 

இந்தியாவின் இரைச்சல் நிறைந்த பெருநகரங்களில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது என ஆய்வில் கண்டறியப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் கவலையளிக்கின்றன. சென்னையில் அதிகரித்து வரும் ஒலி மாசை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றால் நோய்களும், மன அழுத்தமும் நிறைந்த நகரமாக சென்னை சீரழிவதை தடுக்க முடியாது.

கிராமக் கோவில் திருவிழாக்கள் நடத்த கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும்! - வைகோ கோரிக்கை


கிராமக் கோவில் திருவிழாக்கள் நடத்த 
கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும்! - வைகோ கோரிக்கை

தமிழகத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான கிராமங்களில் கோடிக்கணக்கான மக்கள் மாசி, பங்குனி மாதங்களில் தங்களின் குலதெய்வ வழிபாடுகளை திருவிழாக்களாக பன்னூறு ஆண்டுகளாக நடத்தி வருகிறார்கள். அதேபோல வெவ்வேறு மாதங்களில் அம்மன் கோவில் கொடை விழாக்களும் நாடு முழுவதும் அமைதியான முறையில் நடந்து வருகின்றன. உலகின் பல பகுதிகளுக்கு வேலை நிமித்தம் சென்றவர்கள் தத்தமது ஊர்களில் நடக்கும் இதுபோன்ற திருவிழாக்களில்தான் ஒன்று கூடி உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் அளவளாவி மகிழ்கின்ற வாய்ப்பினைப் பெறுகின்றனர். உறவுகளை அழைத்து விருந்தோம்பல் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வாய்ப்புகளையும் இவ்விழாக்கள்தான் வழங்குகின்றன.

“திட்ட நிலை அறிக்கை 2020”யை நிதியமைச்சர் வெளியிட வேண்டும் - செந்தில் ஆறுமுகம்


பட்ஜெட் கூட்டத்தொடரில் கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் இன்றைய நிலை குறித்தான “திட்ட நிலை அறிக்கையைத்”(Project Status Report) தாக்கல் செய்ய வேண்டும். 

- செந்தில் ஆறுமுகம்,
 சட்ட பஞ்சாயத்து இயக்கம்


Satta Panchayat Iyakkam demands, the release of "Project Status Report" for the schemes announced in previous budget.....) சட்ட பஞ்சாயத்து இயக்கம் நிதியமைச்சருக்குக் கோரிக்கை..

ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட் தாக்கலின்போதும் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கப்படுவதும், சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்படுவதும் வழக்கமான நடைமுறை ஆகும். குறிப்பாக அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், வருகிற பிப்14 தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் ஏராளமான புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த சூழலில், சட்ட பஞ்சாயத்து இயக்கம் தொடர்ந்து வலியுறுத்திவரும் கோரிக்கை ஒன்றை மீண்டும் குறிப்பிட விரும்புகிறோம்.

திங்கள், 17 பிப்ரவரி, 2020

தலித் இளைஞர் படுகொலை கொலைக்குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க சிபிஐ (எம்) மாநிலச் செயலாளர் தமிழக முதலமைச்சருக்கு கடிதம்.

விழுப்புரம், செஞ்சியில் தலித் இளைஞர் படுகொலை
கொலைக்குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க
சிபிஐ (எம்) மாநிலச் செயலாளர் தமிழக முதலமைச்சருக்கு கடிதம்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், காரை கிராமத்தில் 12.02.2020 அன்று தலித் இளைஞர் சக்திவேல் என்பவரை சாதியவெறியுடன் 20க்கும் மேற்பட்ட கும்பல் மரத்தில் கட்டி வைத்து அடித்து படுகொலை செய்துள்ளனர். இந்த கொலைச்சம்பவத்தில் ஈடுபட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இச்சம்பவத்திற்கு துணைபோன காவல்துறை அதிகாரிகளை கைது செய்ய வேண்டுமெனவும், படுகொலை செய்யப்பட்ட சக்திவேல் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணமும், அரசு வேலையும் வழங்கிட வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், தமிழக முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதம்:

17.02.2020

பெறுநர்
மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,
தமிழ்நாடு அரசு,
தலைமைச் செயலகம்,
சென்னை - 600 009.

வணக்கம்.

பொருள்:- விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், காரை கிராமத்தைச் சார்ந்த சக்திவேல் - தலித் இளைஞர் - சாதிவெறித் தாக்குதலால் - படுகொலை - குற்றவாளிகள் மீதும் - துணை போன பெரியதச்சூர் காவல்நிலையத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்க வற்புறுத்துவது - உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக:

சத்துணவுத் திட்டம், மனுதர்மத் திட்டம் ஆகின்றது! - வைகோ கண்டனம்


சத்துணவுத் திட்டம், மனுதர்மத் திட்டம் ஆகின்றது! - வைகோ கண்டனம்

நீதிக்கட்சி அரசால் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, தியாகப் பெருஞ்சுடர் காமராசர் அவர்களால் விரிவுபடுத்தப்பட்ட மதிய உணவுத் திட்டம், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் காலத்தில், சத்துஉணவுத் திட்டமாக வளர்ச்சி பெற்றது.