புதன், 30 ஜூன், 2021

டிஜிட்டல் இந்தியா திட்டம் 6 ஆண்டுகள் நிறைவு செய்வதை முன்னிட்டு ஜூலை 1-ஆம் தேதி நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடல்


 இந்தியாவை மின்னணுத் துறையில் மேம்பட்ட சமூகமாகவும், அறிவுசார் பொருளாதாரமாகவும் மாற்றும் முயற்சியில் உருவாக்கப்பட்ட முக்கிய முன்முயற்சியான டிஜிட்டல் இந்தியா திட்டம், 2021, ஜூலை 1 அன்று, 6 வருடங்களை நிறைவு செய்கிறது.

கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், தனது சேவைகள், பொதுமக்களுக்கும் அரசுக்கும் இடையேயான தொடர்பை வலுப்படுத்துதல், பொது மக்களின் பங்களிப்பை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு அதிகாரம் அளித்தல் போன்ற செயல்களால் புதிய இந்தியாவின் மிகப்பெரும் வெற்றித் திட்டங்களுள் ஒன்றாக இன்றுவரை விளங்குகிறது.

மத்திய பா.ஜ.க. ஆட்சியின் தவறான கொள்கையால் இந்தியாவில் உள்ள குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வீழ்ச்சியை நோக்கி சென்றன.- கே.எஸ்.அழகிரி


 கொரோனா பரவலுக்கு முன்பே, மத்திய பா.ஜ.க. ஆட்சியின் தவறான கொள்கையால் இந்தியாவில் உள்ள குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வீழ்ச்சியை நோக்கி சென்றன. இதன்பிறகு, கடந்த 2020 மார்ச் 24 ஆம் தேதி கொரோனா காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட பிறகு, நிலைமை இன்னும் மோசமாகி, மோடி அரசின் அக்கறையின்மையால் இன்றைக்கு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் பணியாற்றிய 10 கோடியே 20 லட்சம் பேரின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்கு 30 சதவீதமாகவும், ஏற்றுமதியில் இவற்றின் பங்கு 40 சதவீதமாகவும் இருந்தது. அதோடு, 90 சதவீதம் அமைப்புசாரா தொழிலாளர்கள்  பணியாற்றி வந்தனர். இந்த துறையின் வளர்ச்சி 10 சதவீதமாக இருந்தது. 

அஞ்சல் ஆயுள் காப்பீட்டு/ கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனைக்காக நேரடி முகவர்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு


 சென்னை மத்திய கோட்டம் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு/ கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்களை ஈடுபடுத்தவிருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் கீழ்காணும் தகுதியை பெற்றிருப்பின் dopliccc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது பெயர், முகவரி மற்றும் தொடர்பு எண்னை குறிப்பிட்டு, கல்வி சான்றிதழ், வயது மற்றும் முகவரி சான்றுகளின் நகல்களை இணைத்து,  வருகின்ற 10.07.2021ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் அனுப்பவும்.

தேவையான தகுதிகள்:

சீர்திருத்தங்களின் அடிப்படையில் பயன்சார்ந்த புதுப்பிக்கப்பட்ட மின் விநியோகத் திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


 சீர்திருத்தங்களின் அடிப்படையில் பயன்சார்ந்த புதுப்பிக்கப்பட்ட மின் விநியோகத் திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. செயல்பாட்டு செயல் திறன் மற்றும் நிதி நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்காக  தனியார் மின் விநியோக நிறுவனங்களைத் தவிர இதர  நிறுவனங்கள்/ எரிசக்தி துறைகளின் மின் விநியோக கட்டமைப்பை  வலுப்படுத்த, நிபந்தனையுடன் கூடிய  நிதியுதவியை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நிதி மேம்பாடுகளுடன் தொடர்புடைய ஒப்புக்கொள்ளப்பட்ட மதிப்பீட்டு கட்டமைப்பின் அடிப்படையில், மதிப்பீடு செய்யப்பட்ட மின் விநியோக நிறுவனங்கள் அடிப்படை குறைந்தபட்ச இலக்குகளை அடைவதன் அடிப்படையிலும், தகுதி பெறுவதற்கு முந்தைய அம்சங்களைப் பூர்த்தி செய்வதன் அடிப்படையிலும் இந்த உதவி அமைந்திருக்கும்.

ஒட்டுமொத்த அணுகுமுறையாக இல்லாமல் ஒவ்வொரு மாநிலத்தின் செயல் திட்டங்களின் அடிப்படையில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும்.

மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைப்பெற்றது. இதில் பல திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன.


 16 மாநில கிராமங்களில் பாரத் நெட்  திட்டத்தை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்  அளித்துள்ளது.

மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைப்பெற்றது. இதில் பல திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன.

16 மாநிலங்களில் உள்ள கிராமங்களில், பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்பின் மூலம் மாற்றியைமக்கப்பட்ட பாரத் நெட் திட்ட உத்தியை அமல்படுத்த பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தீவிரவாதிகளின் வஞ்சக திட்டங்களுக்கு எதிராக புத்திசாலித்தனமான தீர்வுகளை ஆராய்ச்சி சமூகம், இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் மேற்கொள்ள வேண்டும்.- திரு எம் வெங்கையா நாயுடு


 நாட்டின் நலன்களைக் காயப்படுத்துவதற்காக தீவிரவாதிகள் மேற்கொள்ளும் வஞ்சக திட்டங்களுக்கு எதிராக புத்திசாலித்தனமான தீர்வுகளைக் கண்டறியுமாறு ஆராய்ச்சி சமூகம் மற்றும் இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் போன்ற நிறுவனங்களை குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு இன்று கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் முப்பரிமாண அச்சு வீட்டைப் பார்வையிட்ட பின் பேசிய அவர், தீவிரவாதம், மனித சமூகத்தின் எதிரியாக செயல்படுகிறது என்று குறிப்பிட்டார். ராணுவ ரேடார்களால் கண்டறிய முடியாத வகையில், தாழ்வாகப் பறக்கும் ட்ரோன்களை தீவிரவாதிகள் பயன்படுத்துவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

செவ்வாய், 29 ஜூன், 2021

பாலின பிரச்சனைகளை தீர்க்க தீனதயாள் அந்தியோதயா திட்டம்-தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த தொகுப்பை மத்திய அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் வெளியிட்டார்.


 பாலின பிரச்சனைகளை தீர்க்க தீனதயாள் அந்தியோதயா திட்டம்-தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் எடுக்கப்பட்ட சிறந்த நடவடிக்கைகள் குறித்த தொகுப்பை மத்திய ஊரக வளர்ச்சி, விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன், பஞ்சாயத்து ராஜ் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் இன்று வெளியிட்டார்.

சுய உதவி குழு கூட்டமைப்புகளின் சமூக நடவடிக்கை குழுக்கள் மூலம் நாடு முழுவதும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்,  பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன.

NATRAX- the High Speed Track(HST) நாட்ராக்ஸ் என்ற ஆசியாவின் மிக நீளமான அதிவேக வழித்தடத்தை மத்திய அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் திறந்து வைத்தார்


 கனரக தொழில்கள் மற்றும் பொது நிறுவனங்கள் அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர், நாட்ராக்ஸ் என்ற ஆசியாவின் மிக நீளமான அதிவேக வழித்தடத்தை இன்று திறந்து வைத்தார். 1000 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்ட நாட்ராக்ஸ், இருசக்கர வாகனங்கள் முதல் கனரக டிராக்டர் டிரெய்லர்கள் வரையிலான பல்வேறு வகை வாகனங்களின் அதிவேக செயல்திறனை சோதிப்பதற்கான ஒரே தளமாக விளங்கும்.

‘பசுமை சரக்கு வழித்தடம்-2’ ( Green Freight Corridor-2 ) எனும் சரக்கு கப்பல் சேவைக்கான சரக்குகளை ஏற்றும் பணியை மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்.


 கொச்சின் துறைமுகத்தில் இருந்து பெய்ப்பூர் மற்றும் ஆழிக்கல் துறைமுகங்களுக்கு ‘பசுமை சரக்கு வழித்தடம்-2’ எனும் சரக்கு கப்பல் சேவைக்கான சரக்குகளை ஏற்றும் பணியை மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு மன்சுக் மாண்டவியா இன்று தொடங்கி வைத்தார்.

ஜேஎம் பாக்சி குழும நிறுவனமான ரவுண்ட் தி கோஸ்ட் பிரைவேட் லிமிடெட் பசுமை சரக்கு வழித்தட சேவையை நடத்துகிறது. கொச்சின், பெய்ப்பூர் மற்றும் ஆழிக்கல் துறைமுகங்களை இந்த சேவை இணைக்கிறது. கொல்லம் துறைமுகம் பிறகு இதில் சேர்த்துக் கொள்ளப்படும். இந்த சேவைக்கான பொது முகவராக ஜேஎம் பாக்சி நிறுவனம் செயல்படும்.

“வருங்காலத்திற்குத் தயாராகும்” வகையில் ரூ. 115000 கோடி மதிப்பில் 58 அதிக சிக்கலான மற்றும் 68 சிக்கலான திட்டங்களை வரும் ஆண்டுகளில் மேற்கொள்ளும் தீவிர முயற்சியில் இந்திய ரயில்வே ஈடுபட்டுள்ளது.


 “வருங்காலத்திற்குத் தயாராகும்” வகையில் ரூ. 115000 கோடி மதிப்பில் 58 அதிக சிக்கலான மற்றும் 68 சிக்கலான திட்டங்களை வரும் ஆண்டுகளில்  மேற்கொள்ளும் தீவிர முயற்சியில் இந்திய ரயில்வே ஈடுபட்டுள்ளது.

கொவிட் சவால்களுக்கு இடையேயும், வழித்தடங்களின் திறனை அதிகரிப்பதற்கு மிக முக்கியமான திட்டங்களை நிறைவு செய்யும் முயற்சியில் இந்திய ரயில்வே துரிதமாக ஈடுபட்டுவருகிறது.

ரூ.11,588 கோடி மதிப்பில் 1,044 கிலோமீட்டர் தொலைவில் 29 அதிக சிக்கலான திட்டங்கள் கடந்த ஓராண்டில் பயன்பாட்டுக்கு வந்தன.

ஜார்கண்ட் மாநிலத்தின் 29,752 கிராமங்களில் மொத்தமுள்ள 58.95 லட்சம் வீடுகளில் வெறும் 7.72 லட்சம் (13%) வீடுகளுக்கு மட்டுமே குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.


 ஒவ்வொரு வீட்டிற்கும் சுகாதாரமான தண்ணீர் குழாய் இணைப்பை வழங்கும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் வகையில் ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் 2021-22ஆம் ஆண்டிற்கு ரூ. 2479.88 கோடியை ஜார்கண்ட் மாநிலத்திற்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இந்தத் தொகை கடந்த 2020-21ஆம் ஆண்டில் ரூ.572.24 கோடியாக இருந்தது. இந்த நான்கு மடங்கு உயர்த்தப்பட்ட தொகையை ஒதுக்கீடு செய்கையில், 2024-ஆம் ஆண்டிற்குள் ஒவ்வொரு ஊரக வீட்டிற்கும் தண்ணீர் குழாய் இணைப்பு வழங்குவதற்கு தேவையான உதவிகளை செய்யத் தயாராக இருப்பதாக மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் உறுதியளித்தார்.

தற்சார்பு இந்தியா இயக்கத்தின் கீழ் தொடங்கப்பட்ட பிரதமரின் உணவு பதப்படுத்துதல் குறு நிறுவனங்கள் முறைப்படுத்துதல் திட்டம் ஒரு வருடத்தை பூர்த்தி செய்தது


 தற்சார்பு இந்தியா இயக்கத்தின் கீழ் தொடங்கப்பட்ட மத்திய அரசு நிதியுதவி பெற்ற பிரதமரின் உணவு பதப்படுத்துதல் குறு நிறுவனங்கள் முறைப்படுத்துதல் திட்டம் ஒரு வருடத்தை பூர்த்தி செய்துள்ளது. அமைப்புசாரா உணவு பதப்படுத்துதல் துறையில் உள்ள குறு நிறுவனங்களின் போட்டித்தன்மையை மேம்படுத்துவதும், துறையின் முறைப்படுத்தலை மேம்படுத்துவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

2020 ஜூன் 29 அன்று தொடங்கப்பட்ட பிரதமரின் உணவு பதப்படுத்துதல் குறு நிறுவனங்கள் முறைப்படுத்துதல் திட்டம், 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான இணையதளம் 2021 ஜனவரி 25 அன்று தொடங்கப்பட்டது.

உள் கட்டமைப்புக்கான செலவினங்கள் மத்திய அரசின் பட்ஜெட் செலவு மட்டுமே இல்லை என்றும் மாநில அரசுகளும் தனியார் துறையும் இதில் பங்கேற்க வேண்டும்.- திருமதி நிர்மலா சீதாராமன்


 உள்கட்டமைப்பு செயல்திட்டத்தை விவாதிப்பதற்காக மூத்த அதிகாரிகளுடன் காணொலி  கூட்டம் ஒன்றை மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று நடத்தினார். அமைச்சகங்கள் மற்றும் துறைகளுடன் இது குறித்து நிதியமைச்சர் நடத்தும் ஆறாவது ஆய்வுக் கூட்டம் இதுவாகும்.

அமைச்சகங்கள் மற்றும் அவற்றின் பொதுத்துறை நிறுவனங்களின் மூலதன செலவு திட்டங்கள், பட்ஜெட் அறிவிப்புகளின் செயல்படுத்துதல்கள் மற்றும் உள்கட்டமைப்பு மூலதனத்தை விரைவுபடுத்துதல் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தின் போது விவாதிக்கப்பட்டன.

இந்திய கடற்படையின் முன்னணி கப்பலான ஐஎன்எஸ் தபார் (INS TABAR) இரண்டு நாள் நல்லெண்ண பயணமாக எகிப்து அலெக்சாண்ட்ரியாவுக்கு சென்றடைந்தது.


 இந்திய கடற்படையின் முன்னணி கப்பலான ஐஎன்எஸ் தபார் இரண்டு நாள் நல்லெண்ண பயணமாக 2021 ஜூன் 27 அன்று அலெக்சாண்ட்ரியாவுக்கு சென்றடைந்தது. இந்தியாவும் எகிப்தும் சிறப்பான இருதரப்பு உறவை பகிர்ந்து வரும் நிலையில், இந்திய கடற்படை கப்பல்கள் அலெக்சாண்ட்ரியா துறைமுகத்திற்கு அடிக்கடி சென்று வருகின்றன.

அலெக்சாண்ட்ரியா கடற்படை வீரர்கள் நினைவிடத்தில் ஐஎன்எஸ் தபார் தலைமை அதிகாரி கேப்டன் எம் மகேஷ் மற்றும் குழுவினர் மலரஞ்சலி செலுத்தினர். அலெக்சாண்ட்ரியா கடற்படை தளத்தின் தளபதி, ரியர் அட்மிரல் அய்மன் அல்-டாலியை கேப்டன் எம் மகேஷ் சந்தித்தார்.

வங்கதேசத்தின் விமானப்படை தலைமை தளபதி விடுத்திருந்த அழைப்பின் பெயரில் இந்திய விமானப் படை தலைமைத் தளபதியின் வங்க தேச பயணம்.


 வங்கதேசத்தின் விமானப்படை தலைமை தளபதி ஏர் மார்ஷல் ஷேக் அப்துல் ஹன்னான் விடுத்திருந்த அழைப்பின் பெயரில் இந்திய விமானப் படையின் தலைமைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஆர்கேஎஸ் பதௌரியா, வங்கதேச விமானப்படை அகாடமியில் ஜூன் 28 அன்று ‘ஆளுநர் அணிவகுப்பு 2021ஐ’ முன்னிட்டு நடைபெற்ற அணிவகுப்பு நிகழ்ச்சி மற்றும் வீரர்கள் ராணுவத்தில் இணையும் விழாவில் கலந்து கொண்டார்.

வங்கதேச விடுதலையின் பொன்விழாவை முன்னிட்டு இந்த 2 நாள் பயணம் மிகவும் முக்கியத்துவம் பெற்றது. வெளிநாட்டு தளபதி ஒருவர் அணிவகுப்பை பார்வையிட்டு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வது இதுவே முதல்முறையாகும். இந்தியா மற்றும் வங்கதேச ஆயுதப் படைகளுக்கு இடையேயான நட்புணர்வு மற்றும் நம்பிக்கையை இந்த நடவடிக்கை மேலும் வலுப்படுத்துகிறது.

அம்பேத்கரின் கொள்கைகள் மற்றும் லட்சியங்களின் படி சமுதாயத்தையும் நாட்டையும் கட்டமைப்பதில் நமது வெற்றி இருக்கிறது.- குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த்


 அம்பேத்கரின் கொள்கைகள் மற்றும் லட்சியங்களின் படி சமுதாயத்தையும் நாட்டையும் கட்டமைப்பதில் நமது வெற்றி இருக்கிறது என்று குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் கூறினார். இந்த திசையில் நாம் முன்னேறி இருக்கிறோம் என்று கூறிய அவர், ஆனால் செல்ல வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது என்றார்.

லக்னோவில் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் நினைவு மற்றும் கலாச்சார மையத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் இன்று (2021 ஜூன் 29) பேசிய அவர், அம்பதேகரின் பன்முகத்தன்மை மற்றும் தேசத்தை கட்டமைப்பதில் அவரது பங்கு ஆகியவை அவரது மிகச்சிறந்த திறன் மற்றும் திறமையை வெளிப்படுத்தியதாக கூறினார்.

தற்சார்பு இந்தியாவை உருவாக்க பல்வேறு முன்முயற்சிகளை அமல்படுத்துவதில் அனைத்து கட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.- நிதின் கட்கரி



 தற்சார்பு இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியான பல்வேறு முன்முயற்சிகளை அமல்படுத்துவதில் அனைத்து கட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்காரி வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தினத்தை முன்னிட்டு ‘இந்திய குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், பொருளாதார வளர்ச்சிக்கான உந்துசக்திகள்' என்ற தலைப்பில் நடைபெற்ற காணொலி மாநாட்டில் பேசிய அவர், தற்சார்பு இந்தியாவை உருவாக்க, வேளாண்மை, உணவு பதப்படுத்துதல் தொழில்துறை, தோல் மற்றும் பழங்குடி தொழில்துறைகளில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். தொழில்நுட்பப் பயன்பாட்டின் அவசியத்தை வலியுறுத்திய அமைச்சர், ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தரமான வளர்ச்சி ஆகியவை தொழில்துறையின் மேம்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கலாம் என்று தெரிவித்தார்.

நீட் தேர்வின் தாக்கத்தை ஆராய ஜனநாயக முறைப்படி அமைத்த குழுவை செல்லாது என்று பாஜக வழக்கு தொடுத்திருப்பது மாநில சுயாட்சியின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்.- E.R ஈஸ்வரன்



தமிழக அரசு நீட் தேர்வின் தாக்கத்தை ஆராய ஜனநாயக முறைப்படி அமைத்த குழுவை செல்லாது என்று பாஜக வழக்கு தொடுத்திருப்பது மாநில சுயாட்சியின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்.

நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் அவர்கள் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டிருந்தது. தமிழக மக்களின்  பல்வேறு தரப்பட்ட கருத்துகளை இக்குழு ஆராய்ந்து தமிழக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று இக்குழு தலைவர் கூறியிருந்தார். ஆனால் தமிழக பாஜக சென்னை உயர்நீதிமன்றத்தில் நீட் தேர்வு பாதிப்புகளை ஆராய குழு அமைத்து  தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டுமென்று வழக்கு தொடுத்திருக்கிறார்கள்.  

நீட் தேர்விலிருந்து விலக்கு பெற வேண்டியதும், அதன் மூலமாக மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டியதும் திமுக அரசின் கடமையாகும்.- DR.அன்புமணி ராமதாஸ்

நீட் தேர்வு ரத்து: தேர்தல் வாக்குறுதியை
நிறைவேற்றுவது திமுக அரசின் கடமை! - DR.அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நீதியரசர் ஏ.கே.இராஜன் குழுவுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி ஒருவர் தொடர்ந்துள்ள வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகள், நீட் தேர்வுக்கு எதிரான முயற்சிகள்  வெற்றி பெறாதோ? என்ற ஐயத்தை மாணவர்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளன. மாணவர்களின் அச்சத்தை போக்க வேண்டியது நீட் தேர்வை நீக்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுகவின் கடமை ஆகும்.

திங்கள், 28 ஜூன், 2021

இந்திய சுகாதார சேவைகள் அமைப்பில் அரசு-தனியார் கூட்டை கொவிட் வலுப்படுத்தியுள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்


 இந்திய சுகாதார சேவைகள் அமைப்பில் அரசு-தனியார் கூட்டை கொவிட் வலுப்படுத்தியுள்ளது என்றும் இது இரு பிரிவினருக்கும் நன்மை பயக்கும் என்றும் வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளி இணை அமைச்சருமான திரு ஜிதேந்திர சிங் இன்று கூறினார்.

கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான போரில் இந்திய பொருளாதாரத்திற்கு ஆதரவளிப்பதற்காக ரூ 6,28,993 கோடி மதிப்பிலான நிவாரண தொகுப்பை நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அறிவித்தார்


 கொவிட்-19 பெருந்தொற்றின் இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு தொழில் துறைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்தார்.

அவசரகால எதிர்வினைகளுக்கு சுகாதார அமைப்புகளை தயார்படுத்துவதும், வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புக்கு ஊக்கம் அளிப்பதும் இந்த நடவடிக்கைகளின் இதர நோக்கங்களாகும். 

மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் இணை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர், நிதி செயலாளர் டாக்டர் டி வி சோமநாதன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நிவாரண தொகுப்பு குறித்த அறிவிப்பின் போது உடனிருந்தனர்.

கொவிட் தடுப்பூசித் திட்டம் பற்றிப் பேசிய டாக்டர் ஹர்ஷ் வர்தன், “இந்தத் திட்டத்தில் மேலும் ஒரு மைல்கல் சாதனையாக அமெரிக்காவை விட அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசிகளை இந்தியா இதுவரை செலுத்தியுள்ளது.


 கொவிட்-19 குறித்த அமைச்சர்கள் குழுவின் 29-வது உயர் நிலைக் கூட்டம் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக இன்று நடைபெற்றது. மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு ஹர்தீப் சிங் புரி, மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு நித்தியானந்த் ராய், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல இணை அமைச்சர் திரு அஸ்வினி குமார் சௌபே ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வினோத் கே. பால் காணொலிக் காட்சி வாயிலாக இதில் பங்கேற்றார்.

அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய தலைமுறை அக்னி பி ஏவுகணையின் சோதனை வெற்றி

 பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓவின் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய தலைமுறை அக்னி பி ஏவுகணை, ஒடிசா மாநிலத்தின் பலாசோர் அருகே உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவிலிருந்து இன்று (ஜூன் 28, 2021) காலை 10:55 மணிக்கு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

முன்னாள் பிரதமர் திரு பி வி நரசிம்ம ராவின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு அவருக்கு புகழாரம்


 முன்னாள் பிரதமர் திரு பி வி நரசிம்ம ராவின் நூற்றாண்டு பிறந்த தினமான இன்று, குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு அவருக்கு புகழாஞ்சலி செலுத்தியிருப்பதுடன், பொருளாதார சீர்திருத்தங்களின் முன்னோடியாகத் திகழ்ந்த தலைசிறந்த ஆளுமை என்று அவரை வர்ணித்தார்.

சிறந்த அறிஞர், விவேகமான நிர்வாகி, புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர் மற்றும் மொழியியலாளர் போன்ற பன்முகத் திறமை வாய்ந்தவர், முன்னாள் பிரதமர் என்று குறிப்பிட்ட அவர், தமது ஒருமித்த தலைமை மற்றும் தொலைநோக்குப் பார்வையின் மூலம் ஒரு பொருளாதார நெருக்கடியின் போது திரு ராவ் நாட்டை வழி நடத்தியதாகத் தெரிவித்தார். முன்னதாக, விசாகப்பட்டினத்தின் சர்க்யூட் ஹவுஸ் சந்திப்பில் அமைந்துள்ள திரு நரசிம்ம ராவின் உருவச்சிலைக்கு குடியரசு துணைத் தலைவர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தபிறகு தமிழகத்தில் 2017 இல் எடப்பாடி ஆட்சியில் தான் நீட் தேர்வு முதல் முறையாகத் திணிக்கப்பட்டது - கே.எஸ்.அழகிரி

தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், 'ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தான் நீட் தேர்வு திணிக்கப்பட்டது' என்று கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டுக்குப் பலமுறை காங்கிரஸ் கட்சி சார்பில் விளக்கமாகப் பதில் கூறப்பட்டுள்ளது. ஆனால் திரும்பத் திரும்பப் பிரச்சனையை திசை திருப்புவதற்காக காங்கிரஸ் கட்சி மீது பழிபோட அ.தி.மு.க. முயல்கிறது. நீட் தேர்வு குறித்து இத்தகைய கேள்வியை எழுப்புவதற்கு அ.தி.மு.க.வினருக்கு எந்தவிதமான தகுதியும் இல்லை. தமிழகத்தில் நீட் தேர்வைத் திணித்தது பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும் தான் என்பதற்கு நிறைய ஆதாரங்களைக் கூற முடியும்.

ஊரக வேலைத் திட்டம்: ஏழைகளுக்கு 150 நாட்கள் பணி வழங்க வேண்டும்! - DR.S.ராமதாஸ்

ஊரக வேலைத் திட்டம்: ஏழைகளுக்கு 150 நாட்கள் பணி வழங்க வேண்டும்!

கொரோனா வைரஸ் பரவலால் கிராமப்புற பொருளாதாரம் நிலைகுலைந்துள்ள சூழலில், மக்களின் வாழ்வாதாரத் தேவைகளை மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தால் நிறைவேற்ற முடியவில்லை என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஊரக மக்களை ஓரளவாவது பசியில்லாமல் பாதுகாக்க இத்திட்டத்தால் தான் முடியும் எனும் நிலையில், அதற்கான நிதி குறைக்கப்பட்டது நியாயமற்றது.

பாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக ஜூன் 28-30 மூன்று நாட்கள் நாடு தழுவிய போராட்டம் ! - தொல்.திருமாவளவன்

 பாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக 

ஜூன் 28-30 மூன்று நாட்கள் நாடு தழுவிய போராட்டம் ! 

சனநாயக சக்திகள் பங்கேற்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அழைப்பு! 

பாஜக ஆட்சி கடைபிடித்துவரும் மக்கள் விரோதக் கொள்கைகளின் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வேலையின்மை அதிகரித்துள்ளது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் நாடு தள்ளப்பட்டிருக்கிறது. கொரோனா முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் சுரண்டும் விதமாக ஒவ்வொரு நாளும் பெட்ரோல் டீசல் விலையை பாஜக அரசு உயர்த்தி வருகிறது. பாஜக அரசின் இந்த மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து இடதுசாரி கட்சிகளும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் தமிழ்நாடு முழுவதும் தொடர் போராட்டங்களை நடத்துவதென்று முடிவு செய்து உள்ளோம். அதனடிப்படையில் எதிர்வரும் 28,29 ,30 ஆகிய மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறும் போராட்டங்களில் சனநாயக சக்திகள் பெருந்திரளாகப் பங்கேற்று இந்திய ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை முறியடிக்க முன்வரவேண்டுமென அழைக்கிறோம். 

ஞாயிறு, 27 ஜூன், 2021

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ததில் முன்னாள் ராணுவத்தினரின் ஈடு இணையற்ற அர்ப்பணிப்பை பாராட்டுகிறேன். முன்னாள் ராணுவத்தினரின் நலனில் அரசு உறுதியுடன் உள்ளது.- திரு.ராஜ்நாத் சிங்


 முன்னாள் ராணுவ வீரர்களின் நலனில் அரசு உறுதியுடன் உள்ளது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

லடாக்குக்கு 3 நாள் பயணமாக, பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் சென்றுள்ளார். அவர் முன்னாள் ராணுவத்தினரை சந்தித்து இன்று கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:

ஐதராபாத்தில் கொவிட் தடுப்பூசியின் உற்பத்தியை ஆய்வு செய்வதற்காக பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசித் தயாரிப்பு மையங்களை மத்திய அமைச்சர்கள் ஆய்வு


 மத்திய ரசாயனங்கள் மற்றும் உரத்துறை இணை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியாவும், மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டியும், ஐதராபாத்தில் கொவிட் தடுப்பூசியின் உற்பத்தியை ஆய்வு செய்வதற்காக பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசித் தயாரிப்பு மற்றும் உயிரி பாதுகாப்பு மூன்றாவது கட்ட மையங்களை இன்று பார்வையிட்டனர். மருந்தகங்கள் துறையின் செயலாளர் திருமிகு எஸ் அபர்ணாவும் உடனிருந்தார்.

இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையேயான வர்த்தக இடையீட்டில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.- பிரதமர் திரு நரேந்திர மோடி


 அகமதாபாத்தில் அகமதாபாத் மேலாண்மை சங்கத்தில் (ஏஎம்ஏ), ஒரு ஜென் தோட்டம் மற்றும் கைசன் அகாடமியை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.

ஜென் தோட்டம் மற்றும் கைசன் அகாடமியின் அர்ப்பணிப்பை இந்திய- ஜப்பான் உறவின் எளிமை மற்றும் நவீனத்துவத்தின் சின்னம் என்று குறிப்பிட்ட பிரதமர், ஜென் தோட்டம் மற்றும் கைசன் அகாடமியை நிறுவுவதற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கிய ஹ்யோகோ மாவட்டத்தின் தலைவர்கள், குறிப்பாக ஆளுநர் டோஷிசோல்டோ மற்றும் ஹ்யோகோ சர்வதேச சங்கத்திற்கு நன்றி தெரிவித்தார். இந்திய-ஜப்பான் உறவிற்கு புதிய ஆற்றலை வழங்கியதற்காக குஜராத்தைச் சேர்ந்த இந்திய-ஜப்பான் நட்புணர்வு சங்கத்தையும் அவர் பாராட்டினார்.

நமது மொழி பாரம்பரியங்களின் பயன்களை எதிர்கால தலைமுறைக்கு வழங்க, மொழிகளை பாதுகாக்கும் மக்கள் இயக்கம் தேவை என குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.


 நமது மொழி பாரம்பரியங்களின் பயன்களை எதிர்கால தலைமுறைக்கு வழங்க, மொழிகளை பாதுகாக்கும் மக்கள் இயக்கம் தேவை என குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார். 

ஆறாம் ஆண்டு ராஷ்ட்ரதாரா தெலுங்கு சமக்யா மாநாட்டில், குடியரசு துணைத் தலைவர் திரு வெங்கையா நாயுடு கலந்து கொண்டு பேசியதாவது:

போதை மருந்தில்லா பாரதம் திட்டத்தின் இணையதளத்தை அமைச்சர் திரு தாவர்சந்த் கெலோட் தொடங்கி வைத்தார்


 சர்வதேச போதைப்பொருள் பாதிப்பு மற்றும் கடத்தலுக்கு எதிரான தினத்தை ஒட்டி, போதை மருந்தில்லா பாரதம் திட்டத்தின் இணையதளத்தை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணை அமைச்சர்கள் திரு கிரிஷன் பால் குர்ஜார், திரு ராம்தாஸ் அத்வாலே மற்றும் திரு ரத்தன்லால் கட்டாரியா ஆகியோரின் முன்னிலையில்

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் திரு தாவர்சந்த் கெலோட் இன்று தொடங்கி வைத்தார். 

அதிர்வுகளிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் புதிய நேனோ மின்னியற்றிகள் உருவாக்கம்


 எளிதான, குறைந்த செலவில், உயிரி- இணக்கமுடைய, ஒளி ஊடுருவும் நேனோ மின்னியற்றியை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளார்கள். ஒளி மின்னணுவியல், சுயமாக இயங்கும் உபகரணங்கள் மற்றும் இதர உயிரி மருத்துவ செயல்முறைகளில் பயன்படுத்தும் வகையில் சுற்றியுள்ள அதிர்வுகளில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் இந்த நேனோ மின்னியற்றி தயாரிக்கப்பட்டுள்ளது.

அதிக திறனுடன் கூடிய விதை பதப்படுத்தும் ஆலையை ஜம்மு காஷ்மீரில் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் திறந்து வைத்தார்


 நாட்டிலுள்ள விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் லட்சியத்தில் தனது கத்துவா மாவட்டத்தின் மூலம் ஜம்மு காஷ்மீர் இணைந்த வரலாற்று சிறப்புமிக்க நாள் இன்று, என அதிக குவின்டால் திறனுடன் கூடிய விதை பதப்படுத்தும் ஆலையை திறந்து வைத்த மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். 

16 லட்சம் விதை உற்பத்தி மற்றும் 24 லட்சம் விதை பதப்படுத்தல் திறன் கொண்ட ஆலை அப்பகுதியிலேயே முதல் முறையாக நிறுவப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், நாட்டின் கவனத்தை கடந்த சில வருடங்களாக கத்துவா பெற்று வருவதாகவும், ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடியால் இரு முறை இம்மாவட்டம் குறிப்பிடப்பட்டதாகவும் பெருமையுடன் கூறினார்.

ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள நட்பு நாடுகளின் கடற்படைகளோடு கூட்டு பயிற்சிகளில் ஈடுபடுவதற்காக ஐஎன்எஸ் தபார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


 நட்பு நாடுகளுடன் ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் தனது பயணத்தை ஜூன் 13 அன்று தொடங்கியுள்ள இந்திய கடற்படை கப்பலான தபார், ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள பல்வேறு துறைமுகங்களுக்கு செப்டம்பர் இறுதி வரை பயணம் மேற்கொள்ளும்.

இந்த பயணத்தின் போது, பணிரீதியான, சமூக மற்றும் விளையாட்டு  நிகழ்ச்சிகளை தபார் நடத்தும். நட்பு நாடுகளின் கடற்படைகளோடு கூட்டு பயிற்சிகளிலும் ஐஎன்எஸ் தபார் ஈடுபடும்.

தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கையின் முன்னேற்றம் மற்றும் நாட்டின் கொவிட் நிலைமையை ஆய்வு செய்வதற்காக மூத்த அதிகாரிகளுடனான கூட்டத்தை பிரதமர் நடத்தினார்.


 தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கையின் முன்னேற்றம் மற்றும் நாட்டின் கொவிட் நிலைமையை ஆய்வு செய்வதற்காக மூத்த அதிகாரிகளுடனான கூட்டத்தை பிரதமர் நடத்தினார்.

தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்த விரிவான விளக்கத்தை அதிகாரிகள் பிரதமருக்கு அளித்தனர். வயது வாரியாக வழங்கப்பட்டு வரும் தடுப்பு மருந்தின் எண்ணிக்கை குறித்து பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டது.  பல்வேறு மாநிலங்களில் சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறித்தும் பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டது.

சோழ மற்றும் கலிங்க மன்னர்கள் பெருங்கடல்களை ஆண்டார்கள் என்றும் அத்தகைய நிலையை நாம் மறுபடியும் எட்ட வேண்டும்.- குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு


 நாட்டின் லட்சியமிக்க இலக்குகளை எட்டுவதில் துறைமுகங்களுக்கு உள்ள முக்கிய பங்கு குறித்து விளக்கிய குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு,  இந்தியாவை முன்னணி கடல்சார் நாடாக ஆக்க  அழைப்பு விடுத்தார்.

விசாகப்பட்டினத்தில் குடியரசு துணைத் தலைவர் உடனான உரையாடலின் போது, விசாகப்பட்டினம் துறைமுக பொறுப்பு கழகத்தின் தலைவர் திரு கே ராம மோகன ராவ் மற்றும் இதர மூத்த அதிகாரிகள் விளக்கக்காட்சி ஒன்றை வழங்கினர். விரிவாக்கத் திட்டங்கள் உள்பட துறைமுகத்தின் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து குடியரசு துணைத் தலைவரிடம் அவர்கள் விளக்கினர்.

வரலாற்றுத் திரிபு - விதண்டாவா தங்களை, அபத்தமான பா.ஜ.க.வின் கருத்துகளை வரலாற்று ஆய்வாளர்கள் ஒப்புக்கொள்வார்களா?.- கி.வீரமணி


இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ‘ஒன்றியம்‘ என்ற சொல் பரவலாகக் குறிப்பிடப்படுகிறது

இந்திய அரசமைப்புச் சட்ட சிற்பி “ஒன்றியம்“ (யூனியன்) என்பதையே பயன்படுத்தியுள்ளார்

“திராவிடம்“ என்பது வரலாறு - ‘ஒன்றியம்‘ - அரசமைப்புச் சட்டத்தின் சொல்!

இதில் என்ன குற்றம்?  - “அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் ‘பேய்’தானா?” - கி. வீரமணி

பா.ஜ.க.வின் தீர்மானங்கள்

“இந்திய ஒருமைப்பாட்டுக்குக் கேடு விளைவிக்கும் எந்த செயலையும் பா.ஜ.க. வேடிக்கை பார்க்காது”

“சட்டப் பேரவைத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு தி.மு.க.வினர் ‘மத்திய அரசு’ என்பதற்குப் பதிலாக ‘ஒன்றிய அரசு’ என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.”  

சனி, 26 ஜூன், 2021

பழங்களின் ஏற்றுமதிக்கு மிகப்பெரிய ஊக்கமளிக்கும் வகையில், நார் மற்றும் தாது சத்துக்கள் நிறைந்த டிராகன் புரூட் என்றழைக்கப்படும் கமலம் பழம் துபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.


 பழங்களின் ஏற்றுமதிக்கு மிகப்பெரிய ஊக்கமளிக்கும் வகையில், நார் மற்றும் தாது சத்துக்கள் நிறைந்த டிராகன் புரூட் என்றழைக்கப்படும் கமலம் பழம் துபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. மகாராஷ்டிராவின் சங்கிலி மாவட்டத்தில் உள்ள தடாசார் கிராமத்தில் இருக்கும் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கமலம் பழங்கள் அபேடாவின் அங்கீகாரம் பெற்ற ஏற்றுமதியாளரான கே பி நிறுவனத்தால் பதப்படுத்தப்பட்டு பேக் செய்யப்பட்டது.

ஹைலோசெரேசுண்டாடஸ் என்று அறிவியல் பூர்வமாக அழைக்கப்படும் இந்த பழமானது மலேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், அமெரிக்கா மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் விளைவிக்கப்படுகிறது.

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, பெருந்தொற்றின் போது வைரசுக்கு எதிரான இந்திய ரயில்வேயின் போரில் ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎஃப்) பல்வேறு வகைகளில் பங்காற்றியது.


 இந்திய ரயில்வேயின் முன்னுரிமைகளில் ஒன்றாக பாதுகாப்பு விளங்குகிறது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, பெருந்தொற்றின் போது வைரசுக்கு எதிரான இந்திய ரயில்வேயின் போரில் ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎஃப்) பல்வேறு வகைகளில் பங்காற்றியது.

நிறுத்தப்பட்டுள்ள சரக்குகளை பாதுகாத்தல், தேவையானோருக்கு உணவு வழங்குதல், தொழிலாளர் சிறப்பு ரயில்களுக்கு பாதுகாப்பளித்தல், தொழிலாளர் சிறப்பு ரயில்களில் 45 குழந்தை பிறப்புகள் மற்றும் 34 மருத்துவ அவசர நிலைகளை கையாளுதல் என பல்வேறு வகைகளில் ஆர்பிஎஃப் உதவியது.

அயோத்தியாவின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆய்வு மேற்கொண்டார். அயோத்தியாவின் வளர்ச்சி பற்றிய பல்வேறு அம்சங்கள் நிறைந்த விளக்க அறிக்கையை உத்தரப்பிரதேச அரசு அதிகாரிகள் முன்வைத்தனர்.


 அயோத்தியாவின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆய்வு மேற்கொண்டார். அயோத்தியாவின் வளர்ச்சி பற்றிய பல்வேறு அம்சங்கள் நிறைந்த விளக்க அறிக்கையை உத்தரப்பிரதேச அரசு அதிகாரிகள் முன்வைத்தனர்.

ஆன்மீக மையம், சர்வதேச சுற்றுலா முனையம் மற்றும் நிலையான சீர்மிகு நகரமாக அயோத்தியாவை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அயோத்தியாவுடனான இணைப்பை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்கள் பற்றி பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டது. விமான நிலையம், ரயில், பேருந்து நிலையங்கள், சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளின் விரிவாக்கம் உள்ளிட்ட ஏராளமான உள்கட்டமைப்பு திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டன.

2021ம் ஆண்டில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டின் பொது கடன் மேலாண்மை அறிக்கை.


 மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரத்துறையின் பொது கடன் மேலாண்மை பிரிவு கடந்த 2010-11ம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூனிலிருந்து கடன் மேலாண்மை குறித்த காலாண்டு அறிக்கையை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. தற்போது 2021ம் நிதியாண்டின் காலாண்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

2021ம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் மத்திய அரசு ரூ.  3,20,349 மதிப்பிலான பங்கு பத்திரங்களை வெளியிட்டது. இது 2020ம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ.76,000 கோடியாக இருந்தது.  அதே நேரத்தில் திருப்பி செலுத்துதல் ரூ.29,145 கோடியாக இருந்தது.

10 மாநில வனப் பகுதியில் தண்ணீர் மற்றும் கால்நடை தீவனம் அதிகரிப்பு திட்ட அறிக்கைகளை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார்.


 அசாம், பீகார், சத்தீஸ்கர், கோவா, ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், நாகாலாந்து, மற்றும் திரிபுரா ஆகிய 10 மாநிலங்களின் வனப் பகுதிகளில், தண்ணீர் மற்றும் கால்நடை தீவனத்தை அதிகரிக்க மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் விரிவான திட்ட அறிக்கைகளை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் இன்று வெளியிட்டார்.

வனப் பகுதிகளில் தண்ணீர் மற்றும் தீவனத்தை அதிகரிக்க லிடார் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் திட்டம் ஜல்சக்தி அமைச்சகத்தின் பொதுத் துறை நிறுவனமான வாப்காஸ் நிறுவனத்திடம் வழங்கப்பட்டது என மத்திய அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

விமானப்படை மேற்கு கட்டுப்பாட்டு மையத்தின் விமானப்படை கமாண்டர்களின் இரண்டு நாள் மாநாடு தில்லியில் ஜூன் 24 மற்றும் 25ம் தேதிகளில் நடைப்பெற்றது.


 விமானப்படை மேற்கு கட்டுப்பாட்டு மையத்தின் விமானப்படை கமாண்டர்களின் இரண்டு நாள் மாநாடு தில்லியில் ஜூன் 24 மற்றும் 25ம் தேதிகளில் நடைப்பெற்றது. கொவிட் தொற்று காரணமாக இந்த மாநாடு நேரடியாகவும், காணொலி மூலமும் நடைப்பெற்றது. சில கமாண்டர்கள் காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் விமானப்படை தளபதி ஏர் சீப் மார்ஷல் ஆர்கேஎஸ் பதாரியா தலைமை விருந்தினராக கலந்துக் கொண்டார். அவரை விமானப்படை  மேற்கு கட்டுப்பாட்டு மைய தலைமை அதிகாரி ஏர் மார்ஷல் வி.ஆர். சவுத்திரி வரவேற்றார்.

தமிழகத்தின் பல நகரங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டிவிட்டது. கடந்த ஏழாண்டுகால பா.ஜ.க. ஆட்சி, பெட்ரோல், டீசல் மீது கலால் வரியாக ரூபாய் 25 லட்சம் கோடி வசூலித்து கஜானாவை நிரப்பிக் கொண்டிருக்கிறது. - கே.எஸ்.அழகிரி


 கடந்த ஆண்டு கொரோனாவின் முதல் தொற்று கண்டறியப்பட்டது முதற்கொண்டு, முதல் அலையின் போது அதை எதிர்கொள்வதற்குத் தேவையான மருத்துவ கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த மத்திய பா.ஜ.க. அரசு தவறிவிட்டது. அதனால், ஆக்சிஜன், மருத்துவ படுக்கைகள், உயிர் காக்கும் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டு, ஏறத்தாழ 4 லட்சம் மக்கள் தங்கள் உயிரைப் பறிகொடுத்துள்ளனர். உற்றார் உறவினர், நண்பர்கள் நாள்தோறும் பலியாகிக் கொண்டிருக்கும் செய்தி கேட்டு ஒவ்வொரு வீடுகளிலும் அழுகுரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இது பிரதமர் மோடியின் காதுகளில் விழாமல் இருப்பது விந்தையாக இருக்கிறது. 

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 122 எம்எம் காலிபெர் ராக்கெட் மற்றும் மேம்படுத்தப்பட்ட பினாகா ராக்கெட் ஆகியவற்றை (DRDO) வெற்றிகரமாக சோதனை செய்தது.


 உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 122 எம்எம் காலிபெர் ராக்கெட் மற்றும் மேம்படுத்தப்பட்ட பினாகா ராக்கெட் ஆகியவற்றை ஒடிசா கடற்கரைக்கு அருகில் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த பரிசோதனை தளத்தில் அமைந்துள்ள பல்முனை ராக்கெட் ஏவும் வசதியில் இருந்து டிஆர்டிஓ என்று அழைக்கப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் 2021 ஜூன் 24 மற்றும் 25 அன்று வெற்றிகரமாக சோதனை செய்தது.

நான்கு 122 எம்எம் காலிபெர் ராக்கெட்டுகள் அவற்றின் முழு சக்தியுடன் ஏவப்பட்ட நிலையில், இலக்குகளை அவை முழுமையாக எட்டின. ராணுவ பயன்பாடுகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த ராக்கெட்டுகள் 40 கி.மீ வரை இலக்குகளை தாக்கி அழிக்கும்.

வெள்ளி, 25 ஜூன், 2021

எரிசக்தி மாற்றத்தை உருவாக்குவதற்கான இந்தியாவின் நடவடிக்கைகள் குறித்த கையேடான “தி இந்தியா ஸ்டோரி”-ஐ எரிசக்தி இணை அமைச்சர் திரு ஆர் கே சிங் வெளியிட்டார்.


 கடந்த 6 வருடங்களில் இந்தியாவில் நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் இரண்டரை மடங்கு உயர்ந்து 141 ஜிகா வாட் எனும் அளவை அடைந்திருக்கிறது என்றும், நாட்டின் மொத்த திறனில் இது 37 சதவீதம் (2021 ஜூன் 16 நிலவரப்படி) என்றும் புதிய & புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இணை அமைச்சரும் (தனிப் பொறுப்பு), திறன் வளர்த்தல் மற்றும் தொழில் முனைதல் இணை அமைச்சருமான திரு ஆர் கே சிங் கூறினார்.

நிறுவப்பட்ட சூரிய சக்தி திறன் இதே காலத்தில் 15 மடங்கு அதிகரித்து 41.09 ஜிகா வாட் எனும் அளவை அடைந்திருக்கிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனில் உலகிலேயே நான்காவது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது.

இந்திய பெருங்கடல் பகுதியில் அமெரிக்க கடற்படையுடன் இணைந்து இந்திய கடற்படை மற்றும் விமானப்படை மேற்கொண்ட இரண்டு நாள் ஒருங்கிணைந்த கூட்டு பயிற்சி 2021 ஜூன் 24 அன்று நிறைவடைந்தது.


 இந்திய பெருங்கடல் பகுதியில் அமெரிக்க கடற்படையுடன் இணைந்து இந்திய கடற்படை மற்றும் விமானப்படை மேற்கொண்ட இரண்டு நாள் ஒருங்கிணைந்த கூட்டு பயிற்சி 2021 ஜூன் 24 அன்று நிறைவடைந்தது.

இந்திய கடற்படையின் மிக் 29கே விமானம், நீண்டதூர ரோந்து விமானம், கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவையும், இந்திய விமானப்படையின் ஜாக்குவார் மற்றும் சு 30 எம்கேஐ போர் விமானங்கள், வானிலேயே எரிபொருள் நிரப்பும் விமானம் உள்ளிட்டவையும் இதில் பங்கேற்றன.

சிம்லாவில் உள்ள ராணுவ பயிற்சி கட்டுப்பாட்டு மையத்தை (ARTRAC) ராணுவ தளபதி ஜெனரல் எம்எம் நரவானே இன்று பார்வையிட்டார்.


 சிம்லாவில் உள்ள ராணுவ பயிற்சி கட்டுப்பாட்டு மையத்தை (ARTRAC)  ராணுவ தளபதி ஜெனரல் எம்எம் நரவானே இன்று பார்வையிட்டார். ராணுவ உத்தி அம்சங்கள், கோட்பாடு திருத்தங்கள், செயல்பாட்டு சவால்கள், தயார்நிலை, தொழில்நுட்பத்தை புகுத்துதல் ஆகியவை குறித்து ராணுவ தளபதியிடம் விளக்கப்பட்டது.

இந்திய ராணுவத்தின் திறனை மேம்படுத்த மேற்கொள்ளப்படும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் ராணுவ தளபதியிடம் விளக்கப்பட்டது.

தில்லி ஐஐடி உருவாக்கிய கொவிட்-19 துரித பரிசோதனை உபகரணத்தை மத்திய கல்வித்துறை இணையமைச்சர் திரு சஞ்சய் தோத்ரே இன்று தொடங்கி வைத்தார்.


 தில்லி ஐஐடி உருவாக்கிய கொவிட்-19 துரித பரிசோதனை உபகரணத்தை மத்திய கல்வித்துறை இணையமைச்சர் திரு சஞ்சய் தோத்ரே இன்று தொடங்கி வைத்தார்.

இந்த துரித பரிசோதனை உபகரணத்தை  தில்லி ஐஐடியின் உயிரிமருத்துவ பொறியியல் துறை போராசிரியர் டாக்டர் ஹர்பல் சிங் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

உள்நாட்டில் தயாரிக்கப்படும் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல் கட்டுமானப் பணி: கொச்சியில் ஆய்வு செய்தார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்


 கொச்சியில் உள்ள கொச்சின் கப்பல்கட்டும் நிறுவனத்தில் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும், முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலின் கட்டுமானப் பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை  பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இன்று ஆய்வு செய்தார்.

அவருடன்  கடற்படை தளபதி அட்மிரல் கரம்பிர் சிங், கடற்படை தெற்கு கட்டுப்பாட்டு மைய தலைமை அதிகாரி வைஸ் அட்மிரல் ஏ.கே.சாவ்லா ஆகியோர் உடன் சென்றனர். கப்பல் கட்டப்படும் இடத்தை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார். அப்போது, இந்த கப்பலை கடலில் இறக்கும் நிகழ்ச்சி கடந்தாண்டு நவம்பரில் வெற்றிகரமாக நடைப்பெற்றதாக திரு ராஜ்நாத் சிங்கிடம் தெரிவிக்கப்பட்டது.

காவல் அதிகாரியால் தாக்கப்பட்டு உயிரிழந்த திரு. முருகேசன் அவர்களின் குடும்பத்திற்கு ரூ .50 லட்சம் நிவாரணத் தொகையாக உயர்த்தி தமிழக அரசு வழங்க வேண்டும்.- ஜி.கே.வாசன்


 காவல் அதிகாரியால் தாக்கப்பட்டு உயிரிழந்த திரு. முருகேசன் அவர்களின் குடும்பத்திற்கு ரூ .50 லட்சம் நிவாரணத் தொகையாக உயர்த்தி தமிழக அரசு வழங்க வேண்டும்

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் இடையப்பட்டி கிராமத்தை சேர்ந்த திரு .முருகேசன் என்பவர் காவல்துறையினரால் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த அதர்ச்சியயையும் , வருத்தத்தை ஏற்படுத்துகிறது .