இன்று(31.01.2019) நாடாளுமன்றத்தில் நிகழ்த்தப்பட்ட குடியரசுத் தலைவரின் உரை பாஜக தலைவரின் அரசியல் அறிக்கையாக இருந்ததே தவிர, இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவான இந்திய முதல் குடிமகனின் உரையாக இல்லை. இது மிகவும் வேதனையும் ஏமாற்றமும் அளிக்கிறது.
வெள்ளி, 31 ஜனவரி, 2020
டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் அடுக்கடுக்கான முறைகேடுகள் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். - கே. பாலகிருஷ்ணன்
லேபிள்கள்:
கே.பாலகிருஷ்ணன்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
CAA - மத்திய அரசு சிறிதும் பின்வாங்காமல் முழுவீச்சுடன் செயல்படுத்த வேண்டும். - டாக்டர் K.கிருஷ்ணசாமி
CAA - மத்திய அரசு சிறிதும் பின்வாங்காமல் முழுவீச்சுடன் செயல்படுத்த வேண்டும். - டாக்டர் K.கிருஷ்ணசாமி
அரசியல் உள்நோக்கத்தோடு செய்யும் பிரச்சாரத்தை இந்திய இஸ்லாமியர்கள் இரை ஆகிவிட வேண்டாம்.
புதிய தமிழகம் கட்சியின் சார்பாக 30.01. 2020 -ம் நாள் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சென்னை - சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் - தலைவர் டாக்டர் K.கிருஷ்ணசாமி.MD அவர்கள் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் நிறைவாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு :
லேபிள்கள்:
டாக்டர் K. கிருஷ்ணசாமி,
புதிய தமிழகம் கட்சி
நெல்லுக்கு குவிண்டாலுக்கு ஆதார விலையாக 2500ரூபாய் வழங்க வேண்டும் - ஜி.கே.வாசன்
தமிழக அரசு – நெல்லுக்கு குவிண்டாலுக்கு ஆதார விலையாக 2500ரூபாய் வழங்கவும், ஆந்திரா பொன்னிரக நெல் சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். - ஜி.கே.வாசன்
தமிழகத்தில் விவசாயம் தான் பிரதான தொழிலாக இருப்பதால் நெல் சாகுபடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவும், விவசாயிகளுக்கு உதவிக்கரமாக இருக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.
நெல் சாகுபடியை விவசாயிகள் ஆர்வமாக, தீவிரமாக செய்து வருகிறார்கள். ஆனால் பல நேரங்களில் நெல் சாகுபடிக்காக செய்த செலவு விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. இந்த நிலை மாற வேண்டும்.
தற்போதும் நெல் விவசாயிகள் நெல் பயிரிட, விளைச்சல் செய்ய செய்த செலவு நெல்லை விற்கும் போது கிடைக்கவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர். குறிப்பாக மத்திய, மாநில அரசுகள் குறைந்தபட்ச ஆதார விலையாக ஒரு குவிண்டால் சன்னரக நெல்லுக்கு ரூபாய் 1,905 வழங்குவதும், ஒரு குவிண்டால் பொதுரக நெல்லுக்கு ரூபாய் 1,855 வழங்குவதும் போதுமானதல்ல. இந்நிலையில் விவசாயிகள் ஒரு குவிண்டால் நெல்லுக்கு குறைந்த பட்ச ஆதார விலையாக ரூபாய் 2,500 வழங்க கோரிக்கை வைக்கின்றனர்.
அதே போல திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர் போன்ற மாவட்டங்களில் சுமார் 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட ஆந்திரா பொன்னிரக நெல்லானது புகையான், குலை நோய் ஆகியவற்றின் தாக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு கிலோ ஆந்திரா பொன்னிரக நெல்லை 10 ரூபாய்க்கு கூட விற்க முடியவில்லை.
சாதரணமாக ஒரு கிலோ ஆந்திரா பொன்னிரக நெல்லை ரூபாய் 20 வரை விற்கலாம்.
அதே போல ஒரு ஏக்கருக்கு ஆந்திரா பொன்னி நெல் சுமார் 40 மூட்டை (ஒரு மூட்டை – 60 கிலோ) வரை சாகுபடி செய்ய வேண்டிய நிலையில் நோயின் தாக்கத்தால் இப்போது 7 அல்லது 8 மூட்டை வரை மட்டுமே சாகுபடி செய்ய முடிகிறது.
எனவே ஆந்திரா பொன்னிரக நெல் சாகுபடி செய்து பாதிக்கப்பட்டிருக்கின்ற விவசாயிகளின் ஒரு ஏக்கருக்கு குறைந்த பட்சம் 30 ஆயிரம் ரூபாயை நிவாரணமாக வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். பொது மக்கள் ஆந்திரா பொன்னிரக நெல்லை அதிகம் விரும்பி வாங்குவதால் விவசாயிகள் இந்த நெல்லை பயிரிடுகிறார்கள். ஆந்திரா பொன்னிரக நெல்லுக்கு அரசு தடை விதித்த போதும் தனியார் விதை விற்பனை மையங்களில் விதை விற்பனை செய்யப்படுவது ஏற்புடையதல்ல.
எனவே தமிழக அரசு - தனியார் விதை விற்பனை மையங்களில் ஆந்திரா பொன்னிரக நெல் விதை விற்பனையை தடை செய்ய வேண்டும். மேலும் தமிழக அரசு ஆந்திரா பொன்னிரக நெல்லுக்கு ஈடாக புதிய சன்னரக நெல் கண்டிபிடித்தால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். பொதுவாக விவசாயிகள் இலாபம் பெற வேண்டும் என்பதற்காக அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.மா.கா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
லேபிள்கள்:
தமிழ் மாநில காங்கிரஸ்,
ஜி.கே.வாசன்
ராமதாஸ், பிரச்சனையைத் திசைதிருப்பாமல், ஆதாரங்களை அளிக்க வேண்டும்; அல்லது பகிரங்க மன்னிப்புக்கோர வேண்டும்”
"பஞ்சமி நிலத்தில் முரசொலி இருப்பதாகக் கூறிய பொய்யை நிரூபிக்க முடியாத ராமதாஸ், பிரச்சனையைத் திசைதிருப்பாமல், ஆதாரங்களை அளிக்க வேண்டும்; அல்லது பகிரங்க மன்னிப்புக்கோர வேண்டும்”
-திரு. டி.கே.எஸ். இளங்கோவன் MP
"முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டிடத்தில் இயங்குகிறதாமே. அப்படியானால், அந்த பட்டா வெளியிட்டது, அரசியலில் இருந்து விலகத் தயாரா? என்று சவால் விட்டதெல்லாம் வெற்று சவடால்தானா” என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவரய்யா டாக்டர் ராமதாஸ் அவர்கள் கூறியிருப்பது- பந்தயம் கட்டி படுதோல்வி அடைந்தவரின் பரிதாபத்தை பிரதிபலிக்கிறது.
வியாழன், 30 ஜனவரி, 2020
மூன்று நாள் சாலைவிதிகளை கடைபிடிக்கச் செய்யும் கட்டாயப் பணியில் ஈடுபடுத்தவும் - ஜி.கே.வாசன்
லேபிள்கள்:
தமிழ் மாநில காங்கிரஸ்,
ஜி.கே.வாசன்
ஆசிரியர்கள் தேர்வு: சமூகநீதி தீர்ப்புக்கு எதிராக வாரியம் மேல்முறையீடு செய்வதா? - DR.S. ராமதாஸ்
ஆசிரியர்கள் தேர்வு: சமூகநீதி தீர்ப்புக்கு
எதிராக வாரியம் மேல்முறையீடு செய்வதா? - DR.S. ராமதாஸ்
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் இடஒதுக்கீட்டு விதிகள் மீறப்பட்டிருப்பதை உறுதி செய்து, புதிய தேர்வுப் பட்டியலை 2 வாரங்களுக்குள் தயாரித்து வெளியிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் இதுவரை செயல்படுத்தவில்லை. மேலும், இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வாரியம் தீர்மானித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
இரண்டு வழக்குகள் மட்டுமல்ல - இன்னும் இரண்டாயிரம் வழக்குகள் போட்டாலும் கவலையில்லை - மு.க.ஸ்டாலின்.
இரண்டு வழக்குகள் மட்டுமல்ல - இன்னும் இரண்டாயிரம் வழக்குகள் போட்டாலும் கவலையில்லை - மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாட்டில் தற்போது ஓர் ஆட்சி நடைபெறுகிறது. அதை ஆட்சி என்று சொல்வதை விட காட்சி என்றுதான் சொல்ல வேண்டும். அதை மாற்றுவதற்கான தேர்தலை விரைவில் நாம் சந்திக்க இருக்கிறோம். 2021ல் தேர்தல். சரியாக 17 மாதங்கள்தான் இடையில் உள்ளன. இடையில் இருக்கும் இந்தக் காலக்கட்டத்தை நாம் எப்படி பயன்படுத்தப் போகிறோம்? நாட்டில் என்ன நிலைமை? உள்ளாட்சித் தேர்தலில் நாம் சற்றே அலட்சியமாக இருந்து விட்டதாகக்கூட திவாகரன் குறிப்பிட்டுச் சொன்னார். அதனால் ஆங்காங்கே சில தவறுகள், முறைகேடுகள் நடந்து தி.மு.கழகத்தின் வெற்றி தடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
புதன், 29 ஜனவரி, 2020
ஆர்.பி.உதயகுமார் பாரத் நெட் திட்ட டெண்டர் விவரங்களை முழுமையாக வெளியிடத்தயாரா?" - திரு.ஐ.பெரியசாமி எம்.எல்.ஏ
”முழுப்பூசணிக்காயை இலைச்சோற்றில் மறைக்கும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பாரத் நெட் திட்ட டெண்டர் விவரங்களை முழுமையாக வெளியிடத்தயாரா?"
- திரு. ஐ.பெரியசாமி எம்.எல்.ஏ
“பாரத் நெட் திட்ட டெண்டரில் முறைகேடு என்பது அடிப்படை ஆதாரம் இல்லாத கற்பனையான ஒரு பொய்க் குற்றச்சாட்டு” என்று முழு பூசணிக்காயை இலைச் சோற்றில் மறைத்திருக்கிறார் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் திரு ஆர்.பி. உதயகுமார்.
ஊரக வேலை உறுதி திட்டம்: தமிழகத்திற்கு ரூ.1,000 கோடி கூடுதல் நிதி வேண்டும்! - DR.S. ராமதாஸ்
ஊரக வேலை உறுதி திட்டம்: தமிழகத்திற்கு
ரூ.1,000 கோடி கூடுதல் நிதி வேண்டும்! - DR.S. ராமதாஸ்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்த கிட்டத்தட்ட செலவழிக்கப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு ரூ.300 கோடி வரை ஊதியம் வழங்கப்பட வேண்டியிருப்பதாக தி இந்து ஆங்கில நாளிதழில் வெளியாகியுள்ள செய்தி ஊரகப் பொருளாதாரம் குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மக்களைத் திரட்டி நானே போராட்டத்தில் ஈடுபடுவேன் - மு.க.ஸ்டாலின்
அமைச்சர் வேலுமணியை விமர்சிக்கும் திமுகவினர் இனியும் கைது செய்யப்பட்டால், கோவை மக்களைத் திரட்டி நானே போராட்டத்தில் ஈடுபடுவேன் - மு.க.ஸ்டாலின்
கோவை மாவட்டத்தில் உள்ள அரசூர் பஞ்சாயத்தில் நடைபெற்ற முதல் கிராமசபைக் கூட்டத்தில், உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு எஸ்.பி. வேலுமணி பற்றிப் பேசியதற்காக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் ஏ.வி. முத்துலிங்கத்தைக் கைது செய்திருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
லேபிள்கள்:
தமிழ்நாடு,
திமுக,
மு.க.ஸ்டாலின்
திங்கள், 27 ஜனவரி, 2020
எடப்பாடி பழனிசாமி அரசுக்குத் துணிச்சல் இல்லாதது ஏன்? - மு.க.ஸ்டாலின்
சட்டப்பேரவையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்துசெய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற எடப்பாடி பழனிசாமி அரசுக்குத் துணிச்சல் இல்லாதது ஏன்? - மு.க.ஸ்டாலின்.
மத்திய அரசு மதத்தின், ஜாதியின் பெயரால், மக்களைப் பிளவுபடுத்தும் கொடுமையான சட்ட திட்டங்களைக் கொண்டு வரும் நிலையை உருவாக்கியிருக்கிறது. இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் மட்டுமல்ல, தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, தேசியக் குடிமக்கள் பதிவேடு போன்றவற்றைக் கொண்டு வந்து நிறைவேற்றும் நிலை வந்திருக்கிறது. அதைத் தட்டிக் கேட்கிற நம்முடைய சுயமரியாதை, உரிமை பறிக்கப்படக் கூடிய நிலை நிலவிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நாம் நிம்மதியாக நாட்டில் வாழ முடியுமா?
காஷ்மீரில் வீட்டுக்காவலில் உள்ள உமர் அப்துல்லா புகைப்படம் வருத்தமளிக்கிறது. - மு.க.ஸ்டாலின்
பள்ளிகளில் சாதிப்பெயர் சொல்லி ஆசிரியர்கள் திட்டுவது வருத்தம் அளிக்கிறது - நடிகர் சூர்யா
சுங்கச்சாவடி தாக்குதல்: மக்களின் கோபத்தை அரசு உணர வேண்டும்! - DR.S.ராமதாஸ்
சுங்கச்சாவடி தாக்குதல்: மக்களின்
கோபத்தை அரசு உணர வேண்டும்! - DR.S.ராமதாஸ்
சென்னையை அடுத்த செங்கல்பட்டு பரனூரில் உள்ள சுங்கச்சாவடி நேற்று அதிகாலை வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளால் சூறையாடப்பட்டிருக்கிறது. சட்டத்தை மதிக்காமல் நிகழ்த்தப்பட்ட இந்த கொடூரத் தாக்குதலை நியாயப்படுத்த முடியாது என்றாலும் கூட, எதிரி நாட்டு இலக்குகளுக்கு இணையாக சுங்கச்சாவடிகள் கோபத்தை சம்பாதித்து வைத்துள்ளன என்பதற்கு இந்நிகழ்வு எடுத்துக்காட்டு ஆகும்.
ஞாயிறு, 26 ஜனவரி, 2020
சுகாதாரத்துறையை பொதுப்பட்டியலுக்கு மாற்றுவது ஆபத்தானது; கைவிட வேண்டும்! -DR.S.ராமதாஸ்
சுகாதாரத்துறையை பொதுப்பட்டியலுக்கு மாற்றுவது ஆபத்தானது; கைவிட வேண்டும்! -DR.S.ராமதாஸ்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாநிலப்பட்டியலில் இடம்பெற்றுள்ள பொது சுகாதாரம் மற்றும் மருத்துவமனைகள் என்ற பொருளை பொதுப்பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று மத்திய அரசால் அமைக்கப்பட்ட நிதி ஆணையத்தின் சுகாதாரத்துறைக்கான துணைக்குழு பரிந்துரை செய்திருக்கிறது. பெரு நிறுவனங்களின் வணிக நலன் கருதி செய்யப்பட்ட இந்த பரிந்துரை மிகவும் ஆபத்தானதாகும்.
ஹைட்ரோகார்பன் எதிர்ப்புக்குரல் டெல்லி வரை கேட்கட்டும்!-மு.க.ஸ்டாலின்
ஹைட்ரோகார்பன் எதிர்ப்புக்குரல்
டெல்லி வரை கேட்கட்டும்!- மு.க.ஸ்டாலின்
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல் வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என தனது 14 வயது முதல் 94 வயது வரை ஓயாமல் உழைத்த முத்தமிழறிஞர் கலைஞர் ஊட்டிய உணர்வுடன் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மொழிப்போர் தியாகிகளைப் போற்றும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நேற்றைய நாளில் (ஜனவரி 25) எழுச்சியோடு நடை பெற்றிருக்கின்றன.
குடியரசு தின நல்வாழ்த்துக்களை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன் - கே.எஸ்.அழகிரி
குடியரசு தின நல்வாழ்த்துக்களை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன் - கே.எஸ்.அழகிரி
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து அண்ணல் மகாத்மா காந்தி தலைமையில், விடுதலைப் போராட்டத்தை அகிம்சை வழியில் நடத்தி, ஆகஸ்ட் 15, 1947 இல் நாம் சுதந்திரம் பெற்றோம். ஆனால், ஜனவரி 26, 1950 அன்று தான் இந்தியா ஒரு குடியரசு நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது. அன்று தான் அரசமைப்புச் சட்டமும் அமலுக்கு வந்தது. இந்திய மக்களின் அறிவாற்றல், சட்ட நுணுக்கம், ஆழ்ந்த அனுபவம், அகன்ற தேசியப் பார்வை, தீர்க்க தரிசனம் ஆகிய அனைத்திற்கும் எடுத்துக்காட்டாக திகழ்வது தான் நம் அரசமைப்புச் சட்டம்.
சனி, 25 ஜனவரி, 2020
மத்திய அரசின் வரி வருவாய் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகும் மந்தமாகவே இருந்து வருகிறது. - முன்னாள் நிதித் துறைச் செயலர்
பொருளாதார மந்தநிலையும், வேலைவாய்ப்பின்மையும் மோசமான சூழலை உருவாக்கியுள்ளது.
தாய்மொழியைக் காக்க மீண்டும் ஒரு மொழிப்போருக்குத் தமிழகம் தயாராக வேண்டும் – சீமான்
தாய்மொழியைக் காக்க மீண்டும் ஒரு மொழிப்போருக்குத் தமிழகம் தயாராக வேண்டும் – சீமான் அறைகூவல்
மொழி என்பது வெறும் தகவல் பரிமாற்றக்கருவி அல்ல. மொழி என்பது ஒரு தேசிய இனத்தின் அடையாளம். ஒரு தேசிய இனத்தின் இயல்புகளை வரையறுக்கும் ரசியப் புரட்சியாளர் ஸ்டாலின், மொழி என்கின்ற காரணியைத்தான் முதன்மையானக் குணாதிசயமாகக் கொண்டு தேசிய இனத்தை வரையறுத்தார்.
லேபிள்கள்:
சீமான்,
தமிழ்நாடு,
நாம் தமிழர்
மத்திய அரசு எடுக்கவுள்ள முடிவினை - முளையிலேயே தடுத்திட வேண்டும் - கி.வீரமணி
மாநிலத்தின் ஆளுகையின்கீழ் உள்ள மருத்துவமனைகள், பொது சுகாதாரம் ஆகியவற்றை பொதுப் பட்டியலுக்குக் கொண்டு செல்ல மத்திய அரசு எடுக்கவுள்ள முடிவினை - முளையிலேயே தடுத்திட தமிழக அரசும், எதிர்க்கட்சித் தலைவர் உள்பட அனைத்துத் தரப்பினரும் உடனடி யாக முயற்சி எடுக்கவேண்டும். இது மிக முக்கியம் என்று திராவிடர் கழகத் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தோழர் பாலபாரதி அவர்களிடம் தரக்குறைவாகவும், மிரட்டல் தொனியிலும் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்திடுக! - சிபிஐ (எம்)
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் அதிகரிப்பு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - சிபிஐ (எம்)
"சிவகாசியில் சிறுமி பாலியல் படுகொலை" குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் அதிகரிப்பு உரிய நடவடிக்கை எடுக்க சிபிஐ (எம்) வலியுறுத்தல்
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், கொங்கலாபுரம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின் மகளான 8 வயது சிறுமி, கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படுகொலை சம்பவத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
லேபிள்கள்:
தமிழ்நாடு,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
நீட் தேர்வு பயிற்சியில் அரசுப்பள்ளி மாணவர்கள் இந்த ஆண்டு எத்தனை பேர் தேர்ச்சி பெறுவார்கள் ? - ஈஸ்வரன்
லேபிள்கள்:
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி,
E.R.ஈஸ்வரன்
இந்தியாவின் 71 ஆவது குடியரசு தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. - ஜி.கே.வாசன்
இந்தியாவின் 71 ஆவது குடியரசு தினம் (26.01.2020) நாடு முழுவதும் கொண்டாடப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. - ஜி.கே.வாசன்
தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளால் ஜனவரி 26 ஆம் நாள் விடுதலை நாளாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
விடுதலை பெற்றதன் முக்கிய நோக்கம் நம் நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், ஆன்மீகம் ஆகியவற்றில் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பது தான்.
லேபிள்கள்:
தமிழ் மாநில காங்கிரஸ்,
தமிழ்நாடு,
ஜி.கே.வாசன்
காஞ்சிபுரம் அருகில் பெரியார் சிலை உடைப்பு; - வைகோ கடும் கண்டனம்!
காஞ்சிபுரம் அருகில் பெரியார் சிலை உடைப்பு;
- வைகோ கடும் கண்டனம்!
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் - சாலவாக்கம் அருகில் உள்ள கலியப்பட்டியில் திராவிடர் கழகம் சார்பில் அமைக்கப்பட்டு இருந்த தந்தை பெரியார் சிலையை நேற்று (23.01.2020) சமூக விரோதிகள் சிலர் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். நள்ளிரவில் திருட்டுத்தனமாக செய்யப்பட்டுள்ள இந்த அக்கிரமச்செயலை மறுமலர்ச்சி திமுகழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
தந்தை பெரியார் சிலைகள் சேதப்படுத்தப்படுவது என்பது இந்த ஆட்சியில் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து அவர்களை தண்டிப்பதில் மெத்தனம் காட்டியே வருகிறது. தமிழக அரசு இந்த நிலையை மாற்றிக் கொண்டு பெரியார் சிலையை சேதப்படுத்தியவர்களை விரைந்து கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
பெரியார் ஒரு சகாப்தம், காலக்கட்டம், வரலாறு என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் குறிப்பிட்டதைப் போல பெரியாரின் புகழ் உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், பெரியார் மீது அவதூறு சேற்றை அள்ளி வீசவும், அவரது வரலாற்றை திசை திருப்பி கொச்சைப்படுத்தவும், “திருப்பணிகள்” நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் மீண்டும் பெரியார் சிலை மீது குறிவைக்கப்பட்டு இருக்கிறது.
வாழும்போதே எதிர்ப்புகளுக்கு இடையில் எதிர்நீச்சல் போட்டு சமுதாயப்பணி ஆற்றியவர் பெரியார். இன்று மறைந்த பின்பும் எதிர்ப்புகளுக்கு இடையில் பெரியார் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதுதான் உண்மை.
எனவே தமிழக அரசு இந்தப் பிரச்சனையில் முனைப்புடன் முழுவீச்சில் ஈடுபட்டு குற்றவாளிகளை கண்டறிந்து தண்டிப்பதுடன், எதிர்காலத்தில் இத்தகைய அவலங்கள் நடைபெறாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
தென்பெண்ணை சிக்கலைத் தீர்க்க தேவை நடுவர் மன்றம் தான் பேச்சுக்குழு அல்ல! - DR.S. ராமதாஸ்
தென்பெண்ணை சிக்கலைத் தீர்க்க தேவை
நடுவர் மன்றம் தான்... பேச்சுக்குழு அல்ல! - DR.S. ராமதாஸ்
தென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவது தொடர்பான சிக்கலை தீர்ப்பதற்காக பேச்சுவார்த்தைக் குழுவை மத்திய அரசு அமைத்திருக்கிறது. இந்தச் சிக்கலுக்கு தீர்வு காண நடுவர் மன்றம் அமைக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதற்கு மாறாக பேச்சுக் குழுவை மத்திய அரசு அமைத்திருப்பது தமிழகத்திற்கு இழைக்கப்படும் துரோகமாகும்.
வெள்ளி, 24 ஜனவரி, 2020
காஞ்சிபுரம் அருகே பெரியார் சிலையைசேதப்படுத்தியோரை தண்டிக்க வேண்டும்! - Dr.S.ராமதாஸ்
காஞ்சிபுரம் அருகே பெரியார் சிலையை
சேதப்படுத்தியோரை தண்டிக்க வேண்டும்! - Dr.S.ராமதாஸ்
காஞ்சிபுரம் மாவட்ட சாலவாக்கத்தை அடுத்த கலிப்பட்டு கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் திருவுருவச் சிலையை சில விஷமிகள் சேதப்படுத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்குடன் செய்யப்பட்டுள்ள இந்த வெறுப்புச் செயல் கண்டிக்கத்தக்கது.
எழுவர் விடுதலைக்கான ஒப்புதலைத் தாமதமின்றிப் பெற்றிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்
உச்ச நீதிமன்றத்தின் புதிய உத்தரவினை மேற்கோள் காட்டி, முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் தமிழக ஆளுநர் அவர்களை உடனடியாக நேரில் சந்தித்து,
எழுவர் விடுதலைக்கான ஒப்புதலைத் தாமதமின்றிப் பெற்றிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்
பேரறிவாளன் விடுதலை தொடர்பாக அரசியல் சட்டப் பிரிவு 6 ன் கீழ் தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்துப் பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. 29 வருடங்களுக்கும் மேலாகச் சிறையில் வாடும் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரின் விடுதலையில் புதிய திருப்பமாக உச்ச நீதிமன்றமே தலையிட்டிருப்பதால், ஆக்கபூர்வமான விளைவை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை மனதில் தோன்றி மகிழ்ச்சி தருகிறது.
லேபிள்கள்:
தமிழ்நாடு,
திமுக,
மு.க.ஸ்டாலின்
அனைத்து தாலுக்காக்களிலும் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க முன்வருமேயானால் மக்கள் பெரிதும் பயன் பெறுவார்கள். - ஜி.கே.வாசன்
மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள அனைத்து தாலுக்காக்களிலும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை அமைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப பரிசீலனை செய்து நல்ல முடிவு எடுக்க வேண்டும். - ஜி.கே.வாசன்
நாடு முழுவதும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை இன்னும் அதிக அளவில் திறக்க வேண்டும் என்பது தான் பொது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் - DR.S. ராமதாஸ்
5, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து
செய்யக் கோரி 28-ஆம் தேதி போராட்டம்! - DR.S. ராமதாஸ்
தமிழ்நாட்டில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக பள்ளிக்கல்வித்துறை செய்து முடித்து விட்டது. 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை கிடப்பில் போட்டு விட்டு, பொதுத்தேர்வை நடத்துவதில் அரசு உறுதியாக இருப்பது கல்விக்கு செய்யும் நன்மையல்ல... மாணவர்களுக்கு செய்யும் தீமையாகும்.
வியாழன், 23 ஜனவரி, 2020
யாருக்காக பேசுகிறார் ரஜினிகாந்த்? - கே. பாலகிருஷ்ணன்
துக்ளக் ஏட்டின் பொன் விழாவில் கலந்து கொண்டு ரஜினிகாந்த் பேசியதையொட்டி தமிழகத்தில் சர்ச்சை எழுந்துள்ளது. இவ்விழாவில் பேசும்போது, துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ அவர்களை பாராட்டுவதற்காக 1971ல் சேலம் நகரில், தி.க. சார்பில் நடத்தப்பட்ட மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு ஊர்வலத்தில் ராமர், சீதை படங்கள் அவமதிக்கப்பட்டதாகவும், அந்த செய்தியை துணிச்சலாக விமர்சித்தவர் சோ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
லேபிள்கள்:
கே.பாலகிருஷ்ணன்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
"ஈ.வெ. ராமசாமி என்கின்ற நான்.. " மறுபதிவிட்ட கனிமொழி
என்னைப் பற்றி பலரும் பலவிதமாகச் சொல்லி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். மிகவும் பொல்லாதவன் என்றோ மிகப் பெரும் தலைவன் என்றோ சிலர் என்னை உங்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் உண்மையிலேயே நான் யார், நான் என்ன பேசினேன், என்ன எழுதினேன், என்ன சிந்தித்தேன், எதற்காகப் போராடினேன், எப்படி வாழ்ந்தேன் என்று நீங்களாகவே நேரடியாகத் தேடி அறிந்துகொண்டு, ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்புகிறேன். தேவை என்று பட்டால் நான் சொன்னதில் எதையேனும் சிந்தித்துப் பாருங்கள். தேவை இல்லை என்று தோன்றினால் தாமதிக்காமல் ஒதுக்கிவிடுங்கள்.
மறக்க வேண்டியதை ரஜினிகாந்த் நினைவூட்டியது ஏன்? - வைகோ
தந்தை பெரியார் ஆற்றிய அருந்தொண்டிற்காக ஐ.நா.வின் அனைத்து நாட்டுக் கல்வி அறிவியல் பண்பாட்டுக் கழகம், யுனெஸ்கோ மன்றம் (UNESCO) 1970 ஆம் ஆண்டு பெரியாருக்குச் சிறப்பு விருது வழங்கி கவுரப்படுத்தியது. அன்றைய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் தலைமையில் சென்னையில் நடந்த விழாவில், மத்திய அரசின் கல்வி அமைச்சர் டாக்டர் திரிகுணசென் அவர்கள் யுனெஸ்கோ அளித்த விருதை தந்தை பெரியாருக்கு வழங்கிச் சிறப்பித்தார்.
மத்திய அரசு தன்னிடம் உள்ள அனைத்து நிதி ஆதாரங்களையும் இஷ்டப்படி செலவு செய்துள்ளது - யஷ்வந்த் சின்கா
மூடப்பட்ட பத்திரிகை பதிவு மண்டல அலுவலகங்களை திறக்க வேண்டும்! - DR.S.ராமதாஸ்
மூடப்பட்ட பத்திரிகை பதிவு மண்டல
அலுவலகங்களை திறக்க வேண்டும்! - DR.S.ராமதாஸ்
இந்தியாவில் செய்தித்தாள்கள் மற்றும் பருவ இதழ்களை பதிவு செய்யவும், ஒழுங்குபடுத்தவும் 1867ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட அச்சகங்கள் மற்றும் நூல்கள் பதிவு சட்டத்திற்கு மாற்றாக, அச்சகங்கள் மற்றும் பருவ இதழ்கள் பதிவு சட்டத்தை இயற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள வரைவு சட்ட மசோதாவில் வரவேற்கத்தக்க பல அம்சங்கள் உள்ளன.
அனைத்து ஆலயங்களிலும் வழிபாட்டு மொழியாக தமிழே இடம் பெற வேண்டும்! - கே.பாலகிருஷ்ணன்
தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட அனைத்து ஆலயங்களிலும் வழிபாட்டு மொழியாக தமிழே இடம் பெற வேண்டும்!
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
மாநிலங்களில் ஆட்சி மொழி, உயர்நீதிமன்றங்களில் வழக்காடு மொழி, ஆலயங்களில் வழிபாட்டு மொழி மற்றும் கல்வி நிலையங்களில் பயிற்று மொழியாக அவரவர் தாய்மொழி இருக்க வேண்டுமென்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அணுகுமுறையாகும். அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மேற்கண்ட அனைத்திலும் தமிழ் மொழியே இடம் பெற வேண்டும். இந்நிலையில் தஞ்சையில் பிப்ரவரி 5ந் தேதி நடைபெறவுள்ள பிரகதீஸ்வரர் ஆலயக் குடமுழுக்கினை தமிழில் நடத்துவதா, சமஸ்கிருதத்தில் நடத்துவதா என்கிற கேள்வியே பொருத்தமற்றது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.
லேபிள்கள்:
கே.பாலகிருஷ்ணன்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
புதன், 22 ஜனவரி, 2020
ரஜினிகாந்த் அவர்களே வகுப்புவாத தீய சக்திகளுக்கு தயவு செய்து இரையாகிவிடாதீர்கள் - கே. எஸ். அழகிரி
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே. எஸ். அழகிரி அவர்கள் விடுக்கும் அறிக்கை.
சமீபத்தில் நடைபெற்ற துக்ளக் வாரஇதழின் 50-வது ஆண்டு விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் தேவையில்லாமல், 1971 ஆம் ஆண்டு சேலத்தில் திராவிடர் கழகத்தின் சார்பாக தந்தை பெரியார் பங்கேற்ற மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து கருத்து கூறியிருப்பது பலத்த சர்ச்சைகளை உருவாக்கியிருக்கின்றன.
லேபிள்கள்:
காங்கிரஸ்,
கே.எஸ்.அழகிரி,
தமிழ்நாடு
பெரும்பான்மை இருப்பதற்காக அச்சுறுத்தும் அரசியல் கூடாது: நேதாஜி பேரன் சந்திரகுமார் போஸ் எச்சரிக்கை
ரஜினியும், சுப்பிரமணிய சாமியும் சேர்ந்தால், எங்களுடைய வேலை இன்னும் சுலபமாக முடியும். - கி.வீரமணி
டில்லியை திருப்தி செய்வதற்காக 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்குத் தேர்வு நடத்துகிறார்கள் - கி.வீரமணி
டில்லியை திருப்தி செய்வதற்காக 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்குத் தேர்வு நடத்துகிறார்கள் - கி.வீரமணி
கல்வி என்பது நம்முடைய நாட்டில் இதற்குமுன்னால் மாநிலப் பட்டியலில் இருந்தாலும், பிறகு அது கன்கரண்ட் லிஸ்ட் என்று சொல்லக்கூடிய ஒத்திசைவு பட்டியலுக்கு மாற்றப்பட்டது என்றாலும், இப்போது உள்ள நிலைமை, மத்திய அரசுக்கே அது முழுமையாக மாற்றப்பட்டது போல அதனை ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
லேபிள்கள்:
கி.வீரமணி,
தமிழ்நாடு,
திராவிடர் கழகம்
ரஜினியை கண்டு திமுக வேண்டுமானால் பயப்படலாம், ஆனால் அதிமுக பயப்படாது - அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை ராயபுரத்தில் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர். “நடைபெறாத விஷயத்தை கூறி ரஜினி ஏன் மக்களை திசை திருப்ப வேண்டும் என தெரியவில்லை. அண்ணா, பெரியார், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய நான்கு தலைவர்களுக்கு எந்த இழுக்கு ஏற்பட்டாலும் அதனை நாங்கள் கண்டித்து குரல் கொடுப்போம்.
ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் என்பதுதான் அதிமுகவின் கொள்கை. 1971-ல் என்ன நடந்தது என்று தனக்கு தெரியாது என்பதை துக்ளக்கின் சோவே கூறியுள்ளார். தேவையில்லாததை பேசுவதற்கு பதிலாக ரஜினி வாயை மூடி மவுனமாக இருக்க வேண்டும், ரஜினியை கண்டு திமுக வேண்டுமானால் பயப்படலாம், ஆனால் அதிமுக பயப்படாது.
பழைய நிகழ்வுகளை பற்றி பேசுவதால் ரஜி னிக்கு என்ன பிஎச்.டி. பட்டமா கொடுக்கப் போகிறார்கள்? இது மறுக்க வேண்டிய சம்பவமல்ல, மறக்க வேண்டிய சம்பவம் எனக்கூறி மீண்டும் அதை ஞாபகப்படுத்தி உள்ளார்.
அனைவரும் மதிக்கும் பெரியார் குறித்து ரஜினி பேசியது கண்டனத்துக்குரியது எனத் தெரிவித்துள்ளார்.
ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் என்பதுதான் அதிமுகவின் கொள்கை. 1971-ல் என்ன நடந்தது என்று தனக்கு தெரியாது என்பதை துக்ளக்கின் சோவே கூறியுள்ளார். தேவையில்லாததை பேசுவதற்கு பதிலாக ரஜினி வாயை மூடி மவுனமாக இருக்க வேண்டும், ரஜினியை கண்டு திமுக வேண்டுமானால் பயப்படலாம், ஆனால் அதிமுக பயப்படாது.
பழைய நிகழ்வுகளை பற்றி பேசுவதால் ரஜி னிக்கு என்ன பிஎச்.டி. பட்டமா கொடுக்கப் போகிறார்கள்? இது மறுக்க வேண்டிய சம்பவமல்ல, மறக்க வேண்டிய சம்பவம் எனக்கூறி மீண்டும் அதை ஞாபகப்படுத்தி உள்ளார்.
அனைவரும் மதிக்கும் பெரியார் குறித்து ரஜினி பேசியது கண்டனத்துக்குரியது எனத் தெரிவித்துள்ளார்.
லேபிள்கள்:
அதிமுக,
தமிழ்நாடு,
ஜெயக்குமார்
அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேகில் பிரசாந்த்
பெரியார் மீது செருப்பு வீசியதற்காக மன்னிப்புக் கேட்கிறேன் என்று சோ நீதிமன்றத்திலேயே தெரிவித்தார்.
"பெரியார் மீது செருப்பு வீசியதற்காக மன்னிப்புக் கேட்கிறேன்" என்று சோ நீதிமன்றத்திலேயே தெரிவித்தார். - வழக்கறிஞர் எஸ்.துரைசாமி
1971-ம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக பேரணி தொடர்பாக, ராமர் அவமதிக்கப்பட்டதாக சோ ராமசாமி தனது துக்ளக் பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டார் சேலம் நீதிமன்றத்தில் பெரியார் மீது ஜனசங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது.
இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை என்ற அ.தி.மு.க. அரசின் வஞ்சக நாடகத்திற்குக் கண்டனம்.- மு.க.ஸ்டாலின் கடிதம்.
"வெற்றி வரலாறு தொடரட்டும்!" - மு.க. ஸ்டாலின் கடிதம்.
உள்ளாட்சித் தேர்தலில் கழகத்திற்கு மாபெரும் வெற்றியை வழங்கிய தமிழக மக்களுக்கு நன்றி.
மாநகராட்சி-நகராட்சி-பேரூராட்சித் தேர்தலை உடனடியாக நடத்திட வேண்டும். மீதமுள்ள ஒன்பது மாவட்டங்களுக்கும் உள்ளாட்சித் தேர்தலை நடத்திட வேண்டும்.
தேசிய மக்கள் தொகைப் பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க அனுமதிக்க மாட்டோம் எனத் தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. அரசு அறிவித்திட வேண்டும்.
இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை என்ற அ.தி.மு.க. அரசின் வஞ்சக நாடகத்திற்குக் கண்டனம்.
லேபிள்கள்:
தமிழ்நாடு,
திமுக,
மு.க.ஸ்டாலின்
தமிழக விவசாயிகளுக்கு நம்பிக்கை கொடுக்கக்கூடிய வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - ஜி.கே.வாசன்
மத்தியஅரசு தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக விவசாயிகளின் கருத்துக்களை கேட்பதிலும், அத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெறுவதிலும் தமிழக விவசாயிகளுக்கு நம்பிக்கை கொடுக்கக்கூடிய வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - ஜி.கே.வாசன்
தமிழகத்தில் விவசாயத்தைப் பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக தமிழக விவசாயிகளின் கருத்துக்களை கேட்க வேண்டியது மிக மிக அவசியமான, தேவையான ஒன்று. காரணம் டெல்டா மாவட்ட பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த அப்பகுதி விவசாயிகள் மட்டுமல்ல சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், பொது மக்கள் ஆகியோர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
லேபிள்கள்:
தமிழ் மாநில காங்கிரஸ்,
தமிழ்நாடு,
ஜி.கே.வாசன்
IAS சந்தோஷ் பாபு “விருப்ப ஓய்வில்” செல்லும் அளவிற்கு அழுத்தம் கொடுத்தது தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சரா? - மு.க.ஸ்டாலின்
"தமிழகம் முழுவதும் ரூ. 2,441 கோடி மதிப்பிலான அதிவேக அலைக்கற்றை மற்றும் தடையில்லா இணைப்புக்கான திட்ட அதிகாரி டாக்டர் சந்தோஷ்பாபு IAS திடீர் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்கும் பின்னணி என்ன?" - மு.க.ஸ்டாலின்
1995 ஆம் வருட “பேட்ச் “ மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி டாக்டர் சந்தோஷ் பாபு திடீரென்று “விருப்ப ஓய்வில்” செல்வதற்கு விண்ணப்பித்துள்ளார் என்று வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
லேபிள்கள்:
தமிழ்நாடு,
திமுக,
மு.க.ஸ்டாலின்
2021-ஆம் ஆண்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்! -DR.S. ராமதாஸ்
சமூகநீதியைக் காக்க 2021-ஆம் ஆண்டில்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்! -DR.S. ராமதாஸ்
இந்தியாவில் 2021-ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதிக் கட்சித் தலைவருமான அகிலேஷ் சிங் யாதவ் கூறியிருக்கிறார். பாட்டாளி மக்கள் கட்சியால் எழுப்பப்பட்ட இக்கோரிக்கைக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆதரவு கிடைத்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது; இது வரவேற்கத்தக்கது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)