வியாழன், 30 செப்டம்பர், 2021

தலைமைக்கு எதிராக கருத்து கூறும் திரு. கபில்சிபல் போன்றவர்களை காங்கிரஸ் கட்சியினர் புறக்கணிக்க வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன். - கே.எஸ்.அழகிரி



அமரர் ராஜிவ்காந்தி மறைவிற்குப் பிறகு அரசியலை விட்டு ஏழு ஆண்டுகாலம் ஒதுங்கியிருந்த காலத்தில், காங்கிரஸ் கட்சியை காப்பாற்ற வேண்டுமென்ற அனைவரின் கோரிக்கையை ஏற்று காங்கிரசின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர் அன்னை சோனியா காந்தி. அவர் தலைமை ஏற்ற பிறகு, நான்கு மாநிலங்களில் இருந்த காங்கிரஸ் ஆட்சி 14 மாநிலங்களில் விரிவடைந்தது.  அவரது கடுமையான முயற்சியின் காரணமாக 2004 தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று அவரது பரிந்துரையின் பேரில் டாக்டர் மன்மோகன்சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைந்தது. இதன்மூலம், இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிற மகத்தான பணியை செய்வதற்கு வாய்ப்பை வழங்கியவர் அன்னை சோனியா காந்தி. ஐக்கிய முற்போக்கு கூட்டணி  அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகளை வகித்த திரு. கபில்சிபல் போன்றவர்கள் அன்னை சோனியா காந்தியை விமர்சனம் செய்வதை காங்கிரஸ் கட்சியினர் எவரும் சகித்துக் கொள்ள மாட்டார்கள். இத்தகைய விமர்சனங்களை பொதுவெளியில் கூறுவதை வன்மையாக கண்டிக்கிறேன். ஏதாவது கருத்து கூற வேண்டியிருந்தால் அதை கட்சி அமைப்புகளின் மூலமாகத் தான் கூற வேண்டுமே தவிர, பொதுவெளியில் விமர்சிப்பது  பா.ஜ.க.வுக்கு சாதகமாகவே அமையும். 

புதன், 29 செப்டம்பர், 2021

இந்திய கடற்படை மற்றும் ஆஸ்திரேலிய கடற்படை இடையே பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்து


 இந்திய மற்றும் ஆஸ்திரேலிய கடற்படை உறவுகளை மேம்படுத்துவதற்கான கூட்டு வழிகாட்டுதல் ஒப்பந்தத்தில், இருநாட்டு கடற்படை தலைவர்களும் கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி கையெழுத்திட்டனர். இதைத் தொடர்ந்து, இரு நாட்டு கடற்படைகளும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான விதிமுறைகள் குறித்த ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. காணொலி காட்சி மூலம் நடந்த இந்த விழாவில், இந்திய கடற்படை சார்பில் ரியர் அட்மிரல் ஜஸ்விந்தர் சிங், ஆஸ்திரேலிய கடற்படை சார்பில் துணை தளபதி ரியர் அட்மிரல் கிரிஸ்டோபர் ஸ்மித் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

நவம்பர் மாதம் 1 - ஆம் தேதி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளை திறப்பதை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.- ஜி.கே.வாசன்


நவம்பர் மாதம் 1 - ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகள் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை திறப்பது வரவேற்கதக்கது , 

கொரோனா தொற்றை முன்னிட்டு மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் தொடங்க வேண்டும் . நவம்பர் 4 - ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை வருகிறது . 

நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடுவதற்கு அதிக அளவில் மக்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள் . 

திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, புதுச்சேரி வானொலிகளை முடக்கும் முடிவை பிரச்சார் பாரதி கைவிட வேண்டும். அவை வழக்கம் போல தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.- DR.அன்புமணி ராமதாஸ்

 5 தமிழ் வானொலி நிலையங்களை முடக்கும்

முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்! - DR.அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் மதுரை,கோவை, திருச்சி, நெல்லை மற்றும் புதுவையில் உள்ள வானொலி நிலையங்களின்  சொந்த நிகழ்ச்சித் தயாரிப்பை இம்மாதத்துடன் முடக்க பிரச்சார் பாரதி நிறுவனம் முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழ்நாட்டின் பன்முகத்தன்மையை எதிரொலிக்கும் இந்த வானொலி நிலையங்களின் நிகழ்ச்சிகளை முடக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

5 மாதங்களாக ஊதியம் கிடைக்காததால் வேதனையில் வாடி உயிரிழப்பு: கவுரவ விரிவுரையாளர்கள் துயர் துடைக்கப்படுமா? - DR.S.ராமதாஸ்

 5 மாதங்களாக ஊதியம் கிடைக்காததால் வேதனையில் வாடி உயிரிழப்பு: கவுரவ விரிவுரையாளர்கள் துயர் துடைக்கப்படுமா? - DR.S.ராமதாஸ்

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கவுரவ விரிவுரையாளராக பணியாற்றி வந்த முனைவர் முருகானந்தம், தமக்கான ஊதியம் வழங்கப்படாததால் ஏற்பட்ட வறுமை மற்றும் மன உளைச்சல் காரணமாக உயிரிழந்திருக்கிறார். கல்விச் செல்வத்தில் திளைத்த ஒருவர், பொருள் செல்வக் குறைபாட்டால், அதுவும் தமிழக அரசின் அலட்சியத்தால் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.

பொதுத்துறை- தனியார் துறை கூட்டணி, இராணுவ உற்பத்திப் புரட்சியை ஏற்படுத்தக்கூடும்.- மத்திய அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்


 விரைவாக வளர்ச்சி அடைந்து வரும் சர்வதேச பாதுகாப்புச் சூழலில் ஆயுதப்படைகளின் நவீன மயமாக்கலை உறுதி செய்வதற்காக ஒன்றிணைந்த சூழலை அரசு உருவாக்கியிருப்பதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். புதுதில்லியில் நடைபெற்ற இந்திய ராணுவ உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (எஸ்ஐடிஎம்) வருடாந்திரக்  கூட்டத்தில் பேசிய அவர், உலகம் முழுவதும் உள்ள நாடுகள் தங்களது ராணுவத்தை நவீனமயமாக்குவதில் கவனம் செலுத்துவதாகவும், அதிகரித்துவரும் பாதுகாப்பு விஷயங்கள், எல்லைப் பூசல்கள் போன்றவற்றினால் ராணுவ உபகரணங்களின் தேவை அதிகரித்து வருவதாகவும் கூறினார்.

தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளனர்.

 தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசியப் பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புப் படைகள் ஆகியவை கடந்த 17 ஆண்டுகளில் நாட்டில் பேரிடர் மேலாண்மையின் வரலாற்றை மாற்றியுள்ளன.

பேரிடர் அபாயங்களை குறைப்பதற்காக உலகம் முழுவதும் பின்பற்றப்படும் சிறந்த முறைகளை ஆராய வேண்டும். சூழலுக்கு ஏற்ப அவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

மத்திய அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் 'அமுல் தேனை' அறிமுகப்படுத்தினார்.


'தேசிய தேனீ வாரியம்' உடனான ஒருங்கிணைந்த ஒத்துழைப்பின் கீழ், குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பின் தயாரிப்பான அமுல் தேனை கால்நடைப் பராமரிப்பு, மீன்வளம் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு. பர்ஷோத்தம் ருபாலா முன்னிலையில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர்  காணொலி மூலம் அறிமுகப்படுத்தினார்.

தந்தை பெரியார் 80 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு தரவேண்டும் என்று முழங்கினார்! இன்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின்மூலம் ஒலிப்பது வரவேற்கத்தக்கது! - கி.வீரமணி



தந்தை பெரியார் 80 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு தரவேண்டும் என்று முழங்கினார்!

இன்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின்மூலம் ஒலிப்பது - வரவேற்கத்தக்கது! - கி.வீரமணி

விரைந்து செயல்படுத்தப்படவேண்டும்!

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மாண்புமிகு ஜஸ்டிஸ் ஆர்.வி.ரமணா அவர்களும், அவரது சக நீதிபதிகளான ஜஸ்டிஸ் ஒய்.வி.சந்திரசூட் போன்ற நீதிபதிகளும் நாளும் சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கி வருகிறார்கள். அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை நோக்கம் நிறைவேறும் வகையில் தங்களது நடவடிக்கைகளை அமைத்துக்கொள்வது நாட்டின் ஜனநாயகத்திற்கு வலிமை சேர்ப்பதாக உள்ளது.

செவ்வாய், 28 செப்டம்பர், 2021

இந்திய வாள்வீச்சு வீராங்கனையான பவானி தேவி பயன்படுத்திய வாள், pmmementos.gov.in என்ற இணையதளத்தில் மின் ஏலத்தில் இடம்பெற்றுள்ளது.


 அண்மையில் நிறைவடைந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் 2020-ல் கலந்து கொண்ட முதல் இந்திய வாள்வீச்சு வீராங்கனையான பவானி தேவி பயன்படுத்திய வாள், pmmementos.gov.in என்ற இணையதளத்தில் மின் ஏலத்தில் இடம்பெற்றுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரர்களுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரதமர் திரு நரேந்திர மோடி ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவின்போது இதே வாளை பவானி தேவி, பிரதமருக்குப் பரிசாக அளித்தார். பிரதமருக்கு வழங்கப்பட்ட பரிசுகள் மற்றும் நினைவுப் பொருட்களின் மின் ஏலத்தில் இந்த வாளும் இடம்பெற்றுள்ளது.

நமது பழங்கால விவசாய மரபுகளுடன், எதிர்காலத்தை நோக்கிச் செல்வது சம அளவில் முக்கியம்.- பிரதமர் திரு. நரேந்திர மோடி


 பிரதமர் திரு. நரேந்திர மோடி சிறப்புப் பண்புகளுடன் கூடிய 35 பயிர் வகைகளை இணையக் கலந்தாய்வு மூலம் தேசத்திற்கு அர்ப்பணித்தார். ராய்பூரில் உள்ள தேசிய உயிர் வாழ்வு நெருக்கடி மேலாண்மை நிறுவனத்தின் புதிதாக கட்டப்பட்ட வளாகத்தையும் தேசத்திற்கு பிரதமர் அர்ப்பணிக்கிறார். இந்த நிகழ்ச்சியில், விவசாயப் பல்கலைக்கழகங்களுக்கான பசுமை வளாக விருதையும் பிரதமர் வழங்கினார். அத்துடன் அந்த இணையக் கலந்தாய்வில், புதுமையான முறைகளைப் பயன்படுத்தும் விவசாயிகளிடையே அவர் உரையாற்றினார்.

சுதந்திர இந்திய வரலாற்றில் இதுவரை காணாத மாபெரும் ஊழல் பெருச்சாளியாக பிரதமர் மோடி அம்பலப்பட்டு நிற்கிறார்.- கே.பாலகிருஷ்ணன்


 பி.எம்.கேர்ஸ் என்ற பெயரில், கொரோனா நெருக்கடியை பயன்படுத்தி வசூலிக்கப்பட்ட பெரும் தொகை அரசு நிதி அல்ல என்பது தில்லி நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், மோடி ஆட்சியின் கேடுகெட்ட மெகா ஊழலையே அவர்கள் அப்பட்டமாக்கியுள்ளார்கள்.

பி.எம்.கேர்ஸ் நிதி வசூலுக்கான விளம்பரங்கள் அரசின் தளங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து நிதி கட்டாயமாக்கி பெறப்பட்டது. அச்சத்திலும், அக்கறையிலும் பல தனியார் நிறுவனங்கள் பெரும் தொகை கொடுத்தார்கள். பிரதமர் இந்த நிதிக்கு விளம்பரம் செய்தார்.

தேசிய மாணவர் படையின் 34-வது தலைமை இயக்குநராக லெப்டினன்ட் ஜெனரல் குர்பிர்பல் சிங் பொறுப்பேற்பு


 தேசிய மாணவர் படையின் 34-வது தலைமை இயக்குநராக  லெப்டினன்ட் ஜெனரல் குர்பிர்பல் சிங் அன்று (27.09.2021) பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் கடந்த 1987-ஆம் ஆண்டு பாராசூட் படையில் சேர்ந்தார்.

வணிக கப்பல் போக்குவரத்து தகவல் பரிமாற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் : இந்தியா - ஓமன் கடற்படை இடையே கையெழுத்து


 வணிக கப்பல் போக்குவரத்து தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொள்ளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், ஓமன் கடற்படை கமாண்டர் ரியர் அட்மிரல் சைப் பின் நசர் மொஹ்சன் அல்-ராபி, இந்திய கடற்படை தளபதி அட்மிரல் கரம்பிர் சிங் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்திய- பசிபிக் பகுதியில் அதிகமான ஈடுபாட்டை நோக்கி இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் செயலாற்ற வேண்டும்: மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்


 சர்வதேச விநியோக சங்கிலிகளை வலுப்படுத்துவதும், தற்போது சாதகமாக உள்ள புவி அரசியல் நிகழ்வை முழுவதும் மூலதனமாக மாற்றுவதும் முக்கிய இலக்காக இருக்க வேண்டும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார். ஆஸ்திரேலியா- இந்தியா வர்த்தக சாம்பியன் கூட்டத்தின் துவக்க விழாவில் இன்று உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

புதிய நாடாளுமன்ற கட்டிடப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆய்வு


 பிரதமர் திரு நரேந்திர மோடி, செப்டம்பர் 26, 2021 அன்று, புதிய நாடாளுமன்ற கட்டிடம் அமைக்கப்படும் இடத்திற்கு நேரில் சென்று பணிகளை ஆய்வு செய்தார்.

பணியின் வளர்ச்சி நிலையைக் கேட்டறிந்ததுடன், உரிய காலத்திற்குள் திட்டம் நிறைவடைய வேண்டும் என்று வலியுறுத்தினார். பணியாளர்களுடன் கலந்துரையாடிய பிரதமர், அவர்களது நலனையும்  விசாரித்தார்.  புனிதமான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க பணியில் அவர்கள் ஈடுபட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

போர்க்களத்தில் ரோபாட்டிக்ஸ் மற்றும் ட்ரோன்களின் அதிகரித்து வரும் பயன்பாடு ஆகியவற்றிலும் புதிய சவால்களுக்கு படைகள் தயாராக வேண்டும்.- திரு எம் வெங்கையா நாயுடு


 வழக்கமான போர்களுக்கு மட்டுமில்லாமல், தகவல் மற்றும் இணையப் போர் மற்றும் போர்க்களத்தில் ரோபாட்டிக்ஸ் மற்றும் ட்ரோன்களின் அதிகரித்து வரும் பயன்பாடு ஆகியவற்றிலும் தங்களின் வல்லமையை நிலைநிறுத்திக்கொள்ள படைகள் தயாராக வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்.

நம்மைச் சுற்றியுள்ள புவி-மூலோபாய சூழல் கணிக்க முடியாததாக மாறி வருகிறது என்று அவர் கூறினார். "வெளியிலிருந்தும் உள்ளேயும் நேரடி மற்றும் மறைமுக அச்சுறுத்தல்களை நாம் எதிர்கொள்கிறோம்" என்று அவர் கூறினார்.

பிரதம மந்திரி திரு நரேந்திர மோடி காணொளி கருத்தரங்கம் வாயிலாக ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.


 பிரதம மந்திரி திரு நரேந்திர மோடி காணொளி கருத்தரங்கம் வாயிலாக ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

இந்த தருணத்தில் பேசிய பிரதம மந்திரி கடந்த 7 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்த சுகாதார வசதிகளை வலுப்படுத்தும் முயற்சிகள் இன்று ஒரு புதிய வளர்ச்சி கட்டத்தை அடைந்துள்ளது எனக் குறிப்பிட்டார். ”இந்தியாவின் சுகாதார வசதிகளில் புரட்சிகரமான மாற்றத்தை கொண்டு வரக்கூடிய ஆற்றல்மிக்க ஒரு இயக்கத்தை இன்று நாம் தொடங்கி வைக்கிறோம்”, என்று பிரதம மந்திரி மேலும் தெரிவித்தார்.

திங்கள், 27 செப்டம்பர், 2021

ஓமன் கடற்படை கமாண்டர் Rear Admiral Saif bin Nasser bin Mohsen Al-Rahbi- யுடன், இந்திய கடற்படை தளபதி அட்மிரல் கரம்பிர் சிங் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.


 கடற்படை தளபதி அட்மிரல் கரம்பிர் சிங், ஓமன் சென்றுள்ளார். அவர் முதல் செப்டம்பர் 29ம் தேதி வரை 3 நாள் அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணம், ஓமனுடனான இருதரப்பு உறவுகளை ஒருங்கிணைக்கும் மற்றும் ராணுவ கூட்டுறவுக்கான புதிய வழிகளை ஆராயும்.

மஸ்கட்டில், ஓமன் கடற்படை கமாண்டர் ரியர் அட்மிரல் சைப் பின் நசீன் பின் மொஹ்சன் அல் அராபியுடன், அட்மிரல் கரம்பிர் சிங்  இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

சாதிவாரி கணக்கெடுப்பு அவசியமானது, அதனால் 2021 கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக மத்திய அரசு நடத்த வேண்டும்.- DR.S.ராமதாஸ்


 சாதிவாரி கணக்கெடுப்பு சாத்தியமானது,

அவசியமானது, தவிர்க்கவே முடியாதது! - DR.S.ராமதாஸ்

இந்தியாவில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை சாதிவாரியாக நடத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகவும், அத்தகைய கணக்கெடுப்புகளின் மூலம் துல்லியமான விவரங்களைத் திரட்ட முடியாது என்றும் மத்திய அரசு கூறியிருக்கிறது. அதுமட்டுமின்றி, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதில்லை என்று 1951-ஆம் ஆண்டே கொள்கை முடிவு எடுக்கப்பட்டு விட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த நிலைப்பாடு காலத்திற்கு சற்றும் பொருந்தாதது ஆகும்.

தற்கொலை செய்து கொண்ட மாற்றுத்திறன் விவசாயி மனோகரனின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்.- DR.S.ராமதாஸ்

 மாற்றுத்திறன் உழவர் தற்கொலை: தூண்டிய

நிதி நிறுவன அதிகாரிகளை கைது செய்க! - DR.S.ராமதாஸ்

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே வேளாண் கடன் தவணையை செலுத்தத் தவறியதற்காக தனியார் நிதிநிறுவன அதிகாரிகள் தரக்குறைவாக பேசியதைத் தாங்கிக் கொள்ள முடியாத மாற்றுத் திறனாளி விவசாயி நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். வருமானம் இல்லாமல் வாடிய உழவரை  தனியார் நிதி நிறுவன அதிகாரிகள் அவமானப்படுத்தி தற்கொலைக்கு தூண்டியது கண்டிக்கத்தக்கதாகும்.

நாட்டின் நலனை பாதுகாப்பதற்காக, ஆயுதப்படைகள் இடையே எதிர்கால ராணுவ உத்திகள் மற்றும் நடவடிக்கைகளில் ஆக்கபூர்வமான ஒருங்கிணைப்புக்கு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.


 நாட்டின் நலனை பாதுகாப்பதற்காக, ஆயுதப்படைகள் இடையே எதிர்கால ராணுவ உத்திகள் மற்றும் நடவடிக்கைகளில் ஆக்கபூர்வமான ஒருங்கிணைப்புக்கு  பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளார். புது தில்லியில் இன்று 59-வது தேசிய பாதுகாப்பு கல்லூரி பாடப்பிரிவு பட்டதாரிகளிடையே‌ (2019 பிரிவு) அவர் உரையாற்றினார். எல்லைப் பிரச்சினைகள் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் போன்ற பிரச்சினைகளில் அரசின் துணிச்சலான அணுகுமுறை, அண்மைக்காலங்களில் இந்தியாவை வலிமைப்படுத்தி இருப்பதாகவும், தற்போது இந்தியாவிற்கு மிகப் பெரும் சர்வதேச பங்களிப்பும் பொறுப்பும் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சனி, 25 செப்டம்பர், 2021

மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்களின் பற்றாக்குறையை போர்க்கால அடிப்படையில் பூர்த்தி செய்ய வேண்டும்.- திரு எம் வெங்கையா நாயுடு


 சுகாதாரத் துறையில் பயிற்சி பெற்ற மனித வளப் பற்றாக்குறையை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு வலியுறுத்தினார். 1:1,000 என்ற உலக சுகாதார அமைப்பின் விதிமுறையை விட குறைவாக இந்தியாவில் 1: 1,511 என்ற ரீதியில் உள்ள மருத்துவர் மற்றும் மக்கள்தொகை விகிதத்தைக் குறிப்பிட்டு, நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைக்கும் அரசாங்கத்தின் நோக்கத்திற்கு ஏற்ப மேலும் மருத்துவக் கல்லூரிகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

ஐ.நா. மூலம் உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தி தனித்தமிழீழம் அமைக்கவும் இந்தியா வகை செய்ய வேண்டும்.- DR.S.ராமதாஸ்

 கோத்தபாயாவின் பேச்சு அழைப்பு நாடகம்: சிங்கள போர்க் குற்றவாளிகளை தண்டிக்க இந்திய அரசு துணை நிற்க வேண்டும்! - DR.S.ராமதாஸ்

இலங்கை இனச் சிக்கல் குறித்து வெளிநாடு வாழ் தமிழர் அமைப்புகளுடன் பேச்சு நடத்துவதற்கும்,  விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு  வழங்கி விடுதலை செய்யவும் தயாராக இருப்பதாக இலங்கை அதிபர் கோத்தபாய இராஜபக்ச கூறியுள்ளார். இது ஈழத்தமிழர்களையும், உலக நாடுகளையும் ஏமாற்றுவதற்கான சதி என்பதைத் தவிர வேறில்லை.

நட்சத்திரப் பட்டாளம் நிறைந்த முதலாவது இமாலய திரைப்பட விழாவை மத்திய அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் லே நகரில் தொடங்கி வைத்தார்


 நட்சத்திரப் பட்டாளம் நிறைந்த முதலாவது இமாலய திரைப்பட விழாவை லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே நகரில் அமைந்திருக்கும் சிந்து சன்ஸ்கிருதி கேந்திராவில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் இன்று தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் 75 ஆண்டுகள் சுதந்திரத்தை கொண்டாடும் விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தின் ஒரு பகுதியாக இந்த ஐந்து நாள் திரைப்பட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உள்ளூர் பட்டு தொழிலை ஊக்குவித்து வேலைவாய்ப்புகளை உருவாக்க ஒடிசாவின் முதல் பட்டு நூல் உற்பத்தி மையத்தை கேவிஐசி (KVIC) நிறுவியுள்ளது.


 ஒடிசாவின் முதல் டசர் பட்டு நூல் உற்பத்தி மையத்தை கட்டாக் மாவட்டத்திலுள்ள சவுத்வாரில் நிறுவும் வரலாற்று சிறப்புமிக்க முன்முயற்சியை காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் (கேவிஐசி) எடுத்துள்ளது. இதன் மூலம் உள்ளூர் பட்டு தொழில் ஊக்குவிக்கப்பட்டு, வேலைவாய்ப்புகள் உருவாகி, பட்டு உற்பத்தி செலவு குறையும்.

பட்டு வகைகளில் மிகவும் சிறப்பானவற்றில் ஒன்றாக டசர் பட்டு திகழ்கிறது. பட்டு நூல் உற்பத்தி மையத்தை காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணைய தலைவர் திரு வினய் குமார் சக்சேனா வெள்ளியன்று திறந்து வைத்தார்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பங்களிப்பு மற்றும் புகழை முந்தைய அரசுகள் இருட்டடிப்பு செய்துள்ளது.- டாக்டர் ஜிதேந்திர சிங்


 நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பங்களிப்பு மற்றும் புகழை இருட்டடிப்பு செய்ததாக முந்தைய அரசுகள் மீது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் குற்றம் சாட்டினார்.

வெடிப்பொருட்களை துரிதமாக கண்டறியும், குறைந்த செலவிலான எலக்ட்ரானிக் பாலிமர் (Electronic polymer) சென்சார் கருவி.


 இந்திய விஞ்ஞானிகள் முதல் முறையாக, வெப்ப நிலைத்தன்மை மற்றும் செலவு குறைவான எலக்ட்ரானிக் பாலிமர் அடிப்படையிலான சென்சார் கருவியை உருவாக்கியுள்ளனர். இது அதிக சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளில் பயன்படுத்தப்படும் நைட்ரோ-அரோமேட்டிக் ரசாயணங்களை துரிதமாக கண்டறியும்.

வெடிப்பொருட்களை அழிக்காமல் கண்டறிவது, பாதுகாப்பு மற்றும் குற்ற புலனாய்வுக்கும், மிக முக்கியமானது. இது போன்ற விஷயங்களில் ரசாயண சென்சார்கள் முக்கிய பங்காற்றுகின்றன. 

புதிய மங்களூர் துறைமுகத்தில் 3 திட்டங்களுக்கு, மத்திய துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் தொடங்கிவைத்து அடிக்கல் நாட்டினார்.


 புதிய மங்களூர் துறைமுகத்தில் 3 திட்டங்களுக்கு, மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் தொடங்கிவைத்து அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

இரண்டு நாள் ‘‘தேசிய பழங்குடியின திறமையாளர்கள் மாநாடு’’-ஐ மத்திய பழங்குடியின இணையமைச்சர் திரு பிஷ்வேஸ்வர் துடு தொடங்கி வைத்தார்.


 இரண்டு நாள் ‘‘தேசிய பழங்குடியின திறமையாளர்கள் மாநாடு’’-ஐ மத்திய பழங்குடியின இணையமைச்சர் திரு பிஷ்வேஸ்வர் துடு தொடங்கி வைத்தார். செப்டம்பர்  23, 24ம் தேதிகளில் நடைபெறும் இந்த மாநாடு தேசிய பழங்குடியினர் ஆராய்ச்சி கழகம், இந்திய பொது நிர்வாக கழகம், ஒடிசா கேஐஎஸ்எஸ் நிகர்நிலைப் பல்கலைக்கழகம், எஸ்சிஎஸ்சிஆர்டிஐ ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்படுகிறது.

வெள்ளி, 24 செப்டம்பர், 2021

பிரதமர் திரு.நரேந்திரமோடி, அமெரிக்க துணை அதிபர் திருமதி.கமலா ஹாரிஸ் உடன் நடத்திய சந்திப்பின்போது ஆற்றிய தொடக்க உரை

பிரதமர் திரு.நரேந்திரமோடி, அமெரிக்க துணை அதிபர் திருமதி.கமலா ஹாரிஸ் உடன் நடத்திய சந்திப்பின்போது ஆற்றிய தொடக்க உரை

  1. முதலாவதாக, எனக்கும், எனது குழுவினருக்கும் நீங்கள் வழங்கிய உற்சாகமான வரவேற்புக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.  

இந்திய ராணுவத்துக்கு 118 அர்ஜூன் எம்கே-1ஏ பீரங்கி வாகனம் வாங்க ஆர்டர் கொடுத்தது பாதுகாப்புத்துறை அமைச்சகம்.


 தாக்கும் திறன், இயக்கம் மற்றும் நிலைத்தன்மையை அதிகரிக்க புதிய பீரங்கி வாகனத்தை உருவாக்கியது டிஆர்டிஓ ரூ.7,523 கோடி மதிப்பில் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

எம்கே-1 பீரங்கியுடன் ஒப்பிடுகையில், எம்கே-1ஏ பீரங்கி வாகனத்தில்,  72 புதிய அம்சங்கள் மற்றும் உள்நாட்டு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

பாதுகாப்பு உற்பத்தி துறையில் 200 இந்திய நிறுவனங்களுக்கு தொழில் வாய்ப்பு ஏற்படும், சுமார் 8,000 வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தும்.

வியாழன், 23 செப்டம்பர், 2021

தற்சார்பு இந்தியாவை நோக்கிய குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, காப்புரிமைகளுக்கான 80% கட்டண தளர்வு, கல்வி நிறுவனங்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.


 தற்சார்பு இந்தியாவை நோக்கிய குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, காப்புரிமைகளுக்கான 80% கட்டண தளர்வு, கல்வி நிறுவனங்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. காப்புரிமை விதிகளில் இது சம்பந்தமான திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

“அனைத்து இந்தியர்களையும் இணைத்தல்” என்ற தலைப்பில் ஓர் பயிலரங்கை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நடத்தியது.


 இணைய இணைப்புகளில் உலகின் மிகப்பெரும் நாடாக இந்தியாவை உருவாக்குவதற்காக “அனைத்து இந்தியர்களையும் இணைத்தல்” என்ற தலைப்பில் ஓர் பயிலரங்கை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நடத்தியது. நாட்டில் தற்போது இணைய வசதி இல்லாத கிராமங்கள் மற்றும் நகரங்களில் சேவைகளை அளிப்பதற்கான திட்டம் குறித்து விவாதிப்பதற்காக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தகவல் தொழில்நுட்பத் துறை, தகவல் தொடர்பு அமைச்சகத்தின் பிரதிநிதிகள் மற்றும் ஜியோ, ஏர்டெல் போன்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட அரசு மற்றும் தனியார் துறை பங்குதாரர்கள் பயிலரங்கிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

வளர்ந்துவரும் இந்தியாவின் 75 ஆண்டுகள் சுதந்திரம் மற்றும் அதன் மக்கள், கலாச்சாரம் மற்றும் சாதனைகளின் புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்டாடும்.- திருமிகு ஷோபா கரந்த்லாஜே


 வளர்ந்துவரும் இந்தியாவின் 75 ஆண்டுகள் சுதந்திரம் மற்றும் அதன் மக்கள், கலாச்சாரம் மற்றும் சாதனைகளின் புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்டாடும் மற்றும் நினைவுகூரும் இந்திய அரசின் முயற்சியாக ‘விடுதலையின் அமிர்த் மகோத்சவம்’ விளங்குகிறது.

காணொலி வர்த்தக கண்காட்சிகள், விவசாயி இணைப்பு தளம், இ-அலுவலகம், ஹார்டினெட் கண்டறிதல் அமைப்பு, வாங்குவோர் விற்போர் கூட்டங்கள், குறிப்பிட்ட பொருட்களுக்கான பிரச்சாரங்கள் உள்ளிட்ட பல ஏற்றுமதி மேம்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் முயற்சிகளை அபேடா எடுத்துள்ளது. உள்கட்டமைப்பு மற்றும் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்காக மாநில அரசாங்கத்துடன் அபேடா நெருங்கி பணியாற்றி வருகிறது.

நீட் தேர்வே மோசடிகளின் கூடாரமாக மாறியிருப்பது மாணவர்களிடம் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியுள்ளது.- DR.S.ராமதாஸ்


நீட் மோசடிகளின் கூடாரம்: நேர்மையான
மாணவர் சேர்க்கைக்கு நீட் கூடாது! - DR.S.ராமதாஸ்

மராட்டிய மாநிலத்தை மையமாக வைத்து தில்லியிலும், ஜார்கண்டிலும் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் நீட் தேர்வு ஆள்மாறாட்ட மோசடிகள் தொடர்பாக வெளியாகியுள்ள செய்திகள் பேரதிர்ச்சி அளிக்கின்றன. மருத்துவ மாணவர் சேர்க்கையை முறைப்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படும் நீட் தேர்வே மோசடிகளின் கூடாரமாக மாறியிருப்பது மாணவர்களிடம் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியுள்ளது.

‘இந்திய சைகை மொழி பயணம்’ பற்றிய ஆவணப்படத்தை நிகழ்ச்சியின் போது ஐஎஸ்எல்ஆர்டிசி வெளியீடு.


 சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் தன்னாட்சி பெற்ற அமைப்பான புது தில்லியை சேர்ந்த இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் (ஐஎஸ்எல்ஆர்டிசி), 'சைகை மொழி தினத்தை' டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையம், 15 ஜன்பத், புதுதில்லியில் கொண்டாடவுள்ளது.

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தலைமை விருந்தினராகவும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணை அமைச்சர்கள், திருமிகு பிரதிமா பவுமிக் மற்றும் திரு ஏ நாராயணசாமி ஆகியோர் மதிப்புறு விருந்தினர்களாகவும் இதில் கலந்து கொள்கிறார்கள்.

ஆயுதப்படைகளின் கொடி நாள் நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வேண்டுகோள்


 உயிரிழந்த அல்லது ஊனமுற்ற நமது தீரமிக்க வீரர்களை சார்ந்திருப்போரின் மறுவாழ்வு மற்றும் நலனுக்கு பயன்படுத்தப்படும் ஆயுதப்படைகளின் கொடி நாள் நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். ராணுவ வீரர்களுக்கு கடமையாற்றுவதற்கான வாய்ப்பை நாட்டு மக்களுக்கு கொடி நாள் வழங்குகிறது.

இரும்புத்தாது துகள்கள் விற்பனை நிலவரம் குறித்து மத்திய எஃகு அமைச்சர் திரு ராம் சந்திர பிரசாத் சிங் ஆய்வு


 இரும்புத்தாது துகள்களின் விற்பனை நிலவரம் குறித்து எஃகு பொதுத் துறை நிறுவனங்களான, இந்திய எஃகு ஆணையம் (செயில்) மற்றும் தேசிய கனிம வளர்ச்சி கார்பரேஷன்( என்எம்டிசி) நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் எஃகு அமைச்சக அதிகாரிகளுடன் மத்திய எஃகு அமைச்சர் திரு ராம் சந்திர பிரசாத் சிங் இன்று ஆய்வு கூட்டம் நடத்தினார்.

செயில் நிறுவனத்தின் சுரங்கங்களில் குவிந்துள்ள 70 மெட்ரிக் டன் இரும்புத்தாது இருப்பை விற்க மத்திய சுரங்கத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளதாகவும், அவை  தொழில் நிறுவனங்களுக்கு கூடிய விரைவில் கிடைக்க, இரும்புத்தாது இருப்பு விற்கப்பட வேண்டும் என   திரு ராம் சந்திர பிரசாத் சிங் குறிப்பிட்டார்.

புதன், 22 செப்டம்பர், 2021

அமெரிக்க பயணத்தை முன்னிட்டு பிரதமரின் அறிக்கை


 அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பின் பேரில்,  2021 செப்டம்பர் 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை நான் அமெரிக்க பயணம்  மேற்கொள்கிறேன்.

எனது பயணத்தின்போது, அதிபர் ஜோ பைடனுடன், இந்தியா-அமெரிக்காவின் விரிவான உலகளாவிய யுக்தி கூட்டுறவு குறித்து ஆலோசிப்பேன் மற்றும் பிராந்திய மற்றும் உலகளாவிய பரஸ்பர நலன் குறித்த கருத்துக்களையும் பரிமாறிக்கொள்வோம்.   நமது இரு நாடுகளுக்கும் இடையேயான கூட்டுறவுக்கான வாய்ப்புக்களை , குறிப்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் ஆராய, துணை அதிபர் கமலா ஹாரீஸை சந்திப்பதை எதிர்நோக்கியுள்ளேன். 

செவ்வாய், 21 செப்டம்பர், 2021

உத்தரகாண்ட் பிதோராகரில் இந்தியா-நேபாளம் இடையே கூட்டு ராணுவ பயிற்சி தொடக்கம்


 இந்தியா-நேபாளம் இடையே நடைபெறும் 15வது சூர்ய கிரன் கூட்டுபயிற்சி உத்தரகாண்ட் மாநிலம் பிதோராகரில் இன்று தொடங்கி, அக்டோபர் 3ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த பயிற்சியின் போது, இந்திய ராணுவம் மற்றும் நேபாள ராணுவத்தை சேர்ந்த காலாட் படை பிரிவுகள் கூட்டு பயிற்சியில் ஈடுபடுவர்.

கார்கில் மலைப் பகுதியில் 7,077 மீட்டர் உயரத்தில் உள்ள நன்- குன் சிகரத்துக்கு, சாகச பயணம் மேற்கொண்ட நிமாஸ் குழுவினரை திரு ராஜ்நாத் சிங் வரவேற்றார்


 கார்கில் மலைப் பகுதியில் 7,077 மீட்டர் உயரத்தில் உள்ள நன்- குன் சிகரத்துக்கு, சாகச பயணம் மேற்கொண்ட நிமாஸ்(மலையேறுதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய விளையாட்டுகளின் தேசிய கழகம்) குழுவினரை பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், புது தில்லியில் கொடியசைத்து வரவேற்றார்.

அருணாச்சலப் பிரதேசத்தின் திராங் பகுதியில் நிமாஸ் உள்ளது. இதன் இயக்குனர் கர்னல் சர்ப்ராஸ் சிங் தலைமையில், 16 பேர் அடங்கிய குழுவினர் குன் சிகரத்துக்கு சாகச பயணம் மேற்கொண்டனர்.

தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருது 2020-ஐ பிரிகேடியர் எஸ் வி சரஸ்வதிக்கு குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் வழங்கினார்


 ராணுவ செவிலியர் சேவை (எம்என்எஸ்) துணை தலைமை இயக்குநர் பிரிகேடியர் எஸ் வி சரஸ்வதிக்கு தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருது 2020 வழங்கப்பட்டது. ராணுவ செவிலியர் சேவையில் மகத்தான பங்களிப்புக்காக பிரிகேடியர் எஸ் வி சரஸ்வதிக்கு குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் காணொலி விழாவில் இந்த விருதை வழங்கினார். தேசிய ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் விருது என்பது செவிலியர்களுக்கான மிக உயர்ந்த விருது ஆகும்.

ரஷ்யா நடத்தும் “அமைதி இயக்கம் - 2021” எனும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பயிற்சியின் ஆறாவது பதிப்பு தென் மேற்கு ரஷ்யாவில் உள்ள ஒரென்பர்க் பகுதியில் தொடங்கியது.


 ரஷ்யா நடத்தும் “அமைதி இயக்கம் - 2021” எனும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பயிற்சியின் ஆறாவது பதிப்பு தென் மேற்கு ரஷ்யாவில் உள்ள ஒரென்பர்க் பகுதியில் இன்று தொடங்கியது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளுக்கிடையே நெருக்கமான உறவுகளை உருவாக்குவதும், ராணுவ தலைமைகளின் திறமைகளை மேம்படுத்துவதும் இந்த பயிற்சியின் நோக்கமாகும்.

‘சமுத்திர சக்தி’ பயிற்சியில் இந்திய மற்றும் இந்தோனேசிய கடற்படைகள் ஈடுபட்டுள்ளது.


 சுண்டா ஜலசந்திக்கு அருகே 2021 செப்டம்பர் 20 முதல் செப்டம்பர் 21 வரை நடைபெறவுள்ள ‘சமுத்திர சக்தி’ எனும் மூன்றாவது இருதரப்பு பயிற்சியில் கலந்து கொள்வதற்காக இந்திய கடற்படை கப்பல்களான ஷிவாலிக் மற்றும் கட்மட் ஜகார்தாவுக்கு 2021 செப்டம்பர் 18 அன்று சென்றடைந்தன.

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல், இருதரப்பு கடற்படைகளுக்கிடையே பரஸ்பர புரிதல் மற்றும் கடல்சார் செயல்பாடுகளில் இணைந்து பணியாற்றுதல் உள்ளிட்டவற்றை மேம்படுத்துதல் ஆகியவற்றை இந்த பயிற்சி நோக்கமாக கொண்டதாகும். சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்ளவும், கடல்சார் பாதுகாப்பு செயல்பாடுகளின் பொதுவான புரிதலை உருவாக்கவும் சரியான தளத்தை இந்த பயிற்சி வழங்கும்.

மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை, சிஎஸ்சி மின்னணு-நிர்வாக சேவைகள் இந்தியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

 வர்த்தக வாய்ப்புகள், ரேசன் கடைகளின் வருமானம் ஆகியவற்றை அதிகரிக்க, மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை, சிஎஸ்சி மின்னணு-நிர்வாக சேவைகள் இந்தியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.   இந்த ஒப்பந்தத்தில் பொது விநியோக செயலாளர் திருமதி ஜோத்ஸனா குப்தா, சிஎஸ்சி துணைத்தலைவர் திரு சர்திக் சச்தேவா ஆகியோர் உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை செயலாளர் திரு சுதன்சு பாண்டே, சிஎஸ்சி நிர்வாக இயக்குனர் திரு திணேஷ் குமார் தியாகி ஆகியோர் முன்னிலையில் கையெழுத்திட்டனர்.

இந்தியாவை உலக தலைமையகமாக உருவாக்குவதற்கான பங்களிப்பு மற்றும் அடுத்த 25 ஆண்டுகளுக்கான திட்டத்தை இணைந்து மேற்கொள்ள வேண்டும்.-திரு பியூஷ் கோயல்


 “ஏற்றுமதியாளர்களுக்கு உதவவும், பிரச்சினைகளுக்குத் தீர்வு அளிக்கவும் 24 மணி நேரம் இயங்கும் உதவி எண்ணை அரசு அறிமுகப்படுத்தவுள்ளது”, என்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் சார்பாக நடைபெறும் விடுதலையின் அம்ருத் மஹோத்ஸவத்தின் நாடு தழுவிய கொண்டாட்டங்களின் துவக்க விழாவில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, ஜவுளி, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் திரு பியூஷ் கோயல்  கூறினார்.

கோவிந்தராசு குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.- DR.S.ராமதாஸ்

 கடலூர் எம்.பி. முந்திரி ஆலையில் தொழிலாளி

அடித்துக் கொலை: குற்றவாளிகளை தப்பவிடக் கூடாது! - DR.S.ராமதாஸ்

கடலூர் மாவட்டம் பணிக்கன்குப்பத்தில் செயல்பட்டு வரும், கடலூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி இரமேசுக்கு சொந்தமான முந்திரி ஆலையில் பணியாற்றி வந்த தொழிலாளர் கொடூரமான முறையில்  அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த வழக்கில் முறையாக விசாரணை நடத்தாமல் எதிரிகளை தப்பிக்க வைக்க செய்யப்படும் முயற்சிகள் கண்டிக்கத்தக்கவை ஆகும்.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்கள், பிறருக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும்.- திரு எம். வெங்கையா நாயுடு


 உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்கள், பிறருக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார்.

குடியரசுத் துணைத் தலைவர் மாளிகையில், பரோடாவின் மகாராஜா சாயாஜி ராவ் பல்கலைக்கழகத்தில் அரசியல் தலைமைத்துவம் மற்றும் ஆளுகை என்ற ஓராண்டு டிப்ளமோ படிப்பு பயிலும் மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர், 75-வது சுதந்திர ஆண்டை நாடு கொண்டாடும் வேளையில், நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்துவது மற்றும் சிறந்த ஆளுகைக்கான நடைமுறைகளைப் பின்பற்றுவதன் தேவையை வலியுறுத்தினார்.

ஞாயிறு, 19 செப்டம்பர், 2021

TNPSC தொகுதி 4 பணிகள்: இரண்டாம் கட்ட கலந்தாய்வை நடத்த வேண்டும்! - DR.S.ராமதாஸ்

 TNPSC தொகுதி 4 பணிகள்: இரண்டாம்

கட்ட கலந்தாய்வை  நடத்த வேண்டும்! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 3 வகையான அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கைகள் கடந்த ஒரு மாதத்தில் வெளியிடப்பட்டுள்ளன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அரசுப் பணிக்கு ஆள்தேர்வு தொடங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதேநேரத்தில் சில பணிகளுக்கு நடத்தப்பட வேண்டிய கலந்தாய்வு ஓராண்டுக்கும் மேலாக நடத்தப்படாதது வருத்தமளிக்கிறது.

இந்திய அரசின் முக்கிய திட்டங்களான கேலோ இந்தியா, ஃபிட் இந்தியா ஆகியவை கலந்துரையாடலின் ஒருங்கிணைந்த அம்சமாக தொடர்ந்து நீடிக்கும்.- திரு அனுராக் சிங் தாக்கூர்


 இந்தியாவில் விளையாட்டுகளை மேலும் ஊக்குவிப்பது தொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் விளையாட்டு அமைச்சர்களுடன் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் திங்கட்கிழமை அன்று காணொலி வாயிலாக உரையாடுவார்.

டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் மற்றும் பாராலிம்பிக்ஸ் போட்டிகளின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இந்தியாவை உயரிய விளையாட்டு தேசமாக உருவாக்குவதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் எதிர்கால திட்டங்கள் மற்றும் பங்களிப்பு குறித்து இந்தக் கலந்துரையாடலின் போது திரு அனுராக் சிங் தாக்கூர் கேட்டறிவார். மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை  இணை அமைச்சர் திரு நிசித் பிரமாணிக்கும் இந்த சந்திப்பில் கலந்து கொள்வார்.

இ-ஷ்ரம் இணையதளத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களின் பதிவு நாடு முழுவதும் வேகம் எடுக்கிறது.- மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ்


 அமைப்பு சாரா தொழிலாளர்கள் இ-ஷ்ரம் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளும் நடவடிக்கை கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி  தொடங்கப்பட்டதில் இருந்து, நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.  24 நாட்களில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். இன்று வரை 1,03,12,095 தொழிலாளர்கள் இந்த இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 43 சதவீத பயனாளிகள் பெண்கள், 57 சதவீதம் பேர் ஆண்கள்.

பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் எல்லை சாலைகள் நிறுவனம் தொடர்ந்து உறுதி


 சுதந்திரத்தின் 75-வது ஆண்டை இந்தியா கொண்டாடும் வேளையில், பெண்களின் முன்னேற்றத்தை நோக்கிய நம் நாட்டின் முயற்சிகளையும் இந்தியா கொண்டாடுகிறது. அந்த வகையில், எல்லை சாலைகள் நிறுவனமும் அதிகாரிகள் முதல் வணிக விமான ஓட்டுநர் உரிமைதாரர் வரை பல்வேறு நிலைகளில் அதிக எண்ணிக்கையிலான பெண்களை பணியில் இணைத்துள்ளது.‌

பெண்களுக்கு அதிகாரம், பொறுப்பு மற்றும் மரியாதை அளிப்பதன் மூலம் தேசிய கட்டமைப்பு முயற்சியில் அவர்கள் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்குவார்கள் என்பதில் இந்த நிறுவனம் தீவிர நம்பிக்கை கொண்டுள்ளது. கடந்த ஆறு தசாப்தங்களில் படிப்படியான நடவடிக்கைகளின் மூலம் சாலை கட்டமைப்பின் பல்வேறு நிலைகள் மற்றும் பொறுப்புகளில் பெண்களின் எண்ணிக்கையை எல்லை சாலைகள் நிறுவனம் அதிகரித்துள்ளது.

சொட்டு நீர் பாசன திட்டம், ஆர்கானிக் விவசாயத்துக்கான, பரம்பராகத் கிரிஸி விகாஸ் திட்டம் ஆகியவை வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டுள்ளன. பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம், விவசாயிகளுக்கு பாதுகாப்பை அளிக்கிறது.- திரு நரேந்திர சிங் தோமர்


 ஜி-20 நாடுகளின் வேளாண் அமைச்சர்களின் 2வது நாள் கூட்டத்தில், இந்திய வேளாண்மையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் விளக்கினார்.

ஜி20 வேளாண் அமைச்சர்களின் 2வது நாள் கூட்டம்,  ‘‘பசியில்லா இலக்கை நோக்கி இணைந்து செயல்படுவோம்: வேளாண் அமைச்சகங்கள் அமல்படுத்திய வெற்றிகரமான திட்டங்கள்’’ என்ற தலைப்பில் நடந்தது. இதில் காணொலி காட்சி மூலம் மத்திய அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் பேசியதாவது: