செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

தேசிய பணமாக்கல் திட்டம் கட்டுமானத் துறையினரிடையேயும், நிதி நிறுவனங்களிடையேயும் நம்பகத்தன்மையும், நம்பிக்கையையும் கட்டமைக்கும்.- திரு நிதின் கட்கரி


 தேசிய பணமாக்கல் திட்டம் கட்டுமானத் துறையினரிடையேயும், நிதி நிறுவனங்களிடையேயும் நம்பகத்தன்மையும், நம்பிக்கையையும் கட்டமைக்கும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். இந்தியாவின் இயக்க ஆற்றலை மாற்றியமைப்பது தொடர்பான நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக உரையாற்றிய அவர், தேசிய பணமாக்கல் திட்டத்தில் நான்கு ஆண்டுகளில் ரூ. ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோடி இலக்குடன் சாலைகள் 26 சதவீதப் பங்கு வகிப்பதாகக் கூறினார்.

ஜம்மு & காஷ்மீரில் தொழில் வளர்ச்சிக்கான மத்திய துறை திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொள்வதற்கான ஆன்லைன் தளத்தைத் திரு அமித் ஷா தொடங்கி வைத்தார்.


ஜம்மு & காஷ்மீரில் தொழில் வளர்ச்சிக்கான மத்திய துறை திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொள்வதற்கான ஆன்லைன் தளத்தைத் தொடங்கி வைத்த மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா, “இது ஜம்மு & காஷ்மீரில் முதலீடு மற்றும் வணிக வளர்ச்சியில் புதிய உதயம்,” என்று கூறினார். ரூ 50,000 கோடிக்கும் அதிகமான முதலீடு ஜம்மு & காஷ்மீரில் எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.

ஆகஸ்ட் 31 கொடியன்குளம் அழித்தொழிப்பு! ஒரு சமுதாயத்தின் விடியலுக்கான, அடையாளத்தை-அதிகாரத்தை மீட்டெடுப்பதற்கான பாடம்!! - டாக்டர் K. கிருஷ்ணசாமி

 ஆகஸ்ட் 31 கொடியன்குளம் அழித்தொழிப்பு!

படத்திற்கான கருவா? பாடத்திற்கான கருப்பொருளா?

 - டாக்டர் K. கிருஷ்ணசாமி

கொடியன்குளம் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் தமிழ்நாடு காவல்துறை மற்றும் தனியார் செக்யூரிட்டிகளால் இணைந்து சூறையாடி 26 வருடங்கள் முடிந்து 27வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். சுதந்திர இந்தியாவில் இந்தியக் குடிமக்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டிய காவல்துறையால் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நடத்தப்பட்ட மனிதக்குலத்தின் மீதான முதல் தாக்குதல் ஆகும்.

வேறு யாரும் செய்யாததையா கே.டி இராகவன் செய்துவிட்டார் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கேள்வி எழுப்பியிருக்கிறார். அவரிடம் சில கேள்விகளை நாம் கேட்க வேண்டி இருக்கிறது. - விடுதலை இராசேந்திரன்

 "நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளருக்கு மூன்று கேள்விகள்"

 - தோழர் விடுதலை இராசேந்திரன்.

வேறு யாரும் செய்யாததையா கே.டி இராகவன் செய்துவிட்டார் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கேள்வி எழுப்பியிருக்கிறார். அவரிடம் சில கேள்விகளை நாம் கேட்க வேண்டி இருக்கிறது. 

இருபத்து ஐந்து மாநிலங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, மானிய உதவியாக ரூ.13,385.70 கோடியை மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத்துறை வழங்கியது.


 இருபத்து ஐந்து மாநிலங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, மானிய உதவியாக ரூ.13,385.70 கோடியை மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத்துறை நேற்று வழங்கியது. 2021-22ஆம் ஆண்டில் இதுவரை ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மொத்தம் ரூ.25,129.98 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த மானிய உதவி,  2021-22ஆம் ஆண்டின் தொகுப்பு மானியத்தின் முதல் தவணையாகும். 15வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் படி இந்த மானியம் வழங்கப்பட்டுள்ளது.

சீருடைகளுக்கு காதியைப் பயன்பயன்படுத்துவது குறித்து கல்வி நிறுவனங்கள் ஆராய வேண்டும்.- குடியரசுத் துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு


 காதியை தேசியத் துணியாகக் கருத வேண்டும் எனவும், அதன் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் எனவும் குடியரசுத் துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தின் ஒரு பகுதியாக, காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம் ஏற்பாடு செய்த ‘காதி இந்தியா வினாடி வினா’ போட்டியை குடியரசுத் துணைத் தலைவர் தொடங்கி வைத்தார்.

இந்த வினாடி வினா போட்டியில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்திய அவர், இந்த நிகழ்ச்சி நமது சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணங்களையும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் ஈடு இணையற்ற பங்களிப்பையும் நினைவுபடுத்துவதால், இந்தப் போட்டி நம்மை ஆரம்ப காலத்துக்கு சுவாரஸ்யமான முறையில் அழைத்து செல்கிறது என கூறினார்.

பள்ளி - கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து!

 பள்ளி - கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து! 

கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கவும் வேண்டுகோள்!! - கே. பாலகிருஷ்ணன்

 கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திறக்கப்படாத பள்ளி மற்றும் கல்லூரிகளை தற்போது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளோடு திறப்பது எனவும், வகுப்பறைகளில் 50 சதவிகித மாணவர்களை மட்டுமே சுழற்சி முறையில் அனுமதிப்பதெனவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும் மாணவர்கள் கட்டணமின்றி அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யலாமென்ற அறிவிப்பும் தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதை வரவேற்பதோடு, பள்ளிக் கூடங்களில் கழிப்பறை போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்திட தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

புகையிலை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கி இளைஞர்களைக் காப்பாற்றுவது தான் அரசின் இலக்காக இருக்க வேண்டும்.- DR.S.ராமதாஸ்

 புகையிலை இல்லாத தமிழகத்தை

உருவாக்க நடவடிக்கை வேண்டும்! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில் குட்கா விற்பனை முற்றிலுமாக தடுக்கப்படும்; பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்வோருக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப் படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். போதைப் பொருட்கள் விற்பனையை தடுப்பது குறித்து சட்டப்பேரவையில் வினா & விடை நேரத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி எழுப்பிய வினாவுக்கு முதல்வர் அளித்துள்ள இந்த விடை வரவேற்கத்தக்கது.

அதிகம் அறியப்படாத தமிழக சுதந்திர போராட்ட வீரர்களை தொலைக்காட்சி வாயிலாக வெளிக்கொண்டு வர மத்திய இணையமைச்சர் திரு. எல்.முருகன் வேண்டுகோள்


 சுதந்திர போராட்டத்தில் அதிகம் அறியப்படாத தமிழக வீரர்களின் தியாகம், வீரம் குறித்த தகவல்களை அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்லும் பணியை பொதிகை தொலைக்காட்சி மேற்கொள்ள வேண்டும் என மத்திய தகவல் ஒலிபரப்பு இணையமைச்சர் திரு. எல்.முருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

மத்திய தகவல் ஒலிபரப்பு இணையமைச்சர் திரு. எல். முருகன் சென்னையில் உள்ள பொதிகை தொலைக்காட்சி செயல்பாடுகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டார். இன்று காலை தொலைக்காட்சி நிலையம் வந்திருந்த அவரை பொதிகை தொலைக்காட்சி துணை தலைமை இயக்குனர் திரு. கிருஷ்ணதாஸ், நிகழ்ச்சி பிரிவு தலைவர் திரு. சையது ரபீக் பாஷா உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து நடந்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மத்திய இணையமைச்சர்,

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பி வி சிந்துவுக்கு எஃகு அமைச்சகத்தின் ஆர்ஐஎன்எல்(RINL) நிறுவனம் பாராட்டு விழா


 ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவரும் எஃகு அமைச்சகத்தின் ஆர்ஐஎன்எல் நிறுவனத்தின் தூதருமான பி வி சிந்துவுக்கு விசாகப்பட்டினத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய ஆர்ஐஎன்எல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக கூடுதல் பொறுப்பு வகிக்கும் திரு டி கே மொஹந்தி, நாட்டுக்கும் விசாகப்பட்டினம் எஃகு நிறுவனத்திற்கும் சிந்துவின் வெற்றி ஊக்கம் அளிப்பதாக கூறினார். விளையாட்டில் பி வி சிந்து செய்துள்ள சாதனைகளையும், ஆர்ஐஎன்எல் விசாகப்பட்டினம் எஃகு நிறுவனத்திற்கு அதன் தூதராக இந்தியாவிலும் வெளிநாட்டிலும் அவர் ஆற்றியுள்ள பங்கையும் திரு மொஹந்தி குறிப்பிட்டார்.

குடிநீர் தேவைகளுக்கு உதவுவதோடு பிரதமர் திரு நரேந்திர மோடியின் ‘அனைத்து வீடுகளிலும் குடிநீர் குழாய் இணைப்பு’ லட்சிய திட்டத்திற்கு வலுவூட்டும்.- ஜிதேந்திர சிங்


 வறண்ட இடங்களில் நிலத்தடி நீராதாரங்கள் குறித்து நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மத்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி நிறுவனம் (சிஎஸ்ஐஆர்) ஆய்வு செய்து வருவதாகவும், இது குடிநீர் தேவைகளுக்கு உதவுவதோடு பிரதமர் திரு நரேந்திர மோடியின் ‘அனைத்து வீடுகளிலும் குடிநீர் குழாய் இணைப்பு’ லட்சிய திட்டத்திற்கு வலுவூட்டும் என்றும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று கூறினார்.

கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து மிக்க லட்டு விநியோக திட்டத்தை, தனது காந்தி நகர் தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா தொடங்கி வைத்தார்.


 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து மிக்க லட்டு விநியோக திட்டத்தை, தனது காந்தி நகர் தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

கிருஷ்ண ஜெயந்தி. 5,100 ஆண்டுகளுக்கு முன்பு பகவான் கிருஷ்ணா பிறந்தார். தர்மத்தின் வழியை நாட்டுக்கு காட்ட ஒருவர் தேவைப்பட்ட நேரத்தில் பகவான் கிருஷ்ணா அவதரித்தார்.

ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமைப் பெற்றுத்தர தமிழ்நாடு அரசும் - எம்.பி.,க்களும் ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்.- கி.வீரமணி

 நமது தொப்புள்கொடி உறவுகளான ஈழத் தமிழர்களுக்காக மறுவாழ்வு இல்லங்களுக்காக தி.மு.க. அரசு ரூ.317.40 கோடி ஒதுக்கியுள்ளது

‘‘ஈழத் தமிழர்கள் அனாதைகள் அல்லர்’’ என்ற முதலமைச்சரின் குரல் நம்பிக்கையூட்டுவதாகும்

குடியுரிமைப் பெற்றுத்தர தமிழ்நாடு அரசும் - எம்.பி.,க்களும் முயற்சிக்கட்டும்! - கி.வீரமணி

ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்காகவும், அவர்களது பாதுகாப்புக்காகவும் கடந்த 35, 40 ஆண்டுகளாக (அதற்கு முன்பும்கூட) களத்தில் நின்று அறவழியில் போராடி வரும் இயக்கம் திராவிடர் இயக்கமாகும்.

உரிமையுடைய உறவு நமது நாடு - குறிப்பாக தமிழ்நாடு!

அகதிகளாக இங்கே வந்து தஞ்சமடைந்த அவர்களுக்குத் தனி உரிமை - மற்ற நாட்டவருக்கு இல்லாத உரிமை தமிழ்நாட்டுக்கு உண்டு - அதுதான் ‘‘தொப்புள்கொடி உறவு’’; நாட்டால் வேறுபட்டாலும் பண்பாட்டால், நாகரிகம், மொழி முதலியவற்றால் அவர்களுக்கு உரிமையுடைய உறவு நமது நாடு - குறிப்பாக தமிழ்நாடு!

காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டமாக மதுரை இருக்கிறது என்று இந்திய வானிலைத்துறையின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.- முதல்வருக்கு சு.வெங்கடேசன் கடிதம்


 காலநிலை பேரழிவால் வரக்கூடிய பத்தாண்டுகள் மானுடத்திற்கான இருத்தியலை உறுதிசெய்வதற்கான தசாப்பதமாக இருக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் தெரிவித்துள்ளபடி,  மானுட வரலாற்றின் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த காலமாக இந்த காலம் இருக்கிறது.

இக்காலத்தில் பசுமையான தமிழகத்தை உருவாக்க, சூழலியல் பார்வையில் பல முன்னெடுப்புகளை செய்யும் உங்களுக்கு எனது அன்பான வாழ்த்துகள்.

வைகோவுடன், இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் சந்திப்பு

 வைகோவுடன், இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் சந்திப்பு

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர், இலங்கை அரசின் தோட்ட வீடமைப்பு சமூக உட்கட்டமைப்புத் துறை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் அவர்கள், அன்று (30.08.2021), சென்னை அண்ணா நகரில், மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களைச் சந்தித்தார்.

தனது தந்தையார் ஆறுமுகம் தொண்டைமான் அவர்களுடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருந்தமைக்காக வைகோ அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். தங்களைப் பற்றி, என் தந்தையார் நிறைய செய்திகளை எனக்குச் சொல்லி இருக்கின்றார் என்றார்.

‘உலகின் மூத்த நாகரிகம் தமிழ் நாகரிகம்’ என்பதை நிரூபிக்கத் தேவையான அளவுக்கு இருக்கும் என்ற நம்பிக்கை தமிழர்கள் மனதில் ஏற்பட்டிருக்கிறது.- DR.S.ராமதாஸ்

 கீழடி ஏழாம் கட்ட அகழாய்வை நீட்டிக்க

வேண்டும்: அறிக்கைகளை வெளியிடுக! - DR.S.ராமதாஸ்

மதுரை அருகே கீழடியில் தமிழ்நாடு மாநில தொல்லியல் துறை நடத்தி வரும் ஏழாம் கட்ட அகழாய்வில்  கண்கெடுக்கப்பட்டுள்ள பொருட்கள் ‘உலகின் மூத்த நாகரிகம் தமிழ் நாகரிகம்’ என்பதை நிரூபிக்கத் தேவையான அளவுக்கு இருக்கும் என்ற நம்பிக்கை தமிழர்கள் மனதில் ஏற்பட்டிருக்கிறது. அதேநேரத்தில்  இதுவரை நடத்தப்பட்ட 6 அகழாய்வுகளில் 5 ஆய்வுகளின் அறிக்கை வெளியாகாதது வருத்தமளிக்கிறது. 

திங்கள், 30 ஆகஸ்ட், 2021

தேசிய விளையாட்டு தினம், ஜவஹர்லால் நேரு அலுமினியம் ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் வடிவமைப்பு மையத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.


 மத்திய சுரங்கங்கள் அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி ஆராய்ச்சி அமைப்பாக செயல்படும் நாக்பூரில் உள்ள ஜவஹர்லால் நேரு அலுமினியம் ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் வடிவமைப்பு மையம், விடுதலையின் அம்ருத் மஹோத்ஸவக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, மேஜர் தியான் சந்த், விளையாட்டு உலகிற்கு அளித்த பங்களிப்பைப் போற்றும் வகையில் அவரைப் பற்றிய கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது.

உலக நாடுகளைப் போல, இந்தியாவிலும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மதிப்பு சங்கிலியின் ஒருங்கிணைந்த பகுதியாக செயல்படுகிறது.

 உலக நாடுகளைப் போல, இந்தியாவிலும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மதிப்பு சங்கிலியின் ஒருங்கிணைந்த பகுதியாக செயல்படுகிறது. ஒருபுறம் பன்முகத் தன்மை வாய்ந்த பொருட்களை வழங்கும் அதே வேளையில், மறுபுறம், பெரு நிறுவனங்களுக்காக இடைநிலை சரக்குகளை இந்த நிறுவனங்கள் விநியோகித்து வருகின்றன. இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் இந்தத் துறை, மிகப்பெரிய வேலை வாய்ப்பை உருவாக்கும் துறையாகவும் விளங்குகிறது.

காதியுடன் அம்ருத் மஹேத்சவம் என்ற மின்னணு வினாடி-வினா போட்டியை குடியரசு துணைத் தலைவர் திரு எம்.வெங்கையா நாயுடு புதுதில்லியில் நாளை (ஆகஸ்ட் 31,2021) தொடங்கிவைப்பார்.



 காதியுடன் அம்ருத் மஹேத்சவம் என்ற மின்னணு வினாடி-வினா போட்டியை குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு புதுதில்லியில் நாளை (ஆகஸ்ட் 31,2021) தொடங்கிவைப்பார். விடுதலையின் அம்ருத் மஹோத்ஸவத்தைக் கொண்டாடும் வகையில் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் இந்த வினாடி-வினா போட்டியை வடிவமைத்துள்ளது.

இந்திய சுதந்திரப் போராட்டம், போராட்டத்தில் வீரர்களின் தியாகங்கள் மற்றும் சுதந்திரத்திற்குப் பிறகு காதியின் மரபு ஆகியவற்றுடன் பொதுமக்களை இணைப்பதை இந்தப் போட்டி நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்திய சுதந்திரப் போராட்டம், சுதேசி இயக்கத்தில் காந்தியின் பங்கு, இந்திய அரசியல் குறித்து கேள்விகள் கேட்கப்படும்.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தால் கொண்டாடப்பட்ட விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தின் ‘ஐகானிக் வாரம்’ நேற்று நிறைவடைந்தது.


 மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தால் கொண்டாடப்பட்ட விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தின் ‘ஐகானிக் வாரம்’ நேற்று நிறைவடைந்தது.  இந்த கொண்டாட்டங்கள், கடந்த 23ம் தேதி தொடங்கியது. இதில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் அனைத்து ஊடகப் பிரிவுகளும் உற்சாகமாக பங்கேற்றன.

புதிதாக பாதுகாப்பு அச்சுறுத்தல்களை விளைவிக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டின் சமீபத்திய நிலவரத்தை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.- திரு ராஜ்நாத் சிங்


 மறைந்த பல்ராம்ஜி தாஸ் டேன்டன் தொடர் கருத்தரங்கங்களின் ஒரு பகுதியாக ‘தேசிய பாதுகாப்பு' குறித்து காணொலி வாயிலாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இன்று (ஆகஸ்ட் 30, 2021) உரையாற்றினார்.

தேசிய பாதுகாப்பில் உணர்வுப்பூர்வமாக செயல்படுவதற்கே ஒவ்வொரு அரசும் முன்னுரிமை அளிப்பதாக வலியுறுத்தி,  எதிர்வரும் ஆபத்துகள் மற்றும் சவால்களை எதிர்கொள்ள தயாராகவும் விழிப்புடனும் இருப்பதற்கான  திடமான நம்பிக்கையே தேசிய பாதுகாப்பு என்று அவர் கூறினார்.

கொவிட் நிவாரணப் பொருட்களுடன் வியட்நாமில் உள்ள ஹோ சி மின் (HO CHI MINH) நகரத்திற்கு ஐஎன்எஸ் ஐராவத் (INS AIRAVAT) கப்பல் சென்றடைந்தது


 சாகர் இயக்கத்தின் ஒரு பகுதியாக, கொவிட் நிவாரணப் பொருட்களுடன் வியட்நாமில் உள்ள ஹோ சி மின் நகரத்திற்கு ஐஎன்எஸ் ஐராவத் கப்பல் ஆகஸ்ட் 30, 2021 அன்று சென்றடைந்தது. கொரோனாவிற்கு எதிரான போரில் வியட்நாம் அரசின் தேவைக்கேற்ப ஐந்து ஐஎஸ்ஓ கொள்கலன்களில் 100 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன், 300 பிராணவாயு செறிவூட்டிகள் உள்ளிட்டவற்றை இக்கப்பல் எடுத்துச் சென்றது.

எதிர்கால பெருந்தொற்றுக்களை சிறப்பாக எதிர்கொள்வதற்கு ஆராய்ச்சியை தீவிரப்படுத்துமாறு விஞ்ஞானிகளுக்கு குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு அறிவுரை


 கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ-வின் ஆய்வகமான உடலியல் மற்றும் சார்பு அறிவியலுக்கான பாதுகாப்பு நிறுவனத்தின் விஞ்ஞானிகள் மற்றும் முன்களப் பணியாளர்களின் பங்களிப்பை குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு இன்று பாராட்டியுள்ளார்.

எதிர்காலத்தில் இதுபோன்ற பெருந்தொற்றை சிறப்பாக எதிர்கொள்வதற்காக, தங்களது ஆராய்ச்சியை விஞ்ஞானிகள் தீவிரப்படுத்துமாறு அவர் அறிவுறுத்தினார்.

வேளாண் பகைச் சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் மாநில உரிமைக் கொடியை உயர்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் வைகோ பாராட்டு

 வேளாண் பகைச் சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம்;

மாநில உரிமைக் கொடியை உயர்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்

வைகோ பாராட்டு

ஒன்றிய பா.ஜ.க. அரசு 2020 செப்டம்பரில் நாடாளுமன்றத்தில், மக்களாட்சி மாண்புகளை காலில் போட்டு மிதித்துவிட்டு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராடி வருகின்றனர். டெல்லியில் கடந்த 2020 நவம்பர் 26 முதல் இன்றைய நாள் வரையில் 277 நாட்களாக பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி அறவழிப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஐநூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டக் களத்தில் உயிர் இழந்திருக்கிறார்கள்.

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான தொலை நோக்கு திட்டத்தின் கீழ், நகர்ப்புறமயமாக்கல் நோக்கிய அணுகுமுறையில் முன்னுதாரண மாற்றம் ஏற்பட்டுள்ளது.- திரு ஹர்தீப் சிங் பூரி


 மைசூர் சாலை முதல் கெங்கேரி மெட்ரோ ரயில் நிலையம் வரை, 7.5 கி.மீ தூர, மெட்ரோ ரயில் பாதை திட்டத்தை கர்நாடக முதல்வர் திரு பசவராஜ் பொம்மை முன்னிலையில், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி இன்று தொடங்கி வைத்தார்.

பெங்களூரு நம்ம மெட்ரோ 2வது திட்டத்தின் கீழ், மேற்கு விரிவாக்க திட்டம், மைசூர் சாலை முதல் கெங்கேரி மெட்ரோ ரயில் நிலையம் வரை, 7.5 கி.மீ  தூரத்துக்கு அமைக்கப்பட்டது.

இதன் தொடக்க நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பேசியதாவது:

மத்திய அரசு மேற்கொண்ட சீர்திருத்தங்கள் காரணமாக உலகில் மாறிவரும் பாதுகாப்பு முறைகளை சந்திக்க இந்தியா தயாராக இருக்கிறது.- திரு ராஜ்நாத் சிங்


 ‘‘உலகில் மாறிவரும் பாதுகாப்பு முறைகளை சந்திக்க இந்தியா தயார்’’ என வெலிங்டன் பாதுகாப்பு அதிகாரிகள் கல்லூரியில் உரையாற்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறினார்.

வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு படை அதிகாரிகள் கல்லூரியில் நடைபெறும் 77வது பயிற்சியை பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இன்று பார்வையிட்டார். அங்கு வழங்கப்படும் பயிற்சிகள் குறித்து, திரு ராஜ்நாத் சிங்கிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. 

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சமுதாய வானொலி நிலையங்களில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்க உறுதிபூண்டுள்ளது.- திரு எல். முருகன்


 ஏழை மக்களுக்கும் இந்திய அரசின் நலத் திட்டங்களுக்கும் இடையேயான இணைப்புப் பாலமாக சமுதாய வானொலி நிலையங்கள் செயல்படுகின்றன. கொவிட்-19 தொற்று  காலகட்டத்தில் பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா முன்முயற்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி அறிமுகப்படுத்திய போது இந்தத் திட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் சமுதாய வானொலி நிலையங்கள் முக்கிய பங்காற்றின.” அதே போல ஏராளமான வானொலி நிலையங்கள் கொவிட்- 19 வழிகாட்டு நெறிமுறைகள், மன அழுத்த மேலாண்மை முதலியவை குறித்த விழிப்புணர்வையும் அதிக அளவில் ஏற்படுத்தின என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள இணையமைச்சர் திரு எல். முருகன் தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 தடுப்பூசிகளின் உற்பத்தி திறன் அதிகரிப்பு, இந்தியாவில் தடுப்பூசி திட்டத்தின் வேகத்துக்கு மேலும் உந்துதல் அளிக்கும். - திரு மன்சுக் மாண்டவியா


 குஜராத் மாநிலம், அங்கலேஸ்வரில் பாரத் பயோடெக் நிறுவனத்தின், சிரான் பெரிங் தடுப்பூசி மையத்தில், உற்பத்தி செய்யப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியின்  முதல் வர்த்தக தொகுப்பை மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்பநலம் மற்றும் ரசாயணத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா இன்று வெளியிட்டார். நவ்சாரி தொகுதி எம்பி திரு சி.ஆர்.பாட்டீல், அங்கலேஸ்வர் எம்எல்ஏ திரு ஈஸ்வர்சிங் படேல், பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் கிருஷ்ண எல்லா ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.  

இதன் தொடக்க நிகழ்ச்சியில், திரு மன்சுக் மாண்டவியா பேசியதாவது:

தாய் மொழியில் உரையாற்றுவதை மக்கள் பெருமையாகக் கருத வேண்டும்.அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துவதில் தாழ்வு மனப்பான்மை ஏற்படக்கூடாது.- வெங்கையா நாயுடு


 இந்திய மொழிகளை ஊக்குவிக்கவும், மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவற்றை பொருந்தச் செய்யவும், புதுமையான வழிகளை உருவாக்குமாறு குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார். மொழி என்பது நிலையான கருத்துரு அல்ல என்று குறிப்பிட்ட அவர், மொழிகளை மேலும் வளமாக்க, ஆற்றல் வாய்ந்த மற்றும் ஆக்கபூர்வமான அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று கூறினார்.

தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதை நோக்கி அரசு பணியாற்றி வருகிறது. அனைவருடனும் இயங்கும் வகையில் திறன் மற்றும் தன்னம்பிக்கையை கட்டமைப்பதே தற்சார்பு இந்தியாவாகும்.- திரு பியூஷ் கோயல்


 தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதை நோக்கி அரசு பணியாற்றி வருகிறது. அனைவருடனும் இயங்கும் வகையில் திறன் மற்றும் தன்னம்பிக்கையை கட்டமைப்பதே தற்சார்பு இந்தியாவாகும். தரம், போட்டித் திறன் வாய்ந்த கட்டணம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுடன் அனைவருடனும் கலந்துரையாடும் வகையில் நமது தொழில்துறையை இது மேம்படுத்தும்”, என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளி அமைச்சர் திரு பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். ஜெயின் சர்வதேச வர்த்தக நிறுவனத் தளம் வாயிலாக வர்த்தகம் மற்றும் வணிக துறையினருடன் உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாக திகழும் அரசு ஊழியர்களின் உரிமைகளை வழங்குவதை தாமதப்படுத்துவது நியாயமல்ல.- DR.S.ராமதாஸ்

 ஆசிரியர்-அரசு ஊழியர்கள், மருத்துவர்கள்

கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்! - DR.S.ராமதாஸ்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் பழைய ஓய்வூதியத்  திட்டம், அகவிலைப்படி உயர்வு, ஊதிய முரண்பாடுகளைக் களைதல் உள்ளிட்ட கோரிக்கைகள் ஏற்கப் படாதது அவர்களிடையே பெரும் மனக்குறையை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாடு அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாக திகழும் அரசு ஊழியர்களின் உரிமைகளை வழங்குவதை தாமதப்படுத்துவது நியாயமல்ல.

சனி, 28 ஆகஸ்ட், 2021

டிஜிட்டல் இந்தியா முயற்சிகளுக்கு வலுவூட்டும் விதத்தில் ‘5ஜி மற்றும் சைபர் பாதுகாப்பு’ குறித்த பயிற்சி நிகழ்ச்சியை தொலைதொடர்பு செயலாளர் திரு அன்ஷு பிரகாஷ் தொடங்கி வைத்தார்


 டிஜிட்டல் இந்தியா முயற்சிகளுக்கு வலுவூட்டும் விதத்திலும், 5ஜி-யின் சக்தி குறித்து பல்வேறு மத்திய அரசு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் அலுவலர்களிடையே விழிப்புணர்வை உருவாக்கவும், சைபர் பாதுகாப்பு குறித்த கலாச்சாரத்தை உருவாக்கவும், தொலைதொடர்பு துறையின் திறன் வளர்த்தல் அலகான கொள்கை ஆராய்ச்சி, புதுமைகள் மற்றும் பயிற்சிக்கான தேசிய தொலைதொடர்பு நிறுவனம், மத்திய அரசின் மூத்த அதிகாரிகளுக்கான ‘5ஜி மற்றும் சைபர் பாதுகாப்பு’ குறித்த ஒரு நாள் பயிற்சி நிகழ்ச்சியை 2021 ஆகஸ்ட் 27 அன்று நடத்தியது. தொலைதொடர்பு துறை செயலாளர் திரு அன்ஷு பிரகாஷ் இதை தொடங்கி வைத்தார்.

கணவன் மனைவியை பாலியல் வல்லுறவு செய்தால் அது குற்றமாகாது என்ற தீர்ப்பை நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். - தோழர் உ.வாசுகி


 கணவன் மனைவியை பாலியல் வல்லுறவு செய்தால் அது குற்றமாகாது என்ற தீர்ப்பை நீதிமன்றம்  மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

கணவனால் மனைவி மீது நடத்தப்படும் வன்முறை கடந்த காலத்தில் குற்றமாகக் கருதப்படவில்லை. குடும்பம் என்கிற "புனிதமான" அமைப்புக்குள் சட்டமும் அரசாங்கமும் தலையிடக் கூடாது என்கிற வாதங்கள்தான் முன்வைக்கப்பட்டன. 

பெண்கள் மற்றும் ஜனநாயக இயக்கங்களின் பலகட்ட போராட்டங்களுக்கும் நிர்ப்பந்தத்துக்கும் பிறகுதான் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் என்பது கொண்டுவரப்பட்டது. 

‘இந்திய பொருட்களையே வாங்கு மற்றும் உற்பத்தி செய்’ பிரிவின் கீழ் இந்திய நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ரூ 1,350 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது


 பதினான்கு ஒருங்கிணைந்த நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு போர் பாதுகாப்பு அமைப்புகளை (ஐஏடிஎஸ்) ரூ 1,349.95 கோடி மதிப்பீட்டில் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை மகேந்திரா டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ் லிமிடெட்டுடன் பாதுகாப்பு அமைச்சகம் புதுதில்லியில் இன்று உறுதி செய்தது.

ராணுவ தளவாடங்கள் கொள்முதல் பிரிவில் ‘இந்திய பொருட்களையே வாங்கு மற்றும் உற்பத்தி செய்’ பிரிவின் கீழ் இந்திய நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், தற்சார்பு இந்தியா இயக்கத்திற்கு மிகப்பெரிய ஊக்கத்தை தருவதோடு, தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் உற்பத்தியில் உள்நாட்டு ராணுவ தளவாட தொழில்களுக்கு பெரும் உந்து சக்தியை அளிக்கும். இந்திய கடற்படையில் நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு போர் திறனை இந்த அமைப்பு மேம்படுத்தும்.

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

மக்கள் பிரதிநிதிகள் ஒவ்வொரு வருடமும் தங்களை பற்றிய தகவல்களை மக்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.- திரு எம் வெங்கையா நாயுடு


  ‘பிரதிபலித்தல், நினைவு கூறுதல், மீண்டும் தொடர்பு கொள்ளுதல்’ எனும் புத்தகத்தின் முதல் பிரதியை குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடுவிடம் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் தாகூர் குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்.

தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் வெளியீட்டு பிரிவால் பதிப்பிக்கப்பட்டுள்ள இந்த புத்தகம், திரு வெங்கையா நாயுடு குடியரசு துணைத் தலைவர் பொறுப்பேற்ற நான்காவது ஆண்டை ஆவணப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டின் பெருமைக்காக அனைத்தையும் அர்ப்பணிக்கும் உணர்வுதான் அந்த லட்சியம்.- குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த்


 லக்னோவில் உள்ள கேப்டன் மனோஜ் குமார் பாண்டே உ.பி.சைனிக் பள்ளியின் வைர விழா நிறைவு கொண்டாட்டத்தில், குடியரசுத் தலைவர்  திரு ராம் நாத் கோவிந்த் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் சம்பூர்ணானந்த் சிலையை அவர் திறந்து வைத்தார். டாக்டர் சம்பூர்ணானந்த் பெயரில் கட்டப்பட்ட ஆடிட்டோரியத்தை அவர் திறந்து வைத்தார். பள்ளியின் திறனை இரு மடங்காக அதிகரிக்கும் திட்டங்கள், பள்ளியில் மாணவிகளுக்கு விடுதிகள் போன்றவற்றுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.

உண்மை தன்மை குறித்து போதிய புரிதல் இல்லாமல் தவறான செய்திகள் வெளியிடப்பட்டிருப்பதற்கு ஆயுஷ் அமைச்சகம் தனது கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறது.

அச்சிடப்படாத சிறிய அளவிலான ஆய்வை மேற்கோள் காட்டி, ஆயுர்வேதத்திற்கு எதிராக, குறிப்பாக ஆயுஷ் அமைச்சகத்திற்கு எதிராக கடந்த இரண்டு நாட்களாக ஒரு சில ஊடகங்களில் தவறான செய்திகள் வெளிவருகின்றன. பல்வேறு ஆய்வுகள் மற்றும் பல தரப்பு மருத்துவ சோதனைகளின் அடிப்படையில் கொவிட்-19 சிகிச்சை மற்றும் மேலாண்மையில் பயனளிக்கும் மூலிகையான ஆயுஷ் 64 பற்றி இந்த ஒருதலைப்பட்சமான தவறான செய்தி அமைந்துள்ளது.

தமிழ்நாட்டில் விளைவிக்கப்படும் கரும்புக்கு டன்னுக்கு ரூ.2,755 மட்டுமே வழங்கப்படும். இந்த கொள்முதல் விலை போதுமானதல்ல.- DR.S.ராமதாஸ்

டன்னுக்கு ரூ.2,755: கரும்பு கொள்முதல்  
விலை போதாது உயர்த்த வேண்டும்! - DR.S.ராமதாஸ்

இந்தியாவில் 2021-22 ஆம் ஆண்டில் கரும்புக்கான கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.2900 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவைக்குழு ஒப்புதல் அளித்திருக்கிறது. தமிழ்நாட்டில் விளைவிக்கப்படும் கரும்புக்கு டன்னுக்கு ரூ.2,755 மட்டுமே வழங்கப்படும். இந்த கொள்முதல் விலை போதுமானதல்ல.

டில்லி பல்கலைக்கழகத்தின் விளக்கம் அறிவுத்துறையின் வீழ்ச்சியைக் காட்டுகிறது. - சு வெங்கடேசன்



டில்லி பல்கலைக்கழகத்தின் விளக்கம் 

அறிவுத்துறையின் வீழ்ச்சியைக் காட்டுகிறது. - சு வெங்கடேசன்

டெல்லி பல்கலைக் கழகம் தனது  பாடத்திட்டத்திலிருந்து  மகாஸ்வேதா தேவி, பாமா, சுகிர்தராணி ஆகியோரின் படைப்புகளை நீக்கியது குறித்து எனது கண்டனத்தை நேற்று பதிவு செய்திருந்தேன். 

தமிழக முதல்வர் மற்றும்  பலரும் தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக டெல்லி பல்கலைக்கழகம் விளக்க குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

வியாழன், 26 ஆகஸ்ட், 2021

ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கும் சலுகையாக இணைய வழி கல்வி விளங்கக் கூடாது, மாறாக, இந்தியாவில் கல்வியின் உண்மையான ஜனநாயகமயமாக்கல் கருவியாக அது மாற வேண்டும்.- திரு எம் வெங்கையா நாயுடு


 இணையவழி மற்றும் தொலைதூர கல்வியில் உள்ளடக்கிய அணுகுமுறைக்கு அழைப்பு விடுத்துள்ள குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு, பெருந்தொற்றினால் அணுகல், தரம் மற்றும் மலிவு சார்ந்த விஷயங்கள் முக்கியத்துவம் பெற்று, இந்த நடைமுறையில் ஏராளமான மாணவர்கள் தவிர்க்கப்படுகிறார்கள் என்று எச்சரிக்கை விடுத்தார்.

தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கான மின்னணு பாலமாக இணைய வழி கல்வியின் ஆற்றலைக் குறிப்பிட்ட அவர், சமூகப் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த வாய்ப்புகள் தவிர்க்கப்படாமல் இருப்பதையும், ‘மின்னணு பிரிவினை' உருவாகாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பீடிகையில் கூறப்பட்ட ‘சோசலிசம்' என்பதற்கு எதிராக அரசுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதா? - கி.வீரமணி




இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பீடிகையில் கூறப்பட்ட ‘சோசலிசம்' என்பதற்கு எதிராக அரசுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதா? - கி.வீரமணி

பொதுத் துறைக்கு வேட்டு - குறிப்பிட்ட முதலாளிகளைக் கொழுக்க வைப்பது - இட ஒதுக்கீட்டை ஒழிப்பது என்பதுதான் ஒன்றிய அரசின் திட்டம்!

ஒன்றிய அரசானாலும், மாநில அரசுகளானாலும் தாங்கள் பதவியேற்பின்போது எடுத்த பிரமாணத்தைக் காப்பாற்றுவதும், செயல்படுத்துவதும் அவைகளுக்குத் தலையாய கடமைகள் ஆகும்!

தமிழகத்தில் ஒப்புதல் இல்லாமல் தயாரிக்கப்பட்ட மேகேதாட்டு அணை விரிவான திட்ட அறிக்கையை கர்நாடத்திற்கு திருப்பி அனுப்ப வேண்டும்.- DR.S.ராமதாஸ்

 மேகேதாட்டு அணை: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்க கூடாது திட்ட அறிக்கையை திருப்பி அனுப்புங்கள்! 

- DR.S.ராமதாஸ்

காவிரி ஆற்றின் குறுக்கே கேகேதாட்டு என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு அனுமதி அளிப்பது குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அடுத்தக் கூட்டத்தில் விவாதிக்க ஏற்பாடு செய்வதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத் உறுதியளித்திருப்பதாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்திருக்கிறார். இந்தத் தகவல் உண்மையாக இருந்தால் அது கண்டிக்கத்தக்கது.

புதன், 25 ஆகஸ்ட், 2021

பேரிடர், பருவநிலை மற்றும் மருத்துவ நெகிழ்தன்மை மீதான அமைச்சக குழு மாநாட்டில் மத்திய அமைச்சர் திரு நித்தியானந்த் ராய் பங்கேற்பு


 ஆசிய பசிபிக் பகுதிக்கான ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் மண்டல தொடர் கலந்துரையாடல் 2021: பேரிடர், பருவநிலை மற்றும் மருத்துவ நெகிழ்தன்மை மீதான அமைச்சக குழு மாநாட்டில் மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு நித்தியானந்த் ராய் காணொலிக் காட்சி வாயிலாகக் கலந்துகொண்டார்.‌

ஆஸ்திரேலியா, சீனா, இந்தோனேசியா, ஜப்பான், மாலத்தீவுகள், பப்புவா நியூ கினியா மற்றும் தாய்லாந்து நாடுகளின் அமைச்சர்களும் இந்த மாநாட்டில் கலந்துக்கொண்டனர்.

திருமுருக கிருபானந்தவாரியார் பெருமையை தமிழக அரசு உலகளவில் அடையாளப்படுத்த வேண்டும் ! - டாக்டர் K. கிருஷ்ணசாமி

 ஆன்மீகத்தால் அறிவுக் கண்களையும் திறந்தவர்;  அழகு தமிழையும்  ஒருசேர வளர்த்தவர் ’திருமுருக கிருபானந்தவாரியார்’ அவர்கள்!

அவரது பெருமையை தமிழக அரசு உலகளவில் அடையாளப்படுத்த வேண்டும் ! - டாக்டர் K. கிருஷ்ணசாமி

ஆன்மீகத்தால் தமிழை வளர்த்தாரா? தமிழால் ஆன்மீகத்தை வளர்த்தாரா? என வேறுபடுத்திப் பார்க்க முடியாத அளவிற்கு 70 வருடங்களுக்கு மேலாக இனிய தமிழ்மொழியில் ஆன்மீகப் பணியை மேற்கொண்டவர் அருள்மிகு திருமுருக கிருபானந்தவாரியார் அவர்கள். ஆகஸ்ட் 25, அவருடைய பிறந்த நாள் இன்று அவரது செம்மார்ந்த பணியை புதிய தமிழகம் கட்சி நினைவு கூருகிறது.  

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பாலாற்றின் கரையில் உள்ள காங்கேயநல்லூர் என்ற சிற்றூரில் தந்தையார் மல்லையதாசர் – தாயார் கனகவள்ளி அம்மையார் ஆகியோர் ஈன்றெடுத்த 11 குழந்தைகளில் நான்காவதாகப் பிறந்தவர். அவரது தந்தையாரே இவருக்கு ஆசானாக விளங்கி 12 வயதிலேயே பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பண்களை கற்றுக் கொடுத்தார்.

செம்பரம்பாக்கம் ஏரியைத் திறப்பதற்கு கீழ்நிலையில் உள்ள அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். - கே.எஸ்.அழகிரி



அ.தி.மு.க. ஆட்சியில் 2015 ஆம் ஆண்டில் சென்னையில் கனமழை பெய்த போது, செம்பரம்பாக்கம் ஏரியில் உடைப்பு ஏற்பட்டதா ? அல்லது உபரிநீர் வெளியேற்றப்பட்டதா ? என சட்டப்பேரவையில் கடுமையான விவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் உண்மையை மூடிமறைக்க முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். ஆனால், உண்மைகளை எவராலும் மூடிமறைக்க முடியாது. இந்தப் பின்னணியில் 2015 டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பிற்கு யார் பொறுப்பு என்பதை உலகிற்கு உணர்த்த வேண்டிய நோக்கத்தில் நடந்தவற்றைக் கூறினால் தான் உண்மைகள் வெளிவரும். 

பாஜகவின் பொதுச் செயலாளர் கே.டி.ராகவன், ஏதோ பெருந்தன்மையானவர் போல ராஜினாமா செய்திருக்கிறார். இவ்விசயத்தில் ராஜினாமா மட்டும் தீர்வாகாது, அவர் சட்டத்திற்கு முன் பதில் சொல்லியாக வேண்டும்.- கே.பாலகிருஷ்ணன்



தமிழக பாஜக தலைமையின் மீது எழுந்துள்ள பாலியல் புகார்களும், அடுத்தடுத்து வரும் செய்திகளும் அதிர்ச்சி தருகிறது. மனித மாண்புகளையே கேள்விக்குள்ளாக்குகிறது.

 பாஜகவின் பொதுச் செயலாளர் கே.டி.ராகவன், ஏதோ பெருந்தன்மையானவர் போல ராஜினாமா செய்திருக்கிறார். இவ்விசயத்தில் ராஜினாமா மட்டும் தீர்வாகாது, அவர் சட்டத்திற்கு முன் பதில் சொல்லியாக வேண்டும்.

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

"மிஷன் சாகர்" மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்காக இந்தோனேசியா சென்றடைந்தது ஐஎன்எஸ் ஐராவத் கப்பல்


 இந்தோனேசிய அரசின் தேவையின் அடிப்படையில், திரவ மருத்துவப் பிராணவாயு அடங்கிய 10 கொள்கலன்களை ஏற்றிச் சென்ற ஐஎன்எஸ் ஐராவத் கப்பல், ஆகஸ்ட் 24-ஆம் தேதி, இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள டன்ஜங் பிரயாக் துறைமுகத்தைச் சென்றடைந்தது.

மருத்துவ உபகரணங்களை விநியோகித்த பிறகு, மிஷன் சாகர் திட்டத்தின் ஒரு பகுதியாக இதர நட்பு நாடுகளுக்கு மருத்துவ அத்தியாவசியப் பொருள்களை வழங்குவதற்காக ஐஎன்எஸ் ஐராவத் கப்பல் தனது பயணத்தைத் தொடரும்.

இந்தியப் பாதுகாப்புத் துறையில் இன்று ஓர் வரலாற்று சிறப்புமிக்க தினம். ராணுவ உற்பத்தியில் நமது தனியார் துறையின் பங்கு வளர்ச்சி அடைந்து வருகிறது.- திரு. ராஜ்நாத் சிங்


 பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ வின் டெர்மினல் பாலிஸ்டிக் ரிசர்ச் லாபரட்டரீசின் தொழில்நுட்பப் பரிமாற்றத்தின் அடிப்படையில், எக்கனாமிக் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட பல்முனை கையெறி குண்டுகளின் முதல் தொகுப்பு, மத்தியப் பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் முன்னிலையில் இந்திய ராணுவத்திடம் நாக்பூரில் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிறுவனத்தின் தலைவர் திரு எஸ். என். நுவால், வெடிமருந்து விநியோகத்தில் தனியார்துறையின் பங்களிப்பைக் குறிக்கும் வகையில் பல்முனை கையெறி குண்டின் மாதிரியை அமைச்சரிடம் வழங்கினார். ராணுவத் தளபதி ஜெனரல் எம். எம். நரவானே,  பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் செயலாளரும், டிஆர்டிஓ வின் தலைவருமான டாக்டர் ஜி சதீஷ் ரெட்டி, காலாட் படை தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே. சமந்த்ரா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

கொவிட் தடுப்பூசித் திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்காக அதன் பாதுகாப்பு தன்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.- திரு எம். வெங்கையா நாயுடு


 கொவிட்-19-க்கு எதிரான தடுப்பூசியை போட்டுக்கொள்வதன் முக்கியத்துவம் மற்றும் அதன் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்காக சிறப்பு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ளுமாறு மருத்துவ துறையையும், குறிப்பாக, இந்திய மருத்துவ சங்கத்தையும் குடியரசுத் துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார்.

கிவ் இந்தியா ஃபவுண்டேஷன் மற்றும் கர்நாடக அரசின் நிலையான இலக்குகள் ஒருங்கிணைப்பு மையத்தின் முன்முயற்சியான 'இந்திய தடுப்பூசித் திட்டத்தை' இன்று தொடங்கிவைத்துப் பேசிய அவர், ஒரு சில மக்கள், தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதில் தயக்கம் காட்டுவதாகத் தெரிகிறது என்று குறிப்பிட்டார். தடுப்பூசி குறித்த சந்தேகங்கள் இன்னும் நிலவும் மக்கள் மத்தியில், அது பற்றிய போதிய புரிதலையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவது மிகவும் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

இஸ்ரோ மற்றும் ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் அயராத கூட்டு முயற்சியின் மூலம் புதிய புவிசார் திட்டமிடல் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.


 புவன் ‘யுக்த்தாரா’ திட்டத்தின் கீழ் இன்று தொடங்கப்பட்டுள்ள புதிய புவிசார் திட்டமிடல் இணையதளம், தொலையுணர்வு மற்றும் புவியியல் தகவல் கருவி (GIS) அடிப்படையிலான தகவல் மூலம்  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் புதிய செயல்பாடுகளை திட்டமிட உதவும் என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு)  டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறியுள்ளார்.

கட்-அவுட் கலாச்சாரத்தை ஒழிக்க ஸ்டாலின் முனைப்புக் காட்டுவாரா? அல்லது பூசி மெழுகுவாரா? - டாக்டர் K. கிருஷ்ணசாமி

விழுப்புரம் தினேஷ் மரணத்திற்கு நீதி வேண்டும்!
கட்-அவுட் கலாச்சாரத்தை ஒழிக்க ஸ்டாலின் முனைப்புக் காட்டுவாரா? அல்லது பூசி மெழுகுவாரா? - டாக்டர் K. கிருஷ்ணசாமி

திமுக அமைச்சர் பொன்முடி அவர்களின் நிகழ்ச்சிக்குக் கட்சிக் கொடி, தோரணங்கள், பதாகைகள் கட்டும் போது உயர் மின் அழுத்தக் கம்பியில் பட்டு விழுப்புரம் மாவட்டம் மாம்பழப்பட்டுவை சேர்ந்த 13 வயதான தினேஷ் என்ற எட்டாம் வகுப்பு பள்ளி மாணவன் மரணமெய்தி மூன்று தினங்கள் ஆகிவிட்டன. ஜனநாயகத்தின் நான்காவது தூண்கள் என்று போற்றப்படும் செய்தி ஊடகங்களும், காணொளி ஊடகங்களும் இச்சம்பவத்தை வெளிக்கொணராதது மட்டுமல்ல. அந்த செய்தியை அதிகம் வெளியே பரவவிடாமல் தடுக்கும் ‘மூடக’ பணியிலும்  ஈடுபட்டு இருக்கிறார்கள் என்பதுதான் வருந்தத்தக்கச் செய்தி.

பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு திருச்செந்தூர் முருகன் கோயிலில் தமிழில் அர்ச்சனை - வழிபாடு!


 தமிழ்ப் பெருங்கடவுளான திருமுருகப் பெருமான் எழுந்தருளும் திருச்செந்தூர் திருக்கோயிலில், பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு (24.08.2021) தமிழில் அர்ச்சனை மற்றும் வழிபாடு நடத்தப்பட்டது. 

“அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்வோம்” என்ற திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறை தமிழ்நாட்டிலுள்ள திருக்கோயில்களில் ஆங்காங்கு தமிழில் அர்ச்சனை செய்ய ஏற்பாடுகளை செய்து வருகிறது. முதல் கட்டமாக இத்திட்டம் அறிவிக்கப்பட்ட திருக்கோயில்களில் திருச்செந்தூர் முருகன் கோயில் இடம்பெறவில்லை.